Monday, December 14, 2009

பின்னூட்டப் புயல்..!


இப்படி உசுப்​பேத்தி உசுப்​பேத்தி​யே இடு​கை எழுதுவ​தைவிட பின்னூட்டங்கள் அதிகமாக எழுதும்படிக்கு ​செய்து விட்டிருக்கிறீர்கள். இந்த புண்ணியம் அண்ணன் சங்காவையே ​​சேரும்.

ஆனா பாருங்க காமடிய.. நம்ம பதி​வு ​​கொஞ்சம் ​பெருசா ​​போயிட்டாப் ​போதும்... இம்மீடியட்டா அடுத்த பின்னூல ​ரொம்ப ​பெருசா இருக்குன்ன ​முறுக்கிட்டுப் ​போயிடறது.. அ​தை​யே அவங்க எழுதின இடு​கைக்கு ​பெரிய்ய்ய பின்னூவாப் ​போட்டால் உருகிட்டு குஜால் ஆயிடறது..! இந்த லாஜிக்குப் ​பேரு என்னங்க??



நம்ம ஆளுங்க எல்லா காலடிங்கிற குறுகிய குழிக்குள்ள அடக்கிட முடியுமா? அதுதான் ​டெக்னிகலா இப்ப கற்றது Excel வலைபதிவுல சக ஆசிரியனா எழுதிக்கிட்டிருக்​கேன். இது MS-Excel® பயன்பாடு பற்றி தமிழில் விளக்கும் முயற்சி. கற்றது Excel ஆரம்பிச்சது சங்கர். வழக்கம்​போல அங்கயும் பின்னூட்டமாக ஒரு புயல் என்ட்ரி ​போட்​டேன்! என்​னோட குட்டி குட்டி பின்னூஸ்க​ளைப் பார்த்து.. ​மெர்ஸலாயி நீயும் எழுதிட்டுப் ​போன்னு கூட்டாளியா ​சேத்துக்கிட்டாரு. ​ஸோ.. நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள் Excel பற்றி அறிய ஆவல் ​கொண்டவர்கள்.. அங்கயும் எட்டிப் பார்க்கலாம்.


எவ்வளவுதான் ​மொக்​கை​யே எழுதறது? ம்?



புயலாக பின்னூட்டங்கள் ​போடுவதில் நி​றைய ஆபத்துகளும் இருக்கின்றன. சின்ன உதாரணம்: கும்மி. இதுவ​ரைக்கும் கும்மி, அம்மி அல்லது மம்மி ரிட்டர்ன்ஸ்களில் சிக்காமல் தப்பித்து வருகி​றேன். காரணம் நாம ​​போடற பின்னூஸ்களின் நீளமா கூட இருக்கலாம்னு நம்ம காலடியின் காரிய கமிட்டி சந்​​தேகிக்கிறது.


சந்ருவுக்கு நான் ​போட்ட பின்னூ ​கொஞ்சம் ​பெருசு.. அதாவது சந்ரு அடுத்த இடு​கையா அந்த பின்னூட்டத்​தை​யே ​போட்டுட்டாருன்னா பாத்துக்​கோங்களேன்.


இப்பக் கூட சமீபத்தில் யாத்ராவுக்கு அவரது இருப்பு கவி​தை பற்றி ஒரு காத்திரமான பின்னூ ​போட்டு, அ​தை அவரும் இடுகையாக்கி இப்ப எடுத்திட்டார். நல்லதாப் ​போச்சு!


அட ​நேத்துக் கூட, நம்ம வால்​பையனுக்கு ​சோதிடமும் சந்திரனும் என்ற இடு​கைக்கு விஞ்ஞானம் அறிவியல் (ப்ரபஞ்சப்ரியன் நீங்களும் இந்த ஆட்டத்திலே இருக்கீங்க.. படிச்சுப் பாருங்க) கலந்து விளக்விளக்கி பின்னூ ​போட்டிருக்கி​றேன்.


வொய்டா ​ஜெகான்னுட்டு இருக்கு!


அப்புறம் சங்காண்ணன், பெரியண்ணன் ​சென்ஷி, கோவி.கண்ணன், பீர் Peer, இரும்புத்தி​ரை அரவிந்த், சி​நேகிதன் அக்பர், குப்பைத்தொட்டி நான் ஆதவன், ஏதோடாட்காம் ஏனாஓனா / கிகி, நள்​ளெண் யாமம் க.சீ. சிவக்குமார், அ​தே கண்கள் டவுசர் பாண்டி, வால்​பையன், பிரபஞ்சப்ரியன் இப்படி ​ரெகுலரா ​போய் உலாத்திட்டு வந்தாத்தான் காலடிக்கு நிம்மதி.



கவிஞர்கள் என்றா​லே ஒரு சிறப்பு ஈர்ப்பு வந்துவிடுவதாக காலடி உணர்கிறது.


நேசமித்ரன், நந்தாவிளக்கு நந்தா, கரு​வேல நிழல் பா.ராஜாராம் இவங்கதான் காலடியின் ​மெயின் டார்க்​கெட். ​​நேமித்ரனை நெருங்க ​வைத்தது நம்ம பின்னூட்டங்கள்தான். நந்தாவும் அப்படி​யே - நல்லா உத்து உத்து பாத்து மண்​டைய ஆட்டி ஆட்டி கவி​தை படிக்கறீங்க பாஸு என்று ஐக்கியமாகி விட்டனர்.


சமீபத்தில் தான் நந்தாவின் டிராகுலாவின் காதலி -2 க்கு முதன்மு​றையாக எதிர்கவி​தை பின்னூவாக எழுதி காலடி ஆபிஸில் வாங்கிக் கட்டிக்​கொண்​​டோம். எதிர்கவி​தை எழுதியதற்காக இல்​லே... அ​தை ஏண்டா இடு​கையா ​போடாம பின்னூவாப் ​போட்டேன்னுதான்.


பா.ரா.. எளிய சி​நேகத்தின் வாசம் வீசம் அடர் மர நிழல். எல்லாருக்கும் நிழலும் மணமும் வீசும் மரம் எனக்கு ஒரு கிளை​யை​யேக் ​கொடுத்து ஊஞ்சலாடுடா கண்ணு என்கிறது.​


அப்புறம் வானம் ​வெளித்த பின்னும் ​ஹேமா (சுவிஸ்). இவங்க கவி​தைகள் எல்லா​மே பயங்கர தமாஷா, காமடியா, சும்மா சிலு சிலுன்னு... அட ​போங்க சார் / ​மேடம்..! பதிவு எழுதறதுன்னா​லே, கம்ப்யூட்டர் முன்னாடி ஒக்காந்து நல்லா ஒருதரம் அழுதுட்டு.. கண்ணீர் சுடச்சுட வர அப்படி​யே கீ​போர்​டை ​கொத்த ஆரம்பிச்சிருவாங்களாம்! இதுவ​ரைக்கும் நாலு கீ​போர்ட் மாத்திட்டாங்களாம்.. கீ​போர்ட் எழுத்​தெல்லாம் சீக்சீக்சீக்கிரமா அழிஞ்சி ​போயிடுதாம்!



காலடி ஆபிஸிலிருந்து அவசர​ மெ​மோ:

​​பெறுநர்: மொக்​கை ஆபிஸர் நிர்: 4 - ​ஜெகநாதன்...

'ரொம்ப அழுத்த்தி ​ரெக்கார்​டை ​தேய்க்க ​வேணாம்.. இப்ப​வே இடுகை ​பெருசாக ​போய்விட்டது. இது கம்​பேனிக்கு நல்லதில்ல!'



பரவாயில்ல கண்டுக்காதீங்க நீங்க.. இன்னும் ​கொஞ்சம் ​சொல்லிக்கலா​மே..


நமக்கு பிடிச்ச வ​லைதளங்களில் ச​மையல் குறிப்பு ​பக்கங்களும் உண்டு. மாப்ள ஏனாஓனாவும் கிகி சாரும் நல்லா சு​வையான உப்புமா கிண்டுவது எப்படி, க​டையில் வாங்கிய மசால் வ​டை​யை எப்படி ​பேப்பர் பிரித்து தின்பது என்கிற மாதிரி உப​யோகமான சமையல் குறிப்புகளா ​போட்டுத் தாக்குவது உண்டு. மாப்ள ஏனாஓனா ஓட்டல் ஓட்டலா போயி... ​போட்டோ எடுத்துட்டு (போட்​டோ... ​​மாத்திப் படிச்சிடாதீங்க மாப்ள) சாப்பாடும் சாப்பிட்டு அ​தைப் பத்தி சிலாகிச்சு இடுகையாக்கிடுவாரு.


அ​தேமாதிரி உப்புமடச்சந்தி ​ஹேமா. இவங்க 'நிஜமா​வே' சமைக்கிறவங்கன்னு நி​னைக்கி​றேன். ​கொஞ்சம் சிம்பிளான ஐட்டங்களா ​சொல்லித் தருவாங்க. அதே மாதிரி சஷிகா.. இவங்க ச​மைய​லைப் படிக்கிற விட வ​லைப்பக்கத்​தை பாக்கிற​தே அழகா இருக்கும். ச​மையலும் வித்யாசமான ​ரெஸிபிகளாப் ​போட்டுத் தாளிச்சிருவாங்க (ப்ரூட்ஸ் ​தொக்கு, ஓட்ஸ் மபின் என்று)


சஷிகா, இன்னிக்கு உங்க வ​லைதளத்தில பாத்த ஒரு பின்னூட்டம் - Malar Gandhi என்பவர் நடத்துகிற Kitchen Mishaps! என்கிற விபரீத ச​மையல் அனுபவங்க​ளை ​கேட்டிருக்கிறது. அதற்கு இன்றுதான் Me, Microwave and Mouse என்று ஒரு ப​டைப்​பை(!) சமர்ப்பித்திருக்கி​றேன். யூ??

அப்புறம்...




காலடி ஆபிஸிலிருந்து அவசர​ மெ​மோ-2:

​பெறுநர்: மொக்​கை ஆபிஸர் நிர்: 4 - ​ஜெகநாதன்...
'சொன்னாக் ​கேக்க மாட்​டே... ​பொட்டி​யை அமுத்திட்டுப் ​போய் படுக்கவும்..'


அதாவது.........

டிஸ்கி:

இடு​கை எழுதி ​ரொம்ப நாளாச்சு.. இந்த ரசி​கைக்காக ஒரு நாலு வரியாவது எழுதுங்க.. ங்க.. ங்க என்று அடம் பிடித்த, கத்தார் ரசி​கை ப்யூச்சர் ஷாந்தி அவர்களுக்கு இந்த இடு​கையின் ஏதாவது நாலு வரிகள் சமர்ப்பணம் ஆகின்றன.

இம்மீடியட்டா ​மொக்​கை ​வோணும் ​வோணும் என்று அடம் பண்ணிய அண்ணன் சங்கா, சங்கத் தலைவர் காலடி ரசிகர் மன்றம் மற்றும் தீஅதிதீ ரசிகர்கள் அவர்களுக்கு... குச்சிமிட்டாய் மற்றும் குருவி ​ரொட்டி ​செய்வது எப்படி என்று சஷிகா அல்லது ​ஹேமா(சுவிஸ்) ​ரெஸிபி ​சொல்லித் தருவார்கள்.

62 comments:

Anonymous said...

கற்றது excel நல்ல முயற்சி. மொக்கை அடிக்கடி தொடர வாழ்த்துக்கள்.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//இந்த லாஜிக்குப் ​பேரு என்னங்க??

//

இயற்பியல்?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// கும்மி, அம்மி அல்லது மம்மி ரிட்டர்ன்ஸ்//

??

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//​ போட்டோ எடுத்துட்டு (போட்​டோ... ​​மாத்திப் படிச்சிடாதீங்க மாப்ள) சாப்பாடும் சாப்பிட்டு அ​தைப் பத்தி சிலாகிச்சு இடுகையாக்கிடுவாரு.//

அது திறமை..,

விஜய் said...

தீஅதிதீ ஜெகன் ரசிகர் மன்றத்தில் நானும் நிரந்தர உறுப்பினர் என்பதை இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்

விஜய்

Beski said...

ஜெ மாம்ஸ்,
அலுவலக வேலை அதிகம், அதனால்தான் எழுத முடியல... கொஞ்சம் ஒதுங்கி இருக்கலாம்னா விடமாட்டேங்குறீங்களே... இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே...

போட்டோவெல்லாம் நிறைய சேந்துபோச்சு... பதிவு போடத்தான் நேரம் இல்ல, சீக்கிரமே திரும்பி வறேன்.

யாத்ரா said...

ஸ்வாரஸ்யம் :)

ஷங்கி said...

ஐ! தம்பீ வந்துட்டாரு! அ!டண்டணக்கா டண்டணக்கா!
சரி, மொக்கையை விட்டுட்டு விஷயத்துக்கு வருவோம்...
நீங்கள் ஒரு பின்னூட்டச் சுனாமி! நான் படித்த வரையில் உங்கள் அளவுக்கு ரசித்துப் பின்னூட்டம் எழுதும் ஆள் இந்தப் பதிவுகில் இல்லை எனலாம். சும்மா வந்தோம் போனோம் என்றில்லாமல்...
தொடரட்டும் உங்கள் சேவை!
அப்புறம் வழக்கம்போலதான் சிரிச்சி மாளலை!(மனக்கஷ்டத்திற்கு ஒரு அருமருந்து) நீங்கள் நிறையப் பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். இன்னும் ஒரு சிலரை நான் படித்ததில்லை. படிக்க வேண்டும்... படிப்பேன்!

☀நான் ஆதவன்☀ said...

பின்னூட்ட புயல் அண்ணன் ஜெகன் வாழ்க வாழ்க! :)

☀நான் ஆதவன்☀ said...

அண்ணே யார் என்ன சொன்னாலும் விரிவாக(பெருசா) பின்னூட்டம் போடுறதை குறைச்சுறாதீங்க. உங்க ரசனை சார்ந்த கருத்து எங்களுக்கு முக்கியம் :)

சென்ஷி said...

அண்ணே.. சொல்றேன்னு கோச்சுக்காதீங்க.. நீங்க மொக்கை போடுறதுல அடிச்சுக்க ஆளில்லைன்னு நல்லா தெரியும். அதே மாதிரி உங்க வாசிப்பு அனுபவத்தையும், அனுபவப் பகிர்வுகளையும், சிறுகதைகளையும் அப்பப்ப கவிதைகளையும் எழுதணும்.

உங்களுடைய பின்னூட்டங்களையும் அப்பப்ப படிச்சு சந்தோசப்படுற காலடியோட தீஅதீ ரசிகர் கூட்டத்துல ஒருத்தன் தான் நானும்...

உங்க திறமையை விட்டுட்டு இப்படியே சும்மா இருக்கீங்களேன்னு செம்ம காண்டாகுது சில நேரத்துல.. ஒரு நண்பர்கூட என் கருத்துக்கு ஆமாஞ்சாமி போட்டாரு. அவரு எனக்கு முன்னாடி கமெண்டும் போட்டிருக்காரு..

அப்பாலிக்கா எக்சல் முயற்சி அருமை. எனக்கும் சில சந்தேகங்கள் இருக்குது. படிக்க ஆரம்பிச்சுடறேன்.

சங்காண்ணனும் இப்பல்லாம் ரொம்ப கம்மியா எழுதறாரு. இது சரியில்லன்னு இங்கயே எச்சரிக்கை விட்டுக்கறேன் :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

இத இத தான் எதிர்பாத்தோம் ...

ஷங்கி said...

அருமைத் தம்பி பெரியண்ணன் சென்ஷியை வழிமொழிகிறேன். உங்கள் வாசிப்பனுபவம் பிரமிக்க வைக்கும். அப்பப்ப தொட்டுக்க ஊறுகாய் மாதிரி மொக்கையைப் போட்டுட்டு, பெரியண்ணன் சொல்ற மாதிரி, ஒரு ஃபுல் இல்ல ஆஃப் அதுவும் இல்லன்னா ஒரு குவார்ட்டராவது போடுங்க தலைவா

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

வால் பையன் பக்கத்துக்கு போய்ப்பார்த்தேன் ஜெகன். பட்டைய கிளப்பி இருந்தார். அவரிடம் சரியான 'சவுக்கு' உள்ளது. சும்மா சுழற்றி சுழற்றி அடிக்க அவரை ஊக்குவிக்க வேண்டும். அதுக்கூட தேவையில்லை போலுள்ளது. யாரையாவது விட்டு சீண்ட வேண்டும். காரியம் தானாக நடக்கும்! அங்கு எனைப்பற்றி மிகவும் சிலாகித்துவிட்டிருந்தீர்கள். ரொம்ப கூச்சமாகப் போய்விட்டது. எல்லோரையும் மதித்து ஊக்குவிக்கும் ஜெகனின் இயல்புக்கு ஒரு சல்யுட்! ( பின்னூடப்பிதாமகன் ஜெகன் ! இது எப்படிஇருக்கு ?)

Menaga Sathia said...

என் சமையலையும் பிடிக்கும் என்று சொன்னதில் ரொமப் மகிழ்ச்சியாக இருக்கு சகோ.

மலர் அவர்களின் போட்டியில் பங்கு கொள்ள இப்பொ இயலவில்லை.மாமியார்க்கு உடம்பு சரியில்லாததால் இந்தியா போகிறேன்.இன்னும் பேக்கிங் வேலைலாம் இருக்கு.நீங்களும் உங்க குறிப்பை சப்மிட் செய்திருக்கிங்களா?வாழ்த்துக்கள்!!

நேசமித்ரன் said...

இந்தியா ஜெயிச்சிருச்சா மாப்ள என்று போகிற போக்கில் கேட்டுவிட்டு போவது ஒரு வகை ...

அந்த ஸ்கொயர் கட் லெக் ஸ்பின் பேசுவது இன்னொரு ரகம்

நீங்க ரெண்டாவது ரகம்

அம்பயர் கோட்டை கழட்டிட்டு அப்பப்போ ஆடுற ஆட்டத்துக்கு நான்
ரசிகன்

சந்திர பாபு பாட்டு போல எள்ளலும்
துள்ளலும் கலந்த நடை

ஆழமான பார்வை !!!பின்னூட்டங்களா இல்லை நல்லூட்டம் அவை எனக்கு

ஹேமா said...

ஜெகா...ஜே...என்ன சொல்லிப் பின்னூட்டம் போடன்னே தெரில.
உங்களை மாதிரி அழகா விமர்சிக்கத் தெரில.ஆனாலும் ஏதாச்சும் சொல்லணும்ன்னு இருக்கு.

ச்ச...மனசெல்லாம் கூசுற மாதிரி என்னை இவ்ளோ புகழ்ந்து தள்ளியிருக்கீங்களா இல்லை கிண்டல் பண்ணியிருக்கீங்களான்னுகூட புரிஞ்சுக்கக் கஸ்டமாயிருக்கு.என்ன எப்பிடியிருந்தாலும் உங்க கவனத்துக்கு "வானம் வெளித்த பின்னும்" இருக்கு என்கிறதில சந்தோஷம்.என் கவிதைகளை தமாஷ் காமெடின்னு சொன்ன முதல் ஆள் நீங்கதான் !

உங்க பின்னூட்டங்கள் எப்பவும் தேவையான ஒன்று ஜெகா.உள்ளதை உண்டு இல்லன்னு சொல்லி அடுத்த தரம் சரியா எழுதப்பண்றீங்க.

அடுத்து சமையல்.நான் உங்களை மாதிரி மைக்ரோஅவண்ல டக்ன்னு சூடாக்கி ஒண்ணும் சாப்பிட மாட்டேன்.
நல்லாவே சமைச்சுத்தான் சாப்பிடுவேன்.சொல்லித் தரலாம்ன்னா அதில எண்ணெய்,இதில கொழுப்புன்னு எல்லாத்தையும் ஒதுக்கினா என்னதான் சாப்பிடுவீங்க ?மைக்ரோ அவண்ல சூடாக்கி சாப்பிடறதும் உடம்புக்கு சரில்ல தெரியுமா ஜெகா.

மொக்கை இல்ல இல்ல ஜெகாவின் பதிவு வாசிச்சு களைச்சவங்களு குச்சிமிட்டாய் குருவிரொட்டி ரெடி பண்ணனும்.போய்ட்டு வரேன்.

Beski said...

//உங்க பின்னூட்டங்கள் எப்பவும் தேவையான ஒன்று ஜெகா//

அப்போ, மாம்ஸ் பதிவெழுதவே வேணாம்னு சொல்லுறீங்க....
ரைட்டு.

Kala said...

உவாவ்... கருத்துரை{க்கும்} ராஜாவே! வணக்கம்
இவ்வளவு புகழ் உங்களுக்கு!! எனக்கு

பொறாமையாக இருக்கின்றது{சும்மா,சும்மா
சும்மாதான் சொன்னேன்}
கருத்துரை இடும்போது
நமக்கு அதைப்பற்றி என்ன தோன்றுகிறதோ
அதைத் தயங்காமல் இட வேண்டும்
அப்போதுதான் அவர்களை அவர்கள் மேம்படுத்த
உதவும் .{அது உங்களிடம் உண்டு நன்றி}

நானும் அப்படித்தான்!!

வாழ்த்துக்களுடன் நன்றி.

thiyaa said...

பயங்கரமாகக் கஸ்ரப்பட்டு உசாத்துணை தேடியிருக்கிரின்கள்
நல்ல முயற்சி
சரியாக எழுதியுள்ளீர்கள்
வாழ்த்துகள்

ஹேமா said...

//அதி பிரதாபன் ...
//உங்க பின்னூட்டங்கள் எப்பவும் தேவையான ஒன்று ஜெகா//

அப்போ,மாம்ஸ் பதிவெழுதவே வேணாம்னு சொல்லுறீங்க....
ரைட்டு.//

யார் சொன்னா ஜெ பதிவு எழுதவேணாம்ன்னு.அவர் நிறைய அனுபவப் பதிவே போடலாம்.போட நேரமிருக்குன்னாலும் பதிவு போடத்தான் நேரமில்லை அவருக்கு.அவர் நிறைய எழுதணும்.

நந்தாகுமாரன் said...

சென்ஷி சொன்னது தான் கிட்டத்தட்ட என் கருத்தும்

சிநேகிதன் அக்பர் said...

// சங்காண்ணன், ​பெரியண்ணன் ​சென்ஷி, ​கோவி.கண்ணன், பீர் Peer, இரும்புத்தி​ரை அரவிந்த், சி​நேகிதன் அக்பர், குப்பைத்தொட்டி நான் ஆதவன், ஏதோடாட்காம் ஏனாஓனா / கிகி, நள்​ளெண் யாமம் க.சீ. சிவக்குமார், அ​தே கண்கள் டவுசர் பாண்டி, வால்​பையன், பிரபஞ்சப்ரியன்//

என் பெயருமா. பதிவெழுத வந்த லட்சியம் நிறைவேறிடுச்சு.

//கவிஞர்கள் என்றா​லே ஒரு சிறப்பு ஈர்ப்பு வந்துவிடுவதாக காலடி உணர்கிறது. //

சங்கத்துல சேர நானும் விண்ணப்பம் போட்டிருக்கேன் வந்து பாருங்க.

எழுதுங்க மாப்பு தொடர்ந்து எழுதுங்க நேரமில்லைன்னு காரணமெல்லாம் சொல்லக்கூடாது.

Malar Gandhi said...

Hi,

I took more than 20 minutes to decipher the Thamizh email. I can talk, write (using English keys) and read very very slowly (like a snail) Tamizh.

Although its my Father's(why always it should be mother's, huh!!) tongue...it was not my language at school:(

If your's is a food blog...it would have been easy for me to comment, looking at the picture!!!

Decided to run your entry this week.:)

Nathanjagk said...

வாங்க சின்ன அம்மிணி,
கற்றது Excel - இதுவும் சூரன் போர் மாதிரிதான்..! பெரிய எதிரியை மோதி ஜெயிக்கிற சிறுவன் மாதிரி!
வாழ்த்துக்கு நன்றி!

Nathanjagk said...

தல SUREஷ்..
ரொம்ப நாளாச்சு? எப்படியிருக்கீங்க?
அது தன்-சார்பியல் லாஜிக்னு ​நெனைக்கிறேன்.

மாப்ள ஏனாஓனாவாகிய அதி பிரதாபனின் வீரப் பிரதாபங்கள் சொல்லி மாளாது. தனியா வச்சுக்கலாம் ஒருநாள் கச்சேரிய!

Nathanjagk said...

அன்பு விஜய் (கவிதை(கள்))
வால்பையனின் ​சோதிடமும் அறிவியலும் பின்னூட்டத்தில் உங்களைப் பார்த்ததேன். ​ஆமோதிப்புக்கு நன்றி!
காலடி ரசிகர்களுக்கு பேட்ஜ் தயாராகிட்டு இருக்கு. உங்களுக்கு நிச்சயம் உண்டு!!

Nathanjagk said...

மாப்ள ஏனாஓனாவாகிய அதி பிரதாபன்,
ஏற்கனவே ​சொன்னதுதான்.. மாப்ள ஏனாஓனாவாகிய அதி பிரதாபனின் வீரப் பிரதாபங்கள் சொல்லி மாளாது.

போட்டோவோட பதிவு போடுங்க.
இதெல்லாம் தொகுத்தா ஒரு நல்ல சுவையான பயணக்கட்டுரை நூலா வரும்.

Nathanjagk said...

அன்பு யாத்ரா,
நன்றி நண்பா!

Nathanjagk said...

அன்பு சங்காண்ணா,
பதிவு எழுதமுடியாமப் போனதுக்கு காரணம் வேலைப்பளுதான். அதுவா வந்துதேன்னு ஒரு புது வேலையை (அதுவும் எக்ஸெல்தான்) எடுத்து பகுதி​நேரமா செஞ்சிக்கிட்டு வர்றேன்.. அதுதான் தாமதம்.

தனியா சமைக்கிறதுக்கு நம்ம பதிவுலக சமையலரசிகள் மற்றும் நளபாகர்கள் உதவியா இருக்காங்க. நீங்களும் போய் பார்க்கலாம். சமையல் ஒரு படைப்பிலக்கியம் என்பதை ​செஞ்சுப் பார்த்துதான் புரிஞ்சிக்க முடியும்!

இன்னும் நிறைய பேரை அறிமுகப்படுத்த ஆசை (உன்கிட்ட யாரு மைக் ​கொடுத்ததுன்னு ​கேக்காதீக) உதாரணமா பிரபஞ்சப்ரியன்.. இவரைப் பத்தி தனியா ஒரு பதிவே எழுதலாம். பதிவுலகத்தில் தமிழில் எளிமையா அறிவியல் எழுதுகிறார். ​இவருக்கு மொக்கை போட்டு கூட்டம் ​சேர்க்கிற எல்லா சாமார்த்தியங்களும் உண்டென்றாலும், ஒரு தவமாக அறிவியல் ​செய்திகளாக எழுதிவருகிறார். படிக்கத்தான் ஆளில்லே!

Nathanjagk said...

தம்பி நான் ஆதவன்,
அண்ணன் உசுப்பேத்தி விட்டது இல்லாம நீங்களுமா? இதெல்லாம் வாணாம்!

Nathanjagk said...

//☀நான் ஆதவன்☀ said...
அண்ணே யார் என்ன சொன்னாலும் விரிவாக(பெருசா) பின்னூட்டம் போடுறதை குறைச்சுறாதீங்க. உங்க ரசனை சார்ந்த கருத்து எங்களுக்கு முக்கியம் :)
//

நிச்சயம்.. ரசிக்க ​வைக்கிற எழுத்தை பாராட்டி எழுதறவிட வேறென்ன ​வேலை கிடக்கு?
நான் எப்பவும் நல்ல ரசிகன்..!
ரசிகனைத் தொலைத்த எவனும் படைப்பாளியா இருக்க முடியுமா??

Nathanjagk said...

வாங்க பெரியண்ணன் சென்ஷி,

துண்டோ, ​வெறும் கடிகாரமோ அல்லது ஒரு வேப்பங்குச்சியோ சுழற்றிக்கொண்டு நடந்து வரநிலத்தில் சட்டென்று ஒரு புள்ளியில் நின்று, கைகாட்டி இங்க ​தோண்டுடா, தண்ணி வரும் என்று ​சொல்கிற கிராமத்து ஆத்மாக்களைப் பார்த்ததுண்டா?

அது​போன்ற ஒரு அவதானிப்பு உங்களின் இந்தப் பின்னூ!

இதுக்கு முன்னாடி பறத்தலின் நிழல் என்று ஒரு சிறுகதை போட்டிருந்தேன்..! உங்க பின்னூட்டம் புயலா வரும்னு பாத்தா, கரை கடந்து ​போயிருச்சு!
படிச்ச மற்ற தீஅதீ ரசிகர்கள்... பிரியலேன்னுட்டாங்க. அப்புறம் அதுக்கு தனியா நான் ஒரு விளக்கம் எழுதி, கலா அவர்கள் ஒரு விளக்கம் எழுதி ஒருவழியா மலையேத்தியாச்சு.

நிறைய இருக்கு மனசில. நிச்சயம் எழுதிடலாம். நன்றி பெரியண்ணன்!

Nathanjagk said...

வாங்க *ஜன்,
நானும் உங்ககிட்ட இத இத இத இதைத்தான் எதிர்பார்த்தேன்! நன்றி!

Nathanjagk said...

சங்காண்ணா,
பெருசு கரெக்ட்டாத்தான் ​சொல்லியிருக்காரு.. எனக்கில்ல... உங்களுக்கு!
நான் குவா​போடறது இருக்கட்டும் நீங்க ஒரு கட்டிங்காவது போடுங்க முதல்ல!

அடுத்தவர்களால்​தொற்றிக்​கொள்ளும் உற்சாகம், சில சமயம் ​பொறுப்புணர்த்துகிறது. ​நன்றிண்ணே!

Nathanjagk said...

வாங்க பிரபஞ்சப்ரியன்,
வாலு நெஜமாவே டெரருதான்..! எப்ப மொக்கையப் போடுவாரு எப்ப சக்கையப் பிழிவாரு எப்ப சட்டையக் கழட்டுவாரு எப்படி மட்டை ஆவாருன்னு அவருக்கே தெரியாது. பதிவுலகத்தில் ஒரு தனிப்பட்ட அடையாளம் / தாக்கம் வால்பையனுடையது.
உங்களை இன்னும் சரியா அறிமுகப்படுத்தவில்லை என்று குறையுண்டு!

அப்ப கடியைப் போடுகிறேன் என்பது உண்மைதான்.. அதுக்காக பிதாமகன் ​ரேஞ்சுக்குத் தூக்கணுமா பாஸ்!?
:-)

Nathanjagk said...

சஷிகா,
தங்கள் பயணம் இனிதே நடக்கட்டும். தங்கள் மாமியார் நலமாகி விடுவார் என்று நம்புகிறேன்.

மலருக்கு நான் அனுப்பியது சமையல் குறிப்பு அல்ல எலி அடிப்பது எப்படி என்பதுதான்.. ​போயிட்டு நிதானமா வந்து படிங்க (அதுவும்​மொக்கைதான் - இங்கிலீஷ்​மொக்கை!!)

Nathanjagk said...

அன்பு நேசா,
பதிவுலகத்தை அர்த்தப்படுத்திக்​கொள்ள அதன் ஆளுமையை உணர்ந்து​கொள்ள காரணமாய் இருந்த​வலைத்தளங்களில் நேசமித்ரன் கவிதைகள் ஒன்று.

வாழ்த்துக்கு மிக்க நன்றி!

//அம்பயர் கோட்டை கழட்டிட்டு அப்பப்போ ஆடுற ஆட்டத்துக்கு//

எப்படிப்பா முடியுது இப்படியெல்லாம் சிந்திக்க?
கோட்டைக் கழட்டி 'ஆடும்' அம்பயரை Cheerleaderஆக கற்பனித்துக் கொள்கிறேன்!!!

Admin said...

தலைவா நானும் உங்க கட்சிதான்.... ஆனாலும் நான் பதிவு போடுவதுக்கு எனது பதிவுகளுக்கு நீண்ட பின்னுட்டங்களை அடிக்கடி போடுங்க. (சும்மா லொள்ளு)

Nathanjagk said...

அன்பு ​ஹேமா,
//இவ்ளோ புகழ்ந்து தள்ளியிருக்கீங்களா இல்லை கிண்டல் பண்ணியிருக்கீங்களான்னுகூட புரிஞ்சுக்கக் கஸ்டமாயிருக்கு//
கஷ்டமே வேணாம். அது சிறு எள்ளல்தான். கவிதைகளில் இருக்கிற ​சோக இருள்மையை விரட்டிவிடுகிற ஒரு ஆர்வம் - அவ்வளவே.

சமையல்..

சமைக்கும் போது அனுபவமாய் இருக்கிறது. சாப்பிடும்போது சுவையாய் (சிலசமயம் அழுகையாய்) இருக்கிறது. ஆனால் சாப்பிட்டு விட்டு பாத்திரம் கழுவுவது, கிச்சனை சுத்தம் பண்ணுவது இருக்கிறதே, யப்பாடி யம்மாடி.. ​பெரிய அவஸ்தையாக இருக்கிறது.
இந்த அவஸ்தையை மைக்ரோ​வேவில் வைத்து ஒரு க்ரில் சுற்று சுற்றினால் பாப்கார்ன் எதுவும் வருமா?

அறிவுரைக்கு நன்றி!

//குச்சிமிட்டாய் குருவிரொட்டி ரெடி பண்ணனும்//
இங்கதான் நீங்க காலடியின் சுவிஸ் பிராஞ்சி செயலாளர் என்பதை நிரூபிக்கறீங்க!
சுவிஸ்ல​சொக்கி​லேட்டுகதான் சாப்பிட்டிருப்பாங்க, நம்மூரு குச்சிமிட்டாய் செஞ்சு கொடுத்துப் பாருங்க..! புதுசா கடையே போட்டுடலாம்!

Nathanjagk said...

மாப்ஸ் ஏனாஓனாவாகிய அதி பிரதாபன்,
//மாம்ஸ் பதிவெழுதவே வேணாம்னு சொல்லுறீங்க//
மாப்ள, வெயிட் பண்ணிக்கிட்டே இருப்பீங்க​போல?

Nathanjagk said...

அன்பு கலா,
உங்களின் பின்னூட்டங்களும் மிக முக்கியமானவை என்பதை அனைவரும் அறிவோம்.
//நமக்கு அதைப்பற்றி என்ன தோன்றுகிறதோ
அதைத் தயங்காமல் இட வேண்டும்
அப்போதுதான் அவர்களை அவர்கள் மேம்படுத்த
உதவும் //
நீங்களும் அப்படித்தான்!
மிக்க நன்றி கலா!

Nathanjagk said...

ஹேமா,
//நிறைய அனுபவப் பதிவே போடலாம்//

இது​வேறயா?

//
போட நேரமிருக்குன்னாலும் பதிவு போடத்தான் நேரமில்லை அவருக்கு//

அடேங்கப்பா!! இதுக்குதான் சரக்கடிக்கிறது பத்தி பதிவு எழுதக்கூடாதுங்கிறது!!

Nathanjagk said...

அன்பு நந்தா,
கவனமெடுத்துச் செயல்படுகிறேன்.
நன்றி நண்பா!

Nathanjagk said...

மாப்ள அக்பர்,
//என் பெயருமா. பதிவெழுத வந்த லட்சியம் நிறைவேறிடுச்சு.//
இன்னும் நிறைய ​செய்ய ​வேண்டியிருக்கு நீங்க..!
//சங்கத்துல சேர நானும் விண்ணப்பம் போட்டிருக்கேன் வந்து பாருங்க.//
நிச்சயம்!
நன்றி மாப்ள!

Nathanjagk said...

அன்பு தியா,
வாழ்த்துக்கு மிக்க நன்றி!!

Nathanjagk said...

Hi Malar,
Malar... it's a Tamil word that instantly blossoms a flower to me. So, I mailed you in Tamil. I'm sorry. I realize your pain and time effort to read my 'T-mail'. However I feel bit happy, as I have had a chance to release your Tamil-snail from its shell for some time. (Mail, Tamil, Snail... any poem!?)

After seeing you food blog and the roomali roti magic, I am much inspired to start my own food-blog!!!
Currently I've a 'foot' blog (foot is called as 'Kaaladi' in Tamil - that's this blog name)

If I start a food blog, I'd call it as Hitler Kitchen. An apt name, right?
Hmm... There I can print a picture of my recipe, but I'm not sure that you will recognize it as a food!

Thanks for counting my entry for Kitchen Mishaps..! I like your KM event..! I must write to it as this worths my salt.

You people have kitchen mishap by accident; for me good food comes as an accident. A minute difference!
Hope you will throw the rat away before you publish my entry. Thanks Malar!

S.A. நவாஸுதீன் said...

ஆஃபிஸ் வந்ததிலேர்ந்து காலடி பக்கத்திலேயே உக்காந்துகிட்டு ரீலோட் பண்ணிகிட்டு இருக்கேன் நண்பா.

பதிவ படிக்க மட்டுமில்லை. மக்களோட கமெண்ட்டுக்கு உங்க பதிலும் படிக்கத்தான். அத்தனை சுவாரசியம்.

சிநேகிதன் அக்பர் said...

//'T-mail'.//

இது சூப்பர்.

//I am much inspired to start my own food-blog!!!
Currently I've a 'foot' blog (foot is called as 'Kaaladi' in Tamil - that's this blog name)//

கலக்கல்

வார்த்தை விளையாடுது.

வால்பையன் said...

நான் ஒரு நாளைக்கு நானூறு பின்னூட்டம் போடுறேன் தல!

விரலெல்லாம் வலிக்குது!

Nathanjagk said...

//சந்ரு said...
தலைவா நானும் உங்க கட்சிதான்.... ஆனாலும் நான் பதிவு போடுவதுக்கு எனது பதிவுகளுக்கு நீண்ட பின்னுட்டங்களை அடிக்கடி போடுங்க. (சும்மா லொள்ளு)
//
வாங்க வேட்டைக்காரரு..!
நிச்சயம் பெரிய்ய பின்னூவாப் போடுறேன்.. உங்களிடம் கொண்ட அன்பு மற்றும் உரிமை கொஞ்சம் தூக்கல் என்பதால் பின்னூவும் பெருசாகிக் கொள்கிறது சந்ரு!!
நன்றி!

Nathanjagk said...

//S.A. நவாஸுதீன் said...
ஆஃபிஸ் வந்ததிலேர்ந்து காலடி பக்கத்திலேயே உக்காந்துகிட்டு ரீலோட் பண்ணிகிட்டு இருக்கேன் நண்பா.

பதிவ படிக்க மட்டுமில்லை. மக்களோட கமெண்ட்டுக்கு உங்க பதிலும் படிக்கத்தான். அத்தனை சுவாரசியம்.
//
ஐ நவாஸூ!!!
சலாம் அ​லைக்கும்!!

பதிவப் படிங்க!
பதிவு பழசாயிருந்தாலும் பதிலு இளசா இருக்கணும்!!
புரியுதா நவாஸுக்கு??

Nathanjagk said...

அக்பர் மாப்ள,
//'T-mail'.//
இது சூப்பர்.

இப்படி​யெல்லாமா பின்னூவுக்கே பின்னூ போடறது??? அவ்வ்வ்!

​ரொம்ப இங்க கும்மி கொட்டுனாங்கன்னா, கம்பேனிய மாத்திக்கிட்டு இங்கிலீஷுப் பக்கம் ஒதுங்கிடலாம்..! அதுதான் முன்னேற்பாடா... இப்புடி!! எப்படி ஐடியா.. ​ஹேங்???

Nathanjagk said...

வால்பையன்,
//நான் ஒரு நாளைக்கு நானூறு பின்னூட்டம் போடுறேன் தல!

விரலெல்லாம் வலிக்குது!//

அ​தெல்லாம் ​செல்லாது ​செல்லாது..!
இங்கிலீஷ் பிரபொஸர் ​பொஸ்தவமெல்லாம் படிச்சிட்டு நான் ஒரு இடுகை.. ஸாரி... பின்னூ ​போட்டமில்​​லே (​சோதிடமும் சந்திரனும்) ... அதுக்குப் ​பேருதான் புயலு!! அஹக்காங்!!!

ஐ​யோ டிஸ்கி:
வாலு,
பின்னூட்டமின்னு நீங்க ​சொல்றது கமெண்டுதானே? இல்ல முன்னூட்டமா ஊத்திக்கிற 400 மில்லியா?? ...... அப்பயும் அதுக்கு ​விரல் வலிக்காதே???

சிநேகிதன் அக்பர் said...

என்னுடைய கவிதைக்கு பதில் சொல்லாமல் போனதை மென்மையாக கண்டிக்கிறேன். http://sinekithan.blogspot.com/2009/12/blog-post_7590.html

பித்தனின் வாக்கு said...

அப்படின்னா எங்க பதிவு எல்லாம் திரும்பிக் கூட பார்க்கின்றது இல்லையா? (முதல்ல நூ பேரு ஏமின்னு கேக்கக் கூடாது,அப்புறம் டிரையல் ஆகிடுவேம்). நானும், நான் போடுறது பதிவுன்னு நம்பித்தான் எழுதுகின்றேன். கொஞ்சம் கோபப் படாம படிக்கவும். வித்தியாசமான சமையல், அனுபவம் அப்பிடின்னு தப்பும் தவறுமா எதோ எனக்கு தெரிந்ததை எழுதுகின்றேன். பதிவு அல்லது பதிவர் என்று கூறாவிட்டாலும், கிறுக்கல் அல்லது கிறுக்கன் என்றாவது நினைத்துப் படிக்கவும். நன்றி,

Shanmugam Rajamanickam said...

நான் கொஞ்ச நாள் விடுமுறைல் இருந்தேன் அதற்குள் என்னை கலட்டி விட்டுடிங்களே???????????????

Malar Gandhi said...

Hi Jagan,

Shared an Award with you. Please feel free to collect them.:)

டவுசர் பாண்டி said...

என்னா லுக்கு !! பொட்டி வயிரா மேரி கர்துங்க வர்தே !!

யப்பா !! தல சொம்மா மார்கயி மாசம் ஜீகிறு தண்டா குட்சா மேரி கீதுபா !! கலக்கு தல !!

அவனவன் சினிமா பாத்துட்டு விமர்சனம் பிளாக்குல எழ்துவான் !! ஆனா !!

நீ மட்டும் தல , சினிமா பாக்கப் போறதையே !! பதிவாப் போட்டு தூள் கேளப்புரே !! உம பாணியே தனி !! சூப்பரூ !!

SUFFIX said...

எக்ஸல் புலியும் நீங்க தானா, நல்லா இருக்கு தொடர்ந்து எழுதுங்க. கால்டியிலேயும் நல்லாவே அடிக்கிறீங்க. வாழ்த்துக்கள்.!

சந்தான சங்கர் said...

நண்பர் ஜெகா அவர்களே,
நிறைய பதிவுகளில் உங்கள்
பின்னூட்டம் படித்திருக்கின்றேன்.
அதில் கவிதையை நிறைய ஆழ்ந்து
பின்னூட்டமிட்டு இருக்கின்றீர்கள்
குறிப்பாக நேசன், பா.ரா ஹேமா வரிகளில்..
எனது இடுக்கையில் நேசனையும்
பா.ரா வையும் நகல் எடுக்க முயற்சித்தேன்
அதில் உங்கள் விமர்சனம் எதிர்பார்கின்றேன்



அன்புடன்
சந்தான சங்கர்.

பா.ராஜாராம் said...

சென்ஷி,நந்தா கருத்துதான் என்னுடையதும்.

உங்களிடமிருந்து ஒரு பதிவு வருகிறது எனில் இப்பல்லாம் முன் வரிசையில் இருந்து விசில் பறக்கிறது.அந்த சத்தம் இல்லாது ரஜினி படமா என்பது போலும் வருகிறது.ரஜினியை நேரிலும் வி.சி.டி யிலும் பார்க்க மனசு வருவதில்லை.தியேட்டரில் பார்த்தால்தான்,(விசில்,மற்றும் தலிவாஆஆ..இல்லை எனில் அது என்ன ரஜினி படம்?,அவர் என்ன ரஜினி?)ரஜினி எப்பவும் ரஜினி!

அதனால் தியேட்டரில் எதிர் பார்க்கிறோம் தலிவா.

மற்றபடி அதே பழைய அன்பிற்கு நன்றி ஜெகா!

(தாமதத்திற்கு மன்னிக்கவும்.வேலைப் பளுதான்) ..