Monday, November 30, 2009
வந்தியத்தேவனிடம் ஒரு பீடி..!
வந்தியத்தேவனிடம் ஒரு பீடி
கடன் வாங்கினேன்!
அப்போது
அவன்...
குந்தவித் தேவியை
புணர்ந்து முடித்திருந்தானாம்!!!
(அடைப்புக் குறிக்குள் இருப்பதை
திறந்து பார்க்க ஒரு மனம் வேண்டும்.
உங்களிடம் அது இருக்கிறதென்ற
தினவு இருந்தால்... தொடருங்கள்!)
நான் என்னை விட்டு விடுதலையாகிய
காலக்கிரமத்தில்
தொல்காப்பியன் என் பக்கமிருந்தான்;
கொஞ்சம் காது கடன் கொடுத்தால்
நீரோவின் பிடில் என்னை மயக்கும்.. மயக்கியிருக்கும்;
யேசுவின் இறுதி ரத்தம்
இறுகிய ஒரு கர்ச்சீப் என் வசமாகியிருக்கும்;
(ஏழாவது லார்ஜ்ஜில்....
என்னை இழுத்துக் கொள்ளும்
கைரேகையில் இருக்கிறது - என்
சிறு புகை விலாசம்!)
இப்படிப் பறந்த மனம்
21 இன்ச் திரையில் தெரிந்த
இளவயது காரிகையிடம்
கைதாகி ரிமோட்டின்
சிவப்புப் பொத்தானில் மடிந்து விட்டது!
(இவ்வளவுதான் கவிதை!
இவ்வளவுதானா கவிதை என்பவரிடம்.......
இருங்கள்; ஒட்டகத்தின் இரைப்பைக் கிழித்து
நீர்க்குடித்து மீண்டு(ம்) வருகிறேன்!)
(அடைப்புக்குறிகள் தீர்ந்த மாதிரி
தோன்றவில்லை..
ஆனால் அடைப்பதற்கு ஏதுமில்லாத
கனவுகள் பறக்கும் மனதை என்ன செய்ய நான்..??)
Labels:
கவிதை,
ஸோ பேட்,
ஸோ ஸேட்
Subscribe to:
Post Comments (Atom)
47 comments:
மன்னிக்கவும் நான் பீடி பிடிப்பதில்லை ஹிஹீ
என் வாசல் வரும் அனைவருக்கும்
உங்கள் முகவரி தர உத்தேசம் அண்ணே !
:)
வந்தியத்தேவன் said...
//மன்னிக்கவும் நான் பீடி பிடிப்பதில்லை ஹிஹீ//
அவர் பீடி பிடிப்பதை தான் மருத்துள்ளார்
இரண்டாவது செயலை அல்ல!
ஜெகா,கவிதை இவ்ளோதானா !ஒட்டகத்து இரைப்பை கிழித்து நீர் எடுப்பது பாவம்.இங்கிருந்து பனியாய் அனுப்புகிறேன்.கவிதைச் சூட்டில் உருகிவிடும்.களைப்பாறி வாங்களேன் இன்னும் எழுத.
இது கவிதையா இல்லை கவசமணிந்த ஜெகாவின் ஒரு சாயலா !
ஓ...ஆறாவது விரல் தாண்டி இப்போ ஏழாவது விரலுமா !தாங்காது.
(இந்த வாரம் முழுதும் மாவீரர் தினத்துள் மனம் அழுத்த விடுபட வாரமாகும்.என்றாலும் உங்கள் கவிதை பின்னூட்டம் இட வைத்தது.)
அப்படி என்ன சோகம் ஜெகன்? Cheer up my friend !
ஆகா அருமையாக எழுதிறிங்க நல்ல படிமக் கவிதை
வந்தியத் தேவனுக்கும் குந்தி தேவிக்கும் முடிச்சுப் போட்டு பயங்கர ஆர்ட் பிலிமா ஆக்கிட்டீங்க!
http://kgjawarlal.wordpress.com
என் மாமாவை பீடிபிடிப்பவர் என சொல்லியதற்கு என் வன்மையான கண்டனங்கள் கலக்கல் பதிவு தலைவா.
this is also Superruuuu!
this is also Superruuuu!
மொக்கைத்தனத்தை மட்டும் தவிர்த்திருந்தால் இது ஒரு அபாரமான கவிதையாக உருப்பெற்றிருக்கும்
ஏண்ணே இம்புட்டு சோகம்?
\\\நான் என்னை விட்டு விடுதலையாகிய
காலக்கிரமத்தில்
தொல்காப்பியன் என் பக்கமிருந்தான்;
கொஞ்சம் காது கடன் கொடுத்தால்
நீரோவின் பிடில் என்னை மயக்கும்.. மயக்கியிருக்கும்;
யேசுவின் இறுதி ரத்தம்
இறுகிய ஒரு கர்ச்சீப் என் வசமாகியிருக்கும்;\\\
இலக்கணம் {தமிழில் ஆர்வமாயும்}
இசையில் ஆர்வம் இருந்தும் ...
முயற்சி எடுக்கவில்லை....
சகிப்புத் தன்மை எப்போதும் என்
உடலைத் துடைத்துச் சுத்தம்
பண்ணிக் கொண்டிருந்திருக்கும்!!!
\\\\இப்படிப் பறந்த மனம்
21 இன்ச் திரையில் தெரிந்த
இளவயது காரிகையிடம்
கைதாகி ரிமோட்டின்
சிவப்புப் பொத்தானில் மடிந்து விட்டது!\\\\\
இதில் கொஞ்சம் புத்திசாலி...21வயதுஆகாமல் பாத்திருந்தால்
எண்ண வேண்டி வந்திருக்கும்...1..2..3
இயங்க வைக்கும் {ரிமோட்}சிவப்பாய்
இருக்கும் இதயத்தில் {இது இல்லாமல் இயங்காது}
...என்னை மடித்துவிட்டது..அவளின்.........
{யார்அது?} பாவம்.......அவள்\\\
{அரபுநாட்டிச்......ச.....தான் {தண்ணீர் தான்}
குடிக்கின்றதோ....!!!
அப்பாடாஆஆஆ இனிமேல் இந்த விளக்கமெல்லாம்
கிடையாது 2வரிகளில் தான் பின்னோட்டம்.
சுருக்கம்>.
பல ஆசை ,கனவுகளுடன்
{எதிர்காலம்}
இருந்த மனதில்\\ ஒளிவரிசை
மாற்றுவதுபோல்....
அவர் இதயத்தை மாற்றி..மாற்றி
அவரை மடியவைத்துவிட்டாள்.
உங்கள் முதல் இடுகையின் பின்னோட்டத்தில்
நீங்கள் சொல்லத் தவறிய.........
நான் சொல்ல வந்தேன்...மிக்க,மிக்க நன்றிகள்.
நன்றி வர மறுப்பது{மறப்பது} இதுவும்
உங்கள் நவீனத்துவமோ!!!??
வாங்க வந்தியத்தேவன்,
இப்படி ஒரு பால்வடியற களத்தூர் கண்ணம்மா கமல் முகத்தைப் பாத்து எப்படி பீடி கேப்பேன்? ஹிஹி..!
அன்பு நேசா,
ரொம்ப நன்றி கவிஞரே!
அன்பு ராஜவம்சம்..
//அவர் பீடி பிடிப்பதை தான் மருத்துள்ளார்
இரண்டாவது செயலை அல்ல!
//
இந்தமாதிரியான நுண்ணரசியல், உள்குத்து எல்லாம் தெரியாத நான்தான் உண்மையிலேயே க.க.க போலிருக்கு!! நன்றி!
வாங்க ஹேமா!
முதலில் மாவீரர் தின வாழ்த்துகள்!
சுவிஸ் பனிக்கு என் நன்றிகள்!!
//இது கவிதையா இல்லை கவசமணிந்த ஜெகாவின் ஒரு சாயலா!//
பிழைத்துப் போகட்டும் கவிதை என்றே சொல்லிக் கொள்ளவும்!
அன்பு பிரபஞ்ச பிரியன்,
சோகமெல்லாம் ஒன்றும் இல்லை.. சியர் அப்-தான்... இந்த ச்சியர்ஸில் தளும்பிறதுகள் தான் இதுக...! ஹிஹி!!
அன்பு தியா,
ரொம்ப நன்றி!
அன்பு ஜவஹர்,
//வந்தியத் தேவனுக்கும் குந்தி தேவிக்கும் முடிச்சுப் போட்டு //
அய்யய்யோ.. குந்தவைங்க.....! அட உங்களை குந்த வைச்சு உட்காரச் சொல்லலே. குந்தவை தேவி அது! நன்றி ஜவஹர்!
அன்பு SShathiesh
//என் மாமாவை பீடிபிடிப்பவர் என சொல்லியதற்கு என் வன்மையான கண்டனங்கள்//
தப்புதான்..! வேணா அடுத்த பதிவில் வந்தியத்தேவன் பீடிப் பிடிப்பதில்லை என்று போட்டுவிடட்டுமா?
நன்றிகள் ஷதீஷ்!
அன்பு கார்த்திக்கு,
கேட்ச் பிடித்துவிட்ட பந்தை பார்த்து சிரிக்கும் சப்ஸ்ட்டியூட் போல ஒரு சந்தோஷம்! நன்றி!
அன்பு நந்தா,
டிராகுலாவின் காதலி -2 க்கு எழுதிய எதிர்கவிதையை லைட்ட்ட்டாக எடுத்துக்கிட்டதுக்கு நன்றி! நீங்க ரொம்ப நல்லவரு!
மொக்தைத்தனம் குறைக்க முயற்சிக்கிறேன்.. என்ன பண்ண?
பொறப்புலயே ரெட்டைச் சுழி!!
நன்றி கவிஞா!
அன்பு தம்பி ஆதவன்,
சோகம் என்று ஒன்றுமில்லை.. சும்மா நம்மாளுங்க எல்லாம் முழிச்சுக்கிட்டு இருக்காங்களான்னு 'கல்லு' விட்டுப் பாக்கத் தோணுச்சு.. அதுதான் கவித!
அன்பு கலா...
ஒரு சிம்பொனிக்கு இம்ப்ரூவ்மெண்ட் போட்ட மாதிரி ஒவ்வொரு இசைத்துணுக்கிலும் உங்களின் அடையாளத்தை பதித்து விட்டீர்கள். ரசிக்கிறேன். மிக ரொம்ப!!
21 இன்ச்சில் என்னை கம்பி எண்ணவிடாமல் பார்த்துக் கொண்ட லாவக நக்கலில் என்னை நானே நகைத்துக் கொள்கிறேன்!!
நீங்க நினைக்கிறது ரொம்ப தப்பூ! (அட! உங்க தப்பில் கூட ஒரு பூ பூக்கிறதே!?) அப்படியெல்லாம் சரக்கு தேடி ஓடற ஆள் நானில்லை!
//அப்பாடாஆஆஆ இனிமேல் இந்த விளக்கமெல்லாம்
கிடையாது 2வரிகளில் தான் பின்னோட்டம்.//
அவ்வ்வ்வ்வ்.. ஆசிரியர் மாதிரி நீங்க. பாடம் எடுக்க மாட்டேன்.. வெறும் பெல் மட்டும்தான் அடிப்பேன்னு சொல்லலாமா??
//அவர் இதயத்தை மாற்றி..மாற்றி
அவரை மடியவைத்துவிட்டாள்//
சத்தியம்! மடிந்து, மடியணிந்து தான் இருக்கிறேன் இப்ப..!
என்ன ஒரேயொரு பிரச்சினை - எப்ப பார்த்தாலும் பயமாயிருக்கு, பயமாயிருக்கு என்று பதைபதைத்து என்னை சுருள வைக்கிறாள்!!! என்ன செய்ய???
//நன்றி வர மறுப்பது{மறப்பது} இதுவும்
உங்கள் நவீனத்துவமோ!!!??//
மேடம்.. திரும்ப வேப்பிலையா??? வேணாம்! நவீனத்துவம் என்ற பேரில் நற்பண்புகளை இழப்பவன் நானல்ல!
நன்றி சொல்லும் இடைவெளி நமக்குள் இல்லை என்பதாக எண்ணியிருந்தேன்.. பரவாயில்லை விடுங்கள்... உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்!
உங்கள் இரசிப்புத் {தமிழை}... தன்மைக்கு
மிக்க
நன்றி.
கேட்டு வாங்கிய நன்றி,எனக்கு
வேண்டாம் நீங்களே வைத்துக்
கொள்ளுங்கள்.
{எதையும் கேட்டு வாங்குவது
அழகல்ல....}
அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html
கவிதை சூப்பர். ஆனா அது புரியறதுக்கும் ஒரு தகுதி வேணும்.
மாப்பு எனக்கு வச்சிட்டிங்களே ஆப்பு
ஆகா! தம்பிக்கு ஏதோ ஆயிருச்சே! ஒண்ணும் புரியலை. ஒரே ஒரு கருத்து. இது நம்ம நேசக் கவிஞர் கவிதை மாதிரி இருக்கு. மாதிரி தான். அவருடையது வார்த்தை வசீகரம் இருக்கும்.சொற்கள் சுண்டி இழுக்கும். அந்த வசீகரத்துக்காக மின்விளக்கில் விழும் ஈசல் மாதிரி விழுவதுண்டு. இது அந்த மாதிரியும் இல்லை. புரியவும் இல்லை.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!!
என்ன ஆச்சு?! எலக்கியவாதி ஆகிட்டீங்க போலிருக்கு?!
இந்த லேபல்ல குடுத்திருக்கிற மாதிரி நானும் என் பையனும் ”டூ பேட் டூ ஸேட்”னு சீண்டி விளையாடுவதுண்டு.
வணக்கம் அண்ணா
என்னால் சரியாக பதிவு எழுத முடியவில்லை......
இருபினும் உங்கள் பதிவுகளை படித்துகொண்டு தான் இருக்கிறேன்......
ரொம்ப கார சாரமா போகும் போல் இருக்கு.......
நான் மீண்டும் பதிவு எழுதுவேன்......
இப்போதைக்கு எஸ் ஆகிகுறேன்.........
கவிதை எழுதி கூட கலாய்க்கலாமா
அப்பப்ப இப்படி கலாய்ங்க
நல்லாருக்கு
விஜய்
// Kala said...
உங்கள் இரசிப்புத் {தமிழை}... தன்மைக்கு
மிக்க
நன்றி.
கேட்டு வாங்கிய நன்றி,எனக்கு
வேண்டாம் நீங்களே வைத்துக்
கொள்ளுங்கள்.
{எதையும் கேட்டு வாங்குவது
அழகல்ல....}
//
கலா,
ஏனிந்த கோபம்..? உண்மையில் உங்களுக்கு என் நன்றிகள். காலடி தலைமை ரசிகப் பேரவை(!) சிங்கப்பூர் - கிளை, முதன்மை செயலாளருக்கு.. இது கூட செய்யவில்லை என்றால் எப்படி?
//தியாவின் பேனா said...
அன்புடன் நான் வழங்கிய இவ் விருதினைப் பெற்றுக்கொள்ளுங்கள்
http://theyaa.blogspot.com/2009/12/blog-post_02.html
//
அன்பு தியா,
மிக்க நன்றி! இந்த அன்பிற்கு என்றும் கடமைப் பட்டவனாகிறேன்!
அன்பு மாப்ள அக்பர்
//கவிதை சூப்பர். ஆனா அது புரியறதுக்கும் ஒரு தகுதி வேணும்.
//
ச்சீசீ... உலகத்திலேயே... அதாவது பதிவுலகத்திலேயே ரொம்ம்போ ஈஸியான வேலை கவிதையைப் படிச்சிட்டு அதுக்கு பின்னூ போடறதுதான்... பிரிஞ்சமாதிரி பிரியாத மாதிரி இப்படி எப்படி வேணாலும் பின்னூட்டலாம்..!
அதைவிடவும் ஈஸியான வேலை 1 இருக்கு...........
அதாம்பா கவித எழுதறது!
//ச்
மாப்பு எனக்கு வச்சிட்டிங்களே ஆப்பு//
இருங்க நானே வந்து அதை ஆட்டி அசைத்து எடுத்து.............. ட்ட்டப்ப்ப்ப்ப்ப்ப்....!!!
சங்காண்ணன் சரியா சொல்லியிருக்கீங்க..
கொஞ்ச நாளா கவிதைகள் மேல அப்படி ஒரு நமநமப்பு... அதுதான் இப்படி..!
பாருங்களேன்... யாத்ரா-ங்கிற ஒரு கவிஞர் வலைபதிவிலயும் போயி பிறாண்டி விட்டுட்டு வந்திருக்கு இந்த நமநமப்பு...! அவரும் அதையை தனியா ஒரு இடுகை போட்டு கலக்கிட்டு இருக்காரு!!!
ம்ம்.. சனிப்பெயர்ச்சிங்கிறது சரியாத்தான் இருக்கும் போல!
ஸோ பேட்.. ஸோ ஸேட்... ஸோ மேட்!!!
முதல்ல பத்தி பிரிச்சு பின்னூ போடற பழக்கத்தை விடணுங்ணா!! என்ன சொல்றீய?
தம்பிரி சம்முகம்...
ஆளையே காணோமே?? நலமா?
//ரொம்ப கார சாரமா போகும் போல் இருக்கு.......//
ஆமாமா... சைட் டிஷ் ரேஞ்சுக்குத்தானே இருக்கு நாம போடற பஜ்ஜீகள்!!
//இப்போதைக்கு எஸ் ஆகிகுறேன்.........//
இது பெஸ்டு!!
அன்பு விஜய்,
//அப்பப்ப இப்படி கலாய்ங்க
நல்லாருக்கு
//
ஆமாமா.. எனக்குத்தான் அவ்வ்வ்வுன்னு இருக்கு!!
நன்றி விஜய்!
சுவாரசியமான ஆள் போலிருக்கு.... க.சீ பதிவில் உங்கள் பின் ஊட்டுகளுக்கு இரசிகன் நான்...இஃகிஃகி!
பத்தி
பிரிக்காமல்
வார்த்தை
பிரித்து
கவியூட்டம்
ஆக்கிடலாமா?!!
ஹிஹி!!!
//அனிதாவின் காதல் பதிவு தொடர்பாக//
மாப்பு நான் எழுதுனதுல இவ்வளவு உள்ளர்த்தம் இருக்குன்னு உங்க பின்னூட்டத்த பார்த்துதான் தெரிஞ்சிகிட்டேன். என்ன அழகான விவாரணை.
இது புனைவுதான். அப்புறம் இன்னொரு விசயம் எனக்கு கல்யாணமாகி 9 வருசமாச்சு.
எங்கள் வந்தியத் தேவன் அண்ணாவை பீடி பிடிப்பவர் என்று சொன்ந்தட்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
jaga why u have not posted .Are you busy or stopped writing and saving us from reading you kadys
கவிதை பட்டறையில் இணைய விண்ணப்பித்துள்ளேன்.
தலைவரை காணவில்லை. காலடி தடங்கள் மட்டுமே உள்ளது.
ஹலோ என்ன ஆச்சு?!
உடனே ஒரு மொக்கையை வேண்டி விரும்பும்,
சங்கத் தலைவர் (Self Proclaimed)
காலடி ரசிகர் மன்றம்
மற்றும்
தீஅதிதீ ரசிகர்கள்
Post a Comment