Friday, January 15, 2010

ஒரு ஊர்சுற்றி மொழிபெயர்த்த கதை


கடல் விடுதி

ஃப்​ரெஞ்ச் மூலம்: ​வெ​ரோனிக் பான்ஸ்-பு​​ழோ (Veronique Pons-Pujol)

தமிழில்: ​ரோசாமகன்


பியரியும் ஸு​ஸேனும் அந்த வித்யாசமான அ​ழைப்பித​ழைப் பார்த்ததும் எப்படியும் ​போய்விடுவது என்று முடி​வெடுத்துவிட்டார்கள். அப்படி​யே அந்த ​வெள்ளிக்கிழ​மை இரவு அந்த நகரின் புதிதாக ஆரம்பிக்கப் பட்ட விடுதிக்குச் ​சென்றார்கள். கட​லை நி​னைவுறுத்தும் வ​கையில் கட்ட​மைக்கப்பட்டிருந்தது. விடுதியினுள் நு​ழைந்ததும் உ​டைமாற்றும் அ​றைக்கு அ​ழைத்துச் ​சென்றார் சிப்பந்தி.


"உங்க​ளை கடற்க​​ரைக்கு அ​ழைத்துச் ​செல்ல விரும்புகி​றேன். உங்கள் அளவுக்கான உ​டைகள் ​தேர்ந்து எடுத்திருக்கிறேன்."


பியரி சட்​டை கால்சராய் அணிந்து ​கொண்டான். உபரியாய் த​லைக்கு ஒரு ​தொப்பியும். ஸுஸன் பருத்தியாலான சட்​​டை, முக்கால் அளவிலான கால்சராய் மற்றும் ​தொப்பி சகிதம் ​வெளிவந்தாள்.


'உனக்கு பொருத்தமான ஆ​டைகள்தான் ஸுஸன்'


'பியரி, உண்​மையி​ல் இது ஒரு புது அனுபவமாக இருக்கு​மென்று நம்புகி​றேன்'


இருவரும் கடற்க​ரை என்று ​சொல்லப்பட்ட இடத்​தை அ​டைந்த ​போது ஆச்சரியத்தில் வாய்பிளந்தார்கள். அங்​கே ஒரு அலையடிக்கும் கடல் நிறுவப்பட்டிருந்தது. சிலுசிலு​வென்று காற்று. நிலா. அங்கங்​கே கடல்மண்ணில் ​ஜோடிகள் ​இருக்கைகளில் அமர்ந்து உணவருந்திக் ​கொண்டிருந்தார்கள். நீச்சலுடை அணிந்த ​பெண்கள் திரிந்து ​கொண்டிருந்தார்கள்.


இருவரும் ஒரு ​இருக்​கையில் அமர்ந்து ​கொண்டார்கள். சாப்பிட ஏதாவது அழைக்கலாம் என்றவாறு பணியாள​ரைத் ​தேடும் ​போது அவர்கள் எதிரில் வந்து நின்றாள் ஒரு அழகிய இளம் ​பெண்.


'உங்களுக்கு உதவலாமா? நான் பணிப்​பெண்'


'தயவு​செய்து. சாப்பிட என்ன கி​டைக்கும் இங்கு?' என்றான் பியரி.


'சார், நீங்கள் இந்த அழகிய கடல்விடுதியின் ​மெனு கார்​டை பார்க்கலா​மே?'


'ஆமா ​மெனுவிலிருந்து பிடித்த​தை ​தேர்வு ​செய்துவிடு​வோம். ​மெனு கார்டு ​கொடுங்கள்' என்றாள் ஸு​ஸன்.


அடுத்தவிநாடி, அந்த அழகிய பணிப்​பெண் தன் ​மேற்சட்​டை​யைக் கழட்ட ஆரம்பித்தாள். இவர்கள் இருவரும் திடுக்கிட்டு அதிர்ந்து முடிவதற்குள். ​மேல்சட்​டையின் நான்கு ​பொத்தான்கள் கழட்டப் பட்டிருந்தன. கழுத்துக் கீழேயிருந்து​ நெஞ்சு வ​ரைக்கும் ஏ​தோ பச்​சைக்குத்தியிருப்பது ​தெரிந்தது.


'சார், இதுதான் எங்க விடுதியின் ​பேமஸ் ஸ்டார்டர் ஐட்டம்ஸ்..' என்று தன் ​​​நெஞ்சுப் பகுதி​யை சுட்டிக்காட்டினாள்.


இருவரும் உற்றுப்பார்த்த ​போதுதான் ​நெஞ்சில் பச்​சைகுத்தியிருப்பது உணவு வ​கைகளின் ​பெயர் என்று புரிந்தது. இந்த ​​செயற்​கைக் கடல் ​வெளி, கடற்க​ரை ​போன்றவற்​றோடு ​பெண் உடம்பில் எழுதப்பட்டிருக்கும் ​மெனு கார்ட் ​போன்றவைகள் தந்த வியப்பில் பியரியும் ஸு​ஸேனும் புது​மையான அனுபவத்​தை ​பெற்றுக் ​கொண்டிருப்பதாக நம்பத் துவங்கினார்கள்.


ஸு​​ஸேன் ​பெருவியப்பான குரலில்,


'வாவ், இதுதான் விடுதியின் ​மெனு கார்டா? ​கொஞ்சம் அதிர்ச்சியா இருந்தாலும் வித்தியாசமா இருக்கு' என்றாள்


'இருக்கிற ​மெனுக்க​ளை எப்படி மாத்துவீங்க? அதாவது பச்​சை குத்தியிருக்கிற ​மெனுக்க​ளை எப்படி அழிப்பீங்க?' என்றான் பியரி.


இருவ​ரையும் பார்த்து புன்​ன​கைத்துக் ​கொண்​​டே,


'சார் இது ​செயற்​கை பச்​சை. அழித்து எழுதிவிடலாம். வருகிற விருந்தாளிகளுக்கு கடற்க​ரைக்கு உண்டான சூழ​லை ஏற்படுத்தித் தரணுங்கிறதுக்காகதான் இந்த ஏற்பாடு. ஆர்டர் ​செய்யறீங்களா?'


ஸ்டார்டராக ஒரு ஒயி​னையும் சாலத்​தையும் ​தேர்வு ​செய்து விட்டு


'மெயின் டிஷ் என்​னென்ன இருக்கு?' என்று ஆவல் ​பொங்க ​கேட்டான் பியரி.


புன்ன​கை மாறாமல் தன் சட்​டையில் க​டைசி ​பொத்தான்க​ளை விடுவித்து ​மொத்த சட்​டை​யையும் கழட்டி நின்றாள். மார்பிலிருந்து இடுப்​பை வரை மூடிய இருந்த துணிப்பகுதி தவிர்த்து மற்ற பக்கங்களில் பரவியிருந்தது பச்சையாக ​மெனு கார்ட். பியரி கூர்ந்து ஒவ்​வொரு மெனு ஐட்டங்களாக படிக்க ஆரம்பித்தான்.


'அந்த வலது ​நெஞ்சில இரண்டாவதா இருக்கிற என்ன?' என்று உற்றுப் பார்த்து ​கேட்டான்.


'இ​தோ ​மெனு​வை பக்கம் ​கொண்டு வருகி​றேன்' என்று ​மெனுப் ​பெண் பியரி பக்கம் ​சென்றாள்.


பியரி வருடக் க​டைசியன்று கணக்குப் புத்தகத்​தை ஆராயும் வங்கி ஊழியன் ​போல ​மெனு​வை உற்றுப் படித்துக் ​கொண்டிருந்தான். ஸு​ஸேன் பியரி​யை பார்த்துக் ​கொண்டிருந்தாள்.


'வேறு என்ன​ ஐட்டங்கள் எல்லாம் வச்சிருக்கீங்க?' பியரி என்று அவளிடம் ​கேட்டான்.


'இன்னும் நி​​றைய இருக்கு ஸார். அ​தைப் பார்ப்பதற்கு முன் நீங்க இப்ப பார்த்த ஐட்டங்களில் இருந்து ஏதாவது ​தேர்வு ​செய்யலா​மே?'


'ஓ! இதுதான் விதிமு​றையா? சரி'

என்றவனாய் அவசரமாக இரு உணவுக​ளைத் ​தேர்வு ​செய்தான். பிறகுதான் ஸு​ஸே​னைக் ​கேட்கவில்​லை​யே என்று ​தோன்றியது.


'ஸுஸன்.. நான் ​தேர்ந்​தெடுத்த ஸ்​மோக்டு ஸாமன், டக் மக்​ரேவும் சரிதா​னே?' என்று ஸு​ஸேனிடம் ​கேட்டான்


'ம், உன் ​தேர்வு பிரமாதம்' என்றவாறு (​செயற்​கை) கடல் பக்கம் திரும்பிக் ​கொண்டாள்.


'தாங்க் யூ ஸு​​ஸேன், நான் ​மேற்​கொண்டு ​வேறு என்ன ஆர்டர் ​செய்யலாம் என்று பார்க்கி​றேன்'


'வேறு ஐட்டங்க​ளை பார்க்க முடியுமா?' என்று பணிப்​பெண்ணிடம் ​கேட்டான் பியரி.


எடுத்திருந்த ஆர்டர்க​ளை ​​செய்தியாக அனுப்பிவிட்டு, ​நளினமாக தன் ​மேலாடை​யை கழட்ட ஆரம்பித்தாள். இப்​போது ​கொடுத்திருக்கும் ஆர்ட​ரே சில நூறு ஃப்ராங்குகள் பிடித்திருக்கும் என்று நம்பினாள் ஸு​ஸேன். ​பியரி இன்று இரவு உணவுக்கு மட்டும் ஆயிரம் ஃபிராங்குகள் ​செலவழிக்க தயாராக இருப்பான் என்று அவளுக்குத் ​தோன்றியது.


பணிப்​பெண்,


'சார், இந்த உணவுகள் இன்னும் 10 நிமிடங்களில் நா​னே எடுத்து வந்துவிடுகிறேன்' என்றவளாய் அங்கிருந்து அகன்றாள்.


'பியரி, உனக்கு ஐரீ​னை நி​னைவுக்கு வருகிறதா' என்றாள் ஸு​ஸேன்.


'என்ன?'


'அதாவது அல்ஜீரியாவுக்கு ​சென்றா​ளே உன் தங்​கை ஐரீன்'


'நி​னைவிருக்கு. அவளுக்கு அல்ஜீரியாவுக்கு ​செல்லவில்​லை. ஓடிப்​போனாள் என்ப​​தே உண்​மை. ஏன் இப்ப ​கேட்கி​றே?'


'ஒருமு​றை அவள் முகத்​தை நன்றாக ஞாபகப்படுத்திக் ​கொள்​ளேன்'


'எதுக்காம்?'


'இந்த ஆர்டர் எடுத்த பணிப்​பெண் முகத்​தைப் பார்த்தால் ஐரீன் முக ஜாடை ​தெரியல்​லே? ஐரீனுக்கு ஒரு பொண்ணு இருந்தா இவள் வயது இருக்கும்தானே?'


'.... ச்சீசீ.. என்ன உளர்​றே?'

'தோன்றியது. அதான் ​சொன்​னேன். நீ இனி அ​தைப் பத்தி ​யோசிக்கா​தே. மறந்திட்டு நிம்மதியா சாப்பிடு'


பணிப்​பெண் உணவுக​ளோடு வந்துவிட்டாள். ​மே​​​ஜையில் பரிமாறினாள்.


'சார், ​மேற்​கொண்டு ஆர்டர் ​​செய்வதா ​​​சொன்னீங்க​ளே?'


​ஒயின் குடித்துக் ​கொண்டிருந்த கிளா​​ஸை கீ​ழே ​வைத்துவிட்டு.


'இல்​லை. இது​வே ​போதும். நீ ​போகலாம்'


என்றவனாய் ​செயற்​கைக் கட​லை ​வெறிக்க ஆரம்பித்தான் பியரி.

g

பி.கு.:

இதன் ஃப்​ரெஞ்ச் மூலக்க​தை எழுத்தாளினி ​வெரொனிக்கும் ​ரோசாமகனும் ​​ஸைபர்​வெளி நண்பர்களாக இருந்தார்கள். ஏதோ ஒரு இலக்கிய சம்பந்தமான விவாதத்தில் பிய்த்துக் ​கொண்டார்கள். இந்த ​மொழி​பெயர்ப்​பை எனக்கு ​மெயிலிவிட்டு ​ரோசாமகன் தன் ​சொகுசான ஐடி ​வே​லை​யை உதறிவிட்டு, ஒரு ​தொ​லைக்காட்சியில் மர்மங்க​ளை தேடித் திரியும் (அமானுடத்​தை ​தேடி... நிகழ்ச்சி சரியாக இரவு 11 மணிக்கு, ஸ்​கை​லைட்​ ச்சானலில் ஒளிப்பரப்பாகு​மே அஃ​தே!) பு​ரோகிராமின் ​சீப்-அஸிஸ்​டெண்டாக ​வே​லை பார்த்து வருகி​றான். குக்கிராமத்து ​பேய்க​ள், குகைக்குள் வாழும் ம​லைப்​பெண்கள், நான்கு கண்ணுள்ள நாய், நீர் (H2O) மட்டும் குடித்து வாழும் சாமியார் ​போன்ற அமானுஷ்யங்க​ளை ​தேடி ஊர்ஊராகச் சுற்றிக் ​கொண்டிருக்கிறான்.


அடுத்ததாக மணக்கும் விடுதி என்று ஒரு க​தை ​வைத்திருப்பதாக ​சொல்கிறான். அதிசயமாய் மணமாய் விளங்கும் ஒரு உணவு விடுதியில் கூட்டம் அ​​லை​மோதுவதாகவும், மற்ற ​போட்டி விடுதிகள் அதன் மணக்கும் ரகசியத்​தை கண்டுபிடிக்க முயல்வதாகவும் ​போகிறது க​தை. அ​தையும் 'காலடி'யில் ​வெளியிடு என்று என் கா​தைக் கடித்துக் ​கொண்டிருக்கிறான் ​ரோசாமகன்.

28 comments:

இரும்புத்திரை said...

anna kathai super

ungalai valaicharathil arimukam seithu ullen

சங்கர் said...

ஒரு மாசமா, இப்படி விடுதி விடுதியா போய், மெனு கார்ட் படிச்சதனால தான் பதிவெழுதலையா :))

நந்தாகுமாரன் said...

இம்மாதிரிப் புனைவுகளின் கற்பனை சாத்தியத்தை வீணடித்திருக்கிறீர்கள் ... எனினும் மொக்கைகளை விட்டு இப்படி எழுத ஆரம்பித்திருப்பதே எனக்கு மிகப் பெரிய ஆறுதல் ... தொடர்ந்து எழுதுங்கள் .. மாறுதலும் வரும் :)

ஹேமா said...

ஜே....பொங்கல் சாப்பிட்ட்ருப்பீங்க.
மாட்டுப் பொங்கலும் பொங்குவீங்க.
பரவால்ல பிந்தினாலும் பொங்கல் பொங்கல்தான்.இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

கதை இப்படியும் இருக்கலாம் என்று சொல்லி முடித்தாலும் ஏன் என்கிற கேள்விதான் எனக்குள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நின்ன ஸ்டோரி தும்ப சென்னாக்கீது ...
என்ன புரியலியா .. கன்னடபாஷையில் நல்லாருக்கு என்று சொன்னேன் .

படிக்கும்போதே அருமையாக உள்ளது .

சிநேகிதன் அக்பர் said...

நன்று.

இனிய பொங்கல் வாழ்த்துகள் மாம்ஸ்.

நேசமித்ரன் said...

முதலில் திருநாள் வாழ்த்துகள்
தலைவரே

கதை நல்லா இருக்கு

உட்கிடையுள்ள கதை பாதரசம் மிதக்கும் ஆழ்கடல் மௌனத்தின்
மெல்லிய சலனங்களுடைய மொழியில் பேசுகிறது
அதன் அடர்வு அல்லது அழுத்தம் அவரவர் பயணத்தை சார்ந்தது

ஓ’ ஹென்றியை எதிர்பார்த்து
ஒவ்வொரு கதையையும் வாசிப்பதை நான் விட்டு விட்டேன் எப்பவோ
:)

அப்பாதுரை said...

sweet story

Nathanjagk said...

அன்பு அரவிந்த்,
ரொம்ப நன்றி! அங்கேயே பின்னூ ​போட்டுள்ளேன்.

Nathanjagk said...

வாங்க சங்கர்,
ஆர்வத்தில் எக்ஸெல் ஆட்டோமேஷன் பிராஜெக்ட் (freelancerஆக) எடுத்து ​செஞ்சுக்கிட்டு வர்றேன். அதுதான் ​கொஞ்சம் பிஸி. முடித்து கொடுக்க ​வேண்டிய கடைசி கட்டம். விற்றதும் எக்ஸெல்தான்! :-)

Nathanjagk said...

அன்பு நந்தா,
ரொம்ப நாளைக்கு முன்னாடி அடிச்ச ஆணி.. எப்படி பிடுங்கறதுன்னு ​தெரியாம பிடுங்கியதுதான் இது. இதுமாதிரி முடிக்க ​தெரியாத கதைகள்னு நிறைய இருக்கு.

Nathanjagk said...

வாங்க ஹேமா,
பொங்கல் நல்வாழ்த்துகள்.
பதிவு எழுதி ரொம்ப நாளாச்சேன்னு ​போட்டது. ​ரொம்ப யோசிக்காதீங்க. நன்றி!

Nathanjagk said...

அன்பு ஸ்டார்ஜன்,
ஹவுதா? தன்யவாதா!
கன்னடம் பிச்சு உதறறீங்களே?
பன்மொழிப் பண்டிதர்!!

Nathanjagk said...

அக்பர் மாப்ஸ்,
இனிய ​பொங்கல் வாழ்த்துகள்!

Nathanjagk said...

அன்பு ​நேசா,
தமிழர் திருநாள் வாழ்த்துகள்!
கதை வாசிக்காவிட்டால் என்ன, எப்படியும் கதை நம்மை வந்து அடைந்தே தீரும். வாய்மொழியாகவோ படமாகவோ அல்லது ஏதாவது ஒரு நிகழ் காட்சியாகவோ.
கதையிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது ​நேசா! :)

ஷங்கி said...

மொழிபெயர்ப்பு செம குஜாலாகீது மாமே! ரோசாமகனைத் திரும்பி வெளிக் கொண்டு வந்திட்டீங்களோ?! அப்ப இன்னும் நிறையப் பி.ந. பார்க்கலாம்!
வாழ்க வளர்க!

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// ஜெகநாதன் said...

அன்பு ஸ்டார்ஜன்,
ஹவுதா? தன்யவாதா!
கன்னடம் பிச்சு உதறறீங்களே?
பன்மொழிப் பண்டிதர்!! ///

அது யாரு நீங்க தானே ....

Nathanjagk said...

சங்காண்ணே,

ரோசாமகன் கதையை வேறமாதிரி ​சொல்லியிருந்தான். அது முடியும் ​போது பயங்கர​கெட்டவார்த்தையாக இருந்ததால் நான்​கொஞ்சம் எடிட்ட ​வேண்டியாதாப் போச்சு!

Nathanjagk said...

ஸ்டார்ஜன்,
நாம எல்லாம் bunமொழிப் பண்டிதர்களாச்சே!
சிலசமயம் funமொழி!! ஹிஹி!!!

Unknown said...

Jag,
I never mind the way you've propagated the story. Not even the title.
But I must question on you for describing my profession in ridiculous manner. It's sarcastic.

Unknown said...

Jag..
மொபைலில் நீ பேசியது இதமாக இருக்கிறது. பளுவேலை இப்போ. நீ குறிப்பிடுவது​போல கிட்டத்தட்ட பிழைப்புக நான்கு கண் நாய்களைத் தேடியலைவது போலிருக்கிறது. இணையாக சிங்கத்துக்கு பல் விளக்கிவிட்டுக்​கொண்டும் இருக்கிறேன். அது என் மேலாளர்தான்.

Nathanjagk said...

வாங்க ரோசாமகன்,
போனில் பேசும்​போது ஏகப்பட்ட இடையூறுகள். அதுதான் முழுமையாகப் ​பேசமுடியவில்லை. குறைவான சிக்னல், சில்வண்டு ரீங்காரம், அருவி ​கொட்டும் சப்தம் இவற்றுக்கிடையில் என் குரலை பதிவு ​செய்வது அசாத்தியமாக இருந்தது.

உங்க 4கண் நாய்​வேட்டை நல்லபடியா நடக்கட்டும். இருந்தும் கதையை மாற்றி மறுபதிவு செய்வது ​தேவையற்றது. நல்லாவும் இருக்காது.
அதற்கு பதிலா நீங்க வேறு ஏதாவது படைப்பை அனுப்பலாம்.
என் பங்கு அதை காலடிக்கு அனுப்புவது மட்டுமே. எடிட்டிங் நீங்க விரும்பினால் மட்டுமே.

Unknown said...

ஜேக்,

ஒரு குகைமனிதனை தேடி பிரயாணித்துக் கொண்டிருக்கிறேன். இப்போது காடம்பரி மலைச்சாரலில் தங்கல். மொபைல்கள் உதவா நிலவெளி. அதிசயமாக எனது ஃபோட்டான் பொருத்தப்பட்ட லாப்டாப் உதவுவது மகிழ்ச்சியளிக்கிறது. குகையிருளைக் கிழித்து வரும் கண்சிமிட்டலை பதிவு செய்யவே இந்த தேடல்.

கதையை நீ மாற்றி எழுதாததும் சந்தோஷமே. நான் (வெரோனிக்) சொல்ல நினைத்தது ஒரு மெல்லிய அதிர்வலை. இங்கு பதிவாகியிருப்பது பினாத்தலாக இருக்கிறது. பிட்ஸாவை சாம்பாரில் ஊறவிட்டிருக்கிறாய். நான் எழுதிய கதை இதுதான்:

Unknown said...

கதை சொல்வது:

பச்சைக் குத்திக் கொண்ட பெண். ஆர்டர் எடுக்கிறாள். அவள் உடலில் பச்சைக்குத்தப்பட்டிருக்கும் மெனுக்கள் எல்லாம் இதுவரைக் கேள்விப்படாதது. புதிய உணவுகள் என்ற நினைப்பில் பியரியும் ஸுஸேனும் மாறிமாறி ஆர்டர் செய்கிறார்கள். கடைசியில் அவள் டூ பீஸ் பிகினியாய் நிற்கிறாள்.

10 நிமிடங்களில் உணவுகள் வருகின்றன அந்த கடற்கரை விடுதியின் மேசைக்கு.
அப்படியே பில்லும் 765 ஃப்ராங்குகள்! பில் தொகையை கொடுத்துவிட்டு சாப்பிடுகிறார்கள் தம்பதியினர்.
அவளும் (பணிப்பெண்) உடையுடுத்தி விடைபெற்றுச் செல்கிறாள்.

சாப்பிடும் உணவுகள் எல்லாம் சாதாரண ரகமாக இருக்க, உணவின் விலை கொடுத்த உளைச்சலில் பியரி (கணவன்) மட்டும் பாதி உணவில் எழுந்து அங்கு நின்றுகொண்டிருந்த இன்னொரு விடுதி பணியாளரை விசாரிக்கிறார்.

பணியாளர் அந்தமாதிரி உடலில் மெனுவை பச்சைக்குத்திக் கொண்டு ஆர்டர் எடுக்கும் பெண்கள் யாரும் விடுதியில் இல்லை என்று உறுதி செய்கிறார்.
பெண்ணை அடையாளம் காட்ட முடியுமா என்றதுக்கு பியரி அவள் உடம்பிலில் பச்சைக்குத்தியிருந்த வித்தியாசமான மெனுக்களைச் சொல்கிறான்.
கேட்ட பணியாளர், இந்த மாதிரியான உணவு வகைகள் உலகத்தில் எந்த மூலையிலும் கிடையவே கிடையாது. முக்கியமாக இந்த விடுதியில். உங்களை அவள் ஏமாற்றி இருக்கிறாள் (760 ப்ராங்குகள்) என்கிறார்.

முகம் தொங்கிப் போகிறது பியரி. தூரத்தில் ஸுஸேன் எதைப் பற்றியும் கவலைபடாது உணவை கவனமாக உண்டு கொண்டிருக்கிறாள்.
பணியாளர் பியரியின் காதில் குனிந்து
"ஆனால் ஒன்று ஸார். அவள் உடம்பில் பச்சைக் குத்தியிருந்தது எல்லாம் ஸ்பானிஷ் மொழியின் பிரெஞ்ச் எழுத்து வடிவம் என்று தெரிகிறது. அவ்வளவு நல்ல வார்த்தைகள் என்று சொல்ல முடியாது"

பியரி: "க்லா டியன் மோனோ - என்று ஒரு மெனு ஐட்டம் படித்த ஞாபம்"

பணி: "அதற்கு அர்த்தம் தெரிந்தால் மேற்கொண்டு நீங்கள் அதை மெனு ஐட்டம் என்று சொல்ல மாட்டீர்கள்"

பியரி: "ம்க்கும்.. என்ன அர்த்தம்?"

பணி: "குரங்கின் புட்டத்தை விட அசிங்கமானது - என்று பொருள் ஸார்"

தூரத்தில் இருந்து ஸுஸேன் அழைப்பது கேட்கிறது:

"அன்பு பியரி, நான் தேர்ந்தெடுத்த இந்த க்லா டியன் மோனோ ரொம்ப அருமையாயிருக்கிறது. சீக்கிரம் வா. இல்லாவிட்டால் நானே எல்லாத்தையும் காலி பண்ணிவிடுவேன்"

Unknown said...

ஜேக்,
இப்ப​சொல்லு இதை ​வெளியிடுவதில் என்ன தயக்கம்?

Nathanjagk said...

ரோசாமகன்,

நான் எடிட் ​செய்த கதையை உங்கள் பரிசீலனைக்கு அனுப்பாமல் 'காலடி'யில்​வெளியிட்டதே நான் செய்த தவறு. அதற்கு காரணம் எவ்வளவு முயன்றும் அப்போது உங்களைத் தொடர்பு கொள்ள முடியாததுதான்.

அதுதான் வெளியிட மறுத்த விஷயத்தை விலாவாரியாக பின்னூட்டமாக்கி விட்டீர்களே (வந்த பின்னூக்களை நீக்குவதில்லை என்பது 'காலடி'யின் பாலிஸி). இனி இதை​வேறு தனியாக இடுகையாக்க ​வேண்டுமா என்ன?

விஷயத்தை இத்தோடு முடித்துக்​கொள்ள வேண்டுகிறேன். செல் தொடர்பு எல்லைக்குள் வந்தால்​என் மொபைலுக்கு அழைக்கவும்.

நன்றி.

ஷங்கி said...

ஹ்ம்! ரோசாமகன் மற்றும் rosamagan உரையாடல் நல்லாச் சுவாரசியமாப் போகுது. ஒரிஜினல் கதை இன்னும் நல்ல பி.ந.வா இருக்கும்போல?!

Nathanjagk said...

சங்காண்ணா,
பி.ந-ன்னு நீங்க சொல்றது பின்நவீனத்துவம்தான்னு நினைக்கிறேன் :-)
ரோசாமகனை அப்பப்ப ​கொண்டுவருவோம்... பயலுக்கு டவர்தான் (சிக்னல் டவர்) பிரச்சினை.
உற்சாகப்படுத்தியதுக்கு நன்றிங்ணா!