வந்தியத்தேவனிடம் ஒரு பீடி
கடன் வாங்கினேன்!
அப்போது
அவன்...
குந்தவித் தேவியை
புணர்ந்து முடித்திருந்தானாம்!!!
(அடைப்புக் குறிக்குள் இருப்பதை
திறந்து பார்க்க ஒரு மனம் வேண்டும்.
உங்களிடம் அது இருக்கிறதென்ற
தினவு இருந்தால்... தொடருங்கள்!)
நான் என்னை விட்டு விடுதலையாகிய
காலக்கிரமத்தில்
தொல்காப்பியன் என் பக்கமிருந்தான்;
கொஞ்சம் காது கடன் கொடுத்தால்
நீரோவின் பிடில் என்னை மயக்கும்.. மயக்கியிருக்கும்;
யேசுவின் இறுதி ரத்தம்
இறுகிய ஒரு கர்ச்சீப் என் வசமாகியிருக்கும்;
(ஏழாவது லார்ஜ்ஜில்....
என்னை இழுத்துக் கொள்ளும்
கைரேகையில் இருக்கிறது - என்
சிறு புகை விலாசம்!)
இப்படிப் பறந்த மனம்
21 இன்ச் திரையில் தெரிந்த
இளவயது காரிகையிடம்
கைதாகி ரிமோட்டின்
சிவப்புப் பொத்தானில் மடிந்து விட்டது!
(இவ்வளவுதான் கவிதை!
இவ்வளவுதானா கவிதை என்பவரிடம்.......
இருங்கள்; ஒட்டகத்தின் இரைப்பைக் கிழித்து
நீர்க்குடித்து மீண்டு(ம்) வருகிறேன்!)
(அடைப்புக்குறிகள் தீர்ந்த மாதிரி
தோன்றவில்லை..
ஆனால் அடைப்பதற்கு ஏதுமில்லாத
கனவுகள் பறக்கும் மனதை என்ன செய்ய நான்..??)