Tuesday, August 25, 2009

25வது காலடி

அன்பார்ந்த பதிவர்களே, வாசகக்கண்மணிகளே, காலடியின் தீவிர அதி தீவிர ரசிகக்கண்மணிகளே!

இது நம் காலடியின் 25-வது பதிவு..!!

இது பதிவுலகத்துக்கு நல்லதில்லை, என்ட் ஆப் டேஸ், ஆர்மகெடான், டல்கோலக்ஸ், விதி வலியது, ப்ச்.., என்று நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு என் நன்றி!


நான் இருபத்தைந்து இடுகைகள் எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாகவும், அதற்கும் பின்னூஸ் வந்திருக்கின்றன என்பது ஆதுரமாகவும் இருக்கிறது.

பாசமோடு தம்பி, மாப்ள, மாம்ஸ், நண்பா என்று அழைக்கிற முகம் தெரியா பாசக்காரர்களைப் பார்த்தது இல்லை. சங்கா அண்ணன், பெரியண்ணன் ​சென்ஷி, ஸ்டார்ஜன் மாம்ஸ், அக்பர் மாப்ள, மாப்ள ஏனாஓனா, தம்பி ​சேலம் சண்முகம் இப்படி தடாலடியாக பாசமாக அழைப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது!

ஆனாலும் இந்த குறுகிய காலத்திலேயே இவர்கள் அன்பைச் சம்பாதித்தது கண்டு இறுமாப்பு அடைகிறேன்!

இடுகைகளின் நீளத்தை விட என் பின்னூஸ்களின் நீளம் அதிகம். அந்த பின்னூஸ்களையும் (பொறுமையாக) படித்துவிட்டு பாராட்டிய அன்பு நெஞ்சகளுக்கு நன்றி! முக்கியமாக அனுஜன்யா, பீர் Peer, ஈரோடு நாகராஜ், வால்பையன் இவர்களுக்கு நன்றிகள்!

முதலில் பதிவு எழுத வரும்போது தீவிரமாக சிறுகதை, கட்டுரை என்றுதான் வந்தேன். அப்புறம்.. ​மொக்கைகள்தான் நம்மை அடையாளப்படுத்தும் என்று.. எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்...!!!

இந்ந மாதிரி என்னை வழிப்படுத்தியது கோவி. கண்ணனின் புதிய பதிவர்களுக்கு சில யோசனைகள் என்ற இடுகைதான். அதற்கு GK-க்கு என் நன்றிகள்!

என்னோட கலை ஆர்வம் (ப்ளீஸ்..) ஓவியத்தில் தொடங்கியது! அப்புறம் மெல்ல மெல்ல கவிதை, கதைன்னு வளர ஆரம்பிச்சிருச்சு! தனியா ரூமில அடைஞ்சு டயரி டயரியா.. கவிதை, டயரியாவே ஆகியிருக்கு!

கவிதை என்றதும் மனங்கவர்ந்த நேசமித்ரன், நந்தா நினைவுக்கு வரும் முன் அவர்கள் கவிதைகள் நினைவுக்கு வந்துவிடுகின்றன.

அப்பா குமுதம், மாலைமதி, முத்தாரம், கல்கண்டு, ஆவி, ஜுவி, நக்கீரன் இப்படி குவியலா வாங்கித் தள்ளுபவர். அப்பா இதுவரைக்கும் குமுதம் ஒரு இதழ் கூட வாங்க மிஸ் பண்ணுனதேயில்லை! நான் 9வது படிச்சிட்டிருக்கும் போது நீல. பத்மனாபனின் தேரோடும் வீதியில்.. கொடுத்து படிச்சிப் பாருன்னாரு! அவர் அதைப் படிக்கலேன்னு நினைக்கிறேன். ஒரே நாள்ல முழுசும் படிச்சிட்டு, நல்லாயிருக்கு இன்னொரு தரம் வாசிக்கணும் என்று மறுவாசிப்பும் செய்தேன். அப்புறம் வீட்டில் ரஷ்ய எழுத்தாளர் + சினிமா இயக்குநர் வசீலி ஷுக்சீனின் வாழ விருப்பம் சிறுகதைகள் தொகுப்பு இருக்கும். அது என்னோட பேவரிட். குறைஞ்சது 100 தடவை படிச்சிருப்பேன். இந்த மாதிரியான வாசிப்புகள் கொடுத்த சுவையில் லயிச்சு, இந்தியா டுடேவில் (அப்பா கொஞ்ச காலம் அதுக்கும் சந்தாதாராகியிருந்தார்) வந்த சிறுகதைகள், ஓவியங்களை ரசிக்க ஆரம்பித்தேன். அது புது மாதிரியான அனுபவமாக இருந்தது.

அதற்கப்புறம் ரசனையே வேறு மாதிரி ஆகிவிட்டதாக உணர்ந்தேன்.

கன்னிவாடியில் இருந்த போது அறிமுகமான க.சீ.சிவக்குமார் அண்ணன். அவர் அறிமுகப்படுத்திய இலக்கியங்கள், இலக்கியவாதிகள் (என். ஸ்ரீராம், யூமா. வாசுகி, சுப்ரபாரதிமணியன், பாஸ்கர் சக்தி, குன்னாங்குர் செல்வம், ரமேஷ் வைத்யா, இன்னும் குடியில் பழகி பெயர் தொலைந்த நண்பர்கள்..) என ஒரு உற்சாக துணையாயிருந்தார்.

இப்ப இந்த மாதிரி பதிவு எழுதுவது ஒரு இளைப்பாறுதலாக உணர்கிறேன்.

ஆனால் எதிலும் அபரிமிதமாக உள்ளிறங்கி, பின் மூச்சுத்திணறி வெளியே வருவதாக இருக்கிறது என் பிழைப்பு. இதே போல் இங்கும், பதிவுலகத்தில் அபரிமிதமாய் இறங்கி விடுவோனோ என்று பயமாயிருக்கிறது. ஏனென்றால், இதன் வசீகரம் அப்படி!

எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் பதிவு எழுத முடிகிறது. தீவிரமான பதிவுகளில் பின்னூஸ் வாயிலாக பங்கேற்க முடிகிறது. அதி முக்கியமாக வாய்விட்டு சிரிக்க முடிகிறது!

Al though the ceiling strikes my forehead, I could fly between floor to ceiling!

பதிவுலகத்தில் நான் அறிந்த வலைபதிவுகள் மிகவும் சொற்பம். அதில் என்னைக் கவர்ந்த சிலதை பட்டியலிடுவது என் நுனிபுல் அறிவை மட்டும் காட்டும். இருந்தும் என் நன்றியை அவர்களுக்கு வேறெப்படி உணர்த்துவேன்.
கவிதை, சிறுகதை, மற்றும் ப்ரியத்தால் என்னை வசீகரிக்கும் பா.ராஜாராம், தீவிரமான சிந்தனைகளைக் காட்டும் சந்ரு, இரும்புத்திரை அரவிந்தன், மதுரை டக்ளஸ், தல SUREஷ், டெக்னாலஜி புலி டவுசர் பாண்டி, சிந்தனி - தங்கமணி பிரபு, சமரன், குடுகுடுப்பை, நான் ஆதவன், வினோத்கெளதம், முரளிகுமார் பத்மநாபன், RAMYA, எம்.பி.உதயசூரியன், வண்ணத்துபூச்சியார், கடைக்குட்டி, கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும், ப்ரபஞ்சப்ரியன், ப்ரியமுடன் வசந்த், சிக்கன இடுகை கவி டோமி, ஜவஹர், .. இன்னும் நிறைய பேர்!
அனைவருக்கும் நன்றிகள்!

Never I forget you - it could be merely the names sometimes!

42 comments:

ப்ரியமுடன் வசந்த் said...

25 வது (`கால்`) காலடிக்கு வாழ்த்துக்கள் ஜெகா

☀நான் ஆதவன்☀ said...

தங்களின் 25வது பதிவை விசிலடித்து வரவேற்கிறேன் :)

சென்ஷி said...

வலையுலகில் அழுத்தமான காலடி பதித்து தனது 25வது இடுகையை இட்டிருக்கும் அன்புத்தலைவருக்கு வாழ்த்துக்கள்..

//நீல. பத்மனாபனின் தேரோடும் வீதியில்.. கொடுத்து படிச்சிப் பாருன்னாரு! அவர் அதைப் படிக்கலேன்னு நினைக்கிறேன். ஒரே நாள்ல முழுசும் படிச்சிட்டு, நல்லாயிருக்கு இன்னொரு தரம் வாசிக்கணும் என்று மறுவாசிப்பும் செய்தேன். அப்புறம் வீட்டில் ரஷ்ய எழுத்தாளர் + சினிமா இயக்குநர் வசீலி ஷுக்சீனின் வாழ விருப்பம் சிறுகதைகள் தொகுப்பு இருக்கும். அது என்னோட பேவரிட். குறைஞ்சது 100 தடவை படிச்சிருப்பேன்.//

இதைப்பற்றி ஏதும் முன்னர் எழுதியதுண்டா. இல்லையேல் ஒரு முறை எங்களுக்காக அந்தக்கதைகளை பகிருங்களேன். மகிழ்வோம்..

தீ.அ.தீ.வா.க.சார்பாய்
ஷார்ஜாவிலிருந்து
சென்ஷி

பீர் | Peer said...

//பதிவுலகத்தில் அபரிமிதமாய் இறங்கி விடுவோனோ என்று பயமாயிருக்கிறது. ஏனென்றால், இதன் வசீகரம் அப்படி!//

எனக்கும் இதே பயமிருக்கிறது.
அதற்கு காலடியும் ஒரு காரணம் என்று சொல்வதில் பெருமைப்படுகிறேன்.

தொடர்ந்த அன்பு பகிர்தலுக்கு நன்றி மற்றும் 25வது காலடிக்கு வாழ்த்துக்கள்.

துபாய் ராஜா said...

25-வது பதிவிற்கு வாழ்த்துக்கள். அப்படியே 50 அடிச்சி சீக்கிரம் செஞ்சுரி போடுங்க.

சங்கர் தியாகராஜன் said...

//முதலில் பதிவு எழுத வரும்போது தீவிரமாக சிறுகதை, கட்டுரை என்றுதான் வந்தேன். அப்புறம்.. ​மொக்கைகள்தான் நம்மை அடையாளப்படுத்தும் என்று.. எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்...!!!//

உண்மை, அருமை, 25வது பதிவிற்க்கு வாழ்த்துக்கள்.

சங்கர் தியாகராஜன் said...

பெயரில் அப்படியே இணைப்பு(Link) கொடுத்திருக்கலாம்.

பா.ராஜாராம் said...

ப்ரியங்கள் நிறைந்த என் ஜெகா,
வசீகரங்கள் வெறும் ஒரு சொல்.வாழ்வோ மீறிய செயல்.பயம் கொள்ளாது போகவேணும்.போதுமான போஷாக்கு இருக்கு.சொல்ல போனால்,வாசித்ததை விட பகுதியின், பகுதியின், பகுதியைதான் காட்டி வருகிறீர்கள்.காட்டவும் இயலும்.வேறு என்ன சொல்லட்டும்,..நிறைய இருக்கு ஜெகா,உங்களிடம்.காட்டி தாருங்கள்.மற்றபடி,இருபத்தைந்து வாழ்த்துக்கள் ஜெகா!.."வெறும்" இருபத்தைந்து வாழ்த்துக்கள்.போதாதுதானே...,பிறகு வசீகரங்கள் என்ன செய்துவிடும்?..வாழ்வு நம் முதல் வசீகரமாய் கொள்ளும் நமக்கு... நிறைய வாழ்த்தும்,அன்பும்.நன்றி வேணுமா ஜெகா-இனி நமக்குள்?

ஷங்கி said...

என்னய்யா இப்படி ஒரு செண்டிமெண்டல் பதிவைப் போட்டுட்டீரு?! மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி! மொக்கையுமில்ல, சக்கையுமில்ல! நீரு பதிவிலயும், பின்னூட்டத்துலயும் குடுக்கிறது என்னையப் பொறுத்தவரை பொக்கேய்யா! பதிவுலகில் அபரிதமா இறங்கி அடிச்சுத் தூள் கிளப்ப எல்லாம் வல்ல பதிவுலக மகரநெடுங்குழைகாதனை வேண்டுகிறேன்!
அப்புறம், காலடிக்கு இருக்கிற இடத்துல கூரை ஆகாசம்லய்யா! நீரு பறக்க முடிகிற தூரம் அளவிடக்கூடியதா? சரி, சரி, ஒரு மொக்கையை ச்சை பொக்கேய உடனே போட்டுரும்!

ஷங்கி said...

”காலடிக்கு இருக்கிற இடத்துல கூரை ஆகாசம்லய்யா!” என்பதை
”காலடி இருக்கிற இடத்துல கூரை ஆகாசம்லய்யா!” என்று படிக்கவும்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

வாழ்த்துக்கள் just click

வால்பையன் said...

//வாசகக்கண்மணிகளே, காலடியின் தீவிர அதி தீவிர ரசிகக்கண்மணிகளே!//

இது தான் உங்ககிட்ட ரொம்ப பிடிச்ச விசயம், யாரையும் விட்டுகொடுக்க மாட்டிங்களே!

வால்பையன் said...

25-வாது பதிவுலயே உங்களுக்கு இத்தனை நண்பர்கள் என்பது ஆச்சர்யம்!

100 வது பதிவுகெல்லாம் 1000 நண்பர்களை தாண்டியிருப்பீர்கள்!

வாழ்த்துக்கள்!

Beski said...

//வாசகக்கண்மணிகளே, காலடியின் தீவிர அதி தீவிர ரசிகக்கண்மணிகளே!//
தோ வந்துட்டேன்.

ஜெ மாம்ஸ்,
உங்களோட கலை ஆர்வம் (மத்தவங்க, ப்ளீஸ்..) மேலும் வளர வாழ்த்துக்கள்.

வசந்த் சொன்ன மாதிரி காலடியின் காலுக்கு வாழ்த்துக்கள்.

25 கொண்டாட்டங்களைப் பத்தி சேதி ஏதும் காணோம்... 25க்கு ஒரு காலாவது வாங்கி அனுப்பி வைங்க.

நாதாரி said...

என்ன ஜெகநாதன் 25 வது பதிவை இப்படி கொண்டாடறீங்க?

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் விட்ஜெட் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள்
அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதேAdd-தமிழ் பட்டன் இணையுங்கள் !
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யுங்கள்

நேசமித்ரன் said...

பிரிய மை கசியும் உங்கள் பின்னூட்டங்கள்
கவிதையை செரித்து நீங்கள் முத்தமென தரும் சொற்கள் ஜெகன்

மனசுக்கு ரொம்ப பக்கத்தில் நிற்கும் உங்களின் பதிவுகள்
எழுதாத பேனாவை உதறிக் கொள்வது மாதிரி கவிதை வழி மறிக்காத பொது மனசை காலியாக்க உதவும் ஒருவகை அற்புதம் உங்களின் பதிவுகள்
மிகையல்ல நண்பா

இருபத்து ஐந்தா வாழ்த்துக்கள்

Nathanjagk said...

அன்பு
பிரியமுடன்...வசந்த்
☀நான் ஆதவன்☀
மிக்க நன்றி! உங்கள் விசிலால்தான் நான் இந்த பல்டி அடித்துக் ​கொண்டிருக்கிறேன்.

Nathanjagk said...

பெரியண்ணன் சென்ஷி, நிச்சயமாக பகிர வேண்டிய கதைகள், புத்தகங்கள் என்று நிறைய உண்டு. நிறைய படிக்க வேண்டியதும் பாக்கியிருக்கிறது. நீங்கள் எழுதிய நூல் அறிமுகத்தைப் படித்துவிட்டு கம்பீரமாக யாமம் (எஸ்ரா) மற்றும் சில புத்தகங்கள் வாங்கிவிட்டேன். யாமம் ஒரு பக்கம் கூட புரட்டவில்லை!!

Nathanjagk said...

அன்பு பீர் | Peer ,
இது உண்மைதான்.. பதிவு எழுதுவது போதை என்று யாரோ சொன்னது (யாரும் ​செர்ல்லவில்லை என்றாலும்) உண்மைதான். ​சென்ற வாரம் தாராபுரத்தில் நண்பனுக்குத் திருமணம் அதற்காக அங்கு ​சென்றுவிட்டு திரும்பினேன். பயணம் முழுதும்.. இடுகை ஏதாவது சிக்குமா என்றேயிருந்தது!

Nathanjagk said...

அன்பு பீர் | Peer ,
இது உண்மைதான்.. பதிவு எழுதுவது போதை என்று யாரோ சொன்னது (யாரும் ​செர்ல்லவில்லை என்றாலும்) உண்மைதான். த​ேகசென்ற வாரம் தாராபுரத்தில் நண்பனுக்குத் திருமணம் அதற்காக அங்கு ​சென்றுவிட்டு திரும்பினேன். பயணம் முழுதும்.. இடுகை ஏதாவது சிக்குமா என்று ஜன்னல் வழி, பக்கத்து சீட்டுக்காரர் பேச்சு, ட்ரெயின், பஸ் திருக்குறள், டிவியில் போட்ட ​கேப்டன் படம், கல்யாண ரிஸப்ஷன் சாப்பாடு.. என்று ஒவ்வொரு அனுபவங்களையும் மனதில் இடுகைகளாகவே எழுதிக் கொள்கிறேன்!

Nathanjagk said...

அன்பு மிகு..
துபாய் ராஜா,
சங்கர் தியாகராஜன்...
வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! உண்மையில் 25வது பதிவு ​கொண்டாட்டம் என்றெல்லாம் முதலில் எண்ணவேயில்லை. ஊருக்குப் போய்விட்டு வந்ததால் ​நேரப்பற்றாக்குறை காரணமாகவே இந்த இடுகை!!

Nathanjagk said...

அன்பு ராஜா.. ​ஆற்றங்கரை மணலில் சிநேகிதனோடு உட்கார்ந்து ​பேசுவது போல உங்கள் எழுத்து! மற்றவர் எழுதியதைப் படிக்கும்​போதுதான் கர்வத்தின் நிழல் சிறுத்து, ரசனை அறிவு சிறுது ஒளிர்கிறது. உங்கள் எழுத்தே எனக்கு நல்ல ஊக்கம். இந்த வாழ்த்து எனக்கு அபரிமிதம்தான்!! நன்றி நண்பரே!

Nathanjagk said...

அண்ணா.. சங்காண்ணா..
என்ன செய்ய?? ​கொஞ்சம் கருகிற வாடை வர்றப்பவே டவுட் ஆனேன்..​ரொம்ப சென்டிமெண்டலா ​போயிடுச்சோன்னு.. நீங்க கரீட்டா குட்டீடிங்ணா! நீங்க 25வது பதிவு ​கொண்டாடியதை பாத்துட்டுதான்.. அண்ணன் காட்டிய வழின்னு... நானும்.. ஹி..ஹீ..!

Nathanjagk said...

SUREஷ் (பழனியிலிருந்து)..
தல என்ன புரட்சிகரமான லிங்க் ​கொடுத்திருக்கீங்க...! பயங்கரமாயில்ல இருக்கு!!

Nathanjagk said...

அன்பு வால்பையன் ​ரொம்ப ​ரொம்ப நன்றிங்!!! ஊருப்பக்கம் வந்தா ஒரு சிட்டிங் ​போடணும்!

Nathanjagk said...

மாப்ள ஏனாஓனா..

//25க்கு ஒரு காலாவது வாங்கி அனுப்பி வைங்க// முதல்ல இடுகைய பிரமாண்டமான விழா மேடை.. அதுல ​கோவி. கண்ணன் வரவேற்புரை.. ​சென்ஷி அண்ணன் முன்னுரை, சங்கா அண்ணன் தலைமையுரை.. நீங்க கேட்டரிங் (பு​ரோட்டா இடுகை மறக்க முடியுமா). அப்படின்னு ஒவ்வொருத்தரா உள்ள இழுத்து லந்து பண்ணலாம்னு நினைச்சு.. அப்புறம் சீரியஸா எழுதிட்டேன்!
உங்களுக்கு கால் என்ன.. புல் லெக் பீஸே வாங்கி அனுப்பிச்சிடலாம்!

Nathanjagk said...

நாதாரி..
ஐ ம் ஸாரிமா..! ​கொஞ்சம் உணர்ஸிவஸ பட்டுட்டேன்!! நன்றியும் எலுமிச்சம் பழமும்!

Nathanjagk said...

அன்புக் கவி நேசமித்ரா..
இந்த பின்னூட்டம் கூட கவிதையாய் மழைத்திருக்கிறது!! பிரியத்தின் அணுக்கத்தை மண்வாசமாக அறியமுடிகிறது உன்னிடம்! நன்றி நண்பனே!!

குடுகுடுப்பை said...

ஆனால் எதிலும் அபரிமிதமாக உள்ளிறங்கி, பின் மூச்சுத்திணறி வெளியே வருவதாக இருக்கிறது என் பிழைப்பு. இதே போல் இங்கும், பதிவுலகத்தில் அபரிமிதமாய் இறங்கி விடுவோனோ என்று பயமாயிருக்கிறது. ஏனென்றால், இதன் வசீகரம் அப்படி!//

இதை மட்டும் மனதிள் நிறுத்துக்கொள்ளுங்கள். என்னுடைய குணமும் எதிலும் இறங்கிவிட்டால், வேலை முடியாமல் வெளியேறமாட்டேன், சமயங்களில் தேவையில்லையென்று அல்லது பிறருக்காக விட்டுக்கொடுப்போம் அல்லவா,அது போல் பதிவு எழுதுவது மன நிம்மதி தாண்டி வந்தால் விட்டுக்கொடுத்துவிடுங்கள்.

(நான் இன்னும் விட்டுக்கொடுக்கவில்லை)

டவுசர் பாண்டி said...

வாழ்த்துக்கள் தலீவா , கலக்குங்கோ !! உங்களோட 50 வது பதிவ எதிரு நோக்கி காத்துக்கீனு ,இருக்கோம் ,

Karthikeyan G said...

வாழ்த்துக்கள்!

க. தங்கமணி பிரபு said...

வணக்கம், 25க்கு வாழ்த்துக்கள்!

எல்லோர்க்கும் எப்படியும் ஏதாவ்தோரு நல்ல விஷயத்தை மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானமாக செய்து வரும் மனமாஎந்த பாரட்டுதல்களுக்குரிய உங்களிடம் ஒரு வேண்டுகோள்! தயவு செய்து என் ப்ளாக் http://chinthani.blogspot.com/ கடந்த இரு பதிவுகளையும் அதை தொடர்ந்து அதில் குறிப்பிட்டுள்ள மற்ற ஆங்கில இணையப்பக்கங்களையும் படித்து உங்கள் மனதுக்கு சரியென்று படுவதை உங்கள் ப்ளாக்கை படிப்பவர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்!! இது ஒரு மொத்த இனத்தின் வாழ்வாதார போராட்டத்துக்கு நம்மால் முடிந்த உதவி!

Nathanjagk said...

அன்பு குடுகுடுப்பை..
//பதிவு எழுதுவது மன நிம்மதி தாண்டி வந்தால் விட்டுக்கொடுத்துவிடுங்கள்//
சத்தியமான வார்த்தைகள்! ஆயினும் சாத்தியப்படுமா என்று சஞ்சலமாக இருக்கிறது! நான் எழுதற மொக்கைகளுக்கு படிக்கிறவங்க மனநிம்மதிதான் பாழாகும்னு, நீங்க நல்லாத்த்த்தான் இருப்பீங்கன்னு எங்க வீட்டு அம்ணி ​சொல்லுதுங்க!

Nathanjagk said...

அன்பு டவுசர் பாண்டி.. ​கெட்ஜட் ​திலகமே!! ரொம்ப நன்றி தலைவரே!! 50வது பதிவுக்கு நீங்கதான் ஒரு கானாபாட்டு எழுதித்தரணும்!

Nathanjagk said...

அன்பு
Karthikeyan G...
க. தங்கமணி பிரபு..
Thanks a lot!!!

இரும்புத்திரை said...

வெள்ளிப்பதிவுக்கு வாழ்த்துக்கள்

Beski said...

//உங்களுக்கு கால் என்ன.. புல் லெக் பீஸே வாங்கி அனுப்பிச்சிடலாம்!//

ஜெ மாம்ஸ்,
நான் கால்னு சொன்னது குவாட்டரு... உங்களுக்கு புரியலயா? இல்ல நடிக்கிறீங்களா?

நீங்க நல்லவரா? கெட்டவரா மாம்ஸ்?

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

25 வது காலடிக்கு வாழ்த்துக்கள்!
யார் எப்படி எழுதினாலும், நீங்கள் மனசாட்சிக்கு உட்பட்டு மிகவும் நேர்மையாக எழுதுகிறீர்கள் ஜெகன்! உங்கள் காலடிப் பயணம், நீண்ட நெடியப் பயணமாகத் தொடர மீண்டும் வாழ்த்துக்கள்!

Nathanjagk said...

மாப்பு ஏனாஓனா..
//ஜெ மாம்ஸ்,
நான் கால்னு சொன்னது குவாட்டரு... உங்களுக்கு புரியலயா? இல்ல நடிக்கிறீங்களா?
நீங்க நல்லவரா? கெட்டவரா மாம்ஸ்?//
நாம காலடின்னு ​பேரு வச்சதே.. குவாட்டர் குடிங்கிற உள்குத்தோடதான்.. இல்ல நுண்ணரசியல்ன்னு கூட ​சொல்லலாம்!

நந்தாகுமாரன் said...

வாழ்த்துகள்

Nathanjagk said...

அன்பிற்கினிய M.S.E.R.K. மிக்க நன்றி! இதை பிரபஞ்சத்தின் தீர்க்கதரிசன வாழ்த்தாக நினைத்துக் ​கொள்கிறேன்!!