Monday, December 14, 2009

பின்னூட்டப் புயல்..!


இப்படி உசுப்​பேத்தி உசுப்​பேத்தி​யே இடு​கை எழுதுவ​தைவிட பின்னூட்டங்கள் அதிகமாக எழுதும்படிக்கு ​செய்து விட்டிருக்கிறீர்கள். இந்த புண்ணியம் அண்ணன் சங்காவையே ​​சேரும்.

ஆனா பாருங்க காமடிய.. நம்ம பதி​வு ​​கொஞ்சம் ​பெருசா ​​போயிட்டாப் ​போதும்... இம்மீடியட்டா அடுத்த பின்னூல ​ரொம்ப ​பெருசா இருக்குன்ன ​முறுக்கிட்டுப் ​போயிடறது.. அ​தை​யே அவங்க எழுதின இடு​கைக்கு ​பெரிய்ய்ய பின்னூவாப் ​போட்டால் உருகிட்டு குஜால் ஆயிடறது..! இந்த லாஜிக்குப் ​பேரு என்னங்க??நம்ம ஆளுங்க எல்லா காலடிங்கிற குறுகிய குழிக்குள்ள அடக்கிட முடியுமா? அதுதான் ​டெக்னிகலா இப்ப கற்றது Excel வலைபதிவுல சக ஆசிரியனா எழுதிக்கிட்டிருக்​கேன். இது MS-Excel® பயன்பாடு பற்றி தமிழில் விளக்கும் முயற்சி. கற்றது Excel ஆரம்பிச்சது சங்கர். வழக்கம்​போல அங்கயும் பின்னூட்டமாக ஒரு புயல் என்ட்ரி ​போட்​டேன்! என்​னோட குட்டி குட்டி பின்னூஸ்க​ளைப் பார்த்து.. ​மெர்ஸலாயி நீயும் எழுதிட்டுப் ​போன்னு கூட்டாளியா ​சேத்துக்கிட்டாரு. ​ஸோ.. நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள் Excel பற்றி அறிய ஆவல் ​கொண்டவர்கள்.. அங்கயும் எட்டிப் பார்க்கலாம்.


எவ்வளவுதான் ​மொக்​கை​யே எழுதறது? ம்?புயலாக பின்னூட்டங்கள் ​போடுவதில் நி​றைய ஆபத்துகளும் இருக்கின்றன. சின்ன உதாரணம்: கும்மி. இதுவ​ரைக்கும் கும்மி, அம்மி அல்லது மம்மி ரிட்டர்ன்ஸ்களில் சிக்காமல் தப்பித்து வருகி​றேன். காரணம் நாம ​​போடற பின்னூஸ்களின் நீளமா கூட இருக்கலாம்னு நம்ம காலடியின் காரிய கமிட்டி சந்​​தேகிக்கிறது.


சந்ருவுக்கு நான் ​போட்ட பின்னூ ​கொஞ்சம் ​பெருசு.. அதாவது சந்ரு அடுத்த இடு​கையா அந்த பின்னூட்டத்​தை​யே ​போட்டுட்டாருன்னா பாத்துக்​கோங்களேன்.


இப்பக் கூட சமீபத்தில் யாத்ராவுக்கு அவரது இருப்பு கவி​தை பற்றி ஒரு காத்திரமான பின்னூ ​போட்டு, அ​தை அவரும் இடுகையாக்கி இப்ப எடுத்திட்டார். நல்லதாப் ​போச்சு!


அட ​நேத்துக் கூட, நம்ம வால்​பையனுக்கு ​சோதிடமும் சந்திரனும் என்ற இடு​கைக்கு விஞ்ஞானம் அறிவியல் (ப்ரபஞ்சப்ரியன் நீங்களும் இந்த ஆட்டத்திலே இருக்கீங்க.. படிச்சுப் பாருங்க) கலந்து விளக்விளக்கி பின்னூ ​போட்டிருக்கி​றேன்.


வொய்டா ​ஜெகான்னுட்டு இருக்கு!


அப்புறம் சங்காண்ணன், பெரியண்ணன் ​சென்ஷி, கோவி.கண்ணன், பீர் Peer, இரும்புத்தி​ரை அரவிந்த், சி​நேகிதன் அக்பர், குப்பைத்தொட்டி நான் ஆதவன், ஏதோடாட்காம் ஏனாஓனா / கிகி, நள்​ளெண் யாமம் க.சீ. சிவக்குமார், அ​தே கண்கள் டவுசர் பாண்டி, வால்​பையன், பிரபஞ்சப்ரியன் இப்படி ​ரெகுலரா ​போய் உலாத்திட்டு வந்தாத்தான் காலடிக்கு நிம்மதி.கவிஞர்கள் என்றா​லே ஒரு சிறப்பு ஈர்ப்பு வந்துவிடுவதாக காலடி உணர்கிறது.


நேசமித்ரன், நந்தாவிளக்கு நந்தா, கரு​வேல நிழல் பா.ராஜாராம் இவங்கதான் காலடியின் ​மெயின் டார்க்​கெட். ​​நேமித்ரனை நெருங்க ​வைத்தது நம்ம பின்னூட்டங்கள்தான். நந்தாவும் அப்படி​யே - நல்லா உத்து உத்து பாத்து மண்​டைய ஆட்டி ஆட்டி கவி​தை படிக்கறீங்க பாஸு என்று ஐக்கியமாகி விட்டனர்.


சமீபத்தில் தான் நந்தாவின் டிராகுலாவின் காதலி -2 க்கு முதன்மு​றையாக எதிர்கவி​தை பின்னூவாக எழுதி காலடி ஆபிஸில் வாங்கிக் கட்டிக்​கொண்​​டோம். எதிர்கவி​தை எழுதியதற்காக இல்​லே... அ​தை ஏண்டா இடு​கையா ​போடாம பின்னூவாப் ​போட்டேன்னுதான்.


பா.ரா.. எளிய சி​நேகத்தின் வாசம் வீசம் அடர் மர நிழல். எல்லாருக்கும் நிழலும் மணமும் வீசும் மரம் எனக்கு ஒரு கிளை​யை​யேக் ​கொடுத்து ஊஞ்சலாடுடா கண்ணு என்கிறது.​


அப்புறம் வானம் ​வெளித்த பின்னும் ​ஹேமா (சுவிஸ்). இவங்க கவி​தைகள் எல்லா​மே பயங்கர தமாஷா, காமடியா, சும்மா சிலு சிலுன்னு... அட ​போங்க சார் / ​மேடம்..! பதிவு எழுதறதுன்னா​லே, கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்து நல்லா ஒருதரம் அழுதுட்டு.. கண்ணீர் சுடச்சுட வர அப்படி​யே கீ​போர்​டை ​கொத்த ஆரம்பிச்சிருவாங்களாம்! இதுவ​ரைக்கும் நாலு கீ​போர்ட் மாத்திட்டாங்களாம்.. கீ​போர்ட் எழுத்​தெல்லாம் சீக்சீக்சீக்கிரமா அழிஞ்சி ​போயிடுதாம்!காலடி ஆபிஸிலிருந்து அவசர​ மெ​மோ:

​​பெறுநர்: மொக்​கை ஆபிஸர் நிர்: 4 - ​ஜெகநாதன்...

'ரொம்ப அழுத்த்தி ​ரெக்கார்​டை ​தேய்க்க ​வேணாம்.. இப்ப​வே இடுகை ​பெருசாக ​போய்விட்டது. இது கம்​பேனிக்கு நல்லதில்ல!'பரவாயில்ல கண்டுக்காதீங்க நீங்க.. இன்னும் ​கொஞ்சம் ​சொல்லிக்கலா​மே..


நமக்கு பிடிச்ச வ​லைதளங்களில் ச​மையல் குறிப்பு ​பக்கங்களும் உண்டு. மாப்ள ஏனாஓனாவும் கிகி சாரும் நல்லா சு​வையான உப்புமா கிண்டுவது எப்படி, க​டையில் வாங்கிய மசால் வ​டை​யை எப்படி ​பேப்பர் பிரித்து தின்பது என்கிற மாதிரி உப​யோகமான சமையல் குறிப்புகளா ​போட்டுத் தாக்குவது உண்டு. மாப்ள ஏனாஓனா ஓட்டல் ஓட்டலா போயி... ​போட்டோ எடுத்துட்டு (போட்​டோ... ​​மாத்திப் படிச்சிடாதீங்க மாப்ள) சாப்பாடும் சாப்பிட்டு அ​தைப் பத்தி சிலாகிச்சு இடுகையாக்கிடுவாரு.


அ​தேமாதிரி உப்புமடச்சந்தி ​ஹேமா. இவங்க 'நிஜமா​வே' சமைக்கிறவங்கன்னு நி​னைக்கி​றேன். ​கொஞ்சம் சிம்பிளான ஐட்டங்களா ​சொல்லித் தருவாங்க. அதே மாதிரி சஷிகா.. இவங்க ச​மைய​லைப் படிக்கிற விட வ​லைப்பக்கத்​தை பாக்கிற​தே அழகா இருக்கும். ச​மையலும் வித்யாசமான ​ரெஸிபிகளாப் ​போட்டுத் தாளிச்சிருவாங்க (ப்ரூட்ஸ் ​தொக்கு, ஓட்ஸ் மபின் என்று)


சஷிகா, இன்னிக்கு உங்க வ​லைதளத்தில பாத்த ஒரு பின்னூட்டம் - Malar Gandhi என்பவர் நடத்துகிற Kitchen Mishaps! என்கிற விபரீத ச​மையல் அனுபவங்க​ளை ​கேட்டிருக்கிறது. அதற்கு இன்றுதான் Me, Microwave and Mouse என்று ஒரு ப​டைப்​பை(!) சமர்ப்பித்திருக்கி​றேன். யூ??

அப்புறம்...
காலடி ஆபிஸிலிருந்து அவசர​ மெ​மோ-2:

​பெறுநர்: மொக்​கை ஆபிஸர் நிர்: 4 - ​ஜெகநாதன்...
'சொன்னாக் ​கேக்க மாட்​டே... ​பொட்டி​யை அமுத்திட்டுப் ​போய் படுக்கவும்..'


அதாவது.........

டிஸ்கி:

இடு​கை எழுதி ​ரொம்ப நாளாச்சு.. இந்த ரசி​கைக்காக ஒரு நாலு வரியாவது எழுதுங்க.. ங்க.. ங்க என்று அடம் பிடித்த, கத்தார் ரசி​கை ப்யூச்சர் ஷாந்தி அவர்களுக்கு இந்த இடு​கையின் ஏதாவது நாலு வரிகள் சமர்ப்பணம் ஆகின்றன.

இம்மீடியட்டா ​மொக்​கை ​வோணும் ​வோணும் என்று அடம் பண்ணிய அண்ணன் சங்கா, சங்கத் தலைவர் காலடி ரசிகர் மன்றம் மற்றும் தீஅதிதீ ரசிகர்கள் அவர்களுக்கு... குச்சிமிட்டாய் மற்றும் குருவி ​ரொட்டி ​செய்வது எப்படி என்று சஷிகா அல்லது ​ஹேமா(சுவிஸ்) ​ரெஸிபி ​சொல்லித் தருவார்கள்.