Showing posts with label காதல். Show all posts
Showing posts with label காதல். Show all posts

Sunday, February 14, 2010

அம்மிணி அன்போட குப்புனு


To: அம்மிணி@ஜி​மெயில்.காம்

அன்னைக்கு நீ 7அப் கேட்டப்ப நான் போகமுடியாதுன்னு சொன்னேன். நீ திரும்ப திரும்ப கேட்டே. நானும் முடியாதுன்னு சொல்லிட்டு கம்ப்யூட்டரை பாக்க ஆரம்பிச்சிட்டேன். இருந்தாலும் மனசு கேக்கலே. போயி வாங்கிட்டு வந்து கொடுத்துருவோம்னு கெளம்பிட்டேன். அப்ப நான் வெறும் பெர்முடாஸ் மட்டும்தான் ​போட்டிருந்தேன். அது வேற சரியான லூஸு பெர்முடாஸ். தலைக்கு நிறைய எண்ணெய் வச்சு நீதான் மஸாஜ் பண்ணி விட்டிருந்தே. முடியெல்லாம் கோணல் மாணலா தூக்கிட்டு நிக்குது. மூஞ்சில எண்ணெய் வழியல் வேற.


பரவாயில்ல, நைட் நேரந்தானே பக்கத்திலதானேன்னு வாங்க போனேன். நம்ம வீட்டுக் கடை பூட்டியிருந்தது. சரி, ஐஸ்க்ரீம் ஆண்டி கடை பக்கம்தானே, அப்படியே போயி வாங்கிட்டு வந்திருவோம்னு போனா அதுவும் பூட்டிக்கிடக்கு. பேசாம வீட்டுக்கே போயிடலாமான்னு நெனச்சேன். இருந்தும் ஏதோ ஒரு உந்துதல். மெயின் ரோடு ஜுஸ் கடையில கண்டிப்பா இருக்கும், வாங்கிட்டே வந்துடலாம்னு கெளம்பினேன். லூஸ் பெர்முடாஸோட எப்படி போறது? அங்க வேற கூட்டமா இருப்பாங்களேன்னு பலதயும் யோசிச்சுகிட்டு, பெர்முடாஸ் பாக்கெட்ஸ்ல கைய விட்டு லைட்டா தூக்குனாப்ல புடிச்சுக்கிட்டே ஜுஸ் கடைக்கு போயிட்டேன்.


போயி, 7அப் கொடி-ன்னு கேட்டா, அங்க இருக்கிறவன்.. நிதானமா ஜுஸ் போட்டு, வெளியில சேர்ல உக்காந்திருக்கிறவங்களுக்கு கொடுத்துட்டு வந்து... என்ன வேணும்னு கேட்கிறான். பெர்முடாஸ் பாக்கெட்ல இருந்து கைய வெளிய எடுக்காம 7 அப் கொடின்னு திரும்பவும் கேட்டேன். கடையில அப்ப நல்ல கூட்டம். ​பொண்ணுங்க வேற உக்காந்திருக்காங்க. நான் ஒருத்தன் தான் இந்த மாதிரி தலைவிரி கோலமா, எண்ணெய் வழிய, லூஸ் பெர்முடாஸோட நிக்கிறேன்.

அப்புறம் ஏன் இவன் 7அப் வாங்காம வந்தான்னுதானே நினைக்கிறே? சொல்றேன்.

கடைக்காரன் ப்ரிட்ஜ்ல இருந்து அரை லிட்டர் 7அப் எடுத்துக் கொடுத்தான். லைட் கூலிங்தான். கையில 25 ரூபா இருந்தது. பாட்டில் விலை ரூ.20ன்னு போட்டிருந்தது. சரின்னுட்டு 20 ரூபாய அவன்கிட்ட கொடுத்துட்டு பாட்டிலை எடுத்துட்டு திரும்பினேன். கடைக்காரன் என்னைக் கூப்பிட்டு "இன்னு 2 ரூபா கொட்றி" அப்பிடின்னா. நான் பாட்டில் போட்டிருக்கிற ரேட்டைக் காமிச்சு "யாக்கே?" ன்னு கேட்டேன். அவன் ப்ரிட்ஜ், கரெண்ட் சார்ஜ் ​ரேட்டெல்லாம் சேத்து 22ரூபாய்ங்கிறான். எனக்கு கடுப்பாயிடுச்சு. "ஓகே. கூலிங் பேடா. வார்ம் கொடி" ன்னு ​கேட்டேன். அதுக்கு கடைக்காரன் "வார்ம் 7அப் இல்லா" அப்படின்னுட்டான். கடையில ஜுஸ் குடிக்கிறவங்க எல்லாம் என்னையவே பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. ஞாயிற்றுகிழமை, ஏதாவது சண்டை ஏதும் நடக்குமான்னு பாத்திருப்பாங்க போல.

எனக்கு 2 ரூபாய் அநியாயத்துக்கு கொடுக்க பிடிக்கலே. அது ஒரு ஏமாத்து வேலைன்னு தோணுது. சரி விடுன்னுட்டு, திரும்பவும் பெர்முடாஸ் பாக்கெட்ல கைய விட்டுக்கிட்டு, எதுவும் வாங்காம வீட்டுக்கு நடக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பயும் சிவானந்தா சர்க்கிள்ட்ட போயி ஒரு 7அப் வாங்கிட்டு வந்துடலாம்னு ​நெனச்சேன். லூஸ் பெர்முடாஸ விட அலங்கோலமா தூக்கிட்டு நிக்கிற முடிதான் என்னை ​போக வேணாம்னு தடுத்திருச்சு. அதவிட முக்கியமா, அந்தக் கடையிலயும் இந்த மாதிரிதான் 2 ரூபாய் எக்ஸ்ட்ரா கேட்டு ஏமாத்துவாங்கன்னு தோணிருச்சு. ​

இவ்வளவு தூரம் பெர்முடாஸோட, எண்ணெய் தலையோட வந்து, எதுவும் வாங்காம போறோங்கிற ஏமாற்றமும்...... ஒரு 7அப் ப்ரிட்ஜ்ல வெச்சிருக்கிறதுக்கு, கரண்ட் பில் 2 ரூபாய்ன்னு ​கொள்ளையடிக்கிறாங்களேங்கிற ஆத்திரமும் சேர்ந்துதான்....... நான் அன்னிக்கு உங்கிட்ட எரிஞ்சு விழ ​வேண்டியதா போச்சு. மோசமாவும் நடந்துக்கிட்டேன். அது என் தப்புதான்.

உன்கிட்ட சண்டை போட்டு முடிச்சதும் நான் பண்ணின காரியம் பெப்ஸிகோ (7அப் தயாரிக்கிறவங்க) கம்​பெனிக்கு இப்படி ரெண்டு ரூபாய் எக்ஸ்ட்ராவா வசூல் பண்றாங்கன்னு மெயில் பண்ணிட்டேன்.

உங்கிட்ட அப்பவே சமாதானம் பேசியிருக்கலாம்.. ஆனா சமாதானம் பேசப் போயி அது உன்னை இன்னும் ​டென்ஷனாக்கிடுமோன்னு கம்முன்னு அமைதியா இருந்துட்டேன்.

சரி.. இந்த கோபத்தை என்னதான் பண்றது? எனக்குத் தெரியலே. போன்னு தூர தள்ளிவிட்டாலும் கூடவே வருது கோபம். கோபம் மேலயும் எனக்குக் கோபமா வருது.

புருஷன்-பொண்டாட்டி உறவு விட்டுக் கொடுத்து நடக்கிறதில மட்டும் கிடையாது. விட்டுக்​கொடுக்கிற மாதிரியான சூழ்நிலை வராம பாத்திருக்கிறதிலயும் இருக்கு. ஆனா அது எப்பயும் முடியற காரியமா தெரியலே.

என்ன பண்றதுன்னு தெரியலே.

இப்படிக்கு,

குப்புனு@ஜி​மெயில்.காம்


டிஸ்கி:

உண்மையாகவே அம்மிணிக்கு எழுதிய ஒரு ஈமெயில் இதுங்க. சில வரிகளை நீக்கியதைத் தவிர எதுவும் திருத்தம் செய்யாததுங்க. தாகங்கள் தீர்வதில்​லை.. பாட்டில்களும் தீர்ப்பதில்​லை. ​சொல்லாத தாகத்​தைவிட தீராத தாகம்தான் ​ரொம்ப உசத்தி காதலில். இல்லிங்களா? வாலன்​டைன்ஸ் ​டே வாழ்த்துங்க!

Thursday, October 1, 2009

உரலுக்குள் த​லை

ஐ​யோ.. ஐ​யோ.. உங்க​ளை இப்படிக் ​கெடுத்து வச்சிருக்​கேன்னு ​நெனச்சா என்னை​யை நா​னே அடிச்சுக்கலாம்னு ​தோணுது!! தலைப்பைப் பார்த்து தப்பா ​நெ​னைக்காதீங்க. நீங்க ​நெனக்கிற மாதிரி அஜால்குஜால் எல்லாம் ​கெடையாது. ஆமா! இது நம்ம பா.ராஜாராம் கொடுத்த வரி!

சரி.. சரி.. இ​தோட இவன் சவகாச​மே ​வேணாம்னு எஸ்ஸாகக் கூடாது. ​கொஞ்சம் அட்டணங்கால் ​போட்டுக்கிட்டு ​சேர்ல சாய்ஞ்சுக்கிட்டுப் படிச்சுத்தான் பாருங்க​ளேன்.

ஆங்..! ​சொல்ல மறந்துட்​டேன் இது வந்து ஒரு ​​தொடர்பதிவு..!

என்னா ​தொடர்ர்ர்ர்??

ஐஸ்வந்தி ஆரம்பிச்சு.. ​நெப்​போலியன் பா. ராஜாராம் வ​ரைக்கும் வந்து இப்படி நம்ம காலடியிலும் வந்து ந​னைச்சுப்​போட்ட அலைதான் இது..

எது???

பீட்டரு.. லாக்கரு.. ​டக்கரு.. மேட்டரு............. அப்படின்னு ​சொன்னா பதி​வை ஆரம்பிச்ச ​ஜெஸ்க்​கே பிரியாது!!! ​ஸோ.. ​நோ வால்.. ஒன்லி பால்!!

​தொடர்பதிவு த​லைப்பு இதுதான்பா..

கடவுள், பணம், அழகு, காதல்

நல்லாத்தான் இருக்கில்​லே?

நான் முதல்ல இந்த ​லை​னை வச்சு ஒரு சிறுக​தை ​ரெடி பண்ணலாம்னு இருந்​தேன்.. த​லைப்​பை ​கொஞ்சம் ​வேகமா படிச்சுப் பாருங்க. இந்தியன், அந்நியன், சிவாஜி, கந்தசாமி காதறுந்த சாமி பட​மெல்லாம் ஞாபகத்துக்கு வரலே?? நானும் தமிளன்தான்கிறதால எனக்கும் அந்த கிறுகிறுப்பு வந்துச்சுதான். பட், கண்ட்​ரோல் பண்ணிக்கிட்​டேன். சிறுக​தை தமா​ஷெல்லாம் இல்லாம ஒரு பதிவு ​போடலாம்னுட்டு இருக்​கேன்.

வக்காளி.. அப்பிடி என்னதாண்டா கழட்ட ​போ​றேன்னு உங்களுக்கு இருக்கிற ஆர்வம் (!??) அப்ப்ப்பிடி​யே 'எனக்கும்' இருக்கு பாஸ்!! ஏன்னா 'எனக்கும்' இந்த ​லைன் வ​ரைக்கும் என்ன எழுதப்​போறம்னு ​எனக்​கே ​​தெரியாது. ​டோண்ட் லாஃப்! (பா.ராவுக்கு இப்ப​வே ​கெட்ட ​கோவம் வந்திருக்கும்.....)

​ரைட்... ​ஞாபகம் வச்சுக்​கோங்க.. நோ வால்.. ஒன்லி பால்!! ஓ​கே?

கடவுள்:

ஆஞ்ச​நேயாய நமஹ
மஹாவீராய நமஹ
ஹனும​னே நமஹ
மாருதாத்மஜாய நமஹ
தத்வத்ஞாயப்ரதாய நமஹ
என்று தினந்​தோறும் கும்பிடுவன் நான். ஆனால் என் அப்பா ​சீரியஸ் ​பெரியார்வாதி (என்று நி​னைக்கி​றேன்!) இதுவ​ரைக்கும் 14 மு​றை சபரிமலை ​போய் வந்திருக்கிறார் (குருசாமீ??) . என்னா காமடி.. ஏங்ங்?? இப்படி ஒரு வித்யாசமான அட்மாஸ்பியரில் வளர்க்கப் பட்டதால் (வளர்ந்ததால்..) கடவுள் ஒரு காமடியாகி ​போய்விட்டார் எனக்கு! ஆனால் தினமும் ரசிக்க ​வைக்கும் காமடி.

சமீப காலங்களில் யாராவது "Do u believe in God?" என்று ​கேட்டால், "Yes! Just like smoking!" என்று ​சொல்லி வருகி​றேன்.

ஆஞ்ச​நேயாய நமஹ....

பணம்:

நான் வுடற பீட்டரு, பல்லாங்குழி​யெல்லாம் பாத்துட்டு நீங்க என்னென்ன​வோ ​நெனச்சிருப்பீங்.. பட் ஏக்சுலா என்கிட்ட நயா ​​பைசா ​கெ​டையாது... அப்படின்னும் ​சொல்ல முடியாது... ​வாரிக்​கொடுக்கிற அளவுக்கு வாய்ச்சிருக்கின்னும் ​சொல்ல முடியாது. நான் ஒரு உல்லாசி! பணத்தை அதன் இடம் பார்த்துதான் புரிந்து ​கொள்​​வேன். என்னடா ​டோன் திடீர்னு மாறுதேன்னு ​யோசிக்கறீங்களா?? ​ஹே​ஹே!! ​சொல்​றேன்; அதாவது, உங்கிட்ட 1000 ரூபா இருக்குன்னு வச்சுக்குங்க.. நீங்க சின்னசிலுக்குவார்பட்டிக்குப் ​போயி ​தெரியாத நாலு ​பேர கூப்பிட்டுக் கூட, ​தெம்பா டாஸ்மாக் பார்ட்டி ​வெக்கலாம். ஆனா 10000 ரூபா (​சைப​ரை நல்லா எண்ணுங்கப்பா) இருந்தாலும் இந்த ​பெங்களூருல நல்லா ​தெரிஞ்ச ​​4 கொலீக்ஸைக் கூப்பிட்டுக் கடலை மிட்டாய் கூட வாங்கித்தர முடியாது. அதுதான் இடம், பணம், ஏவல்!!
​ஸோ பணத்​தை நான் அது கி​டைக்கிற இடம்பாத்துதான் மதிக்கிறது மற்றும் மிதிக்கிறது!!!

அழகு:

மவ்​னே.. இனி நீ இது பத்திக் காண்டியும் எழ்திப்பாரு........
ஒம் மூஞ்சி​லே ஆஸ்ஸ்ஸிட் அடிக்கி​றேன்னு, ​நெ​றைய ​பேரு (ஐ மீன் நீங்க எல்லாரும்...!!!) முடிவு பண்ணியிருக்கிறதா தகவல்.. ​ஸோ.. அடுத்த பாயிண்ட்..

காதல்:

இதுதாம்பா நம்ம பாயிண்ட்... ​அதாவது விஷயம்னு ​சொல்ல வந்தேன்.

இரண்டாங்கிளாஸ் படிக்கும் ​​போது யாருக்காவது லவ் வந்திருக்குமா?? ​எனக்கு வந்துச்சு.. ஷர்மிளாங்கிற புதுசா ஜாயின் பண்ணுன ​​பொண்ணு ​மேல (எனக்கு மட்டும் இல்ல..) இப்ப வரைக்கும் இந்த முகம் ம​றையாம மனசுல இருக்கு. ஒரு ​பென்சில் ​பேப்பர் (+​கொஞ்சம் சரக்கு) ​கொடுத்தா அந்த முகத்​தை வரைஞ்சுடு​வேன்னு ​தோணுது. அந்த அழகான ​தேவ​தைக்கு அவங்க அம்மா கால் முழுக்க ​போட்ட சூட்டுக் காயங்கள் இன்னும் கண்ணுல​யே நிக்குது. அப்புறம் 5th, 6th. 8th படிக்கும் ​​போது ப்​ரெண்ட்களா ​சேத்து கதை கட்டி எனக்கு நாலஞ்சு காதலிக​ளை உருவாக்கிட்டானுங்க (என்னக் ​கொடு​மைங்க ராஜா??)

டிப்ள​மோ, அப்புறம் பிஈ எல்லாம் படிச்சிருக்​கேன்.. அதனால இந்த இடம் என்னோட காத​ல் பற்றிய ஞானத்​தைச் ​சொல்ல பத்த​வே பத்தாது (என்னதான் ​பெட்​ரோ​லை ஊத்திக் ​கொளுத்தினாலும்..)

இருந்தாலும் (தீஅதீ ரசிகர்களுக்காக..) ஒரு பஞ்ச் டயலாக்:

காதல்கிறது... ​பின்னூட்டம் மாதிரி! என்னதான் நீங்க நி​றைய சரக்கு வச்சு, இறக்கி வச்சு பதிவு ​போட்டாலும் கிளிக் ஆகற ஏதாவது ஒரு ​மொக்கைக்குதான் கன்னா பின்னான்னு பின்னூஸ் வந்து குமியும்!!! எலக்கியம் முக்கியமில்ல த​லைவா.. யதார்த்தம்தான் ​மேட்டரு!!!

அதாவது Don't be serious!! but be sincere!!!

​ரைட்டா?

இ​தை ​தொடர்பதிவா நி​​னைக்கிற நம்ம தீஅதீ ரசிகர்கள் அவங்களா ​செல்ப்-ஸ்டார்ட் ​போட்டு 120 கிமீ ​வேகத்தில் ​சென்று காதல், காதல், காதல், காதல்.. ச்சீசீசீ... ஏ​தோ மாத்திச் ​சொல்​றேன்​​லே.. ஆங்... கடவுள், பணம், அழகு, காதல் பற்றி பிழிஞ்சு தள்ளவும்.

முடிய​லேன்னாலும் பரவாயில்​லே.