Sunday, November 22, 2009

ஒன்றரைக் கண் ரைபிள்!


பெரிய ​பெரிய கட்டிடங்கள்... பளபளக்கிற கண்ணாடித் திரை.. கசங்கலாக ​தெரிகிற நம் முகங்கள் கூட அதில் அட்டகாசமாகத்தான் இருக்கின்றன.


சுமார் 100 ஸாப்ட்​வேர் கம்​பெனிகள், அறிவு ​சொட்டும் முகத்​தோடும் - காற்றில் பறக்கிற மிடிகளுமாய் திரிகிற ​தேவதைகள், சாதாரணமாய் ​தெறிக்கிற ஐ​ரோப்பிய ​​செந்​தேகங்கள், இவிங்க இங்க ஏன் என்று எனக்குள் துடிக்கிற சந்​தேகங்கள், ​ஸ்​மோக்கிங் ஸ்​​னோலில் கேரண்டியாக எப்​போதும் கண்ணில் சிக்கும் ஒன்றிரண்டு chickகள் - நான் அவரசத்துக்கு தீ கடன் வாங்கி தம் பற்றிக்​கொண்ட தீத்​தேவதை பற்றி இன்​னொரு சமயம் ​​சொல்கி​றேன்.. ப்ளீஸ்!


இது எந்த இடம்? ஐடிபிஎல்.. ஒயிட்ஃபீல்டு ​ரோடு.. ​பெண்களூரு!


ஐடிபிஎல்லில் நான் இருப்பது ​நேவிக்​கேட்டர் பிளாக்கு! ஒண்ணுக்கு இருப்பதும் அந்த பிளாக்கிலுள்ள கிரவுண்ட் ப்​ளோர் ​ரெஸ்ட் ரூமில்தான்.. கிட்டத்தட்ட க்ரவுண்ட் ப்​ளோரிலுள்ள எல்லாக் கம்​பெனிகளுக்கும் ​பொதுவான (ப்ளஸ் ​செக்யூரிட்டிஸ், ட்ரைவர்கள்) கழிப்ப​றை. எப்​போதும் சன்னமான க​ரோக்கீ ஒலித்துக் ​கொண்டிருக்கும் மினுமினு இடம்.. அந்த இ​சை​யைக் ​கேட்கும் ​போது என் மனசு.. "ஏஸி வச்ச பாத்ரூமில் என்ன வரும் ​போங்க" என்று ​மெட்டுக்குப் பாட்​டெழுதிக் ​கொள்கிற​து.


எப்​போதும் ​போல்தான் அன்றும் ஒண்ணுக்கடிக்கப் ​போ​னேன். யூரினலில் பீச்சி விட்டு வந்து வாஷ்​பேஷனில் ​கைக்கழுவி விட்டு நிமிரும் ​போது..


"சார்.. அவரு உங்களுக்குத் ​தெரிஞ்சவரா?" என்று ஒரு கட்​டைக் குரல் - கன்னடத்தில்.


யா​ரென்று பார்த்தால்.. ​ரெஸ்ட் ரூ​மைக் கிளீனாக ​வைத்துக் ​கொள்ளப் பணிக்கப் பட்ட க்ளீனர்...ஒரு நா​ளைக்கு 10 மணி​நேரம் அந்த ​டாய்லட் + யூரினல்கள் நிரம்பிய ​இடத்​தை தன் ஆபிஸாகக் ​கொண்டு ​ரெஸ்ட்​​லெஸ்ஸாக இருப்பவர். ​பேர் ​தெரியாது. அப்​போது என்று நான் ஒருவன் மட்டும்தான் அங்கு.


"யாரு?" என்​றேன்


"இதுக்கு முந்தி வந்திட்டுப் ​போனாருல்ல.. ​கொஞ்சம் குண்டா.."


இந்த மாதிரியான விசாரிப்புகள், ​​பேட்டிகள் எனக்கு ​கொஞ்சம் புதுசு.. ​இருந்தும் கவனமாக அவருடன் ​பேச முற்பட்​டேன்.. ஆப்டர் ஆல் அவ​ரைவிட 2 மணி​நேரம் கம்மியாக ​வே​லைப் பாக்கிற ஆளுதா​னே நானு.


"குட்​டையா இருந்தவரா?"


"ஆமா.. குட்​டையா.. குண்டா"


"சிவப்பா.. வழு​க்​கையாவும் இருந்ததா?"


இப்​போது அவருக்கு உற்சாகம் பற்றிக் ​கொண்டு விட்டது.. கண்களில் திருப்தி ​​கொப்பளிக்க..


"ஆமா சார்.. அவருதான்.. அவர்கிட்ட ​சொல்லி ​வைங்க"


​​​​​ஙே என்று முழித்துக் ​கொண்​டே,


"என்னன்னு?"


"சார்.. அவரு க​ரெக்ட்டா ஒண்ணுக்கு அடிக்க மாட்​டேங்கிறாரு.."


​ஙே.. ஙீ.. ​ஙெள.. என்று எல்லாமாக முழிக்க ​​வேண்டியதாயிற்று..


"என்னது????"


"ஆமா சார்.. அவரு க​ரெக்ட்டா ​பேசின்ல விட மாட்​டேங்குறாரு"


".."


"ஒண்ணு சுவத்தில அடிச்சிடறாரு.. இல்லீனா.. ​கீ​ழே த​​ரையில அடிச்சி விட்டுடறாரு"


"......??"


"அவரு வந்துட்டுப் ​போன பின்னாடி.. நான் ஒவ்​வொரு தட​வையும் அ​தை க்ளீன் பண்ண​வேண்டியதா இருக்கு சார்.."


"யாரு சிவப்பா... குண்டா.. குள்ளமா.. வழுக்​கையா இருந்தவரா?"


"அட ஆமா சார்.. அவ​​ரேதான்... எப்ப வந்தாலும் இப்படி​யே சிந்திட்டுப் ​போயிடறாரு.. எனக்குதான் ​வே​லை"


"...ம்...?"


"நீங்க​ளே இங்க வந்து பாருங்க​ளேன்..." என்று அந்த பாதிக்கப்பட்ட யூரின​லை ​நோக்கி சுட்டிக்காட்டிவிட்டு,


"அவருகிட்ட ​கொஞ்சம் ​சொல்லிடுங்க சார்.. இந்த மாதிரியெல்லாம் ஆகுதுன்னு.. "


"நானா??"


"ஆமா சார்.. இப்ப நீங்​கெல்லாம் வர்றீங்க.. எவ்வளவு டீஸன்டா வந்துட்டு, இருந்துட்டுப் ​போறீங்க.. நீங்க ​ரொம்ப நீட்டு சார்.."


எதுவும் ​சொல்ல முடியாமல் சிரித்து ​வைத்​தேன்.


"அவருகிட்ட ​சொல்லி ​வைங்க சார்"


".... அது முடியா​தே..?"


"ஏன் சார்...??"


"அவருதான் என் மா​னேஜர்"


என்று ஜிப்​பைப் ​இழுத்து விட்டுக் ​கொண்டு ​வெளி​யேறி​னேன்.

37 comments:

ஷங்கி said...

ஹிஹிஹி!! சிரிச்சி முடியலை! வடிவேலு ஜோக் மாதிரி மண்ணின் மணம் கமழ இருந்தாலும் உங்கள் படிப்பறிவும் நக்கலும் சரளமாக உள்ள வந்துருது!! அட்டகாசம்.

அப்புறம், இப்பதான் பதில் மெயில் போட்டேன்!!!

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்லாருக்கு ஜெகன் , ஒண்ணுல இவ்வளவு விசயமா

பாவா ஷரீப் said...

தல கடைசீல மா​னேஜர் இமேஜ் டேமேஜ் ஆய்டுச்சே

பா.ராஜாராம் said...

//சுமார் 100 ஸாப்ட்​வேர் கம்​பெனிகள், அறிவு ​சொட்டும் முகத்​தோடும் - காற்றில் பறக்கிற மிடிகளுமாய் திரிகிற ​தேவதைகள், சாதாரணமாய் ​தெறிக்கிற ஐ​ரோப்பிய ​​செந்​தேகங்கள், இவிங்க இங்க ஏன் என்று எனக்குள் துடிக்கிற சந்​தேகங்கள், ​ஸ்​மோக்கிங் ஸ்​​னோலில் கேரண்டியாக எப்​போதும் கண்ணில் சிக்கும் ஒன்றிரண்டு chickகள் - நான் அவரசத்துக்கு தீ கடன் வாங்கி தம் பற்றிக்​கொண்ட தீத்​தேவதை பற்றி இன்​னொரு சமயம் ​​சொல்கி​றேன்.. ப்ளீஸ்!
இது எந்த இடம்? ஐடிபிஎல்.. ஒயிட்ஃபீல்டு ​ரோடு.. ​பெண்களூரு!
ஐடிபிஎல்லில் நான் இருப்பது ​நேவிக்​கேட்டர் பிளாக்கு! ஒண்ணுக்கு இருப்பதும் அந்த பிளாக்கிலுள்ள கிரவுண்ட் ப்​ளோர் ​ரெஸ்ட் ரூமில்தான்.. கிட்டத்தட்ட க்ரவுண்ட் ப்​ளோரிலுள்ள எல்லாக் கம்​பெனிகளுக்கும் ​பொதுவான (ப்ளஸ் ​செக்யூரிட்டிஸ், ட்ரைவர்கள்) கழிப்ப​றை. எப்​போதும் சன்னமான க​ரோக்கீ ஒலித்துக் ​கொண்டிருக்கும் மினுமினு இடம்.. அந்த இ​சை​யைக் ​கேட்கும் ​போது என் மனசு.. "ஏஸி வச்ச பாத்ரூமில் என்ன வரும் ​போங்க" என்று ​மெட்டுக்குப் பாட்​டெழுதிக் ​கொள்கிற​து.
எப்​போதும் ​போல்தான் அன்றும் ஒண்ணுக்கடிக்கப் ​போ​னேன். யூரினலில் பீச்சி விட்டு வந்து வாஷ்​பேஷனில் ​கைக்கழுவி விட்டு நிமிரும் ​போது..
"சார்.. அவரு உங்களுக்குத் ​தெரிஞ்சவரா?" என்று ஒரு கட்​டைக் குரல்//

இவ்வளவு முதிர்ச்சியான நகைச்சுவை உங்கள் தளத்தில்தான் கேரண்டி ஜெகன்.சகோ ஹேமா மட்டும் வர போக இல்லாமல் இருந்தால் மனசு விட்டு பேச என நிறைய இருக்கு."அட நாய் அண்ணா"...எனும்.அதனால் பொத்திக்கிட்டு போறேன்.

இப்ப நிறைய என் பெயரில் டூப்ளிகேட் இருக்காங்க மக்கா.என் முதற்கொண்டு..

:-)))))))))

பா.ராஜாராம் said...

ஜெகன்,உங்கள் மின் முகவரி கிடைக்குமா?

rajaram.b.krishnan@gmail.com

ஹேமா said...

கொஞ்சம் கூச்சத்தோடு நகைச்சுவையாகச் சிரித்துக்கொண்டாலும் ஒரு துப்பரவுத் தொழிலாளியின் அவஸ்தை ஜெகாவின் ஸ்டைலோட வந்திருக்கு.

ஜெகா ,உண்மையில் உங்களுக்கு ஒரு சல்யூட்.வந்தோம் போனோம்
ன்னு இருக்கிற இடத்தில இருக்கிற சங்கடத்தையும் சம்பவமாக்கி பதிவாக்கிய ஒரு விழிப்புணர்வு.
யாராச்சும் ஒருத்தர் இதை கவனத்தில எடுத்தாலே சந்தோஷம்.

அண்ணா,பா.ரா அண்ணா நான் ஒண்ணும் சொல்லல.உங்க சுதந்திரம் உங்க கையில.எப்பிடியும் சித்தப்பாகிட்ட சொல்லத்தான் போறேன்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

'ஒண்ணுக்கும்' உதவாத கதை என்று எதுவுமே இல்லை, தலைவா உங்களிடம்.
// ஆப்டர் ஆல் அவ​ரைவிட 2 மணி​நேரம் கம்மியாக ​வே​லைப் பாக்கிற ஆளுதா​னே நானு.//
அந்த டசிங்க்குக்கு தான் எல்லோரும் இந்தக் 'காலடியில்'...........! அருமை ஜெகன்.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

"ஒன்றரைக்கண் ரைபிள்" ???!!!... இப்பத்தான் பார்த்தேன்! சொந்தப் படம் வேறு! கலக்குங்க!

சிநேகிதன் அக்பர் said...

//பெண்களூரு!// அப்படியா. அப்ப நாங்க இருக்கிறது ஆண்களூரு.

//"அவருதான் என் மா​னேஜர்"//

இதை ஊகிச்சேன்.

//தீ கடன் வாங்கி தம் பற்றிக்​கொண்ட தீத்​தேவதை பற்றி இன்​னொரு சமயம் ​​சொல்கி​றேன்.. ப்ளீஸ்!//

சீக்கிரம் சொல்லுங்க மாப்பு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

இது ஒரு சோகக் கதை மாதிரியில்ல இருக்கு..,

குடுகுடுப்பை said...

எனக்கு பெண்களூர்ல நிரந்தரமா (அமெரிக்க வேலையை மூட்டை கட்டிட்டு) வேலை கொடுத்தாங்க நாந்தான் வேலையை விட்டிட்டு இங்கேயே அடுத்த வேலை வாங்கிட்டேன். ரொம்ப வருத்தமா இருக்கு அங்கேயே சரியா ஒன்னுக்கு அடிச்சிருக்கலாம்.

(நானும் தேவே கவுடா பெட்ரோல் பங்க் பகுதியில் ஒரு மாத காலம் ஒன்னுக்கடித்தவன்)

Nathanjagk said...

அன்பு சங்காண்ணா,
இது உண்​மைச் சம்பவம்...
கூடாம கு​றையாம எழுதியிருக்​கேன்.
ஏன் என்​னைப் பாத்து அவருக்கு இப்படி ஒரு எஸ்க​லேஷன் ​சொல்லணும்னு இன்னும் எனக்குப் புரிய​லே!
​ரொம்ப நன்றி!

Nathanjagk said...

வாங்க ஸ்டார்ஜன்..
ஆமா... மருத்துவது​றையில் பரிசோதனையில் கூட இதுதா​னே முக்கியம்.

Nathanjagk said...

அன்பு கருவாச்சி..
கார்ப்ப​​ரேட் வாழ்க்​கையில் இதெல்லாம் சகஜமப்பா.

Nathanjagk said...

வாங்க பா.ரா.
​ரொம்ப நன்றி!
​ஹேமா அவ்வளவு கண்டிப்பானவங்களா? இப்படி பயப்படறீங்க? என்​​னை நான் உன்னில் காண்கி​றேன் மாதிரி இருக்கு பின்னூ!
​மெயில் அனுப்பியாச்சு உங்களுக்கு.

Nathanjagk said...

வாங்க ​ஹேமா!
​ரொம்ப நன்றி!
கழிப்ப​றை​யைத் தூய்மையாக ​வைத்துக் ​கொள்ள ஒவ்வொரு நிமிடமும் ​போராடும் அந்த ​தொழிலாளியின் உ​ழைப்பு ​மேல் எனக்கு ​பெரிய மரியா​தை.

பாவம் பா.ரா​வை பயமுறுத்தாதீங்க.
என்​னோட ஆலமரம் அவர்.

Nathanjagk said...

வாங்க ப்ரபஞ்சப்ரியன்..
எல்லா எழுத்​திலும் உங்க ரச​னை​யை ​லயிக்கி​றேன். ​ரொம்ப ஒத்து​மையும் கூட.
எனக்கும் ஒரு அறிவியல் கட்டு​ரை எழுதணும் ​கொஞ்ச நாளா ஆ​சை.
உங்ககிட்ட இருந்து ​தொத்திக்கிட்டதுதான்.

Nathanjagk said...

வாங்க அக்பர் மாப்ஸ்,
யூகிக்கிறதில கில்லாடிதான் நீங்க.
நிச்சயம் எழுத​றேன் இந்த பு​​கைக்கும் தார​கைகள் பற்றி.

Nathanjagk said...

வாங்க SUREஷ் தல..
நீங்க கண்டுக்கிட்ட ​சோகம் எனக்கும் புரியுது!

Nathanjagk said...

அன்பு குடுகுடுப்​பை..
நீங்க இங்க ​பெங்களூர்ல இருந்தீங்களா??? புதுத்தகவல்!
இந்த மாதிரியான loo wall சமாச்சாரங்கள் நி​றைய உண்டுதான். சிலருக்கு இது wall painting மாதிரி ஆயிடறதுண்டு.. ஆனா பாவம் ​அ​தை க்ளீன் பண்றவங்களுக்குதான் இது water-loo battle மாதிரி ஆயிடுது.
என் மா​​னேஜேருக்கு இப்படி ஒரு ​பெயிண்டிங் ஆர்வமா இல்​லே பிராஜெக்ட் அவசரமான்னு ​​தெரிய​லே.

☀நான் ஆதவன்☀ said...

ஒரு வித்துவானைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியாய்யா இது? :)))

சிரிப்பை அடக்க முடியலண்ணே :))) உங்க ஸ்டைலே ஸ்டைலு தான்!

☀நான் ஆதவன்☀ said...

இந்த டேமேஜரே இப்படி தான் எசமான்... குத்துங்க எசமான் குத்துங்க

விஜய் said...

இதில் கூட நம்மாள்களுக்கு ஒழுங்கு கிடையாது.

நகைச்சுவையாக நல்ல கருத்துகளை எழுதுகிறீர்கள்

வாழ்த்துக்கள்

விஜய்

Menaga Sathia said...

ஒரு துப்புரவு தொழிலாளியின் அவஸ்தையை நகைச்சுவையுடன் சொல்லிருக்கிங்க..

ஷங்கி said...

தம்பி, கற்பனையென்று நான் நினைக்கவில்லை. நீங்கள் சொன்ன விதத்திற்காகச் சொன்னேன்.
தூள் கிளப்புறீங்க!!!

நேசமித்ரன் said...

குழி பறித்து நுரைக்க நுரைக்க சிரிக்க
வைக்கிறது ஜெகாண்ணே

சாப்ட்டுவேர் விஷயம் கலகல

Jawahar said...

ஒண்ணு(க்கு) விடாம எல்லாத்திலையும் குவாலிட்டி மெய்ண்டைன் பண்றாங்களா உங்க ஆபீஸ்லே? தமாஷை விடுங்க, எங்க ஆபீஸ்லே, டாய்லேட்லே மஞ்சள் கொடு போட்டு அதுலே நின்னு மூச்சா போகவும்ன்னு மேலே கோட்டை எழுத்திலே எழுதிப் போட்டிருக்கோம்!


http://kgjawarlal.wordpress.com

செ.சரவணக்குமார் said...

பதிவு பிடித்திருந்தது நண்பரே.

பெசொவி said...

உங்க மேனேஜர் "ஒன்னுக்கு"ம் பிரயோஜனமில்ல போலிருக்கு.

Beski said...

ஜெ மாம்ஸ்,
கொஞ்சம் வேலை அதிகமா இருக்கு, அதனாலதான் என்னோட பின்னூட்டப் பகுதியில நீங்க போட்ட பதிவுக்கு பதில் சொல்ல முடியல. இப்பத்தான் ஞாபகம் வந்தது.

அப்பவே அவ்ளோ ரவுசா?
வெண்பா சூப்பர். நமக்கு நீங்க இந்தப் பதிவோட படத்துல போட்டுருக்குற மாதிரி காப்பி, டீ ரைட்டெல்லாம் கெடையாது. இப்படி உசுப்பேத்துற வேலையெல்லாம் வேணாம். அந்த வெண்பாவ கொஞ்சம் டெவலப் பண்ணி ஒரு பதிவு ப்ளீஸ்.

இந்தப் பதிவு... நல்லாருக்கு, நல்லாருக்கு, நல்லாருக்கு.

இருந்தாலும் ஒரு சந்தேகம். நீங்க மேனேஜர்கிட்ட சொல்லியிருப்பீங்களே?!

நந்தாகுமாரன் said...

செம கமேடி ... ஆனால் இம்மாதிரி கம்பேனி ரகசியங்களை வெளியிட்டால் கேஸ் (case) போட மாட்டார்களா (doesn't your NDS include this?) :)

Nathanjagk said...

அன்பின் அன்பு ஆதவன்...
//ஒரு வித்துவானைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியாய்யா இது? :)))
//
என் மனசுக்குள்ள அப்படி​யே ஓடின வரிகள்..! ஹும்ம்ம்... ​பேசாம காரைத் தள்ள ​வேண்டியதுதான்!!

Nathanjagk said...

வாங்க விஜய் (கவிதை(கள்))
//இதில் கூட நம்மாள்களுக்கு ஒழுங்கு கிடையாது//
"ஆன்-தி-ஸ்பாட் தண்டனை" எதுவும் ​கொடுத்தா ஒரு​வேளை திருந்துவாங்களோன்னு சிந்திக்கத் ​தோணுது இப்ப!!

Nathanjagk said...

நன்றி Mrs.Menagasathia (சஷிகா)
2009- Excellence Award-க்கு காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள் சார்பா ​நன்றிகள் ஆயிரம் தெரிவித்துக் ​கொள்கி​றேன்.

தீஅதீ ரசிகர்க​ளே.. அப்படி​யே சஷிகா​வோட வ​லைப்பக்கம் http://sashiga.blogspot.com/ ​போய்ட்டு வாங்க.. ​செம ஹாட்டான புரோட்டா விருது காத்துக்கிட்டு இருக்கு! அனுமதி இலவசம்.. மறக்காம நம்ம காலடி கம்பேனி ​பேட்​ஜை எடுத்து குத்திக்கிட்டு ​போங்க!! ஜமாய்ங்க!

Nathanjagk said...

வாங்க நந்தா,
//கம்பேனி ரகசியங்களை வெளியிட்டால் கேஸ் (case) போட மாட்டார்களா (doesn't your NDS include this?) :)//
எங்க கம்​பேனியில இன்ட​லெக்சுவல் ப்ராபர்டிகளுக்குதான் non disclosure
இருக்கு! இன்டீரியர் பிராபர்ட்டிகள் not covered!
Thanks!

Kala said...

உங்கள் “காலடி” தேடி வந்துவிட்டேன்
நன்றி சொல்ல...
ஐயய்யோ...என் பின்னோட்டம் பார்த்துப்
படித்ததிலிருந்து{பயந்து}காச்சலே
வந்திரிச்சா?
எல்லாச் சொல்லுக்கும் சுருக்கம் கேட்கலாமா?
என்ன!அநியாயம்...ஞாயம் மட்டுந்தான்
கேட்கலாம் அநியாயம் ....வாயில இருந்து
வரவேபோடாதுஉஉஉஉஉ.
ஹேமாவின் {இதுபற்றி} சொல்லப்போனால்
இரண்டு பேரையும் உதைப்பா..அப்புறம்..
ஒரு சட்டம் உருவாக்கி,உத்தரவின்றி
உட்பிரவேசிக்க வேண்டாம் என்று
அமுல்படுத்தி விடுவார் அதனால்
மூமூமூச்ச்சச்ச்ச்...
என் கால் வலிக்க..வலிக்க ஓடி
உங்க காலடி தேடி வந்தேன்.

உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றிகள்...
உள் பிரவேசத்துக்கு மன்னிப்பு...
உங்கள் உடல்நலம் பூரண குணமடைய
பிராத்தனையுடன்....

Nathanjagk said...

வாங்க கலா,
உண்மையில் பயந்துட்டேன். நல்லா வேப்பிலை அடிக்கறீங்க.. அப்புறம் கடைசியில் அன்றலர்ந்த ரோஜாவை கொடுத்திட்டீங்க. நன்றி!
பிழையால் வந்த மோதல் பிழையாகவே போகட்டும்!
வலிக்க வலிக்க வந்த கால்களுக்கு... ம்ம்ம் என்ன கொடுக்கலாம்..? ஒரு பூந்தோட்டம்? வானத்தில் கொஞ்சூண்டு?? கைக்கடக்கமா குட்டி நிலா? இல்ல வேணாம். உங்களுக்கு இதுதான் சரி... இந்தாங்க உங்களுக்கு நம்ம காலடியின் ஆயுட்கால மெம்பர் பேட்ஜ்! ஜமாயுங்க!

--

அன்பு தீஅதீ ரசிகர்களே, புரியாம இருக்கிறவங்க ஹேமாவின் வானம் வெளித்த பின்னும்-ல் வந்திருக்கிற கேட்பாரற்ற பொழுதுகளில்.. கவி​தையும், அதன் பின்னூஸும் பாருங்க!