Tuesday, January 19, 2010

வெறுமையின் பாரம்


வ​ரைந்து முடித்த பிற​கே

ஓவியப்​பெண்ணின் சு​மைப்பாரம் உணர்ந்தவனாய்

ஓவியத்தில் இருப்பவளிடம் உ​​ரையாடி​னேன்.

உனக்குப் ​பெரிய பாரம் நீர் தளும்பும் குடங்கள் என்​றேன்

இல்​லை ​வெறுங்குடந்தான் என்றாளவள்

புரியாது தி​​கைத்​தேன்.

குடம் சுமக்கும் த​லைத் திருப்பிச் ​சொன்னாள்:

​வெறுங்குடந்தான் மிகப்பாரம் - வீடு திரும்பு​கையில்.

34 comments:

Anonymous said...

படம்- கவிதை ரெண்டும் A 1.

ஷங்கி said...

ஆகா, ஆகா!, தம்பி கிளம்பிட்டாரய்யா! கிளம்பிட்டாரு!

Raju said...

அந்த படம் அருமை தல...!
ஓவியரே நின் கொற்றம் வாழ்க.

ஈரோடு கதிர் said...

கவிதை....மனதை அழுத்தும் பாரம்

sathishsangkavi.blogspot.com said...

கவிதையும், படமும் அழகு...

sathishsangkavi.blogspot.com said...

கவிதையும், படமும் அழகு...

நந்தாகுமாரன் said...

நல்லா இருக்கு ஜெகன்

பாலா said...

adadaa arumai anne arumai

periyathoru valiyum

Starjan (ஸ்டார்ஜன்) said...

தும்ப சென்னாக்கீது ...

சுஸ்வா சுவாகதா ...

தப்பா இருந்தாலும் மார்க் போடனும் ... என்ன சரியா !!

கலா said...

\\\உனக்குப் பெரிய பாரம்

நீர் தளும்பும்
குடங்கள் என்றேன்\\\\

நீர்__ நீ

தளும்பும்__ மதமதப்பாக
ஒரு பாடல் ஞாபகம் வருகிறது
{நீ தளதளவெனத் ததும்பி நிற்கும் பருவமடா.....}

குடம்___திரட்சி
இதற்கு விளக்கம் தேவையில்லையென
நினைக்கிறேன்....




\\\\இல்லை வெறுங்குடந்தான் என்றாளவள்\\\




புரியாது திகைத்தேன்.\\\

கலா said...

ஜெகன் அழகான ஓவியம்
நீங்கள் வரைந்ததென நினைக்கின்றேன்!!
எனக்கு வரையத் தெரியாது இரசிக்க
மட்டும் தெரியும்.


வறுமையிலும்,வெறுமையிலும்
வற்றாமல் தளும்பி நிற்கின்றது உங்கள்
எண்ண...வரிகள்.நன்றி

டக்கால்டி said...

Super Boss...
Especially the lines...

S.A. நவாஸுதீன் said...

ஓவியம் கவிதையை விட மேலோங்கி நிற்கிறது நண்பா.

///வெறுங்குடந்தான் மிகப்பாரம் - வீடு திரும்பு​கையில்.///

ஒரு வெற்றிடம், ஒரு இனம் புரியாத வலியைத் தருகிறது இந்த வரிகள்.

சிநேகிதன் அக்பர் said...

மாம்ஸ்.

ஓவியமே கவிதையாகத்தான் இருக்கு.

தரமான கவிதை.

( உங்க ஓவியத்திறமைக்கு ஒரு சல்யூட் )

Beski said...

படமும் அருமை.

ஹேமா said...

கவிதையும் படமும் என் மனதைப் பாரமாக்கிவிட்டுத் தான் இலேசாக இருகிறது.

ஓவியத்திற்குப் பிரத்தியேகமான பாராட்டுக்கள் ஜே.

அகல்விளக்கு said...

அருமை நண்பரே...

பத்மா said...

bale bale

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

வீடுத்திரும்பும் வெறுங்குடம்,
மனதை பாரமாக்கியது...
விழிகளை ஈரமாக்கியது.

Welcome back Jagan!

adhiran said...

இன்றுதான் உங்கள் ப்ளாக் படிக்கிறேன் ஜெகன். நல்ல கவிதை. ஓவியமும் அவ்வாறே. அதிகம் எழுதுங்கள். நன்றி. எப்படி இருக்கிறது நாட்கள்?

க. சீ. சிவக்குமார் said...

ங்கொய்யால... இது ரெம்ப நல்ல ஏற்பாடா இருக்கேப்பா!

பா.ராஜாராம் said...

வாவ்!

கவிதை,ஓவியம்,கவிதை!

பா.ராஜாராம் said...

வாவ்!

ஓவியம்,கவிதை,ஓவியம்!

Malar Gandhi said...

Hi Jagan,

Thats very heartbreaking picture and poem...did you draw that??? Good job for sure:)

Please check out 'Kitchen Mishaps Event Roundup' at my blog.

http://www.kitchentantra.com/2010/01/kitchen-mishaps-event-round-up.html

I appreciate, your comforting words to the participants. I believe, it will greatly boost their energy...who daringly shared their cooking disasters.

Thank you,
Malar Gandhi
www.kitchentantra.com

வினோத் கெளதம் said...

படம் நீங்க வரைந்ததா..அட்டகாசம்..இன்னும் என்னென்ன விஷயங்கள் இப்படி இருக்கு இப்பயே சொல்லிடுங்க..
கவிதை இன்னும் ம்ம்ம்..

துபாய் ராஜா said...

ஓவியமும், கவிதையும் அருமை.

வாழ்த்துக்கள்.

விஜய் said...

ஓவியத்தூரிகை சிந்தும் நீராய் கண்ணீர்

வாழ்த்துக்கள்

விஜய்

Nathanjagk said...

அனைத்து நண்பர்களுக்கும் ​சொந்தக்காரங்களுக்கும் சொல்லிக்க ஆசைப்படுவது:

படம் நானே வரைந்தது.

பயன்படுத்திய பொருட்கள்:
A3 Cartridge paper
Parker Pen
ஜெராக்ஸ் MUDல் ஸ்கேன் செய்து பதிவேற்றியது.

Nathanjagk said...

@சின்ன அம்மிணி
நன்றி சின்ன அம்மிணி

@ஷங்கி said...
//ஆகா, ஆகா!, தம்பி கிளம்பிட்டாரய்யா! கிளம்பிட்டாரு!//
ஆனா இது ஸெல்ப்-ஸ்டார்ட் இல்லே! நீங்களும் ஒரு காரணம் - அதற்கு நன்றிங்ணா!

@ ♠ ராஜு ♠
நன்றிகள் ராஜு

@ ஈரோடு கதிர்
கதிரின் வரவால் பிரகாசமாகிறது மனது. நன்றி!

@ Sangkavi
நன்றி சங்கவி

@ Nundhaa
நன்றி நண்பா! நல்லாயிருப்பது படமா பாட்டா? நந்தாவும் ஒரு ஓவியர் என்பதால் கேட்கிறேன்.

@ பாலா
பாலா தம்பிக்கு ரொம்ப நன்றிகள்!

@ Starjan ( ஸ்டார்ஜன் ) said...
100/100 வாங்கி பாஸாயிட்டீங்க!

@ கலா
//தளும்பும்__ மதமதப்பாக
ஒரு பாடல் ஞாபகம் வருகிறது
{நீ தளதளவெனத் ததும்பி நிற்கும் பருவமடா.....}
குடம்___திரட்சி
இதற்கு விளக்கம் தேவையில்லையென
நினைக்கிறேன்....//
நீங்க குடத்தை வேறோரு கோணத்தில் தூக்கிக் கொண்டாற் போல் தோன்றுகிறது.
இருந்தும் ஒரு நல்ல பழைய பாடலை நினைவில் இறக்கி வைத்து விட்டீர்கள்.
மிக்க நன்றி கலா.

@ இங்கிலீஷ்காரன்
நன்றிகள்

@ S.A. நவாஸுதீன் said...
வாங்க நவாஸ்.. மிக்க நன்றி!

@ அக்பர்
நன்றி மாப்ள!

@ அதி பிரதாபன்
நன்றி மாப்ள!!

@ ஹேமா
நன்றி ஹேமா!

@ அகல்விளக்கு.. நன்றி!

@ padma.. நன்றி!

@ M.S.E.R.K.
மிக்க நன்றி நண்பா!
எழுதாமல் கிடந்த சமயங்களில் தனியாக மெயில் எழுதி ஊக்குவித்ததற்கு நன்றிகள்..!

@ adhiran
அன்பு ஆதிரன்.. அருமையா போகுது நாட்கள் என்று சொல்கிற தைரிய நிமிடத்தில் இக்கணம் இருக்கிறேன்.

@ க. சீ. சிவக்குமார்
//ங்கொய்யால... இது ரெம்ப நல்ல ஏற்பாடா இருக்கேப்பா!//
அண்ணா,
இப்படி கூட கல்லாக் கட்டலாம்!

@ பா.ராஜாராம்
அன்பு ராஜா... நன்றிகள்!

@ Malar
Firstly, my hearty thanks to you for publishing my entry in your blog. It's encouraging a lot.
Drawing my hobby. Cooking is the latest entry to my hobby list!
I appreciate other bloggers to visit http://www.kitchentantra.com/ and enjoy 'Kitchen Mishaps Event Roundup'. It's really very different.

@ வினோத்கெளதம், நான் வரைந்ததே அது. நன்றி!

@ துபாய் ராஜா. நன்றி!

@ விஜய். நன்றி விஜய்!

ஷங்கி said...

கவிதையைக் கொஞ்சம் டச்சப் செஞ்ச மாதிரி இருக்குது. இது இன்னும் சூப்பர்! யோவ்! சொந்தக்காரங்களுக்கு நீரு நல்லா படம் காட்ட மட்டும் இல்ல வரையவும் செய்வீருன்னு தெரியும்வே! விலாவாரியா விளக்கிட்டிருக்காரு! காலடியில, கவிதப் பயிற்சி மாதிரி ஓவியப் பயிற்சி வேற குடுக்கப் போறேரோ?!

நந்தாகுமாரன் said...

ஓவியம் தான் :) ஓவியப் பெண்ணுடனான உரையாடல் கவிதையில்லை - வெறுங்குடத்துடன் வீடு திரும்பு​பவள் என்று இந்த ஓவியத்திற்குத் தலைப்பிட்டால் அதுவே போதும் (அல்லது வெறுங்குடத்தை ஓவியத்திலேயே உணர்த்திவிடுங்கள்)

Nathanjagk said...

அன்பு நந்தா,
நன்றிகள்! நிச்சயம் அடுத்த முறை கவனமெடுக்கிறேன்.
வெறுங்குடத்தை இந்த ஓவியத்தில் உணர்த்துவது சாத்தியமான்னு தெரியலே. (ஒரு பேப்பரில் இருந்த ​போட்டோதான் படத்துக்கு reference)ஏதாவது ஓவிய யுக்தி இருந்தால் கூறவும்.

சத்ரியன் said...

//வெறுங்குடந்தான் மிகப்பாரம் - வீடு திரும்பு​கையில்.//

ஜெகன்,

ஓவியம் - கவிதையாக.

கவிதை - ஓவியமாக.

நானும் கொஞ்சம் திகைப்படைஞ்சுட்டேன் சாமி.

Nathanjagk said...

அன்பு சத்ரியன்,
வாழ்த்துக்கு நன்றிகள்!
ஹேமா மூலம் இந்த இடுகைக்கு புதிதாய் ஒரு வழித்தடம் திறந்திருப்பது அறிகிறேன்!