
யெஸ். எலக்கியவாதியோட கொலவெறிதான்! நண்பர் சொன்னார் யாமம் படிப்பா, முக்கியமான நாவல் என்று. யாமம் எஸ். ராமகிருஷ்ணன் எழுதின நாவல். இங்கே யாமத்தில் துவங்கி காமத்தில் முடிந்த எலக்கியவாதியின் கொலவெறி பற்றி பார்க்கப் போறோம்!
யாமம் படிப்போமென்று, உயிர்மை பதிப்பகத்தில் பின்வரும் புத்தகங்களையும் சேர்த்து ஆர்டர் பண்ணினேன்:யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
சொல்லில் அடங்காத இசை - ஷாஜி
ஏற்கனவே - யுவன் சந்திரசேகர்
கள்ளி - வாமு கோமு
மண்பூதம் - வாமு கோமு
புனைவின் நிழல் - மனோஜ்
என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
ஆன்லைன் ஆர்டர் பிராஸஸ் ஆகி புத்தங்கள் பெங்களூரு வந்து சேர்வதற்கு ஐந்து நாட்களாகி விட்டன. வந்த புத்தகங்களின் பார்ஸல் லட்சணத்தைப் பார்த்தவுடன் கோபமாகி விட்டது. அதைத் திட்டி உயிர்மை பதிப்பகத்து ஒரு மெயில் தட்டி விட்டாச்சு; இப்படி:
பார்ஸல் அனுப்பறதுக்கு ஒரு டொய்ன் நூலும், பழைய பிரவுன் ஷீட்டும் இருந்தா போதும்னு நெனச்சுட்டீங்களா? ..... புனைவின் நிழல் புக்கு பெங்களூக்கு பொடிநடையா நடந்து வந்த மாதிரி கசங்கிக் கிடக்கு. யாமம் கெட்டியான அட்டைங்கிறதால ஓரங்கள் நசுங்கிக் கிடக்கு....
இதை நீங்களே ஆங்கிலத்தில் டிரான்ஸ்லேட் பண்ணிப் படிச்சுக்கோங்க!
இந்த பாயிண்ட்லயே நம்ம கொலவெறி துளிர்க்க ஆரம்பிடுச்சுன்னு நெனக்கிறேன். ஆனா பாருங்க, உயிர்மை பதிப்பகத்திலிருந்து ஒரு பதிலும் வரவில்லை (அவ்வ்வ்வ்!)
புத்தகங்கள் படிக்கத்தான். அதில் நான் உறுதியா (!?) இருக்கேன். ஆனால் ஒரு கடமையுணர்வோடு படிப்பதில்தான் சிக்கல். எப்படின்னா, முதல்ல வாமு கோமுவின் மண்பூதத்தில் ஆரம்பிச்சேன். நல்ல விறுவிறு நடை. எல்லா சிறுகதைகளையும் படிச்சிட்டேன். அப்புறம் புனைவின் நிழல்... இரண்டு சிறுகதைகளோட நிற்கும் போதே, யாமத்துக்கு ஒரு தாவு.. அதில் முதல் அத்தியாயம் முக்கால்வாசி படித்துவிட்டு.. நீ அங்கியே கிட என்று யுவனின் ஏற்கனவே சிறுகதை தொகுப்புக்குள் நுழைந்து விட்டேன். இதில் மூன்று சிறுகதைகள் வாசித்தாகி விட்டது. இதில் இன்னொரு காமடி, என் பெயர் ராமசேஷனில் கூட மூன்று நான்கு பக்கங்கள் படித்திருக்கிறேன் என்று நம்புகிறேன்!
ஏன் இந்த 'பரபர' புல் மேய்ச்சல் என்றுதான் புரியவில்லை.
இத்தோடே நிறுத்திக் கொண்டிருக்கலாம். ஆனால் பாருங்கள், மனைவி ஊருக்குப் போய்விட்டாள். இப்போ தனியாக பெங்களூரில் இருக்கிறேன்.
இடுகை போடலாம் என்று இணையத்தை ஓபன் செய்தால் கை விறுவிறுவென்று அஜால்குஜால் வலைத்தளங்களாக அடித்து நிற்கிறது. அவைகள் ஒவ்வொன்றாய் சமாதானம் பண்ணி அடக்கி விட்டு இடுகை போட வருவதற்குள்.. உஸ்ஸென்று ஆகிவிடுகிறது!
தனியாக பெங்களூரை ரவுண்டு கட்டி எவ்வளவு நாளாயிற்று என்று கமர்ஷியல் ஸ்ட்ரீட், ப்ரிகேட் ரோட், சர்ச் ஸ்ட்ரீட், ஜெய் நகர் என்று இரவு உலாவும் செல்ல ஆரம்பித்தேன். என்ன செய்ய? வீக் டேஸ்களில் தேவதைகள் நிதானமாகத்தான் தெருக்களில் தட்டுப்படுகிறார்கள்.
ஏற்கனவே ஒருமுறை லைவ்பாண்டு என்று பப்பில் கும் குமரிகள் கூடி நிற்க, ரவுண்டு கட்டி சரக்குப் போட்டதும், பத்து ரூபாய் தாள்களை நீட்டியதும் வந்து பவ்யமாய் குமரிகள் வாங்கிக் கொண்டு சென்றதும் நினைவுக்கு வந்தது. முதல் முறையிலேயே அது (ஐ மீன் அந்த ஸெட்டப்)) அவ்வளவாக கவராததால், திரும்ப செல்லத் தோன்றவில்லை.
இருந்தாலும் மனசு ஏதோ ஒன்றுக்காய் தவிப்பது மாதிரி, இளஊதா ஜுரம் வந்தாற் போன்று ஆயிற்று.
பனியரும்பி பைதல் கொள்மாலை துளியரும்பித்
துன்பம் வளர வரும் (திருவள்ளுவர்)
...அல்லவா?
எம். ஜி. ரோட்டின் சர்ச் ஸ்ட்ரீட்டில் பிளாஸம்ஸ் என்று ஒரு புத்தகக் கடை உண்டு. நான்கு ப்ளோர்கள். பழைய புத்தகக் கடை என்று சொல்ல முடியாத அளவுக்கு, நேர்த்தியான அணிவகுப்பில் பழையன, புதியன, அவைகளைப் பார்க்க வருபவன, படிக்க (!?) வருபவன, மேய வருபவன என ஒரு இன்டெலக்சுவல் அட்மாஸ்பியரில் இருக்கும்.
பிளாஸம்மில் ஏற்கனவே நிறைய கொத்திக் கொண்டு வந்திருக்கிறேன். நிறைய புத்தகங்கள்.. பென்ஸில் டிராயிங், அனாடமி டிராயிங் போன்ற வரைதல் பற்றிய உரைகள் (எல்லாம் சுத்த வேஸ்ட்; தயவுசெஞ்சு வாங்காதீங்க - Drawing on the Right Side of the Brain - Betty Edwards ஒண்ணுதான் கொஞ்சம் உருப்படியான புக்) சிலசமயம் Fiction காலரிக்குப் போனோம்னா.. ஆச்சரியகரமான புத்தகங்கள் கிடைக்கும். நான் ஹெர்மன் ஹெஸ்ஸே (சித்தார்த்தா), காப்ரியல் கார்சியா மார்க்வெஸ் (சிறுகதைகள்) அள்ளியது அங்கேதான். நீங்க அமெரிக்கன் எரோடிக் ஸ்டோரிஸ், செக்ஸ் கைடுலைன்ஸ், அனாடமி டிராயிங்ஸ் பற்றிய புத்தகங்களை தீவிரமா புரட்டிக்கிட்டு இருந்தாலும், பக்கத்தில் சிக்குன்னு டைட் பிட்டிங்கில் குமரிகள் வந்து எக்ஸ்யூஸ் மீ என்று மில்ஸ் அன்ட் பூன்ஸ் எடுத்திட்டுப் போவாங்க.
மிகச்சிறிய இடைவெளி, இரண்டு அலமாரிகளுக்கு நடுவில் நீங்கள் நிற்கும் போது வாலைக்குமரி கடந்து செல்லும் போது, கையோ, காலோ, பின்னமோ அல்லது அட்லீஸ்ட் ஹேண்ட் பேக்காவது தொட்டுச் செல்லும்.
அனலாக கையில் புத்தகம், அருகாமையில் இளமையில், மயக்கும் மணம்.. மெல்லிய நூலக இருள்....................... நோ வே! புத்தகத்தை மூடிட்டு கம்முனு கிளம்ப வேண்டியதுதான்.
பிளாஸம்ஸ்க்கு எதிர்த்தாப்லேயே நாஸா பப், அமீபா போன்றவைகள் இருப்பதால் அந்த நியான் லைட் எபெக்டிலேயே தேவதைகள் இங்கும் பிரசன்னமாவார்கள்.
டிஸ்கொதேயில் கூட இந்த அருகாமை சிக்காது.
நேற்று பிளாஸம்ஸ் போயிருந்தேன். வேண்டுமென்றே Romance காலரி பக்கம் தேங்கி தேங்கி நின்று கொண்டிருந்தேன். இதுவரைக்கும் mushy romance ரக புத்தகங்கள் வாங்கியதில்லை. ஏதாவது நல்ல வாசனை தட்டுப்படுகிறதா என்று மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தேன். ம்ம். வந்தவைகள் டீப் கட்டிங்கில் பருத்துத் தெரிகிற மார்புகளும், ஐந்து வயது மகனை அந்தப்புறம் விரட்டிவிட்டு ரொமான்ஸ் ஸைட் மேய்ந்து கொண்டிருந்த தற்ர்ட்டி (It's american pronounciation-ப்பா) ப்ளஸ் ஆன்டி மட்டுமே!
ஆண்டி (எக்ஸ்யூஸ் மீ, Auntyக்கு ரெண்டு சுழி 'ன'வா? இல்ல மூணு சுழி 'ண'வா?) அடிக்கடி என்னைத் திரும்பிப் பார்த்தக் கொண்டிருந்தாள் போலும். அவளுக்குப் பயந்தே Fiction காலரி பக்கம் ஒதுங்கினேன்.
அப்போது சிக்கியவைதான் கீழ்கண்ட புத்தகங்கள். வாங்கியும் விட்டேன்!
ழீன் ஜேனே (Jean Genet) - The Balcony
Italo Calvino - Mr Palomar
Albert Camus (ஆல்பர் காம்யூ) - The Outsider
Albert Camus - The Fall
Franz Kafka - Metamorphosis & other stories
New Life - Vijai Dan Detha
Jean Paul Sartre (ழீன் பாழ் சார்த்தர்) The Condemned of Altona
Jean Paul Sartre - Intimacy
Jean Paul Sartre - Iron on the Soul (புத்தகத்தில் எட்டு ரூபாய் என்று 1974ல் பிரிண்ட் செய்யப்பட்ட பழைய கிழிந்த புத்தகத்திற்கு 200 ரூபாய் கொடுத்து வாங்கினேன்)
Barry Lopez - Short stories
Girl Alone - Rupa Gulab
The Best American Erotica 2002 - edited by Susie Bright
பாத்தீங்களா? எங்க ஆரம்பிச்ச கதை, அமெரிக்கன் எரோடிக்காவில் வந்து முடியுதுன்னு?
வாங்கிய இந்த புத்தகங்களில் எது முதலில் என் கைக்கு வந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்தானே? (இவ்விடம் நீங்களே ஹிஹி போட்டுச் சிரித்துக் கொள்ளுங்கள்)
சரி புத்தகம் வாங்கியதும், கொலவெறி அல்லது கலைதாகம் அல்லது நமநமப்பு தீர்ந்துதா? அதுவும் இல்லை. திரும்பவும் ஒரு அலைச்சல்.
இன்று காலையில் எதுவும் சாப்பிடவில்லை (கிட்டத்தட்ட இந்த வாரம் முழுக்க இதுதான் கதை) அங்கிங்கென்று சுற்றியலைந்துவிட்டு, 2 மணி சுமாருக்கு எம். ஜி. ரோட்டில் உள்ள ஃபேம் தியேட்டருக்கு சென்றேன் (அது ஒரு ஆகாவழி ஹை-பை தியேட்டர்) தனியாளாக சென்று ஒரு ஸாண்ட்விச், பெப்ஸி மினி சகிதம் போய் ஸீட்டில் உட்கார்ந்தேன். இந்த ஸீட் தோதுபடாது என்று கொஞ்சம் பின்தள்ளிப் போய் உட்கார்ந்தேன். என்னைப் பார்த்து ஒரு ஜோடி தெறித்தப் போய் தள்ளி உட்கார்ந்தது, மனதுக்கு இதமாய் இல்லை. காதலர்களுக்கு இடைஞ்சல் செய்பவன் மாதிரியா இருக்கிறேன்?
சரி தொலைந்து போங்கள்! அதாவது தொலைவாய் போங்கள் என்று உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்தேன்!
அப்படி கஷ்டப்பட்டு பார்த்த படம் என்ன (எழவு) தெரியுமா?
FINAL DESTINATIONS!
ஐயோ கருமாந்திரம்! புருடாவுக்கு ஒரு அளவு வேணாம்? இந்தப் படத்தை யாரும் டீஸிங் பண்ணி படம் பண்ற மாதிரி இருந்தா என்கிட்ட ஐடியா கேளுங்க.
படம் முடிஞ்சதும் நல்ல பிள்ளையா (என்ன பண்ண?) வீடு திரும்பினேன்.
அதற்கப்புறமும் கலைதாகம் அடங்காம திரும்பவும் ஒரு தியேட்டருக்குப் போனேன். அது சம்பிகே தியேட்டர் (மல்லேஷ்வரம் பக்கம்) சன் பிக்சர்ஸ் வழங்கிய நினைத்தாலே இனிக்கும்!! ..... நீங்க சொல்ற "ஐயோ.. ஐயோ" எனக்கும் கேட்குது..!
இவ்வளவு பேசற நான் இதில கூட உஷாரா இல்லாம இருப்பேனா? அதுதான் படத்துக்குப் போகும் போதே தியேட்டருக்கு எதிரில் இருக்கிற (எனக்குப் பிடிக்கவே பிடிக்காத) பாரில் போய் ரெண்டு லார்ஜ் சிம்ர்ன் ஆப் ஏத்திக்கிட்டேன். ஃபேம் தியேட்டரில் சிக்காத குதிரை எதாவது இங்கு சிக்குகிறதா என்ற வெறிதான். பாருங்க என்னோட துரதிருஷ்டம் (அல்லது அதிர்ஷ்டம்) இங்கயும் யாரும் / எதுவும் சிக்கலே!
பயணம் இன்னும் இருக்கு..
ஆனா படிக்கிற நீங்க சொல்றதை வச்சிதான் இனி புறப்பாடு! ஓகே?
டிஸ்கி:
இதுக்கு இடையிலே கப்பன் பார்க்கில் கொஞ்ச நேரம் சுற்றினேன்.
ரொம்ப மோசமான (அல்லது அஜக்கு) பிகர்கள் எளிதில் கிடைக்குமிடம் அது. ஆனால் பாருங்கள். என் அதிர்ஷ்டம், அங்கும் பின்னழகைக் காட்டிவிட்டது. சமாதானமாய் போவோம் என்று அங்குள்ள (எனக்கு மிகப் பிடித்த) பிரிட்டிஷ் நூலகத்திற்குள் நுழைந்தேன்.
ஆச்சரியகரமாய் நுழைந்த மூன்றாவது நிமிடத்தில் என் கைக்கு அகப்பட்ட புத்தகத்திலிருந்து உருவப்பட்ட பாராவைத்தான் நீங்கள் கீழே பார்க்கிறீர்கள்!
The term post modernism is sometimes applied to the literature and art after World War II, when the disastrous effects on western morale of the First World War were greatly exacerbated by the experiment of Nazi Totalitarianism and mass exterminations, the threat of total destruction by the atomic bomb, the devastation of the natural environment, and the ominous fact of the overpopulation, and the threat of starvation, post modernism involves not only a continuation carried to an extreme of the counter-traditional experiments of modernism, but also diverse attempts to break away from modernist forms which had, inevitably, become in their turn conventional. A familiar undertaking in post modernist writings is to subvert the foundations of our accepted modes of though and experience so as to reveal the "meaninglessness" of existence and the underlying "abyss" or "void" or "nothingness" on which our supposed security is precariously developments in linguistic and literary theory, there is an effort to subvert the foundations of language itself, so as to show it as its seeming meaningfulness dissipates, to an unillusioned inquirer, in to a play of unresolvable inderterminacies.
- by M H Abrams, in A Glossary of Literary Terms
ஐந்து நிமிடங்களுக்குள் இதை எழுதி முடித்துவிட்டேன் - சட்டை வாங்கிய துணிக்கடை பில்லின் பின்புறம் (இதுவும் பின்புறமா என்றெல்லாம் கேட்கக் கூடாது) இதை எழுத பேனா கடன் கொடுத்துவிட்டு தேமே என்று உட்கார்ந்திருந்த நூலக படிப்பாளிக்கு மனமார்ந்த நன்றி! (எதுவுமே இல்லாமல என்ன ...... லைப்ரரி போனாய் என்று கேட்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்கு காலடியின் தீஅதீ ரசிக கண்மணி பேட்ஜ் கொடுத்திட வேண்டியதுதான்)
ஆப்ரம்ஸின் இந்த டெக்ஸ்டை மாங்கு மாங்கென்று டைப் செய்ய வேண்டுமா என்று கூகிள் தேடினேன்.. ஆனால்,. கிடைத்ததெல்லாம் உரை, உரையின் உரை மற்றும் உரையின் உரையின் உறை என்று போய்க் கொண்டிருந்தது. என்னைப் பொறுத்தவரை இந்த ஆப்ரம்ஸின் இந்த விளக்கம் போஸ்ட் மாடர்னுக்கான மிகச் சிறந்த விளக்கம்.
தேடிகிறது எப்போதும் சிக்குவதில்லை..
தேடாமல் கிடைத்தவற்றில்தான் நம் முகரை எழுதியிருக்கிறது - என்று நினைத்துக் கொண்டேன். சரிதானே?