மாங்கா 1:நினைவில் நனைதல்
தோப்புக்காரர்: பெரியண்ணன் சென்ஷி
நான் ஏன் பிளாக்குறேன் என்பதை விளக்கவும் இல்லை குழப்பவும் என்று இங்கு கல்லு வுட்ட சென்ஷிக்கு நன்றி!
நம்ம பஸ்ஸும் உங்க ரூட்டுத்தாங்க.. காமிக்ஸ் - அம்புலிமாமா - ராஜேஷ்குமார் - சுபா - ஓவியங்கள் - பாலகுமாரன் - குமுதம் - சுஜாதா - ஆனந்த விகடன் - இசை - லாசரா - குபரா - புல்லாங்குழல் - சுரா - யூமா. வாசுகி - சுப்ரபாரதிமணியன் - சிகரெட் - கல்லூரி - க. சீ. சிவக்குமார் - காமசூத்ரா - அழகியபெரியவன் - காதல்கள் - கீரனூர் ஜாகிர்ராஜா - ஜெயமோகன் - கிளாமர் - காதல் தோல்விகள் - வாமு கோமு - சாரு நிவேதிதா - மனோஜ் - எஸ்.ரா - சரக்கு - வாந்தி - தலைநோவு....
சரி வுடுங்க.. ஆரம்பத்திலேயே கவனிச்சிருக்கணுங்கிறது இப்பத்தான் புரியுது.
அண்ணர்-நண்பர் க.சீ. சிவக்குமாருடன் ஆன நட்பு புதிய இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் ஓசி குடியையும் புத்தக வெளியீட்டுக்கப்பாலான மொட்டை மாடி சபாக்களையும் அறிமுகப்படுத்தியது.
கன்னிவாடி என்ற ஊரில் வசித்து வந்தபோது.. என் அறையில் கொஞ்சம் புத்தகம், நிறைய பிரஸ்கள், கொஞ்சம் புல்லாங்குழல் என்ற வாழ்ந்து வந்தேன். ஓவியங்களில் கோடு பற்றியே நல்ல சிறுகதைகள், நாவல்களை கண்டடைந்திருக்கிறேன். சந்தானத்தின் கோட்டோவியங்கள், ட்ராஸ்கி மருதுவின் அப்ராஸ்ட், சந்ருவின் கிறுக்கல்கள், எபினேசரின் சார்க்கோல், மனோகரின் வண்ணங்கள், ம.செவின் மங்கலான நீரோவியங்கள்.. இப்படி படங்களைப் பற்றித்தான் இலக்கியம் பக்கம் வந்த வழிதவறிய காட்டாடு நான்.
இங்கு வலைப்பதிவு எழுத வந்ததுக்கு காரணம்.. இது ப்ரீன்னு சொன்னாங்க!!! முதலில் படிக்க வந்ததும்.. இந்த கிரவுண்ட் நல்லாத்தான் இருக்கு என்று இம்ம்ம்மீடியட்டாக நானும் ஆரம்பித்துவிட்டேன் காலடி வைக்க!
காலடி ஒரு அளவு, பதிவு, மற்றும் அடையாளம். மிக முக்கியமாக உயிர்த்தன்மை நிறைந்த உருவம். அதன் எளிய உருவத்தில் புதைந்து போய் இளைப்பாறப் பிடித்திருக்கிறது!
முக்கியமாக ஒன்று.. காலடி என்பதுதான் வலைப்பதிவு. ஜெகநாதன் அல்ல. நீங்களும் காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்தான் - ஜெகநாதனுக்கு அல்ல!!! நான் இந்த காலடியின் ஒரு ஊழியன் அவ்வ்வளவே!
(')
மாங்கா 2: பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்
தோப்புக்காரர்: ஜெய்ஹிந்த்புரம் பீர்
1. அரசியல் தலைவர்
பிடித்தவர்: படித்த அரசியல்வாதிகள்
பிடிக்காதவர்: பழுத்த அரசியல்வாதிகள்
2. எழுத்தாளர்
பிடித்தவர்: சுப்ரபாரதிமணியன்
பிடிக்காதவர்: டுமிதுல் சுயம்போ என்ற ஆப்ரிக்க நாட்டு எழுத்தாளன் (மேலும் டீட்டேலுக்கு என் முதல் பதிவைப் பார்க்கலாம்)
3. கவிஞர்
பிடித்தவர்: யூமா. வாசுகி
பிடிக்காதவர்: அப்படி யாரும் கிடையாது. இவ்விடத்தில் ஒரு அறிவிப்பு: கவிஞ பெருமக்கா.. உங்களை யாரும் பிடிக்கலேன்னு சொன்னா கவலைப் படாதீங்க... உடனே நம் காலடியின் கவிதை பட்டறையில் பங்கேற்று, கவிஞர் அடையாள அட்டையும் பெற்றுக் கொள்ளவும். உங்களை பிடிக்காது என்று சொன்னவர்கள் மேல் ஆஸிட் அல்லது நீங்களே எழுதிய கவிதைப் புத்தகம் வீசப்படும்!
4. திரைப்பட இயக்குனர்
பிடித்தவர்: சாம் ஆண்டர்சன் பட இயக்குநர்
பிடிக்காதவர்: என் பிடிச்ச டைரக்டரு பார்த்த பின்னாடியும் எப்படி இந்த கேள்வி கேட்கத் தோணுதுங்க??
5. நடிகர்/கை
பிடித்தவர்: வினு சக்ரவர்த்தி / காந்திமதி
பிடிக்காதவர்: இதுவும் தப்பான கேள்வி
6. விளையாட்டு வீரர்
பிடித்தவர்: நரேன் கார்த்திகேயன்
பிடிக்காதவர்: ஒரு விளையாட்டே எனக்கு பிடிக்காது - கிரிக்கெட்!!
7. தொழில் அதிபர்
பிடித்தவர்: Subroto Bagchi, Chief Operating Officer, MindTree
பிடிக்காதவர்: இருட்டு பைபாஸ் ரோடுகளில் லாரிகளை மறிக்கும் 'தொழில்' அதிபர்கள்!
8. மதத் தலைவர்
பிடித்தவர்: யாருமில்லை
பிடிக்காதவர்: மதத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எல்லோரும்
9. மருத்துவர்
பிடித்தவர்: ஊசிப் போடாதவர்
பிடிக்காதவர்: நர்ஸ்கள் இல்லாமல் ஆசுபத்திரி நடத்துபவர்
10. வலைபதிவர்
பிடித்தவர்: ஹலோ... ஹலோவ்வ்வ்வ.. இங்க டவர் சரியா இல்லீங்க..!
பிடிக்காதவர்: ...ஆங்.. நான் அப்புறமா பேசறேங்க....!