உங்கள் மேல் உள்ள பாசத்தால் என் வலைப்பதிவின் பெயரையே மாற்றி வைத்து விட்டேன் என்று சொன்ன அன்பு தம்பிரி சம்முவத்துக்கு நன்றி / புண்ணாக்கு / புசுக்கு என்றெல்லாம் சொல்ல இந்த பிஞ்சு மனசுக்கு ஒப்பவில்லை.
சிம்ப்ளி.. ஐ ஓவ் டு ஹிம்!
ஆமாம்! சேலம் சண்முகம், இப்போது தம்பிரி சம்முவம் ஆகியிருக்கிறார்.
எப்போதோ ஏதோ ஒரு பின்னூவில் தம்பிரி சம்முவம் என்று அழைத்தது நன்றாக நினைவிருக்கிறது.
ஸ்கூல் படிக்கும் பையன் முகம், சுருண்ட முடி, இரண்டு பட்டன்கள் கழட்டிவிடபட்ட நீலக்கலர் சட்டை இப்படி ஒரு போட்டோவோடு அறிமுகமான பதிவு நண்பர்தான் சம்முவம்!
செமையான நக்கல் ரத்ததிலேயே கலந்திருக்கு (ப்ளட் டெஸ்ட் எடுத்தப்ப M+ன்னு வந்துச்சாம்..!) மொபைலிலேயே இடுகை போடறது.. அதுக்கு தனியா வலைமனைன்னு ஏகப்பட்ட கரச்சல்!! என்ன அப்பப்ப கொஞ்சம் ஓவரா கருணாநிதி, ஜெயலலிதாவையெல்லாம் வம்புக்கிழுத்து இடுகை போடறப்ப, படிக்கிற நமக்கு கிலியடிக்கும்.
திடீர்னு ஒருநாள் நம்ம டப்பா செல்லுக்கு போன் பண்ணி,
"டேய் டேய் அண்ணா, 25வது வலைபதிவு பாத்தேன்.. அது எப்படி போட்டோவுல ரவுண்டா டெக்ஸ்ட் போட்டீங்கன்னு" டவுட்டெல்லாம் கேட்டு கி'ழி'யர் பண்ணிக்கிட்டாரு!
ஆமா தீஅதீ ரசிகர்களே.... உங்களுக்கு என்ன சந்தேகம்னாலும் எனக்கு 'எப்ப' வேணாலும் போன் பண்ணிக் கேளுங்கன்னு நான் எப்பவாச்சும் சொல்லியருக்கேனா? Because, I'm expecting லார்டு லபக்குதாஸ் question!! அவ்வ்வ்!!
தம்பிரி சம்முவம்.. மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்! என் அன்பு என்றென்றும்!!
* * *
அறிமுகம் தம்பி நிர்.2 அல்லது பெரியதம்பி:
வித்அவுட் மை பர்மிஷன் (!?)... அண்ணா அண்ணா என்று ஐக்கியமாகிவிட்டார்.
அரவிந்தின் அதிரடி பதிவுகளுக்கு நான் அடிமை! அப்படியொரு அட்டகாச நகைச்சுவைப் பொங்கலைப் பார்க்கலாம் அவர் பதிவுகளில்! சிலசமயம் கே.பாலசந்தர், பாரதிராஜா, கமல் சார் போன்றவர்களை பற்றி எழுதும் போது மட்டும் கொஞ்சம் நிதானமாக போகலாமே என்று தோணும்!
மற்றபடிக்கு கேரண்டி மொக்கைக்கு நம்பிப் போகலாம் இரும்புத்திரையிடம்!
ஆபிஸில் இருக்கும் போது ஜிமெயிலில் ச்சாட்டிங்கு வருவார். வந்து.. பதிவு போட்டிருக்கேன்.. படிங்க.. நீங்க என்ன பண்றீங்க.. உங்க பதிவு சூப்பர்.. என் பதிவு அதைவிட சூப்பர்.. (!?) என்று தாக்குவார்.
பாவம் பெரியதம்பிக்கு ஆபிஸில் இடுகை, பின்னூ இதுக்கெல்லாம் ஆப்பு வச்சிருக்காங்களாம். வெளியே ப்ரவுஸிங் ஸென்டர் வந்துதான் மொக்கைகளை குத்த வேண்டுமாம்.
எனக்கு இது தெரியாம, ஒருக்கா அவரோட பின்னூஸ் போயி லந்து பண்ணிட்டேன்.
எப்படின்னா, அரவிந்த் எந்த பின்னூ வந்தாலும், ஏன் எப்படின்னு கண்டுக்கமாட்டாரு.. நோ ரிப்ளை டு பின்னூஸ். இது எனக்கு உறுத்தலா இருந்ததால.. ஒருக்கா அரவிந்துக்கு பதிலா நானே பின்னூஸ்களுக்கு பதில் போட்டுட்டேன்!!! என்ன அராஜகம், பாத்தீங்களா?? அதுக்கப்புறம் பெரியதம்பி கொஞ்சம் ஸின்ஸியரா பதில் எழுத ஆரம்பிச்சிட்டாரு.
நல்லத்தான் வேலை செய்யுது நம்ம ராஜவைத்தியம்ன்னு நெனச்சுக்கிட்டேன். ஹே..ஹே..!!!
இன்னும் விட்டுப் போன தம்பிக யாரும் இருந்தா தயவுசெஞ்சு கோச்சுக்காம, எனக்கு பின்னூல தெரிவிக்கவும். தக்க மருவாதி செய்யப்படும்.
ஓகே.. எல்லோரும் கோரஸா பாடுங்க...
"சின்னத்தம்பி.. பெரியதம்பி நீங்க ரெண்டு பேரும் தங்கக்கம்பி..!"
டிஸ்கி:
தம்பின்னாலே ஒரு freaky வந்து எட்டிப்பாத்துட்டுப் போகுது,
நான் ஆசையா வாலண்டியரா, தம்பியா (சரண்டர்) ஆனது அண்ணன் சங்கா-கிட்டதான்.
ஏன்? எப்படி? இன்னாத்துக்கு? என்றெல்லாம் தெரியாது. ஆனால் அண்ணா என்று சொல்லி அவரை வம்புக்கிழுத்து, பேட்டி எடுத்து, அப்பப்ப பின்னூவில் லொள்ளு பண்ணி என்று ஒரு கிளுகிளுப்பாத்தான் இருக்கு இந்த தம்பி உரிமை!
இப்ப எனக்கும் இப்படி தம்பிகள் இருக்காங்கன்னு நெனக்கறப்ப......... என்னமோ தெரியலே வயித்த பிசையுது...! என்னை வெச்சு (இன்னும்) என்ன வெடிகுண்டு செய்யப் போறாங்களோன்னுதான்! :-)