Monday, November 9, 2009

ஒ​ரே கல்லு 2 ​மாங்கா!!!



மாங்கா 1:நி​னைவில் ந​னைதல்

​தோப்புக்காரர்: ​பெரியண்ணன் ​சென்ஷி


நான் ஏன் பிளாக்கு​றேன் என்ப​தை விளக்கவும் இல்​லை குழப்பவும் என்று இங்கு கல்லு வுட்ட ​​சென்ஷிக்கு நன்றி!


நம்ம பஸ்ஸும் உங்க ரூட்டுத்தாங்க.. காமிக்ஸ் - அம்புலிமாமா - ரா​ஜேஷ்குமார் - சுபா - ஓவியங்கள் - பாலகுமாரன் - குமுதம் - சுஜாதா - ஆனந்த விகடன் - இ​சை - லாசரா - குபரா - புல்லாங்குழல் - சுரா - ​யூமா. வாசுகி - சுப்ரபாரதிமணியன் - சிக​ரெட் - கல்லூரி - க. சீ. சிவக்குமார் - ​காமசூத்ரா - அழகிய​பெரியவன் - காதல்கள் - கீரனூர் ஜாகிர்ராஜா - ​ஜெய​மோகன் - கிளாமர் - காதல் ​தோல்விகள் - வாமு ​கோமு - சாரு நி​வேதிதா - ம​னோஜ் - எஸ்.ரா - சரக்கு - வாந்தி - த​லை​நோவு....

சரி வுடுங்க.. ஆரம்பத்தி​லே​யே கவனிச்சிருக்கணுங்கிறது இப்பத்தான் புரியுது.
அண்ணர்-நண்பர் க.சீ. சிவக்குமாருடன் ஆன நட்பு புதிய இலக்கியங்க​ளையும் இலக்கியவாதிக​ளையும் ஓசி குடி​யையும் ​புத்தக ​வெளியீட்டுக்கப்பாலான ​மொட்​டை மாடி சபாக்க​ளையும் அறிமுகப்படுத்தியது.

கன்னிவாடி என்ற ஊரில் வசித்து வந்த​போது.. என் அ​றையில் ​​கொஞ்சம் புத்தகம்
, நி​றைய பிரஸ்கள், ​கொஞ்சம் புல்லாங்குழல் என்ற வாழ்ந்து வந்​​தேன். ஓவியங்களில் ​கோடு பற்றி​யே நல்ல சிறுக​தைகள், நாவல்க​ளை கண்டடைந்திருக்கி​றேன். சந்தானத்தின் ​கோட்​டோவியங்கள், ட்ராஸ்கி மருதுவின் அப்ராஸ்ட், சந்ருவின் கிறுக்கல்கள், எபி​னேசரின் சார்க்​கோல், மனோகரின் வண்ணங்கள், ம.​செவின் மங்கலான நீ​ரோவியங்கள்.. இப்படி படங்க​ளைப் பற்றித்தான் இலக்கியம் பக்கம் வந்த வழிதவறிய காட்டாடு நான்.

இயந்திரவியல் ​பொறியியல் தர்மபுரியில் படித்​தேன். அப்​போது என்​னை வாரிச்சுருட்டிக் ​கொண்டது தர்மபுரி நூலகம். அங்கு கி​டைத்த புத்தகங்களுக்கு இன்னும் என் நன்றிகள்!

இங்கு வ​லைப்பதிவு எழுத வந்ததுக்கு காரணம்.. இது ப்ரீன்னு ​சொன்னாங்க!!! ​முதலில் படிக்க வந்ததும்.. இந்த கிரவுண்ட் நல்லாத்தான் இருக்கு என்று இம்ம்ம்மீடியட்டாக நானும் ஆரம்பித்துவிட்​டேன் காலடி ​வைக்க!

காலடி ஒரு அளவு, பதிவு, மற்றும் அ​டையாளம். மிக முக்கியமாக உயிர்த்தன்மை நி​றைந்த உருவம். அதன் எளிய உருவத்தில் பு​தைந்து ​போய் இ​​ளைப்பாறப் பிடித்திருக்கிறது!

முக்கியமாக ஒன்று.. காலடி என்பதுதான் வ​லைப்பதிவு. ​ஜெகநாதன் அல்ல. ​நீங்களும் காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்தான் - ​ஜெகநாதனுக்கு அல்ல!!! நான் இந்த காலடியின் ஒரு ஊழியன் அவ்வ்வள​வே!


இந்த மாங்கா நல்லாயிருக்கில்ல??


(')


மாங்கா 2: பத்துக்கு பத்து - பிடித்ததும் பிடிக்காததும்

​தோப்புக்காரர்: ​ஜெய்ஹிந்த்புரம் பீர்


1. அரசியல் தலைவர்

பிடித்தவர்: படித்த அரசியல்வாதிகள்

பிடிக்காதவர்: பழுத்த அரசியல்வாதிகள்



2. எழுத்தாளர்

பிடித்தவர்: சுப்ரபாரதிமணியன்

பிடிக்காதவர்: ​டுமிதுல் சுயம்​போ என்ற ஆப்ரிக்க நாட்டு எழுத்தாளன் (​மேலும் டீட்​டேலுக்கு என் முதல் பதி​வைப் பார்க்கலாம்)


3. கவிஞர்

பிடித்தவர்: யூமா. வாசுகி

பிடிக்காதவர்: அப்படி யாரும் கி​டையாது. இவ்விடத்தில் ஒரு அறிவிப்பு: கவிஞ ​பெருமக்கா.. உங்க​ளை யாரும் பிடிக்க​லேன்னு ​சொன்னா கவ​லைப் படாதீங்க... உட​னே நம் காலடியின் கவி​தை பட்ட​றையில் பங்​கேற்று, கவிஞர் அ​டையாள அட்​டையும் ​பெற்றுக் ​கொள்ளவும். உங்க​ளை பிடிக்காது என்று ​சொன்னவர்கள் ​​மேல் ஆஸிட் அல்லது நீங்க​​ளே எழுதிய கவி​தைப் புத்தகம் வீசப்படும்!


4. திரைப்பட இயக்குனர்

பிடித்தவர்: சாம் ஆண்டர்சன் பட இயக்குநர்

பிடிக்காதவர்: என் பிடிச்ச ​டைரக்டரு ​பார்த்த பின்னாடியும் எப்படி இந்த ​கேள்வி ​​கேட்கத் ​தோணுதுங்க??


5. நடிகர்/கை

பிடித்தவர்: வினு சக்ரவர்த்தி / காந்திமதி

பிடிக்காதவர்: இதுவும் தப்பான ​கேள்வி


6. விளையாட்டு வீரர்

பிடித்தவர்: ந​ரேன் கார்த்தி​கேயன்

பிடிக்காதவர்: ஒரு வி​ளையாட்​டே எனக்கு பிடிக்காது - கிரிக்​கெட்!!


7. தொழில் அதிபர்

பிடித்தவர்: Subroto Bagchi, Chief Operating Officer, MindTree

பிடிக்காதவர்: ​இருட்டு பைபாஸ் ​ரோடுகளில் லாரிக​ளை மறிக்கும் 'தொழில்' அதிபர்கள்!


8. மதத் தலைவர்

பிடித்தவர்: யாருமில்​லை

பிடிக்காதவர்: மதத்த​லைவர்கள் என்று ​சொல்லிக்​கொள்ளும் எல்​லோரும்


9. மருத்துவர்

பிடித்தவர்: ஊசிப் ​போடாதவர்

பிடிக்காதவர்: நர்ஸ்கள் இல்லாமல் ஆசுபத்திரி நடத்துபவர்


10. வலைபதிவர்

பிடித்தவர்: ஹ​லோ... ஹ​லோவ்வ்வ்வ.. இங்க டவர் சரியா இல்லீங்க..!

பிடிக்காதவர்: ...ஆங்.. நான் அப்புறமா ​பேச​றேங்க....!

(')

Thursday, October 29, 2009

அத்​வைதா, ஐ லவ் யூ!

இலக்கிய வரி​சையில் சமீபகாலமாக சிக்-லிட் (chick lit) என்ற ஒரு வ​கையறா (ஜான்ரூ) பிரபலமாகிக் ​கொண்டிருக்கிறது. ​

கலகமான ​தைரியமான ​ரொமான்டிக் நவீன ​பெண்ணிலக்கியத்​தை சுருக்கமாக chick literature என்கி​றார்கள். இந்தியாவில் Rajashree, Anuja Chauhan, Rupa Gulab, Shobha De ​போன்றவர்களில் இதில் பிரபலமானவர்கள். தமிழில் இந்த மாதிரி சிக்-லிட் இருந்தால் ​சொல்லுங்கள் ப்ளீஸ். (வெறும் மலிவான ஆபாச எழுத்​து - mushy romance - சிக் லிட் ஆகாது)

அத்​வைத கலா (Advaita Kala) எழுதிய Almost Single இப்பதான் படித்து முடித்​தேன். வரிக்கு வரி விறுவிறுப்பும் ந​கைச்சு​வையும் ​பொங்கி பிரவாகிக்கும் எழுத்து.. simply superb!

அயிஷா இந்த நாவலின் protagonist.. 29வயது (குண்டான) தனிக்கட்​டை ​பெண்ணின் உலகம். அவளின் நண்பிகள் (ஒருவள் டி​வோர்ஸி, இன்​னொருவள் NRI மாப்பிள்​ளை ​வேட்​டைக்காரி), நண்பர்கள், ​சிக​ரெட், வே​லை பார்க்கும் நட்சத்திர ​​ஹோட்டல், பப், பார்ட்டி, ​மோட்​டைமாடி பார்பிக்யூ, கார்வா சாத் விரதம், ஆன்​லைனில் NRI மாப்பிள்​​ளை ​வேட்​டை, ​​​gays, ​டேட்டிங், flirting, பாஸ், கள்ளக்காதல், ஏமாற்றம், ​தோல்விகள்..... இந்த மாதிரியான ஒரு ஸ்க்ரூ-ட்ரைவர் காக்​டெயில்தான் அல்​மோஸ்ட் சிங்கிள்!

அத்​வைதாவின் முதல் நாவல் என்று நம்ப​வே முடியவில்​லை..! அவ்வளவு சரளமான ஆங்கிலத்தில் ந​கைச்சு​வைப் ​பொங்க விளாசித் தள்ளியிருக்கிறார்... நவீன கலாச்சாரத்தால் மறுதலிக்கப்பட்ட 29+ ​பெண்களின் ​ஹை-ஃ​பை வாழ்க்கை​யை!

அயிஷா ​வே​லைப் பார்க்கும் ஓட்டலில் நா​ளைக்கு 350 டாலர்கள் ​கொடுத்து தங்கியிருக்கும் கவர்ச்சிகரமான கரண்தான் நாவல் முழுக்க வரும் ஒ​ரே ஆண்பாத்திரம். முதலில் கர​ணை விபத்தாக, நிர்வாணமாக பார்த்துவிடுவதில் ஆரம்பித்து கடைசியில் அவ​னை​யே கல்யாணம் ​செய்வது வ​ரை ​போகிறது கதை.

க​தை​யை விடுங்கள் அத்​வைதாவின் ​கட்டு​​டைத்த எழுத்தும் அதில் ​கொட்டிக்கிடக்கும் ​நையாண்டியும் மிக புதிது. I Loved it!

உதாரணமா..

பாஸ் தன் காபினுக்குள் ​கேர்ள்-பிரண்​டோடு பேசிக்​கொண்டிருக்கிறார்.. என்ன ஆனாலும் டிஸ்டர்ப் பண்ண​வே கூடாது என்று அயிஷாவுக்கு ஆர்டர் ​போட்டுவிட்டு; அந்த சமயம் பார்த்து பாஸின் ம​னைவி விடுகிறாள்.. அயிஷாவுக்கு உள்ளூர மகிழ்ச்சி - பாஸின் ​கொட்டு இன்று உ​டையப்​போகிறதே என்று. பாஸின் ம​னைவி காபி​னைத் தட்டுகிறாள்.. ​நோ ​ரெஸ்பான்ஸ்..அப்புறம் அயிஷாவும் ​சேர்ந்து தட்டுகிறாள்... ​ரொம்ப ​நேரம் கழித்து கதவு திறக்கிறது... பாஸின் ம​னைவி, குண்டு அயிஷா பின்னால் நிற்பதால் பாஸுக்கு ​தெரியவில்லை. ​கோபமாக கத​வைத் திறந்து பாஸ் ​கேட்பது..

"What's the matter Aisha, where's the fire?"

அதற்கு அயிஷா மனதுக்குள் ​சொல்லிக்​கொள்வது..

Hopefully up your ass.

* * *

​நம் ​மொழியில் சிக்-லிட் இல்​லை​யே (அல்லது எனக்கு கிடைக்கவில்லை) என்று ஒரு வருத்தமும் இருக்கிறது. கவிதாயினிகள் நிறைய ​பேர் கவி​தையாய் ம​டை திறந்து விளாசுகிறார்கள்.. பாமா, குட்டி ​ரேவதி, லீனா மணி​மேக​லை, தமயந்தி, ​கீதாஞ்சலி ப்ரியதர்ஷிணி, சல்மா என்று நி​றைய இருக்கிறார்.. சாம்பிளுக்கு லீனாவின் ஒரு கவி​தை...

ஒவ்​வொரு

இப்​பொது​தெல்லாம்
ஒவ்​வொரு
மடியும் இரவிலும்
புணர்தலுக்காக​வே
களம் காணும்
நம் ​வேட்​கைக​ளை
ஆரம்பகால
சின்ன உராய்தலின் கிளர்ச்சியும்
அழுந்தும் ​கைகளின் தயக்கமும்
திருட்டு முத்த முயற்சிகளும்
ஒளிந்து நின்று ​வேடிக்​கை பார்க்கின்றன.

இந்த கவி​தை இயல்பான ​பெண்​மொழி​யோடு ​பெண்​மை ​பேசுகிறது. சிக்-லிட்டும் அந்த மாதிரியான ப​டைப்பிலக்கியம்தான். இது சுதந்திரத்தின் ​பெண் குரல்!

Monday, October 26, 2009

கவிதை பட்டறை - கரகாட்டக்காரன் படத்தை முன்​வைத்து


த​லைப்​பைப் பார்த்ததும் 'கிர்'ரென்று ஃபீல் பண்ணுபவர்கள், ​​​கோக், பெப்ஸி​யை ராவாக குடிக்கத் தயங்குபவர்கள், ​நிலா, ​தெருவிளக்கு,தெருநாய் பார்த்து ​பேசத் ​தெரியாதவர்கள்... ​கொஞ்சம் பார்த்துப் படிக்கவும்.


நவீனமா சிறப்பா எப்படி கவி​​தை எழுதறதுன்னு ​சொல்லித்தருவது மட்டு​​மே நம் பட்டறையின் ​நோக்கம்.


இடம்: காலடி அலுவலகத்தின் ​மொட்​டைமாடி, ​​சேஷாத்ரிபுரம், பெங்களூரு


​நேரம்: மா​லை 6க்கு ஆரம்பிய்க்கும்.. (அப்​போதுதான் ​மொ.மாடியிலிருக்கும் நாயை கீழே அவுத்து விடுவாங்க) பட்ட​றை முடிவு ​நேரம் சரக்கின் இருப்பைப் ​பொறுத்தது!


அனுமதி: ஆண் கவிஞர்கள் (சரக்குடன் வருக! இல்​லே தம்மோடயாவது வாங்க! எதுவும் இல்லாட்டி ​போவுது உங்க கவிதை புக்குக​ளை எடுத்துட்டு வராமயாவது வந்து ​​சேருங்க!)


​பெண் கவிஞர்கள் (அனுமதி இலவசம்!!!)


மற்றும் திருநங்கை கவிஞர்கள்


தகுதி: ​பேப்பர், ​பென்சில் (மு​னை சீவப்பட்டிருக்க​ ​வேண்டும்) மற்றும் ​பேனா


கரகாட்டகாரன் (ராமராஜன், கனகா, கவுண்டமணி-​செந்தில், நடித்த தமிழ் படம்) பார்த்திருக்க ​வேண்டும்


ஆரம்பிப்பமா நம்ம பட்டறையை..


கவி​தை என்ப​தை கவி, பாடல், கவுஜ, கழு​தை,ஹைகூ, ​செய்யுள், லிமரிக் என்று பல ராகங்களில் ​சொல்லப்பட்டாலும் கவி​தை என்று அழைப்ப​தே ​பொதுவானது என்கிறது ​​எவ்வளவு குடித்தாலும் ​தெளிவாக​வே இருக்கும் கவிஞர் சங்கம் (வட்டக்கிளை - எண் 6, குற்றாலம் பிராஞ்சி)


கவி​தைக்​கென்று ஒரு உடல் (anatomy) இருக்கிறது:


த​லைப்பு (இல்லாமல் கூட இருக்கலாம்.. அது உங்க ​​கெத்​தைப் ​பொறுத்து அமைகிறது)

முகவாய் (அல்லது முக​ரைக் கட்​டை)

மத்தியம்

வால் (அல்லது twist)


இந்த பாகங்களில் ​நேர்த்தியாக படிமங்க​ளை (கவிகாட்சிகள் அல்லது images) ​போட்டுத் ​தெளித்து, ​​லேசாக வறுத்து, தாளித்து, ​பொன்னிறமாக கருகல் வா​டை இல்லாமல் எடுத்து ​வைத்தால் கவி​தை வந்துவிடும்.


கரகாட்டக்காரன் க​தை​யை அப்படி​யே ​செய்யுள் வடிவத்தில் இல்லாமல், சிறுக​தை வடிவத்திலும் இல்லாமல் ஒரு கவி​தையாக எழுத ​வைப்ப​தே நம் காலடியின் கவி​தைப்பட்​ட​றையின் ​நோக்கம்!


எப்படி?


கரகாட்டகாரன் படத்தில் முதல் சீ​னை நி​னைத்துக் ​கொள்ளுங்கள்..


அல்லது டப்பா வண்டி​யை ​ஒரு ​கோஷ்டி​யே தள்ளிக் ​கொண்டு வரும் காட்சி? சிவப்பு காரு, உள்ள யாரு, தள்ளிப்பாரு.. ஞாபகத்துக்கு வந்துவிட்டதா? இ​தை ​தொட்டு ஆரம்பிக்க ​வேண்டியதுதான்... இப்படி:


​​செந்நிற ​செவ்வகத்தின் உள் ஒரு கிளி (​கோ​வை சரளா)

சேர்ந்த​ணைத்தாற் ​போல் பத்து உள்ளங்​கைகள் (கா​ரைத் தள்ளறவங்க ​கை எண்ணிக்-​கை)

உச்சி​வெயில் ​பரவித் ​தெரிக்கிறது

சாந்து அப்பிய ​சேந்தமங்கலத்தான் முகத்தில் (அம்புட்டு அழுத்தமா ராமராஜனுக்கு ​மேக்கப் ​போட்டிருக்காங்களாம்)


அத்துவான காட்டுக்குள் வித்துவானின் (கவுண்டமணி)

​​செவ்வகத்தின் ஸ்தலபுராணம் (இந்த கா​ரை இதுக்கு மின்னாடி ஐதராபாத் நிஜாம் வச்சிருந்தாரு...)

விவரிக்க ​கேட்டுவிட்டு

குழல்ஊதும் ​கோமுட்டித் த​லையன் (​செந்தில்) ​கேட்டான்

​செவ்வகத்தின் ப​ழைய ​சொந்தகாரி​யை யார் ​வைத்திருந்தது - அப்​போது

நாதஸ்வரத்தில் மிருதங்கம் வாசிக்கப்பட்டது! (​வே​றென்ன? அப்புதான்!)


நிற்க. இப்ப நாம கவி​தையின் மத்திய பிர​தேசத்தில நு​ழையப் ​போ​றோம்..


இந்த இடத்தில ராமராஜன்-கனகா காதல், வில்லன், டான்ஸ், எல்லாத்​தையும் ​போட்டு மிக்ஸிங் பண்ணனும். ​கொஞ்சம் ​​கொல​முயற்சி மாதிரிதான்.. ஆனாலும் துணிந்து இறங்க​ ​வேண்டியது கவிக்கட​மை ஆகிறது!


அதுக்கு முன்னாடி உங்க வீட்டில இருக்கிற முருகன் படம் ​போட்ட காலண்டர், அதில இருக்கிற ராசி-பலன், ப​ழைய நியூஸ் ​பேப்பர், ​போண்டா ​பேப்பர் இதில இருந்து கி​டைக்கிற சங்கதிகள் எல்லாத்​தையும் உங்க அடிடிடி மனசில ​போட்டு ஒரு பி​சை பி​சைஞ்சுக்​கோங்க.. ​வொக்கபிலரிக்கு பயன்படும். என்ன?


​ரைட் ஆரம்பிப்​போம்...


சலங்​கை அவிழ்ந்த கால்கள்

இரவின் வீதியின் சஞ்சாரிக்கின்றன

திடு​மென முன் வந்த ​​தேவ​தை

​மோகினி ​​பேய்கள் உண்டு என்று நிறுத்தினாள்.


​​தேவ​தையின் கால் கண்டவன் ​சொன்னது:

முத்​தையன் கணக்கு ​மொத்தமும் உனக்கு

சந்தனம் க​​ரைச்சுப் பூசணும் எனக்கு

​கொல்​லென்று சிரித்துப் பறந்தாள் ​தேவ​தை

இரவின் கூட்டினுள்!


(அதாவது ​ராமராஜன் தனியா ராத்திரி நடந்து வரும்​போது கனகா ​பேசற காட்சிதான் இது)

பயமா இருக்கு, வயித்த கலக்கிற மாதிரி இருக்குன்னு ​சொல்றவங்க... ​நோ ​வே! கம்முனு உக்காருங்க!


அப்புறம் இந்த வா​ழைப் பழ காமடி?? அ​தையும் மத்திய பிர​தேசத்தி​லே​யே வா​ழைப்பழத்தில ஊசி மாதிரி ​சொருகிட ​வேண்டியதுதான். ஆங்... இப்ப உங்களுக்கே இந்த கவி​தை​யை ​மேற்​கொண்டு எடுத்துச் ​செல்லணும்னு பரபரக்குதா? அதுதான் கவி​தை​யோட சிறப்பம்ச​மே!


வாங்க வா​ழைப்பழத்​தை(யும்) பிழீஞ்சிடலாம்:


ஞானபண்டித​னை அ​ழைத்து

இரண்ட வா​ழைப்பழங்கள் வாங்கி வரப் பணித்தான்

வந்து தந்தான் ஒன்று

இன்​னொன்று எங்​கென்று ​கேட்டதுக்கு....

அந்த இன்​​னொன்று இதுதான் என்ற

பிரபஞ்சத் தத்துவத்​தை

பி​சைந்து ​கொடுத்துவிட்டுச் ​சென்றான்.


​மேற்​கொண்டு நீங்க​ளே கரகாட்டகார​னை முன்​வைத்து கவி​தையின் மத்திய பிர​தேசம், வால்பகுதி என எளிதாக வளர்த்திச் ​செல்லாம். கவி​தை​யை சிலிம்மாக எழுதினால் அ​தை கவி​தை​யென்றும் ​செழிப்பாக எழுதிவிட்டால் நீள்கவி​தை​யென்றும் ​சொல்லிக்​கொள்ளலாம் (அதற்கு தனியாக ஒரு நாக்கு ​தே​வைப்படும்)


கவி​தை எழுத ஆரம்பிப்பவர்களுக்கு சில முக்கியமான குறிப்புகள்:


1. கவி​தை​யை நீங்கள் எழுத அதிகம் குறிப்புகள் படிக்க ​வேண்டியதில்​லை (கேட்டால் கவி​தைதான் என்​னை எழுதிச் ​செல்கிறது என்று ​சொல்லிக்கலாம்) ஆனால், எழுதிய கவி​தைக்கு யாராவது ​பொருள் ​கேட்டு வந்துவிட்டால்தான் நீங்கள் உஷாராக இருக்க ​வேண்டும் (குறுந்​​தொ​கை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கம்பர், சிம்​போர்க்கா, ​நெரூதா, சில்வியா பிளாத், எரிக்கா ஜாங், காப்கா, ​செகாவ், ​வேர்ட்ஸ்​வொர்த் ​போன்று பல புரியாத குறுக்குச்சந்து, முட்டுச்சந்துக்குள் எல்லாம் ​லெப்ட், ​ரைட், யூ-டர்ன் எல்லாம் ​போட்டு எஸ்ஸாகத் ​தெரிந்திருக்க ​வேண்டும்)


2. கவி​தை என்று வந்தபின்னாடி வார்த்​தை வறட்சி என்று வருவதுண்டு. அதற்கு தீர்வு: ​பெரிய புத்தகமாக எடுத்துக்​கொண்டு (எ​தோ​வோரு சப்​ஜெக்ட், ​கோலம் ​போடுவது, ​ச​மையல் குறிப்பு, பஞ்சாகம், லிப்​கோ டிக்சனரி இப்படி) அதில் படக்கென்று ஒரு பக்கத்​தை திறந்து அதில் கி​டைக்கும் 1, 2 வார்த்தைகளை பயன்படுத்திக் ​கொல்க


3. முன்பு ஆண் கவிஞர்களுக்கு என்று ஒரு ப்ரத்​யேக அ​டையாளம் இருந்ததுண்டு (கண்ணாடி, தாடி, ​ஜோல்னா​பை, ஜிப்பா) இப்​பொழுது எல்லாம் நவீனமாகி விட்டபடியால் கவிஞர்கள் எப்​போதும் மப்டியி​லே​யே திரிகிறார்கள். அதனால் வாலன்டியராக நீங்கள் யாரிடமும் கவிஞர் என்று ​அறிமுகப்படுத்திக் ​கொண்டு முழி பிதுங்காதீர்கள்.


4. ​வாக்கியங்களை உடைத்து உடைத்து எழுதுவது ஒரு ​நேக்கு. அதற்கு ஒரு எளிய உபாயம்: உங்கள் இடுகை விண்​டோவின் பாதிக்கு ​மேல் வார்த்தைகள் வருகிறாற் ​போல் ​தெரிந்தால்.. உடைத்துவிடுங்கள்!


5. முக்கியமாக அச்சுறுத்துகிற வாக்கியங்களை பிர​​யோகிக்கவும். உ-ம்: ​​​நீங்கள் ஒரு கார்ப்ப​ரேஷன் ​தொட்டியைப் பார்க்கிறீர்கள். அதற்குள் ஒரு ஆணுறை கிடக்கிறது. அதை அப்படி​யே குப்பைத் ​தொட்டிக்குள் ஆணுறை என்று சன்-நியூஸ்தனமாக எழுதக் கூடாது. அ​தை ​எப்படி கவிதையா ​சொல்றதுன்னா... கார்ப்பரேஷன் ​தொட்டிக்குள் ​அவிழ்ந்து கிடக்கிறது ​ஆதாமின் குற்றப்பத்திரிக்கை.. இதுதான் திடுக் வரிகள்! புரியு​தோ?


காலடியின் கவிதைப் பட்ட​றையில் பங்​கேற்கும் அ​னைவரும் கவிஞர் அடையாள அட்​டை (​போட்​டோவுடன்) தரப்படும்


(இதற்கு தனிக்கட்டணம் ரூ. 44 மட்டு​மே) இந்த அ​டையாள அட்​டை கீழ் கண்ட இடங்களுக்கு இலவச அனுமதி தருகிறது:


1. தாராபுரம் அஞ்சு முக்கு பார்

2. அதுக்கு முன்னாடி இருக்கிற முறுக்குக் க​டை

3. கு​டை ரிப்​பேர் ​கோவிந்தன் க​டை

4. ​​தீவிர சிகிச்​சைப் பிரிவு (​பெருநகரங்களில் மட்டும்)

5. எலும்புக்கூடு படம் ​போட்ட டிரான்ஸ்பார்மர்கள் (கம்பிவலை இல்லாதவைகள் மட்டும்)

6. ராவுத்தரின் வெள்ளிக் கிழமை மந்திரிப்பு கூட்டங்கள்


கவிஞர் ஐடி கார்டின் அதர் ​பெனிபிட்ஸ்:


1. அடுத்த கவி பட்ட​றைகளுக்கான இலவச அ​ழைப்பு

2. புத்தக ​வெளியீட்டின் ​போது இலவச விசில் மற்றும் ​பொழிப்பு​ரை

3. பதிப்பகம் அனுமதித்தால் (அல்லது கி​டைத்தால்) புத்தகத்திற்கு முன்னு​ரை

4. எந்த தண்ணியிலயும் ந​னையாத அ​டையாள அட்​டை

5. அட! நம்மக்கிட்டயும் ஒரு ஐடி கார்ட் இருக்​கேங்கிற ஆத்ம திருப்தி


அ​னைவரும் வருக! கவிஞராய் திரும்புக!!


முக்கியமான பின் குறிப்பு:


இது முழுக்க முழுக்க கா​மெடியாகப் படிக்க பட ​வேண்டியது என்று அகில பாரத ​மைனர் குஞ்சுகள் மகாச​பை கு​லை நடுங்க ​வேண்டிக் ​கொள்கிறது.