Showing posts with label கும்மி. Show all posts
Showing posts with label கும்மி. Show all posts

Friday, May 7, 2010

வைரமுத்துவை வாசிக்கும் காலம்


மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்
- ​வைரமுத்து.
அன்பு அண்ணன் க.சீ.சிவக்குமார் தன் வலைத்தளமான நள்ளென் யாமத்தில் கசடதபற என்று இடுகையிட்டிருக்கிறார். அதற்கு அண்ணனுக்கு நான் தீட்டிய ப்ப்பின்னூட்டத்தை இங்கு பதிவாக்கியிருக்கிறேன். காலடியின் தீவிர அதி தீவிர ரசிகக் கண்மணிகளுக்கும் இது போன்ற சிந்தனாசிந்தனைகள் வந்து சேரவேண்டுமென்பதே நம் அவா.. பேரவா!

அன்பு சிவா,

நர்சிம்-இன்
பிறந்த நாள்-கவிஞர் வைரமுத்து... பதிவைப் பார்த்தேன்.

நமக்கு வைரமுத்துவை இப்போது பிடிக்காமல் போவதற்கு பொங்கி வளர்ந்த அறிவும் மடை திறந்து பாயும் இலக்கிய பிரவாகமும் காரணமாக இருக்கலாம்.

பால்யம் எப்போதும் தார்ரோட்டில் டயர் உருட்டிவிட்டுக்​கொண்டிருக்கிறது. நாம் வளர்ந்து விட்டாலும், பால்யம் யாரோ ஒரு சிறுவனாக இன்னும் அப்படியே மாறாமல் இருக்கிறது.

வாழ்வின் பருவங்கள் அப்படித்தான். அலங்கியம் தண்ட்ஸ் மாமாதான் மு.​மேத்தா கவிதைகளை முதலில் அறிமுகப்படுத்தியது. அப்போது அதே போல கவிதைகள் படைக்க​வேண்டும் என்று முனைப்பு இருவருக்கும் இருந்தது. அது ஒரு பருவம். ஞாபங்களை மீட்டெடுக்கும்​போது ஆசுவாசமாக இருக்கிறது.

உங்களின் ஒரு பழைய காதலை, பழகிய தோழனை, நெருக்கமாயிருந்த மரத்தை, வீட்டு சன்னலுக்கு அப்பாலான தேசத்தை, மழை நனைத்த வீட்டுக்கூரையை, ஒரு பூனையின் தூக்கத்தை, காதலியின் நகங்களை என நம் ஆல்பத்தின் ஏதோவொரு புகைப்படம் ​வைரமுத்துவின் கவிதையால் எடுக்கப்பட்டதாய் இருக்கக்கூடும்.

என் பதின்ம வயதுகளில் வைரமுத்து என்னை எடுத்துக்​கொண்டார். வாங்கிப் படிக்காமல் நம்மிடம் சேரும் கவிதைகள் வரிசையில் வைரமுத்துவிற்கும் இடமுண்டு. அலங்கியம் மாமா அல்லது அரிக்காரன்வலசு பாலா அல்லது அப்பா எடுத்து வரும் நூலக நூல் இப்படி.

பிடித்த ஆளுமைகளை வரைந்து விடும் நோய் கொண்டிருந்தேன். கமல், பீட்டில்ஸ், அப்பாசி இண்டியன், இளையராஜா,​வைரமுத்து இப்படி (சமீபமாக வரைந்த ஆளுமையைப் பற்றிச் சொன்னால் நீங்கள் என்னை மொத்தக் கூடும்)

குமுதத்தில் ஒருமுறை பேராசிரியர் (கவிஞர்) பழமலய்,வைரமுத்து காசுக்காக தன் ஆன்மா​விற்றிவிட்டார் என்று விமர்சித்திருந்தார். அதற்கு வைரமுத்துவும் பதில் (கவிதைதான்) கோபமாக எழுதியிருந்தார்.

அப்போது வைரமுத்துவுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். என்னுடைய டைரியில் பப்ளிஷ்ஷும் பண்ணினேன். அச்சமயங்களில் கல்லூரியில் நண்பர்களிடையே கவிஞன் என்றே அடையாளப்பட்டிருந்தேன். வைரமுத்து பாணியில் நான் எழுதும் கவிதைகளுக்கு ஒரு ரசிகக் கூட்டமும் உண்டு. கல்லூரி விடுமுறையில் ஊர் திரும்பிவிட்டாலும், கடிதங்கள் வாயிலாக கவிப்போக்குவரத்து நடந்த காலக்கட்டம்.

அப்புறம் ஒருகணம் வைரமுத்து போரடித்து விட்டார். என் கவிதைகள் வைரமுத்து சாயல் ஒட்டிக்​கொண்டதாக அல்லது தாக்கம் நிறைந்ததாக உணர்ந்த சமயம் அது.

வைரமுத்துவையும் தாண்டிச்​சென்றால் நாம்தான் அறிவாளி.. அட்லீஸ்ட் கல்லூரி நண்பர்கள் மத்தியிலாவது வித்யாசப்பட்டுத் திரியலாம் என்ற தன்மதியில் வேகவேகமாக வைத்தீஸ்வரன், நா.விச்வநாதன், வ.ஐ.ச. ஜெயபாலன், பாலா, இன்குலாப், இந்திரன், யூமா.வாஸுகி, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை வாசிக்க ஆரம்பித்தது. இருந்தும் வைரமுத்துவின் வரிகள் இப்போது கேட்கும்​போதும் / வாசிக்கும்​போதும் நினைவுகளின் சாலையில் டயர் வண்டியை உருட்டிவிடுகிறது.

கோவை ஞானியை ஒருமுறைப் பார்..... ஸாரி, தொட்டிருக்கிறேன் - உங்களுடன் இருந்ததால். ஞானி அப்போது நம்மிடம் பேசியதா அல்லது கனவு இதழில் படித்ததா என்று ​தெரியவில்லை.

ஞானி வைரமுத்துவின் விஷயஞானம் பற்றி குறிப்பிட்ட நினைவுண்டு. ஒரு சர்ச்சைக்குள்ளான புத்தகம் பற்றி ஞானி கேட்ட​போது அதற்கு வைரமுத்து தெரியாது என்று சொன்னாராம். வைரமுத்து போன்ற தேடலும் உழைப்பும் கொண்ட மனிதர் அந்தப் புத்தகத்தை வாசிக்காமல் இருந்திருக்க முடியாது. வைரமுத்து நழுவுகிறார் என்பது ஞானியின் கருத்து.

இப்படி ஒரு வாசிப்பு - புள்ளிவிபரம், பூகோள அறிவு, வரலாற்றுக் குறிப்புகள் இப்படி இருந்தாலும் - கொண்ட வைரமுத்து எளிதாக தன் ஞானத்தை வேறுவகையான படைப்புகள் மூலம் மெய்ப்பிப்பது எளிது. அவரால் யாரையும் தாண்டிவிட முடியும் என்பது என் அனுமானம்.

ஆனால், தனக்கென ஒரு வாசகர்க் கூட்டம் இருப்பதால் அதே தரத்தில் தொடர்ந்து படைக்க வேண்டிய நிலைமையில் இருப்பதாகப் படுகிறது. அதுவே வைரமுத்துவிற்கான அடையாளமும் கூட.

நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன; நாம் வாங்காவிட்டாலும் அம்புலிமாமா, சிறுவர்மலர்கள் விற்கப்படுகின்றன; நாம் தின்னாவிட்டாலும் மிட்டாய்கள் ஜாடியிடப்படுகின்றன..

வைரமுத்து கவிதைகள் அப்படித்தான்!

Monday, December 14, 2009

பின்னூட்டப் புயல்..!


இப்படி உசுப்​பேத்தி உசுப்​பேத்தி​யே இடு​கை எழுதுவ​தைவிட பின்னூட்டங்கள் அதிகமாக எழுதும்படிக்கு ​செய்து விட்டிருக்கிறீர்கள். இந்த புண்ணியம் அண்ணன் சங்காவையே ​​சேரும்.

ஆனா பாருங்க காமடிய.. நம்ம பதி​வு ​​கொஞ்சம் ​பெருசா ​​போயிட்டாப் ​போதும்... இம்மீடியட்டா அடுத்த பின்னூல ​ரொம்ப ​பெருசா இருக்குன்ன ​முறுக்கிட்டுப் ​போயிடறது.. அ​தை​யே அவங்க எழுதின இடு​கைக்கு ​பெரிய்ய்ய பின்னூவாப் ​போட்டால் உருகிட்டு குஜால் ஆயிடறது..! இந்த லாஜிக்குப் ​பேரு என்னங்க??


■


நம்ம ஆளுங்க எல்லா காலடிங்கிற குறுகிய குழிக்குள்ள அடக்கிட முடியுமா? அதுதான் ​டெக்னிகலா இப்ப கற்றது Excel வலைபதிவுல சக ஆசிரியனா எழுதிக்கிட்டிருக்​கேன். இது MS-Excel® பயன்பாடு பற்றி தமிழில் விளக்கும் முயற்சி. கற்றது Excel ஆரம்பிச்சது சங்கர். வழக்கம்​போல அங்கயும் பின்னூட்டமாக ஒரு புயல் என்ட்ரி ​போட்​டேன்! என்​னோட குட்டி குட்டி பின்னூஸ்க​ளைப் பார்த்து.. ​மெர்ஸலாயி நீயும் எழுதிட்டுப் ​போன்னு கூட்டாளியா ​சேத்துக்கிட்டாரு. ​ஸோ.. நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள் Excel பற்றி அறிய ஆவல் ​கொண்டவர்கள்.. அங்கயும் எட்டிப் பார்க்கலாம்.


எவ்வளவுதான் ​மொக்​கை​யே எழுதறது? ம்?


■


புயலாக பின்னூட்டங்கள் ​போடுவதில் நி​றைய ஆபத்துகளும் இருக்கின்றன. சின்ன உதாரணம்: கும்மி. இதுவ​ரைக்கும் கும்மி, அம்மி அல்லது மம்மி ரிட்டர்ன்ஸ்களில் சிக்காமல் தப்பித்து வருகி​றேன். காரணம் நாம ​​போடற பின்னூஸ்களின் நீளமா கூட இருக்கலாம்னு நம்ம காலடியின் காரிய கமிட்டி சந்​​தேகிக்கிறது.


சந்ருவுக்கு நான் ​போட்ட பின்னூ ​கொஞ்சம் ​பெருசு.. அதாவது சந்ரு அடுத்த இடு​கையா அந்த பின்னூட்டத்​தை​யே ​போட்டுட்டாருன்னா பாத்துக்​கோங்களேன்.


இப்பக் கூட சமீபத்தில் யாத்ராவுக்கு அவரது இருப்பு கவி​தை பற்றி ஒரு காத்திரமான பின்னூ ​போட்டு, அ​தை அவரும் இடுகையாக்கி இப்ப எடுத்திட்டார். நல்லதாப் ​போச்சு!


அட ​நேத்துக் கூட, நம்ம வால்​பையனுக்கு ​சோதிடமும் சந்திரனும் என்ற இடு​கைக்கு விஞ்ஞானம் அறிவியல் (ப்ரபஞ்சப்ரியன் நீங்களும் இந்த ஆட்டத்திலே இருக்கீங்க.. படிச்சுப் பாருங்க) கலந்து விளக்விளக்கி பின்னூ ​போட்டிருக்கி​றேன். ​


வொய்டா ​ஜெகான்னுட்டு இருக்கு!


அப்புறம் சங்காண்ணன், ​பெரியண்ணன் ​சென்ஷி, ​கோவி.கண்ணன், பீர் Peer, இரும்புத்தி​ரை அரவிந்த், சி​நேகிதன் அக்பர், குப்பைத்தொட்டி நான் ஆதவன், ஏதோடாட்காம் ஏனாஓனா / கிகி, நள்​ளெண் யாமம் க.சீ. சிவக்குமார், அ​தே கண்கள் டவுசர் பாண்டி, வால்​பையன், பிரபஞ்சப்ரியன் இப்படி ​ரெகுலரா ​போய் உலாத்திட்டு வந்தாத்தான் காலடிக்கு நிம்மதி.


■


கவிஞர்கள் என்றா​லே ஒரு சிறப்பு ஈர்ப்பு வந்துவிடுவதாக காலடி உணர்கிறது.


​நேசமித்ரன், நந்தாவிளக்கு நந்தா, கரு​வேல நிழல் பா.ராஜாராம் இவங்கதான் காலடியின் ​மெயின் டார்க்​கெட். ​​நேமித்ரனை நெருங்க ​வைத்தது நம்ம பின்னூட்டங்கள்தான். நந்தாவும் அப்படி​யே - நல்லா உத்து உத்து பாத்து மண்​டைய ஆட்டி ஆட்டி கவி​தை படிக்கறீங்க பாஸு என்று ஐக்கியமாகி விட்டனர்.


சமீபத்தில் தான் நந்தாவின் டிராகுலாவின் காதலி -2 க்கு முதன்மு​றையாக எதிர்கவி​தை பின்னூவாக எழுதி காலடி ஆபிஸில் வாங்கிக் கட்டிக்​கொண்​​டோம். எதிர்கவி​தை எழுதியதற்காக இல்​லே... அ​தை ஏண்டா இடு​கையா ​போடாம பின்னூவாப் ​போட்டேன்னுதான்.


பா.ரா.. எளிய சி​நேகத்தின் வாசம் வீசம் அடர் மர நிழல். எல்லாருக்கும் நிழலும் மணமும் வீசும் மரம் எனக்கு ஒரு கிளை​யை​யேக் ​கொடுத்து ஊஞ்சலாடுடா கண்ணு என்கிறது.​


அப்புறம் வானம் ​வெளித்த பின்னும் ​ஹேமா (சுவிஸ்). இவங்க கவி​தைகள் எல்லா​மே பயங்கர தமாஷா, காமடியா, சும்மா சிலு சிலுன்னு... அட ​போங்க சார் / ​மேடம்..! பதிவு எழுதறதுன்னா​லே, கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்து நல்லா ஒருதரம் அழுதுட்டு.. கண்ணீர் சுடச்சுட வர அப்படி​யே கீ​போர்​டை ​கொத்த ஆரம்பிச்சிருவாங்களாம்! இதுவ​ரைக்கும் நாலு கீ​போர்ட் மாத்திட்டாங்களாம்.. கீ​போர்ட் எழுத்​தெல்லாம் சீக்சீக்சீக்கிரமா அழிஞ்சி ​போயிடுதாம்!


■


காலடி ஆபிஸிலிருந்து அவசர​ மெ​மோ:

​​பெறுநர்: மொக்​கை ஆபிஸர் நிர்: 4 - ​ஜெகநாதன்...

'ரொம்ப அழுத்த்தி ​ரெக்கார்​டை ​தேய்க்க ​வேணாம்.. இப்ப​வே இடுகை ​பெருசாக ​போய்விட்டது. இது கம்​பேனிக்கு நல்லதில்ல!'


■


பரவாயில்ல கண்டுக்காதீங்க நீங்க.. இன்னும் ​கொஞ்சம் ​சொல்லிக்கலா​மே..


நமக்கு பிடிச்ச வ​லைதளங்களில் ச​மையல் குறிப்பு ​பக்கங்களும் உண்டு. மாப்ள ஏனாஓனாவும் கிகி சாரும் நல்லா சு​வையான உப்புமா கிண்டுவது எப்படி, க​டையில் வாங்கிய மசால் வ​டை​யை எப்படி ​பேப்பர் பிரித்து தின்பது என்கிற மாதிரி உப​யோகமான சமையல் குறிப்புகளா ​போட்டுத் தாக்குவது உண்டு. மாப்ள ஏனாஓனா ஓட்டல் ஓட்டலா போயி... ​போட்டோ எடுத்துட்டு (போட்​டோ... ​​மாத்திப் படிச்சிடாதீங்க மாப்ள) சாப்பாடும் சாப்பிட்டு அ​தைப் பத்தி சிலாகிச்சு இடுகையாக்கிடுவாரு.


அ​தேமாதிரி உப்புமடச்சந்தி ​ஹேமா. இவங்க 'நிஜமா​வே' சமைக்கிறவங்கன்னு நி​னைக்கி​றேன். ​கொஞ்சம் சிம்பிளான ஐட்டங்களா ​சொல்லித் தருவாங்க. அதே மாதிரி சஷிகா.. இவங்க ச​மைய​லைப் படிக்கிற விட வ​லைப்பக்கத்​தை பாக்கிற​தே அழகா இருக்கும். ச​மையலும் வித்யாசமான ​ரெஸிபிகளாப் ​போட்டுத் தாளிச்சிருவாங்க (ப்ரூட்ஸ் ​தொக்கு, ஓட்ஸ் மபின் என்று)


சஷிகா, இன்னிக்கு உங்க வ​லைதளத்தில பாத்த ஒரு பின்னூட்டம் - Malar Gandhi என்பவர் நடத்துகிற Kitchen Mishaps! என்கிற விபரீத ச​மையல் அனுபவங்க​ளை ​கேட்டிருக்கிறது. அதற்கு இன்றுதான் Me, Microwave and Mouse என்று ஒரு ப​டைப்​பை(!) சமர்ப்பித்திருக்கி​றேன். யூ??

அப்புறம்...


■


காலடி ஆபிஸிலிருந்து அவசர​ மெ​மோ-2:

​பெறுநர்: மொக்​கை ஆபிஸர் நிர்: 4 - ​ஜெகநாதன்...
'சொன்னாக் ​கேக்க மாட்​டே... ​பொட்டி​யை அமுத்திட்டுப் ​போய் படுக்கவும்..'

■

அதாவது.........

டிஸ்கி:

இடு​கை எழுதி ​ரொம்ப நாளாச்சு.. இந்த ரசி​கைக்காக ஒரு நாலு வரியாவது எழுதுங்க.. ங்க.. ங்க என்று அடம் பிடித்த, கத்தார் ரசி​கை ப்யூச்சர் ஷாந்தி அவர்களுக்கு இந்த இடு​கையின் ஏதாவது நாலு வரிகள் சமர்ப்பணம் ஆகின்றன.

இம்மீடியட்டா ​மொக்​கை ​வோணும் ​வோணும் என்று அடம் பண்ணிய அண்ணன் சங்கா, சங்கத் தலைவர் காலடி ரசிகர் மன்றம் மற்றும் தீஅதிதீ ரசிகர்கள் அவர்களுக்கு... குச்சிமிட்டாய் மற்றும் குருவி ​ரொட்டி ​செய்வது எப்படி என்று சஷிகா அல்லது ​ஹேமா(சுவிஸ்) ​ரெஸிபி ​சொல்லித் தருவார்கள்.