Monday, August 31, 2009

பேச்சிலர் பார்ட்டி!!

பார்ட்டி-1:சாம்பல் தட்டு

பாஸ்கிக்கு கல்யாணம். கிருஷ்ணகிரியில். வழக்கம் போல ரூம்.. மாப்பிள்ளையின் தம்பியின் கவனிப்பு, பாட்டில்கள், நொறுக்குத் தீனிகள்.. இரவு முழுவதும் பேச்சு.. என்று சுகமாய் கழிந்தது. அப்புறம் ஒவ்வொருத்தனும்.. கன ஜோராக ஏத்தல், இழுத்தல், பினாத்தல், பேத்தல், அனத்தல் என்று போதையின் ஒவ்வொரு படிநிலையிலும் நின்று கதவைத் தட்ட ஆரம்பித்தோம்.

நான் ஹாப் பாட்டில் ஸிக்னேச்சர் + மிக்சர் + பரோட்டா என்று என் சிற்றுரையை முடித்துக் கொண்டேன். அமைதியாக தூங்கி எழுந்து காலையில் கல்யாணத்துக்கு கூட(!?) போனோம். பேசிக்கொண்டிருக்கும் போது பிரகாஷிடம்,

"நல்லவேளை நைட் சரக்கடிச்சிட்டு யாரும் ஹாப்-பாயில் போடலே" என்றேன்.
அதுக்கு பிரகாஷ் சொன்னான்..

"ஆமா! ஆனா நீதான் சாப்பிடும்போது, பரோட்டா பதிலா.. பக்கத்தில் இருந்த ஆஷ்ட்ரேயில் கைவைச்சிட்ட; விட்டிருந்தா வாயில போட்டிருப்பே!"
பார்ட்டி-2: கர்த்தரின் தீர்ப்பு

காலேஜ் ஜுனியர் ஸ்டாலினுக்கு கல்யாணம்! ஊட்டியில இருக்கிற ஒரு கிறித்துவ சபையில்.

காலையில் சர்ச்சில் தம்பதியினர் ஆஜர். சொந்தங்கள், பந்தங்கள், நண்பர்கள், பந்துக்கள் அனைவரும் திரண்டிருக்க.. சர்ச் பாதிரியார்.. சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கிறார். சர்ச்சின் கடைசி வரிசையில் ஸ்டாலினின் தோழர்கள். எல்லோரும் விழி பிதுங்கும் அளவுக்கு டைட். அதில் ஒருவன்.. உட்கார முடியாமல் கண்கள் சொருக சரிய ஆரம்பித்திருக்கிறான். மப்பு வாசனை வேறு கர்த்தர் வரைக்கும் போயிருக்கிறது. பொறுமையிழந்த பாதிரியார்.. மைக்கில் சொன்னது:

"அந்த சிறுவர்களைத் திருச்சபையிலிருந்து வெளியேற்றுங்கள்"

பார்ட்டி-3: ஒரு 'சந்தோஷ' சம்பவம்!

மும்பைக்கு வேலையாக சென்ற ஜே செந்தில், நண்பன் சந்தோஷை பார்த்திருக்கிறான். வாடா மாப்ளே.. நல்ல பப்புக்கு போவோம் என்று அழைத்திருக்கிறான். சந்தோஷ் கூடவே அவனின்​மும்பை நண்பனையும் அழைத்தான். அந்த மும்பைக்காரன்தான் ஸ்பான்சராம். ஒரு ரவுண்ட் முடிந்ததும். ஸ்பான்ஸரர் டிஸ்கொதேக்கு சென்று ஆ(ட்)ட ஆரம்பித்து விட்டாராம். சந்தோஷ் சொன்னானாம்..

"செந்திலு, நாமளும் போயி டான்ஸ் ஆடிட்டு வரலாம்டா"

"என்னடா இது புதுசா? நாம எப்ப ஆடியிருக்கோம்?"

"நீ வேற.. ஸ்பான்ஸர் பண்றவனுக்கு டான்ஸ் ஆடலேன்னா கோபம் வந்துரும்... அப்புறம் ரெண்டாவது ரவுண்ட் கிடைக்காது.. இப்ப நாம போயி ஆடுனாதான் சைட்டிஷ்ஷே ஆர்டர் பண்ணுவான்"

"அடப்பாவி"

"விடறா.. நமக்கு அடிக்கிறதில ஆசை.. அவனுக்கு ஆடறதில்ல ஆசை"

பார்ட்டி-4: கல்யாணப் பரிசு!

எனக்கு கல்யாணம் நிச்சயமானது. நண்பர்களுக்குப் பத்திரிக்கை கொடுக்க சென்னை சென்றிருந்தேன். நண்பர்கள் எங்களுக்கு இப்பவே ஒரு பேச்சிலர் 'ஓப்பனிங்' பார்ட்டி.. அப்புறம் மாரேஜ் முந்தின ராத்திரி தனியா ஒரு 'பினிஷிங்' பார்ட்டி என்று கேட்டிருந்தார்கள்.

சரியென்று.. அங்கே 10 நண்பர்களுக்கு ஓப்பனிங் ஆயிற்று. ஒவ்வொருத்தனும் கொலை மப்பு..! வேலுவும் பாண்டியும் தனியா ரொம்ப நேரம் டிஸ்கஸ் பண்ணிக்​கொண்டிருந்தார்கள்.அப்புறம் வேலு என்னிடம் சொன்னான்.

"மச்சி, கல்யாணத்து உனக்கு டிவியைக் கிப்டா கொழுத்திரலாம்னு இழுக்கம்டா"

எனக்கு தனியாக ஒரு கட்டிங் சாப்பிட்ட மாதிரி இருந்தாலும், பவ்யமாக,

"அதெல்லாம் எதுக்குடா, நீங்க வந்தாலே போதும்டா"

பாண்டி குறுக்கிட்டு, "சேசே.. என்ன ஜெகனு அப்படி சொழ்ழிட்டே? டிவிதான் வாங்கப் போழோம்.. என்ன பிழாண்டு வேழும்னு மட்டும் சொல்லு? எழ்ஜி...? சாம்சங்..?"

வேலு, "பாண்டியா, அதெல்லாம் நழ்ழ பிழாண்டா நாம பாழ்த்து வாங்கிக்கலாம்... " என்று, என்னிடம் திரும்பி,

"மச்சி, நீ வேற யார்கிட்டயும் டிவி கிப்ட் வாங்கிடாதே.. இப்பவே சொழ்ழிரு.. பசங்க அழ்ரெடி டிவி வாழ்ங்கித் த(ர)ழதா இருக்குன்னு"

நண்பர்களை வியந்தவாறே ஊர் திரும்பிவிட்டேன். ஈரோட்டில் கல்யாணம்.. நண்பர்களும் வந்திருந்தார்கள். இரண்டு அறை புக் செய்திருந்தேன்.. பத்தாது என்று மூன்றாவதாக ஒரு அறையும் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்... சரக்குக்கு மட்டும் பத்தாயிரம் அன்றைய இரவிலேயே செலவாகியிருந்தது. பக்கத்திலிருந்த அம்மணி பாத்து வியப்பது தெரிந்தது.. நமட்டு சிரிப்பு சிரித்து வைத்தேன்.

காலையில் முகூர்த்தம் எல்லாம் முடிந்து, சுமார் 2 மணி நேரம் கழித்து வந்தார்கள் நண்பர் பெருமக்கள்! டிவியை சென்னையிலிருந்தே பேக் பண்ணி எடுத்துட்டு வராங்களா, இல்லை இங்க ஈரோட்டில வாங்கிட்டு வராங்களான்னு ஒரே பரபரப்பா இருந்தது.

முதலில் அஞ்சு பேரு வந்து கைகுலுக்கினாங்க! போட்டோ எடுத்துக்கிட்டாங்க! வீடியோவுக்கும் அசையாம நின்னு போஸ் கொடுத்திட்டு, கிளம்பறோம்டா மச்சின்னு கெளம்பிட்டாங்க.. சரி அடுத்த செட் பசங்களாவது பெருசா எதாச்சும் தூக்கிட்டு வருவாங்கன்னு பாத்தா.. அவிங்களும் அதே கைகுலுக்கல், போஸ், டாடா பைபை!!! கடைசியா ஒரு குரூப் வந்தது.. அவங்க கையிலயும் ஒண்ணையும் காணோம்... ஒரு சின்ன கிப்ட் பாக்ஸ்.. ​கவர்.. கர்ச்சீப் எதுவும் இல்லை.. bursting the bubbleன்னா என்ன்னு அப்பதான் புரிஞ்சுது!
வாய்விட்டே கேட்டுட்டேன் செந்தில்ராஜிடம்,

"டே கோழி! ஏதோ டிவி கொடுக்கப் போறதா பசங்க சொன்னாங்க?"

அதுக்கு கூலா அவன் சொன்னது.. இப்ப கூட எந்த கிப்டைப் பாத்தாலும் ஞாபகத்து வந்து நிக்குது!!

"மச்சி, தங்கியிருந்த லாட்ஜ்ல கூட ஒரு டிவி பாத்தோம்.. நல்லாதான் இருந்தது! பசங்க இதையே எடுத்திட்டுப் போயி ஜெகனுக்கு கொடுத்திடலாம்னு சொன்னாங்க.. பட், அந்த லாட்ஜ்ல ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. சரி வரட்டுமா?"

இப்படி என் கல்யாணத்து சிறப்பா மங்களம் பாடுனது இந்த நண்பர்கள்தான்!

பார்ட்டி-5 - நம்ம ஊர்ல பார்ட்டி!!

சந்தோஷ் அப்ப எனக்கு சின்சியரான சிஷ்யன்.. அவன் ஊர் தர்மபுரி பக்கம் இருந்த பெரியாம்பட்டி! ஒருநாள் கிளாஸ் ரூமிலேயே வயிற்று வலியால் சுருண்டான். ஊர் திருவிழா என்று கொஞ்சம் ஓவராக சாப்பிட்டுவிட்டானாம்.

ரொம்ப நாள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் போது, நண்பன் கைலாஷ், சந்தோஷ் ஊர் திருவிழா எப்படி கொண்டாடுகிறார்கள் என்று விளக்கியது இப்படி:

"மச்சி,சந்தோஷ் ஊர்ல பெரிய்ய்ய திருவிழாவும்.. மொத்த ஊரும் திரண்டு வந்து, ஒரு ஃபுல்லு, ஒரு ஹாப்பு, ஒரு குவாட்டரு அப்புறம் ஒரு கட்டிங்ன்னு வாங்கி அவங்க ஊர் கிணற்றில் ஊத்திட்டாங்களாம்.. ஊர்ல இருக்கிற ஒவ்வொருத்தரும்.. மொண்டு மொண்டு குடிக்கிறாங்களாம்.. எல்லார்த்துக்கும் செம மப்பாம்... சந்தோஷ் மட்டும் பாட்டில்ல மிச்சம் இருக்கிற ஒரே ஒரு சொட்டு சரக்கை அப்படியே ராவா ஊத்திட்டானாம்... அதுதான் பயங்கர மப்பாகி.. வயிறே வலிக்க ஆரம்பிச்சிருச்சாம்..!"
* * *

Saturday, August 29, 2009

எலக்கியவாதியின் பழைய டைரி


பற​வைக் கூடுகளின் எளி​மையாய் ​நெய்யப்பட்டிக்கிறது இவனது ஆன்மா.

- யூமா. வாசுகி, உயிர்த்திருத்தல் சிறுக​தையிலிருந்து..


அடுத்தடுத்துச் ​சொல்வ​தைவிட, இ​டை​வெளிக்கு அப்புறம் ​சொல்லப்படுப​வை நன்றாகத்தான் இருக்கின்றன. ​சொல்​லை இடை​வெளியும், இ​டை​வெளி​யை ​சொல்லும் கூழங்கல்லாய் உருட்டி ஈரமண்ணில் ஒதுக்கும்​போது ஆறும் அழகு. க​ரையும் அழகு.

- வண்ணதாசன், உள்புறம் வழியும் துளிகள் சிறுக​தையிலிருந்து..


பாஸ்கர், உன் ம​னைவி​யை நீ பார்க்க உனக்குச் ​சொல்லி ​கொடுப்பதன் அதிகப்பிரசங்கித்தனம் எனக்குத் ​தெரியாததல்ல. அதற்குக் கண் ​வேண்டும். ஆனால் கண்ணுக்கு உனக்குப் ​பொழுதில்​லை.

- லாசரா, எதிர்ப்பு சிறுக​தையிலிருந்து..


விரியும் உதடுகள் வழிநடத்திச் ​செல்லும் முடிவில் - ​செல்லரித்த இ​லைகள் உதிர்ந்து புதுக்குருத்​தென ​தேடிவருபவனுக்காகக் காத்திருப்பாள் புவனா.

- யூமா. வாசுகி, வான்நதி சிறுக​தையிலிருந்து..


* * *

கவிதைகள் (ஜெகநாதன்!)

குளத்துள் எறியும்

எல்லாக் கற்களிலும்

விரிஅ​லைகளாய் க​ரை ஒதுங்குகிறது

கல்​லை எறிந்த

கவ​லை!


*

.... தாகங் தீர்த்த

​பேராற்றின் ​செங்க​ரை​யை

நாணல் கடக்கிறது

சுவடுக​ளை மட்டும் விடுத்து


* * *

புத்தகங்கள்...

விழி. பா. இதய​வேந்தன்

​சேஷையா ரவி- அறிவின் க​ரை​யை மீறி

சா. கந்தசாமி - 20ம் நூற்றாண்டின் சிறுக​தைகள்

யுவான் ருல்​போ - எரியும் சம​வெளி

(.. கனவு காண்ப​தை நிறுத்து - அதுதான் என் ​பெயர்)

​ஜே ​ஜே சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

நீல பத்மநாபன் - த​லைமு​றைகள்

​கோடாவிற்காக காத்திருத்தல் - சாமுவேல் பெக்கட்

ஹால (XALA) - ​செம்பான் ஒஸ்மான்

நகரச்சுவர்கள் - எஸ். ​வைத்தீஸ்வரன்

வழித்து​ணைகள் - சுப்ரபாரதிமணியன்

ஆயிரங்கால் மண்டபம் - ​ஜெய​மோகன்

கண்மணி குண​சேகரன் - அஞ்ச​லை

ஆந்​ரே ழீத், பி​ரை​மோ ​​​லெவி, ​ஜேம்ஸ் ஜாய்ஸ்

பாதசாரி (மீனுக்குள் கடல்)

எஸ். ராமகிருஷ்ணன் - உபபாண்டவம்..............



* * *

மியூஸிக்...

... இன்பம் சிலநாள், துன்பம் சிலநாள் என்றவர் யார் ​தோழி..

இன்பம் கனவில், துன்பம் எதிரில் காண்பது ஏன் ​தோழி (பாக்யலட்சுமி)

Michael Bolton - Go the Distance

ABBA - The winter takes its all

LAS KETCHUP

Bombay Vikings

Ellie Cambell - Don't worry you come back

Kylie Minogue........

மடிமீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம்..

மறுநாள் எழுந்து பார்ப்போம்....

இரவே இரவே விடியாதே, இன்பத்தின் கதையை முடிக்காதே

சேவல் குரலே கூவாதே, சேர்ந்தவர் உயிரைப் பிரிக்காதே.....

(அன்னை இல்லம் - சிவாஜி, ​தேவிகா)

* * *

தத்துவம்

Plants remains always small under a big tree


Women can smile as they do

But they can weep as the will


* * *

தாராபுரம் ​சென்றிருந்த​போது என் ப​ழைய ​டைரி ஒன்று கி​டைத்தது. 2003-2004 ஆண்டுகளுக்கான இலக்கிய குறிப்புகள் அடங்கிய முக்கிய ஆவணம் (அட்ரா சக்​கை!) நி​றைய கவி​தைகள், படித்த புத்தகங்களிலிருந்து excerpts, இ​சை, படிக்கப் ​போற புத்தகங்களின் பட்டியல், ம​ன​தை கவர்ந்த சம்பவக்குறிப்புகள், ​கொஞ்சம் ஓவியங்கள் ​என ப​ழைய கிறுக்கல்களில் ​தொகுப்பு!

Tuesday, August 25, 2009

25வது காலடி

அன்பார்ந்த பதிவர்களே, வாசகக்கண்மணிகளே, காலடியின் தீவிர அதி தீவிர ரசிகக்கண்மணிகளே!

இது நம் காலடியின் 25-வது பதிவு..!!

இது பதிவுலகத்துக்கு நல்லதில்லை, என்ட் ஆப் டேஸ், ஆர்மகெடான், டல்கோலக்ஸ், விதி வலியது, ப்ச்.., என்று நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு என் நன்றி!


நான் இருபத்தைந்து இடுகைகள் எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாகவும், அதற்கும் பின்னூஸ் வந்திருக்கின்றன என்பது ஆதுரமாகவும் இருக்கிறது.

பாசமோடு தம்பி, மாப்ள, மாம்ஸ், நண்பா என்று அழைக்கிற முகம் தெரியா பாசக்காரர்களைப் பார்த்தது இல்லை. சங்கா அண்ணன், பெரியண்ணன் ​சென்ஷி, ஸ்டார்ஜன் மாம்ஸ், அக்பர் மாப்ள, மாப்ள ஏனாஓனா, தம்பி ​சேலம் சண்முகம் இப்படி தடாலடியாக பாசமாக அழைப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது!

ஆனாலும் இந்த குறுகிய காலத்திலேயே இவர்கள் அன்பைச் சம்பாதித்தது கண்டு இறுமாப்பு அடைகிறேன்!

இடுகைகளின் நீளத்தை விட என் பின்னூஸ்களின் நீளம் அதிகம். அந்த பின்னூஸ்களையும் (பொறுமையாக) படித்துவிட்டு பாராட்டிய அன்பு நெஞ்சகளுக்கு நன்றி! முக்கியமாக அனுஜன்யா, பீர் Peer, ஈரோடு நாகராஜ், வால்பையன் இவர்களுக்கு நன்றிகள்!

முதலில் பதிவு எழுத வரும்போது தீவிரமாக சிறுகதை, கட்டுரை என்றுதான் வந்தேன். அப்புறம்.. ​மொக்கைகள்தான் நம்மை அடையாளப்படுத்தும் என்று.. எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்...!!!

இந்ந மாதிரி என்னை வழிப்படுத்தியது கோவி. கண்ணனின் புதிய பதிவர்களுக்கு சில யோசனைகள் என்ற இடுகைதான். அதற்கு GK-க்கு என் நன்றிகள்!

என்னோட கலை ஆர்வம் (ப்ளீஸ்..) ஓவியத்தில் தொடங்கியது! அப்புறம் மெல்ல மெல்ல கவிதை, கதைன்னு வளர ஆரம்பிச்சிருச்சு! தனியா ரூமில அடைஞ்சு டயரி டயரியா.. கவிதை, டயரியாவே ஆகியிருக்கு!

கவிதை என்றதும் மனங்கவர்ந்த நேசமித்ரன், நந்தா நினைவுக்கு வரும் முன் அவர்கள் கவிதைகள் நினைவுக்கு வந்துவிடுகின்றன.

அப்பா குமுதம், மாலைமதி, முத்தாரம், கல்கண்டு, ஆவி, ஜுவி, நக்கீரன் இப்படி குவியலா வாங்கித் தள்ளுபவர். அப்பா இதுவரைக்கும் குமுதம் ஒரு இதழ் கூட வாங்க மிஸ் பண்ணுனதேயில்லை! நான் 9வது படிச்சிட்டிருக்கும் போது நீல. பத்மனாபனின் தேரோடும் வீதியில்.. கொடுத்து படிச்சிப் பாருன்னாரு! அவர் அதைப் படிக்கலேன்னு நினைக்கிறேன். ஒரே நாள்ல முழுசும் படிச்சிட்டு, நல்லாயிருக்கு இன்னொரு தரம் வாசிக்கணும் என்று மறுவாசிப்பும் செய்தேன். அப்புறம் வீட்டில் ரஷ்ய எழுத்தாளர் + சினிமா இயக்குநர் வசீலி ஷுக்சீனின் வாழ விருப்பம் சிறுகதைகள் தொகுப்பு இருக்கும். அது என்னோட பேவரிட். குறைஞ்சது 100 தடவை படிச்சிருப்பேன். இந்த மாதிரியான வாசிப்புகள் கொடுத்த சுவையில் லயிச்சு, இந்தியா டுடேவில் (அப்பா கொஞ்ச காலம் அதுக்கும் சந்தாதாராகியிருந்தார்) வந்த சிறுகதைகள், ஓவியங்களை ரசிக்க ஆரம்பித்தேன். அது புது மாதிரியான அனுபவமாக இருந்தது.

அதற்கப்புறம் ரசனையே வேறு மாதிரி ஆகிவிட்டதாக உணர்ந்தேன்.

கன்னிவாடியில் இருந்த போது அறிமுகமான க.சீ.சிவக்குமார் அண்ணன். அவர் அறிமுகப்படுத்திய இலக்கியங்கள், இலக்கியவாதிகள் (என். ஸ்ரீராம், யூமா. வாசுகி, சுப்ரபாரதிமணியன், பாஸ்கர் சக்தி, குன்னாங்குர் செல்வம், ரமேஷ் வைத்யா, இன்னும் குடியில் பழகி பெயர் தொலைந்த நண்பர்கள்..) என ஒரு உற்சாக துணையாயிருந்தார்.

இப்ப இந்த மாதிரி பதிவு எழுதுவது ஒரு இளைப்பாறுதலாக உணர்கிறேன்.

ஆனால் எதிலும் அபரிமிதமாக உள்ளிறங்கி, பின் மூச்சுத்திணறி வெளியே வருவதாக இருக்கிறது என் பிழைப்பு. இதே போல் இங்கும், பதிவுலகத்தில் அபரிமிதமாய் இறங்கி விடுவோனோ என்று பயமாயிருக்கிறது. ஏனென்றால், இதன் வசீகரம் அப்படி!

எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் பதிவு எழுத முடிகிறது. தீவிரமான பதிவுகளில் பின்னூஸ் வாயிலாக பங்கேற்க முடிகிறது. அதி முக்கியமாக வாய்விட்டு சிரிக்க முடிகிறது!

Al though the ceiling strikes my forehead, I could fly between floor to ceiling!

பதிவுலகத்தில் நான் அறிந்த வலைபதிவுகள் மிகவும் சொற்பம். அதில் என்னைக் கவர்ந்த சிலதை பட்டியலிடுவது என் நுனிபுல் அறிவை மட்டும் காட்டும். இருந்தும் என் நன்றியை அவர்களுக்கு வேறெப்படி உணர்த்துவேன்.
கவிதை, சிறுகதை, மற்றும் ப்ரியத்தால் என்னை வசீகரிக்கும் பா.ராஜாராம், தீவிரமான சிந்தனைகளைக் காட்டும் சந்ரு, இரும்புத்திரை அரவிந்தன், மதுரை டக்ளஸ், தல SUREஷ், டெக்னாலஜி புலி டவுசர் பாண்டி, சிந்தனி - தங்கமணி பிரபு, சமரன், குடுகுடுப்பை, நான் ஆதவன், வினோத்கெளதம், முரளிகுமார் பத்மநாபன், RAMYA, எம்.பி.உதயசூரியன், வண்ணத்துபூச்சியார், கடைக்குட்டி, கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும், ப்ரபஞ்சப்ரியன், ப்ரியமுடன் வசந்த், சிக்கன இடுகை கவி டோமி, ஜவஹர், .. இன்னும் நிறைய பேர்!
அனைவருக்கும் நன்றிகள்!

Never I forget you - it could be merely the names sometimes!