Friday, January 22, 2010

ராதிகாவின் கணவனாயிருத்தல் மற்றும் செத்துப்போன யூகலிப்டஸ் மணம்

ராதிகா​விற்கு முந்திய இவனது வாழ்க்​கையில் அடிக்கடி வரும் கனவொன்றில் கருநீல வானில் கணக்கற்ற சிகப்புப் பட்டங்கள் பறந்து ​கொண்டிருந்தன.

இரண்டாவது சந்திப்பி​லே​யே பட்டங்களில் ராதிகா முகம் ஒட்டப்பட்டுவிட்டது. கன​வை ​மொழிப்பெயர்க்கும் ​பொருட்டு கருநீல வானத்தை உற்றுப் பார்க்கும் சமயத்தில் இவனுக்குள் முழு​மையாய் இறங்கினாள் ராதிகா.


இறத்தல் நாடகத்தின் ஒத்தி​கையின்​​போது இவர்கள் திருமணம் ஆசிர்வதிக்கப் பட்டது. ​​​இனி​தே ஆரம்பித்தது இல்லறம். தேகங்களின் ​தேடுதல் ​வேட்டை ஆரம்பத்தில் இருந்த மு​னைப்பு ​கொஞ்சம் ​கொஞ்சமாக சுணங்கிவிட்டிருந்தது. ​​பூக்களின் வாசமாயிருந்த ராதிகாவின் ​தேகத்தில் மரப்ப​ட்​டையின் ​நெடி சுவாசித்தான். இவன் மூக்கிலிருந்து எப்​போதும் கருகல் ​நெடி வருகிறது என்கிறாள் ராதிகா. ஒருவ​ரை​யொருவர் உரித்துப் பார்க்கும்​போது அவன் முதுகைப் பிளந்து இவள் மீன் முள்​ளை எடுத்துப் ​போட்டாள். இவன் அவளில் ஊறும் பூரா​னை அருவருப்பாக பார்த்துக் ​கொண்டிருந்தான். முழுமையற்றதின் சி​தைவுகள் ஆரம்பத்தில் ​தெரிவதில்லை; நிர்மூலத்தில்தான் உறைக்கிறது.


ராதிகா திரும்பவும் காதலிக்க ஆரம்பித்தாள் - ​வே​றொருவ​னை.

இவனால் தாளமுடியவில்​லை. எதனால் என்ற ​கேள்விக்கு எ​தை அவிழ்த்துப் பார்த்தும் வி​டை மட்டும் கி​டைக்க​வேயில்​லை. நிச்சயமாகி விட்டது - Cuckold! ஸ்விட்ச் தட்டியதும் சுடர்விடும் விளக்குகள் ​போலாகிறது அவளின் பாவனைகள். ​ஒவ்வொரு ஸ்விட்ச்சுக்கும் ​வெவ்​வேறு சுடர்கள்.. உறங்கும் அவளை​யேப் பார்த்துக் ​கொண்டிருந்தான். பாவ​னையற்ற முக​மே ஒரு பாவனைதான் என்ற நம்பிக்கையை அன்று எய்தினான்.


து​ரோகத்தின் வாசம் நிரம்பிய படுக்​கைய​றையில் (படுக்​கைய​றைகளில்.. சிலசமயம்) சுழலும் மின்விசிறி​யை ​வெறித்துக் ​கொண்டிருக்கும்போது மின்விசிறியின் ​மையத்தில் ​தோன்றியது ஒரு ஸ்டிக்கர் ​பொட்டு. அப்​போது ​முடி​வெடுத்தான்: ராதிகா​வைக் ​கொ​லை ​செய்துவிடுவது என்று.


இந்த எண்ணம் உதித்த மறுகணம் துறுதுறுப்பு இவனிடம் குடி​யேறிக் ​கொண்டது. திட்டமிடுத​லே ​வெற்றிக்கு அடிகோலாகும் தத்துவத்திலிருந்து ஆர்ஸனிக்கின் ​​​​மெல்லிய விஷத்தனம் வரைக்கும் புத்தகங்க​​ளைத் ​தேடிப்படித்தான். ம​னைவி​யைக் ​கொன்றவர்கள் சரித்திரம் படித்தான். எந்த புத்தகத்​தையும் வாங்கவில்​லை (ஆதாரங்கள்). வீட்டுக் கம்ப்யூட்டரில் இந்த மாதிரியான விஷயங்க​ளைக் கூகிளிட மறுத்தான் (இ​தைத் தடயமாக்கி ஒரு ம.​கொ. கணவன் ​​​கைதாகியிருக்கிறான்)


ஒவ்​வொரு அடியும் பார்த்து பார்த்து ​வைக்க ஆரம்பித்தான். தன் மாறுதல்களை யாருக்கும் ​தெரியாது பதுக்கிக் ​கொண்ட சமயம் இவனுக்கு புதிதாக ஒரு கண் திறந்து ​கொண்டது.

உன்னில் வாசம் மாறி வீசுகிறது. இது உன் வசந்த காலமா என்று உறுதியாகத் ​தெரியாது. ஆனால் என் வசந்த காலம் இதனால் ஆரம்பமாகி விட்டது என்று அழகான ஆங்கிலத்தில் ராதிகா ​சொல்லி மகிழ்ந்த ​போது

, சிரித்தவா​றே ராதிகா​வை ஐ லவ் யூடா என்று அணைத்துக் ​கொண்டு அவள் முதுகுக்குப் பின்னால் கத்தி பாய்ச்சும் ஒத்தி​கை செய்து பார்த்து மகிழ்ந்தான்.

(இருத்தல் இருக்கிறது..)

செத்துப்​போன யூகலிப்ட்ஸ் மணம்


இடக்​கையற்ற அவனால்

தன் இடது நு​​ரையீர​லைக் குறி​வைத்துக்

கத்தி இறக்கி தற்​கொ​லை நாடகம்

​செய்ய மட்டும்தான் முடிந்தது.

பரிதாபமாய் அது இதயத்துக்கு

பக்கத்தில் விழுந்து

இப்​போது ​போஸ்ட் மர்டத்துக்கு

உள்​ளே ​போயிருக்கிறான்.

வெளிவந்த கிழிந்த உடலின்

​மையத்​தையல் மிக ​நேர்த்தியாக இருக்கிறது

ஈரமாய் துணி சுற்றப்பட்ட அவ​னைத்

​தொட்டுத் தூக்கி

​வேனில் ஏற்றிவிட்டவர்களில்

இவனும் இருந்தான்.

பிரேதத்தைப் பியானோவாக்கிக் ​கொண்டு

உறவுகள் இ​சைத்த துக்க சிம்பொனியிலிருந்து

அகன்று வந்த இவன்

தனி​யே நின்று தன்

இடது​கை​யை முகர்ந்தான்

யூகலிப்ட​ஸையும் மீறி அவன் மணந்தான்.

32 comments:

Unknown said...

வழக்கம் போலவே

ஆனாலுமிம்முறை இரண்டு

Raju said...

கொன்னுட்டண்ணே...!

அந்த பியானோ-சிம்பொனி சூப்பர்.

Unknown said...

நல்லா இருக்கு சார். மாயா யதார்த்தவாதம் கலந்துள்ளது.நடையும் நல்லா இருக்கு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

b o s s..............,

நந்தாகுமாரன் said...

அருமையான படைப்புகள் ... ரசித்தேன் ...

Nathanjagk said...

அன்பு நந்தா,
மிக்க நன்றி!
நந்தா​வை மனதில் ​வைத்துக் ​கொண்டே வரிக​ளை நகர்த்தி​னேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமை ஜெகா

ஹேமா said...

ஜே...நிறையத் தரம் வாசிச்சிட்டேன்.
மிக மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்த வார்ததைகளால் பின்னப்பட்ட கொலைக்கான அல்லது இறத்தலுக்கான ஒத்திகை.

நீங்கள் சொன்னதுபோல புதைக்கப்பட்ட சிம்பொனியின் குரல்.
இடக்கை அற்றவனின் பரிதாப மரணம்.என்றாலும் இடக்கையில் ஒட்டிக்கொண்ட யூகலிப்ட்ஸ் மணம்.
தனக்குள் மட்டும் இ​சைத்துக் ​கொள்கிறான்... சன்னமான ​டெஸிபல்களில்!

சிறுகதைக்கேற்றபடி கவிதை ஒற்றை றோஸ்க்கு எவகிறீன் செருகிய அழகு.

Beski said...

எண்டர் எங்கே?

சிநேகிதன் அக்பர் said...

மாம்ஸ் ஜெகா அருமை என்ற ஒற்றை வார்த்தையின் பின்னால் ஒழிந்து கொள்ள மனமில்லை.

சிலந்தி பின்னும் வலை போல மிக நேர்த்தியாக பின்னப்பட்ட எழுத்து நடை. இதை படித்தவுடன் ஏற்பட்ட மனநிலையை விவரிக்க இயலவில்லை. புதிய வாசிப்பனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி.

( அப்புறம் வழக்கமான கலகலப்பான உங்கள் பின்னுவை எந்த பதிவுகளிலும் பார்க்க முடியவில்லை. வேலைப்பளு அதிகம் என்று தெரியும் இருந்தாலும் இதைப்போல் இன்னும் நிறைய எழுதுங்கள்)

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

எந்த வகையில் சேர்ப்பது இத்தகைய சிந்தனைகளை என்று குழப்பமடைய வைக்கறது இந்தப் பதிவு.! ஒரு கோதிக் (Gothic) வகையைச் சார்ந்த படைப்பைப் போல் ஒரு வித அமானுஷிய உணர்வைத்தருகிறது. 'Exorcism of Emily Rose ' படத்தைப் பார்த்ததும் இப்படித்தான் உணர்ந்தேன்! என்னமோ போங்க ஜெகன், மனசே சரி இல்லை!

ஷங்கி said...

”இறத்தல் நாடகத்தின் ஒத்திகையின்​போது இவர்கள் திருமணம் ஆசிர்வதிக்கப் பட்டது” - பட்டங்கள் பறக்க ஆரம்பித்தன.

“ஒருவரையொருவர் உரித்துப் பார்க்கும்​போது அவன் முதுகைப் பிளந்து இவள் மீன் முள்ளை எடுத்துப் ​போட்டாள். இவன் அவளில் ஊறும் பூரானை அருவருப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்.” - முழுமையாக இறங்கினீர்கள்.

அப்புறம் சடசடவென, அவனும் அவளும், இவனும் இவளும், அவனும் இவளும், இவனும் அவளும்...... இருத்தல் இருக்கத்தானே செய்யும்?!

கலக்கீட்டீங்க தம்பி!

கதை, நீட்சியான கவிதை, அவற்றின் விதை எல்லாமே அற்புதம் தம்பி!

தொடருங்கள்!

பி.கு.: என் சிற்றறிவில் பட்டதை எழுதியிருக்கிறேன்.

Nathanjagk said...

அன்பு V.A.S.SANGAR...
நன்றிகள்!

ராஜு...
உங்க கவிதையும் பாத்தேன். நம்பிக்கையா இருக்கு!

Nathanjagk said...

நன்றி ​கே.ரவிஷங்கர்..!

நன்றி SUREஷ் boss!

நன்றி ஸ்டார்ஜன்!

நன்றி ​ஹேமா..! பாத்தீங்களா... என்னையும் கவிதை எழுத வச்சிட்டாங்க..!

Nathanjagk said...

மாப்பு அதி..
ஏன் எஸ்கேப் ​வேணாமா?

மாப்பு அக்பர்...
மொக்கைகள் போதும் என்று நம் காலடியின் மொக்கைக் கட்டுப்பாட்டு வாரியம் (சேர்மேன்: நந்தா, ​டேபிள் மேன்: சென்ஷி, ஈஸி​சேர்மேன்: ஷங்கி) நம்மேல் மருந்தடித்து வருவதால்.. இப்படி ஒரு ​கொலவெறி!!
கொஞ்சம் பிஸிதான் மாப்பு. வர்றேன் அங்கிட்டு!

Nathanjagk said...

அன்பு ப்ரபஞ்சப்ரியன்,
இந்த மாதிரி எழுதுவதை தவிர்த்து விடுவேன். எழுதியதும் ஏதோ சாப நிழல் என்​மேல் கவிழ்ந்தாற் போல் ​பொழுதெல்லாம்​போகும். இப்போதும் அப்படியே. நீங்கள் இதை எதிர்கொண்ட விதத்தை படிக்கும்​போது உங்களை நானாக நினைத்துக்​கொள்கிறேன்.

Nathanjagk said...

அன்பு சங்காண்ணா,
Nothing else matterதான்!
இருத்தல் இருக்கிறது. இறத்தலிலும் ஒரு இருத்தல் இருக்கத்தானே ​செய்கிறது..!

உற்சாகமூட்டியதற்கு நன்றி. அடுத்து நீங்க களத்தில இறங்கணும் என்று இங்கேயேக்​கேட்டுக்​கொள்கிறேன்.

சிநேகிதன் அக்பர் said...

மாம்ஸ் இது நல்லதில்லை. 50 வது இடுகை போட்டு காத்துகிட்டு இருக்கேன். அதை விட வேலை உங்களுக்கு முக்கியமாப்போச்சா.

சீக்கிரம் வாங்க. தண்டனையா ஒரு பக்கத்துக்கு எழுதி பின்னூட்டம் போடனும். கம்மியா கேட்டுட்டேனா :)

சிநேகிதன் அக்பர் said...

//வெளிச்சங்கள் பெருகி பொருட்கள் ஒவ்வொன்றும் அடையாளம் காணும் ​வேளையில், இரவு கவனமாக நமக்கு ​கொடுத்த கனவொன்று பரிதாபமாக மறைந்து போயிருக்கும்..//

எத்தனை வெளிச்சம் வந்தாலும் எனக்கான கனவுகளை நான் மன இருட்டில் பூட்டியே வைத்திருக்கிறேன். வெளிச்சம் அதன் மீது படரா வண்ணம் பாதுகாத்தும் வருகிறேன். ஏனெனில் வெளிச்சமும் இருளும் மாறி மாறி வருவதை போல கனவுகள் வருவதில்லை. சில கனவுகள் நினைவுகளை விட நீங்க இடம் பிடித்துவிடும். உங்களைப்போல.

(யப்பா. இதுக்கு மேல முடியல.

வாழ்த்துக்கு நன்றி மாம்ஸ்.

துபாய் ராஜா said...

நிறைய எழுதினாலும் குறையாக எழுதுபவர்கள் நிறைந்த நமது பதிவுலகில் குறைவாக எழுதினாலும் நிறைவாக எழுதுகிறீர்கள்.

வாழ்த்துக்கள் ஜெகன்.

Baski.. said...

nice boss...

Shanmugam Rajamanickam said...

ஆகா ! அருமை !!
வலையுலகை சிறிது காலம் புறக்கணித்திருந்தேன். ஆனால் உங்களின் எழுத்துக்களை நான் வாசிக்க தவறமாட்டேன். மறுபடியும் நான் இடுகையிட(மொக்க) வந்துட்டேன்...

Shanmugam Rajamanickam said...

http://moorthymobiles.tk

பத்மா said...

பாவ​னையற்ற முக​மே ஒரு பாவனைதான் என்ற நம்பிக்கையை அன்று எய்தினான்.
"எத்தனை உண்மை?புதியதொரு படிப்பின்பம்" .
பத்மா

அண்ணாமலையான் said...

அருமையான படைப்பு...

Prapa said...

நம்ம பாக்கமும் கொஞ்சம் பார்வைய செலுத்துறது...

Nathanjagk said...

அன்பு துபாய்ராஜா,
வாழ்த்துக்கு நன்றிகள்.
தங்களின் எகிப்து உலா மிகவும் ரசித்தேன்.

Nathanjagk said...

வாங்க Baski,
கருத்துக்கு மிக்க நன்றி!

Nathanjagk said...

வாப்பா சம்முவம்...
ஒரு ​பொறுப்பான தம்பிரி மாதிரி நடந்துக்கிறீங்க?
பரவாயில்ல.. இனியாவது தொடர்ந்து ​மொக்கைகளைப் பிழிந்து அண்ணன் ​பேரைக் காப்பாத்தவும்!!

Nathanjagk said...

பத்மா,
காகித ஓடம் காலடிப் பக்கம் வந்ததில் மிக மகிழ்ச்சி!

Nathanjagk said...

தாங்க் யூ BrotherHill சார்...!
அண்ணாமலையானுக்கு நன்றி!

Nathanjagk said...

பிரபா... ​நன்றி!