ஆனா பாருங்க காமடிய.. நம்ம பதிவு கொஞ்சம் பெருசா போயிட்டாப் போதும்... இம்மீடியட்டா அடுத்த பின்னூல ரொம்ப பெருசா இருக்குன்ன முறுக்கிட்டுப் போயிடறது.. அதையே அவங்க எழுதின இடுகைக்கு பெரிய்ய்ய பின்னூவாப் போட்டால் உருகிட்டு குஜால் ஆயிடறது..! இந்த லாஜிக்குப் பேரு என்னங்க??
■
நம்ம ஆளுங்க எல்லா காலடிங்கிற குறுகிய குழிக்குள்ள அடக்கிட முடியுமா? அதுதான் டெக்னிகலா இப்ப கற்றது Excel வலைபதிவுல சக ஆசிரியனா எழுதிக்கிட்டிருக்கேன். இது MS-Excel® பயன்பாடு பற்றி தமிழில் விளக்கும் முயற்சி. கற்றது Excel ஆரம்பிச்சது சங்கர். வழக்கம்போல அங்கயும் பின்னூட்டமாக ஒரு புயல் என்ட்ரி போட்டேன்! என்னோட குட்டி குட்டி பின்னூஸ்களைப் பார்த்து.. மெர்ஸலாயி நீயும் எழுதிட்டுப் போன்னு கூட்டாளியா சேத்துக்கிட்டாரு. ஸோ.. நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள் Excel பற்றி அறிய ஆவல் கொண்டவர்கள்.. அங்கயும் எட்டிப் பார்க்கலாம்.
எவ்வளவுதான் மொக்கையே எழுதறது? ம்?
■
புயலாக பின்னூட்டங்கள் போடுவதில் நிறைய ஆபத்துகளும் இருக்கின்றன. சின்ன உதாரணம்: கும்மி. இதுவரைக்கும் கும்மி, அம்மி அல்லது மம்மி ரிட்டர்ன்ஸ்களில் சிக்காமல் தப்பித்து வருகிறேன். காரணம் நாம போடற பின்னூஸ்களின் நீளமா கூட இருக்கலாம்னு நம்ம காலடியின் காரிய கமிட்டி சந்தேகிக்கிறது.
சந்ருவுக்கு நான் போட்ட பின்னூ கொஞ்சம் பெருசு.. அதாவது சந்ரு அடுத்த இடுகையா அந்த பின்னூட்டத்தையே போட்டுட்டாருன்னா பாத்துக்கோங்களேன்.
இப்பக் கூட சமீபத்தில் யாத்ராவுக்கு அவரது இருப்பு கவிதை பற்றி ஒரு காத்திரமான பின்னூ போட்டு, அதை அவரும் இடுகையாக்கி இப்ப எடுத்திட்டார். நல்லதாப் போச்சு!
அட நேத்துக் கூட, நம்ம வால்பையனுக்கு சோதிடமும் சந்திரனும் என்ற இடுகைக்கு விஞ்ஞானம் அறிவியல் (ப்ரபஞ்சப்ரியன் நீங்களும் இந்த ஆட்டத்திலே இருக்கீங்க.. படிச்சுப் பாருங்க) கலந்து விளக்விளக்கி பின்னூ போட்டிருக்கிறேன்.
வொய்டா ஜெகான்னுட்டு இருக்கு!
அப்புறம் சங்காண்ணன், பெரியண்ணன் சென்ஷி, கோவி.கண்ணன், பீர் Peer, இரும்புத்திரை அரவிந்த், சிநேகிதன் அக்பர், குப்பைத்தொட்டி நான் ஆதவன், ஏதோடாட்காம் ஏனாஓனா / கிகி, நள்ளெண் யாமம் க.சீ. சிவக்குமார், அதே கண்கள் டவுசர் பாண்டி, வால்பையன், பிரபஞ்சப்ரியன் இப்படி ரெகுலரா போய் உலாத்திட்டு வந்தாத்தான் காலடிக்கு நிம்மதி.
■
கவிஞர்கள் என்றாலே ஒரு சிறப்பு ஈர்ப்பு வந்துவிடுவதாக காலடி உணர்கிறது.
நேசமித்ரன், நந்தாவிளக்கு நந்தா, கருவேல நிழல் பா.ராஜாராம் இவங்கதான் காலடியின் மெயின் டார்க்கெட். நேமித்ரனை நெருங்க வைத்தது நம்ம பின்னூட்டங்கள்தான். நந்தாவும் அப்படியே - நல்லா உத்து உத்து பாத்து மண்டைய ஆட்டி ஆட்டி கவிதை படிக்கறீங்க பாஸு என்று ஐக்கியமாகி விட்டனர்.
சமீபத்தில் தான் நந்தாவின் டிராகுலாவின் காதலி -2 க்கு முதன்முறையாக எதிர்கவிதை பின்னூவாக எழுதி காலடி ஆபிஸில் வாங்கிக் கட்டிக்கொண்டோம். எதிர்கவிதை எழுதியதற்காக இல்லே... அதை ஏண்டா இடுகையா போடாம பின்னூவாப் போட்டேன்னுதான்.
பா.ரா.. எளிய சிநேகத்தின் வாசம் வீசம் அடர் மர நிழல். எல்லாருக்கும் நிழலும் மணமும் வீசும் மரம் எனக்கு ஒரு கிளையையேக் கொடுத்து ஊஞ்சலாடுடா கண்ணு என்கிறது.
அப்புறம் வானம் வெளித்த பின்னும் ஹேமா (சுவிஸ்). இவங்க கவிதைகள் எல்லாமே பயங்கர தமாஷா, காமடியா, சும்மா சிலு சிலுன்னு... அட போங்க சார் / மேடம்..! பதிவு எழுதறதுன்னாலே, கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்து நல்லா ஒருதரம் அழுதுட்டு.. கண்ணீர் சுடச்சுட வர அப்படியே கீபோர்டை கொத்த ஆரம்பிச்சிருவாங்களாம்! இதுவரைக்கும் நாலு கீபோர்ட் மாத்திட்டாங்களாம்.. கீபோர்ட் எழுத்தெல்லாம் சீக்சீக்சீக்கிரமா அழிஞ்சி போயிடுதாம்!
■
காலடி ஆபிஸிலிருந்து அவசர மெமோ:
பெறுநர்: மொக்கை ஆபிஸர் நிர்: 4 - ஜெகநாதன்...
'ரொம்ப அழுத்த்தி ரெக்கார்டை தேய்க்க வேணாம்.. இப்பவே இடுகை பெருசாக போய்விட்டது. இது கம்பேனிக்கு நல்லதில்ல!'
■
பரவாயில்ல கண்டுக்காதீங்க நீங்க.. இன்னும் கொஞ்சம் சொல்லிக்கலாமே..
நமக்கு பிடிச்ச வலைதளங்களில் சமையல் குறிப்பு பக்கங்களும் உண்டு. மாப்ள ஏனாஓனாவும் கிகி சாரும் நல்லா சுவையான உப்புமா கிண்டுவது எப்படி, கடையில் வாங்கிய மசால் வடையை எப்படி பேப்பர் பிரித்து தின்பது என்கிற மாதிரி உபயோகமான சமையல் குறிப்புகளா போட்டுத் தாக்குவது உண்டு. மாப்ள ஏனாஓனா ஓட்டல் ஓட்டலா போயி... போட்டோ எடுத்துட்டு (போட்டோ... மாத்திப் படிச்சிடாதீங்க மாப்ள) சாப்பாடும் சாப்பிட்டு அதைப் பத்தி சிலாகிச்சு இடுகையாக்கிடுவாரு.
அதேமாதிரி உப்புமடச்சந்தி ஹேமா. இவங்க 'நிஜமாவே' சமைக்கிறவங்கன்னு நினைக்கிறேன். கொஞ்சம் சிம்பிளான ஐட்டங்களா சொல்லித் தருவாங்க. அதே மாதிரி சஷிகா.. இவங்க சமையலைப் படிக்கிற விட வலைப்பக்கத்தை பாக்கிறதே அழகா இருக்கும். சமையலும் வித்யாசமான ரெஸிபிகளாப் போட்டுத் தாளிச்சிருவாங்க (ப்ரூட்ஸ் தொக்கு, ஓட்ஸ் மபின் என்று)
சஷிகா, இன்னிக்கு உங்க வலைதளத்தில பாத்த ஒரு பின்னூட்டம் - Malar Gandhi என்பவர் நடத்துகிற Kitchen Mishaps! என்கிற விபரீத சமையல் அனுபவங்களை கேட்டிருக்கிறது. அதற்கு இன்றுதான் Me, Microwave and Mouse என்று ஒரு படைப்பை(!) சமர்ப்பித்திருக்கிறேன். யூ??
அப்புறம்...
■
காலடி ஆபிஸிலிருந்து அவசர மெமோ-2:
இடுகை எழுதி ரொம்ப நாளாச்சு.. இந்த ரசிகைக்காக ஒரு நாலு வரியாவது எழுதுங்க.. ங்க.. ங்க என்று அடம் பிடித்த, கத்தார் ரசிகை ப்யூச்சர் ஷாந்தி அவர்களுக்கு இந்த இடுகையின் ஏதாவது நாலு வரிகள் சமர்ப்பணம் ஆகின்றன.