Showing posts with label மொக்கையைத் தவிர வேறொன்றுமில்லை. Show all posts
Showing posts with label மொக்கையைத் தவிர வேறொன்றுமில்லை. Show all posts

Friday, August 14, 2009

வாய்க்கொழுப்பு - A Health Check!

உங்கள் ஆரோக்கியம் மேல் கவனம் எடுத்துக்கிட்டு போட்ட பதிவு இது. எல்லா கேள்விக்கும் வள் வள்ன்னு (எவ்வளவு நாளைக்கு தான் டாண் டாண்ணு பதில் சொல்றது) பதில் சொல்லிட்டு, நெஞ்சை நீவிக் கொண்டே போய் தொங்கவும்.. ச்சீ... தூங்கவும்!
அ) நீங்கள் இந்த உலகத்திலேயே மிகவும் வெறுக்கும் நபர்
1. மானேஜர்
2. மனைவி
3. மாமியார்
4. மாமியார் மட்டும்
ஆ) மனைவி கையில் காபி சாப்பிடுவது..
1. சயனைட்
2. வாய் கொப்பளிக்கலாம்
3. மனைவிக்கே கொடுக்கலாம்
4. மாமியாருக்கு கொடுக்கலாம்

இ) டிவி என்பது யாதெனில்

1. சீரியல் காட்டும் செவ்வகம்
2. சொன்ன ​பேச்சைக் கேட்கும் ஒரே ஜந்து
3. இடத்தை அடைத்துக் கொள்ளும் பிசாசு
4. கீ​போர்ட் இல்லாத கம்ப்யூட்டர்!
ஈ) ​நீங்கள் மேக்கப்புக்கு எடுத்துக் கொள்ளும் நேரம்
1. 0.005 மில்லி செகண்ட்ஸ்
2. பான்ட்ஸ் பவுடர்
3. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு ​பேர் & லவ்லி
4. வழுக்கைக்கு(ம் சேர்த்தி) பான்ட்ஸ் பவுடர்
உ) நீங்கள் யார்?
1. மனைவியின் புருஷன்
2. மாடு
3. மாடு மாதிரி
4. மாடேதான்
ஊ) தண்ணியடிக்கும் பழக்கம்..?
1. உண்டு
2. 24 X 7
3. எப்போதாவது வாரத்துக்கு 7 நாள் (அல்லது) பாயிண்ட் நிர். 2
4. மனைவி அனுமதிக்காத​போது மட்டும் (அல்லது) பாயிண்ட் நிர். 3
எ) நல்லவன் என்பவன்?
1. சத்தியமா நானில்லை
2. நான் அவனில்லை
3. பப்ளிக் டாய்லட்டில் ப்ளஷ் செய்பவன்
4. கல்யாணம் ஆகி(யும்) பிட்டு படம் பார்க்காதவன்
ஏ) ​கெட்டவன் என்பவன்?
1. மாமியார் சொல் பேச்சு கேட்பவன்
2. மாமியார் சொன்னதை மட்டும் கேட்பவன்
3. மாமியார் சொல்லாததையும் கேட்பவன்
4. மாமியாருக்கு மிஸ்டு கால் கொடுப்பவன்
ஐ) நான் என்பது?
1. நான் மட்டும்
2. நான் + மனைவி
3. மனைவி + மனைவி
4. கண்ட இடுகையையும் கண் சிமிட்டாம படிப்பவன்
ஒ) சுதந்திரம் என்பது என்ன​வென்றால்...?

1. வாய மூடு
2. ப்ளாக் எழுதுவது
3. பிளாக் எழுதியதை படிங்க என்று மற்றவரை துன்புறுத்துவது
4. இந்த இடுகைக்கு கூட பின்னூஸ் போடுவது
ஓ) இந்திய அரசியலில் பிடிக்காத விஷயம்
1. இந்திய அரசியல்
2. வாக்கு கொடுத்த மாதிரி ரூ1000 / ஓட்டு பட்டுவாடா செய்யாதது
3. டூமீல்களுக்கு மத்தியிலும் தைரியமாக சபை கூட்டுவது
4. ஓட்டு கேட்க வரும் நடிகைகள் குத்தாட்டம் போடாதது
ஒள) நீங்க சொன்ன பயங்கர பொய்(கள்)?
1. எனக்கு இந்த பொண்ண (ரொம்ப) பிடிச்சிருக்கு
2. சத்தியமா இதுக்கு முன்னாடி யாரையும் லவ் பண்ணுனதே இல்லை
3. உங்க அம்மா தங்கமானவங்க
4. காபி நல்லாயிருக்கு (தினசரி)
ஃ) விதி என்பது உங்களைப் பொறுத்தவரையில்..
1. இந்த இடுகையை படிப்பது
2. உனக்கு கூட பின்னூஸ் போடுற நிலையில் இருப்பது
3. இதைப் படிச்சிட்டு விரக்தியா சிரிக்கிறது
4. இவன் அடுத்த இடுகை எப்ப போடுவான்னு ஏங்கறது(!!?)
இந்த பன்னிரெண்டு கேள்விக்கும் உங்க பதில்களை அதன் எண்களுடன் கூட்டி எனக்கு அனுப்பவும். அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் உங்கள் வாய்க்கொழுப்பின் அளவு கண்டுபிடித்துத் தரப்படும். இது ஒரு இலவச சேவை! பணம் எதுவும் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது!