அதுவும் நல்லாத்தான் இருக்குவோய்!
ஆகவே, காலடியும் ஒரு மிக்ஸிங் போடுகிறது...!சனி:
ஆமாப்பா ஆமா... இன்னிக்கு சனிதான். ஆபிஸு லீவு. ரெகுலரா சாட்டிங்கு வர்ற ப்ரண்டுக்கு இது தெரியும்.. ஸோ, வெள்ளிக்கிழமை இரவு ஆரம்பிச்ச கூகிள் அரட்டை சனிக்கிழமை காலை 4 மணி வரைக்கும் சந்தோஷமா நீடித்தது! நான் வேறு
அவசரப்பட்டு வெள்ளியன்றே 2012 படத்துக்கான டிக்கெட்டை முன்பே புக்கிவிட்டிருந்தேன். சனி காலை 10 மணிக்கு ஸிக்மா
மால் - ஃபன் சினிமாஸ். கொலீக்கைத் துணைக்குக் கூப்பிட்டேன்: ஒஸ்தாரா என்று. அவளோ ஸாரி மச்சான் என்று எஸ்கேப்பிவிட்டாள்! அதுவும் நல்லதுக்குதான்!!
காலையில் 7 மணிக்கு அலாரம வைத்துவிட்டு சரியாக 9 மணிக்கெல்லாம் எழுந்துவிட்டேன். கன்னிங்ஹாம் ரோட்டில் உள்ள ஸிக்மா மால் நம்ம வீட்டிலிருந்து 10 நிமிடந்தான்... இருந்தாலும் அதுக்கு முன்னாடி இன்னொரு கடமை இருக்கே!
சனி விரதம்! பக்கத்திலுள்ள ஈஸ்வரன் கோயிலுக்கு சென்று, அங்குள்ள நவக்கிரகங்களுக்கு எள் விளக்கு ஏற்றி 3 சுற்று சுற்றி சாமி கும்பிட்டு விட்டுதான் அடுத்த வேலை!
2012:
வேகமாக குளித்து விட்டு (லேசாக மப்பு வேறு - நேற்று அடிச்ச சரக்கின் வாசமும்... அடப்பாவி நேத்தும்(!) மப்புலதான் என்கூட சாட் பண்ணிக்கிட்டிருந்தியா, கொலைகாரா, குடிகாரா என்று திட்டும் ப்ரண்ட்டுக்கு, ஐம் ஸாரி!) கிளம்பினேன்... சனீஸ்வரைச் சுற்றிவிட்டு பைக்கை கிளப்பினேன்.. 9:50 AM.
சிவானந்தா சர்க்கிள் - ரேஸ் கோர்ஸ் - கன்னிங்ஹாம் ரோடு - ஸிக்மா மால் - பார்க்கிங் - டீஸ்களில் திரியும் தேவதைகள் - டிக்கெட் கவுண்டர் - பாக்ஸ் ஆபிஸுக்கு வழிதேடும் அவரசக்காரர்கள் - ஸ்க்ரீன் நம்பர் 3 - I3 - டார்ச் வெளிச்சம் தடவிய வளைவுகள் என்று சீட்டில் அமரும் போது 2012 படம் ஆரம்பித்து 5 நிமிடங்கள் ஆகியிருக்கலாம்.
பக்கத்தில் ஆம்பிளை!
படத்தைப் பத்தி விமர்சனம் பண்ணமாட்டேன் - பயப்படாதீங்க! இந்நேரம் நம்ம டைகர் பதிவர்கள் வரிஞ்சு கட்டிக்கிட்டு 2012ஐ அக்கு வேறு ஆணிவேறாக பிரிச்சி தள்ளியிருப்பாங்க - போய் பாத்துக்கோங்க.
தியேட்டரை விட்டுக் கிளம்பினேன். 2வது ப்ளோரில் குழந்தைகள், அம்மாக்கள் கூட்டம் காரிடாரில் எல்லாம் நிரம்பி வழிந்தது.
குழந்தைகள் தரையில் அமர்ந்து படங்களாக வரைந்து தள்ளிக் கொண்டிருந்தார்கள். கொஞ்சம் நேரம் படங்களையும் அம்மாக்களையும் வேடிக்கை பார்த்து விட்டு கிளம்பினேன். பசி வேறு!
பான்டலூன்ஸ்:
ஒன்றாம் ப்ளோரில் இருந்த பான்டலூன்ஸ் என்னை வா வா வென்றது. மணி 1:40 PM. பசிகிடக்கிறது என்று கடைக்குள் நுழைந்தேன்.
அவர்கள் அனுப்புகிற மெயில்களும், போனமுறை செய்த பர்ஸேஸுக்கு கொடுத்த க்ரீன் மெம்பர்ஷிப் கார்டும் கூட காரணமாயிருக்கலாம். காரணங்கள் எதுவுமின்றி கவர்ச்சிக்காக மட்டும் ஷாப்பிங் செய்கிற ஜீனை நமக்குள் விதைத்த சாமார்த்தியத்துக்கு விளம்பரதாரர்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்!
உள்ளே நுழைந்து ட்ராக் பாண்ட்ஸ், டீஸ், கார்கோஸ், ரோலர் ஸ்லீவ்ஸ் (இதுதான் இப்ப என்னுடைய ஃபேவரிட் - 6 சர்ட்ஸ் இருக்கு), இன்னர்வேர், என்று கொத்தாக அள்ளிக்கொண்டு கெளண்டரில் வந்து மெம்பர்ஷிப் கார்டையும், 200 ரூபாய் வொர்த்துள்ள கூப்பனையும் நீட்டினேன். அந்த கன்னடத்துக் கிளி பார்த்துவிட்டு,
"கூப்பன் எக்ஸ்பைரியாடிச்சே" என்றாள்
"ம், பரவாஉண்டு.. மெம்பர்ஷிப் கார்டுக்கு எதுவும் டிஸ்கெளன்ட் உண்டா?" என்று பல்லிளித்தேன்."பாக்கிறேன்......... ஸார்.. டிஸ்கெளண்ட் இருக்கு.. ஆனா இப்ப இல்ல அடுத்த முறை நீங்க ஷாப்பிங் பண்ணும் போது 10% வரைக்கும்..." என்று வரும்ம்ம்ம்...ஆனா வராது ராகத்தில் இழுத்தாள்.
"இல்லியே.. இந்த முறை பர்ஸேஸ் பண்ணுனா 5% ஆபர்ன்னு எஸ்எம்எஸ், ஈமெயில், பீமேல் எல்லாம் வந்துச்சே???""ஓ! அதுவா.. அது வெள்ளிக்கிழமை ஷாப்பிங் பண்ணுனா மட்டும்தான்""இன்னிக்கு கிடையாதா? என்ன ஒரு நாள்தானே தள்ளிப்போயிருக்கு? எனக்கு கொடுங்க 5% தள்ளுபடி" என்று அடம் பண்ணினேன்."இல்லே.. அது வெள்ளி மட்டும்தான்"
"அப்ப நான் வேணா அடுத்த வெள்ளிக்கிழமையே வந்து வாங்கிக்கட்டுமா? இப்ப அந்த தள்ளுபடியை கொடுக்கிறதில என்ன தப்பு இருக்கு?" என்றேன் விடாப்பிடியாய்
அவளும் மானேஜரிடம் கேட்டுப் பார்த்துவிட்டு வந்து கைவிரித்து விட்டாள்.
"சரி.. அப்ப நான் ஃப்ரைடேவே வந்து வாங்கிக்கேறேன் - முடிஞ்சா" என்று கிம்பினேன் "ஏன்...?"
"வெட்டியா 5% இழக்கணுமா என்ன? இந்த துணிமணிக இல்லாம வர்ற வெள்ளிகிழமை வரைக்கும் உயிர் வாழலாம்னு நினைக்கிறேன்" TGI Fridays கூட்டமா நீங்க என்று கேட்கத்தோன்றியது. பசி வயிற்றைக் கிள்ளியது. இந்த நவீன மூளைச்சலவைக் கூடாரத்தில் என்று தப்பித்தால் போதும் என்று வெளியில் விரைந்தேன்.
மீந்த குவாட்டர்:
நேற்றுப் புதிதாய் டேஸ்ட் பாக்கலாம் என்று வாங்கிய Bols பிராண்டி நன்னாவே இல்லே போங்கோ. அதுவும் ஹாப் பாட்டில் வாங்கினேன். டேஸ்ட் பாக்கிறவனுக்கு எதுக்குடா ஹாப் பாட்டில் இடியட் என்கிறது மப்புக்கு பின்னான ஞானம்!!
வழக்கமாக சரக்கு எடுக்கிற ஸ்வஸ்திக் சர்க்கிள் பாரில் அந்த பிராண்டி ஃபுல் பாட்டில்ல இருந்து, ஹாப் பாட்டில் சரக்கை 2 குவாட்டர் பாட்டில்ல ஊத்திக் கொடுத்தாங்க.
ஸோ, அதிலேயே 15ml ச்சீட்டிங்! புரியாத, பூஸ்ட் குடிக்கிறவங்க ஹாப் பாட்டிலையும் குவாட்டர் பாட்டிலையும் வாங்கி படித்துப் பார்க்கவும்.
வெள்ளியிரவு ஒரு குவாட்டர் + கட்டிங்.. ஸோ சனியிரவு என்ன குடித்திருப்பேன்.... ? குவாட்டர் - கட்டிங்.