இலக்கிய வரிசையில் சமீபகாலமாக சிக்-லிட் (chick lit) என்ற ஒரு வகையறா (ஜான்ரூ) பிரபலமாகிக் கொண்டிருக்கிறது. கலகமான தைரியமான ரொமான்டிக் நவீன பெண்ணிலக்கியத்தை சுருக்கமாக chick literature என்கிறார்கள். இந்தியாவில் Rajashree, Anuja Chauhan, Rupa Gulab, Shobha De போன்றவர்களில் இதில் பிரபலமானவர்கள். தமிழில் இந்த மாதிரி சிக்-லிட் இருந்தால் சொல்லுங்கள் ப்ளீஸ். (வெறும் மலிவான ஆபாச எழுத்து - mushy romance - சிக் லிட் ஆகாது)
அத்வைத கலா (Advaita Kala) எழுதிய Almost Single இப்பதான் படித்து முடித்தேன். வரிக்கு வரி விறுவிறுப்பும் நகைச்சுவையும் பொங்கி பிரவாகிக்கும் எழுத்து.. simply superb!
அயிஷா இந்த நாவலின் protagonist.. 29வயது (குண்டான) தனிக்கட்டை பெண்ணின் உலகம். அவளின் நண்பிகள் (ஒருவள் டிவோர்ஸி, இன்னொருவள் NRI மாப்பிள்ளை வேட்டைக்காரி), நண்பர்கள், சிகரெட், வேலை பார்க்கும் நட்சத்திர ஹோட்டல், பப், பார்ட்டி, மோட்டைமாடி பார்பிக்யூ, கார்வா சாத் விரதம், ஆன்லைனில் NRI மாப்பிள்ளை வேட்டை, gays, டேட்டிங், flirting, பாஸ், கள்ளக்காதல், ஏமாற்றம், தோல்விகள்..... இந்த மாதிரியான ஒரு ஸ்க்ரூ-ட்ரைவர் காக்டெயில்தான் அல்மோஸ்ட் சிங்கிள்!
அத்வைதாவின் முதல் நாவல் என்று நம்பவே முடியவில்லை..! அவ்வளவு சரளமான ஆங்கிலத்தில் நகைச்சுவைப் பொங்க விளாசித் தள்ளியிருக்கிறார்... நவீன கலாச்சாரத்தால் மறுதலிக்கப்பட்ட 29+ பெண்களின் ஹை-ஃபை வாழ்க்கையை!
அயிஷா வேலைப் பார்க்கும் ஓட்டலில் நாளைக்கு 350 டாலர்கள் கொடுத்து தங்கியிருக்கும் கவர்ச்சிகரமான கரண்தான் நாவல் முழுக்க வரும் ஒரே ஆண்பாத்திரம். முதலில் கரணை விபத்தாக, நிர்வாணமாக பார்த்துவிடுவதில் ஆரம்பித்து கடைசியில் அவனையே கல்யாணம் செய்வது வரை போகிறது கதை.
கதையை விடுங்கள் அத்வைதாவின் கட்டுடைத்த எழுத்தும் அதில் கொட்டிக்கிடக்கும் நையாண்டியும் மிக புதிது. I Loved it!
உதாரணமா..
பாஸ் தன் காபினுக்குள் கேர்ள்-பிரண்டோடு பேசிக்கொண்டிருக்கிறார்.. என்ன ஆனாலும் டிஸ்டர்ப் பண்ணவே கூடாது என்று அயிஷாவுக்கு ஆர்டர் போட்டுவிட்டு; அந்த சமயம் பார்த்து பாஸின் மனைவி விடுகிறாள்.. அயிஷாவுக்கு உள்ளூர மகிழ்ச்சி - பாஸின் கொட்டு இன்று உடையப்போகிறதே என்று. பாஸின் மனைவி காபினைத் தட்டுகிறாள்.. நோ ரெஸ்பான்ஸ்..அப்புறம் அயிஷாவும் சேர்ந்து தட்டுகிறாள்... ரொம்ப நேரம் கழித்து கதவு திறக்கிறது... பாஸின் மனைவி, குண்டு அயிஷா பின்னால் நிற்பதால் பாஸுக்கு தெரியவில்லை. கோபமாக கதவைத் திறந்து பாஸ் கேட்பது..
"What's the matter Aisha, where's the fire?"
அதற்கு அயிஷா மனதுக்குள் சொல்லிக்கொள்வது..
Hopefully up your ass.
* * *
நம் மொழியில் சிக்-லிட் இல்லையே (அல்லது எனக்கு கிடைக்கவில்லை) என்று ஒரு வருத்தமும் இருக்கிறது. கவிதாயினிகள் நிறைய பேர் கவிதையாய் மடை திறந்து விளாசுகிறார்கள்.. பாமா, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, தமயந்தி, கீதாஞ்சலி ப்ரியதர்ஷிணி, சல்மா என்று நிறைய இருக்கிறார்.. சாம்பிளுக்கு லீனாவின் ஒரு கவிதை...
ஒவ்வொரு
இப்பொதுதெல்லாம்
ஒவ்வொரு
மடியும் இரவிலும்
புணர்தலுக்காகவே
களம் காணும்
நம் வேட்கைகளை
ஆரம்பகால
சின்ன உராய்தலின் கிளர்ச்சியும்
அழுந்தும் கைகளின் தயக்கமும்
திருட்டு முத்த முயற்சிகளும்
ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கின்றன.
இந்த கவிதை இயல்பான பெண்மொழியோடு பெண்மை பேசுகிறது. சிக்-லிட்டும் அந்த மாதிரியான படைப்பிலக்கியம்தான். இது சுதந்திரத்தின் பெண் குரல்!