
என்டிடிவியில் (NDTV) கமலின் 50 வருட சினிமா பயணத்தை கெளரவிக்கும் விதமாக ஒரு நேர்காணல் ஏற்பாடாகியிருந்தது. நேயர்களும், முக்கிய பிரமுகர்களும் கமலிடம் தொலைபேசி மூலம் கேள்வி கேட்டுக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொகுப்பாளினி, சோனியா சிங்.
அப்போது, பேட்டியின் இடையே டெலிபோனில் சோ ராமஸ்வாமி கமலிடம் கேட்ட கேள்வியும் அதற்கு கமல் சொன்ன பதில்களும்..
சோ: முதலில் உங்களின் 50 வருட தமிழ் சினிமா பங்களிப்பிற்கு என் வாழ்த்துகள். உங்களவிற்கு வேறு எந்த நடிகரும் இப்படி மாறுபட்ட வேடங்கள் ஏற்று நடித்தது இல்லை. உங்களின் பன்முக திறமை எங்கும் காணாதது. கேள்விக்கு வருவோம், நீங்கள் அரசியல்வாதியாவதற்கு தகுதியற்றவர் என்று கூறியுள்ளீர்கள். அரசியல்வாதியாவதற்கு தகுதிகள் ஏதாவது வேண்டுமா என்ன? உண்மையில், நம்நாட்டில் எந்த தகுதியும் தேவைப்படாதது அரசியல்வாதியாவது ஒன்றுதான்? ஒருவேளை நீங்கள் நிறைய தகுதிகள் வைத்திருப்பாதால் அரசியல்வாதியாக முடியாது என்கிறீர்களோ??
கமல்: இப்பத்தான் நான் அரசியல் சார்ந்தவன் ஒரு சாமானிய குடிமகனாக என்று சொன்னேன்.. சொல்லிவிட்டுப் பார்த்தால் சோ வந்திருக்கிறார்! ஏன் சிரிச்சேன்னா நான் அவரோட ரசிகன் மற்றும் அவரின் பல அரசியல் சார்ந்த துணிச்சலான கருத்துக்களின் தாக்கம் என் போன்றவர்களிடம் அரசியல் நிலைப்பாட்டில் இருக்கிறது. சோவை சின்ன வயதிலிருந்து பார்த்து வருகிறேன். எனக்குப் பிடித்தமானவர். ஆனால் அடுத்தவர்களை பிரச்சினையில் மாட்டிவிடுவதை விரும்பிச் செய்கிறவர்.. அதைதான் நீங்க இப்ப பார்க்கிறீர்கள்.. ஹா.. ஹா..!
சோனியா: அப்ப சோ கேட்ட நீங்க அரசியலுக்கு வருவீங்களா கேள்விக்கு நீங்க பதில் சொல்லப் போறதில்லையா?
கமல்: ரொம்ப சரி. நான் ஏற்கனவே அரசியலில்தானே இருக்கிறேன்
சோ: கமல், நீங்கள் எனக்குப் பதில் சொன்ன விதத்தை வச்சுப் பார்க்கும் போது நீங்கள் அரசியல்வாதியாக எல்லாத் தகுதிகளையும் வச்சிக்கீங்கன்னு தெளிவாப் புரியுது. ஏன்னா நான் கேட்டக் கேள்விக்குப் பதிலே சொல்லாம கிட்டதட்ட ஐந்து நிமிடம் பேசியிருக்கீங்களே...!!!
பேட்டி தொடர்கிறது...
பின்குறிப்பு:
காமடி மட்டுமல்ல கமல் பேட்டியில், திருமணம் பற்றி காத்திரமான சில கருத்துக்களும் உண்டு. படித்துப் பாருங்கள்.
இங்கே:http://www.ndtv.com/news/india/marriage_was_a_compromise_kamal_haasan.php
ஆங்கிலத்தில் இருந்ததை அப்படியே மொழிபெயர்த்திருக்கிறேன். கமல் பேசியதை மொழிபெயர்க்கும் போது மட்டும் முழி பிதுங்கி விட்டது!