Friday, June 18, 2010

கும்மால்டிக்ஸ்ஸா..

அதுக்கென்ன தங்கத்துக்கு!..:

சுருள் முடி, லேசானது முதல் மிதமானது வரை தாடி, மதுரை முகம், அடாவடிப் பேச்சு இதுதான் செந்தாமரைச் செல்வன்.
அருள்மிகு தண்டாயுதபாணி பாலிடெக்னிக் ஃபார் மென் (பழனி) பாலிடெக்னிக்கில் எனக்கு சூப்பர் சீனியர்.
சாப்பிட்டாச்சா சம்பிரதாயக் கேள்வி அல்லது எத்தனை அரியர்ஸ் இருக்கு மச்சி போன்ற எல்லாக் கேள்விகளுக்கும் உற்சாகமாய் அதுக்கென்ன தங்கத்துக்கு என்பார்.
இந்த வார்த்தை எல்லாக் கேள்விக்கும் விடையாக கச்சிதமாக பொருந்துகிறதே என்ற வியப்பு எனக்கு! நீங்க கூட சொல்லிப் பாருங்களேன்: அதுக்கென்ன தங்கத்துக்கு.

கருத்தில்லேன்னுட்டாய்ங்க:

என் ப்ரிய பாலிடெக்னிக் சூப்பர் சீனியர் ராஜராஜன். அழகான கையெழுத்து, ஏகப்பட்ட மொக்கை, கிரிக்கெட் சூரப்புலி, அன்பான அண்ணன் இதுதான் ராஜராஜ விலாஸம். அசல் விலாஸம் மதுரை ஆரப்பாளையம்.

கடிதம் எழுதும் போது இப்படிக்கு என்றால் இப் எழுதி அதனுடன் படிக்கட்டு வரைந்து க்கு போட்டு முடிப்பார். மொக்கைராஜன் :)) கடிதத் தேதி 40/40Day என எழுதுவார். கேட்டால் ட்யூஸ்டே-வாம். அவரைப் பொருத்தவரை கடிதம் எந்தக் கிழமையில் எழுதினாலும் அது டியூஸ்டேதான். என்னா கரச்சல்?? பார்த்து 12 வருடங்கள் ஆயிற்று! இவரின் வார்த்தை உபயம்தான் கருத்தில்லேனுட்டாய்ங்க. டாங்க அல்ல டாய்ங்க.

அண்ணா காலேஸ் ஸ்ட்ரைக் எப்ப முடியும்?கருத்தில்லேன்னுட்டாய்ங்க
திருவள்ளுவர்ல என்ன படம்? கருத்தில்லேன்னுட்டாய்ங்க
மெஸ்ல சாப்பாடு ரெடியா? கருத்தி.....ய்ங்க
கோவிலுக்கு ஒரு ரவுண்டு போலாமா? கருத்....ய்ங்க
நீயெல்லாம் மனுஷனா? கரு.....ய்ங்க.....

வார்த்தையின் அர்த்தம் no idea என்பதின் தமிழாக்கமாம். சிலதுகள் மாநாடு இல்லாமலும் நடக்கின்றன :))

கும்மால்டிக்ஸ்:

எஸ்.பி. பாண்டி. பாலிடெக்னிக் வகுப்புத் தோழன். ஆனால் வயதில் சூப்பர் சீனியர். பாண்டியின் ஊர் போடி. எங்கள் பாலிடெக்னிக் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட். ஒருமுறை தேர்வு வகுப்பில் அனைவரும் எழுத ஆரம்பித்த சமயம். கல்லூரி முதல்வர் வந்தார். ஹால் டிக்கெட்டில் யாருக்காவது என் கையெழுத்து வேணுமா? என்றார். பாண்டி உற்பட சிலர் எழுந்தார்கள். அவரவர் இருக்கைக்கே வந்து கையெழுத்திட்டார் முதல்வர். என்னே தன்னடக்கம்? அதுதான் சொன்னேன் எங்கள் பாலிடெக்னிக் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்.

சும்மா கையெழுத்தை மட்டும் போட்டுவிட்டுப் போகாமல் பாண்டியிடம், 'இதையெல்லாம் முன்னாடியே வாங்கக் கூடாதா' எனக் கேட்டார்.
'ஸார்.. கல்யாணத்து போயிருந்தேன்'
'ஹால் டிக்கெட் கையெழுத்து கூட வாங்காம அப்படி யார் கல்யாணத்து போனே?'

'எ.. என் கல்யாணந்தான் ஸார்'

முதல்வர் அதற்கப்புறம் யாரிடம் கேள்வியே கேட்கவில்லை.

இப்பாண்டிதான் சீட்டு விளையாடும் போது அடிக்கடி 'கும்மால்டிக்ஸ்' என்பான். கமுக்கமாக ஆங்கில டிக்ஸ்னரியில் கூடத் தேடிப்பார்த்தேன். ம்ஹும்!

சாப்பாடு கும்மால்டிக்ஸா இருந்துச்சு, கும்மால்டிக்ஸ் ஃபிகர்டா, கும்மால்டிக்ஸா ஒரு சாத்து - எல்லாம் கும்மால்டிக்ஸ் மயமாகிப் போனது. வார்த்தையின் அர்த்தங்கள் சிலசமயம் பார்த்துப் புரிந்து கொள்ளணும் போல. கும்மால்டிக்ஸ்ஸை நாம் எப்படி வேணாலும் பயன்படுத்தலாம்; எங்கு வேணாலும். காப்பிரைட் பிரச்சினையில்லை :))

24 comments:

adhiran said...

இதுக்கென்ன தங்கத்துக்கு! கும்மால்டிஷ்கா இருக்கு. கருத்தில்லைன்ட்டாயங்கனு எப்பிடி சொல்றது!?

:-))))

Beski said...

சும்மா கிஜ்ஜுக்கான்னு இருக்கு...

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

//சிலதுகள் மாநாடு இல்லாமலும் நடக்கின்றன//

ஹா...ஹா ....ஹா....!

எனக்கு, என்னோடுப் திருப்பூர் கலைமகள் பாலிடெக்னிக்கில் படித்த போடி நாயக்கனூர் மணிகண்ட பாபு (பேஸ்கட் பால் பிளேயர்), கோவை செந்தில் வேல், மேட்டூர் கணேசன், தருமபுரி சரவணன், நாகர் கோவில் சுரேஷ், காட்டுமன்னார் கோவில் சிவக்குமார், போன்ற மற்றும் பல நல்லப் பிள்ளைகள் ஞாபகத்துக்கு வருகிறார்கள். வானவில்லினும் வண்ணமயமான வர்ணஜால நாட்கள் அவை. (யாராவது படித்துவிட்டு தொடர்புக் கொள்ளுவார்கள் என்ற நப்பாசையில்... நன்றி ஜெகன்.)

ஹேமா said...

ஜே....அதுக்கென்ன தங்கத்துக்கு !நல்லாவேயிருக்கு.நோகாம எல்லாத்துக்கும் எல்லாருக்குமே சொல்லிடாம் போல இருக்கு.
கருத்தில்லேன்னுட்டாய்ங்க ன்னு சொல்லிடாதீங்க !

இன்னும் நிறைய
எழுதியிருக்கலாம் நீங்க.

கலா said...

ஜெகன்,பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டார்
வந்து கொண்டிருக்கும் போது அவ் வழியாய்
வரும் உங்களிடம் பொண்ணைப் பற்றி
விசாரிக்கின்றார்கள் ,அதற்கு...
நீங்கள்: அதுக்கென்ன தங்கத்துக்கு என்று
சொன்னால் ...
என்ன நடக்கும் தலைவா?
யோசித்துப் பாருங்கள்!!

கும்மால்டிக்ஸ்:\\\\\

ஜெகன் அக்கம்,பக்கம் பார்த்துச் இச் சொல்லைச்
சொல்லுங்கள் உலகில் எத்தனை வகையான
மொழிகள் உண்டு அதில் இது ஒரு வகைமொழியைச்
சார்திருந்தால்...
நல்லதோ,கெட்டதோ யாருக்குத் தெரியும்?
அப்புறம் நான் அல்லவோ பஞ்சாயத்துக்கு
வரவேண்டும் இப்போ எனக்கும் நேரம்
கிடையாது அதனால் கொஞ்சம் பார்த்து
பக்குவமாய் நடந்துக்குங்க ........

பத்மநாபன் said...

நினைவுகளை கிளறி எடுத்து சொன்னது சுகம்...தங்கமும், கருத்தும் நேர்த்தியாக இருந்தது..இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் ..செம்மொழி மாநாட்டில் என்ன செய்கிறார்களோ இல்லையோ..மொக்கை, கெத்து, சப்பை, சூப்பர்..போன்ற தமிழ் ஆய்ந்த சொற்களுக்கு மாற்று கண்டுபிடிக்கவேண்டும்..அலுத்துவிட்டது.அதே சமயத்தில் பருப்பு, பிஸ்தா போன்ற சைவ திட்டுகளை அறிமுக படுத்திய திரை கதாநாயகர்களை பாராட்டவேண்டும்..அப்புறம் கும்மால்...பழனி ஸ்பெஷல் போல...குஜால் பரவிய அளவுக்கு பரவவில்லை.

சிநேகிதன் அக்பர் said...

பதிவு அதுக்கென்ன தங்கத்துக்கு

மாப்பு அவருக்கென்ன தங்கத்துக்கு.

பதிவு முழுக்க கும்மால்டிக்ஸா இருந்தது

அடுத்த பதிவு ? கருத்தில்லேன்னுட்டாய்ங்க:

பா.ராஜாராம் said...

எந்த comitments-சும் இல்லாம, சுதந்திரமா இயங்குறீங்க ஜெகா.

ஒளிஞ்சு ஒளிஞ்சு பிட்டு படம் பார்க்க போன எடத்துல,"வாடா, டீ சாப்பிட்ரயா?" என்று கேட்டார் ராமச்சந்திர பெரியப்பா இன்டர்வெல்லில்.

என்ன சொன்னேன் என நினைவில் இல்லை ஜெகா..ஆனா, டீ சாப்பிட்டோம், வேறு பேச்சில்லாமல்.

இதை ஏன் இங்கு கோர்க்கிறேன் என தெரியலையே ஜெகா..

//கும்மால்டிக்ஸ்ஸை நாம் எப்படி வேணாலும் பயன்படுத்தலாம்; எங்கு வேணாலும். காப்பிரைட் பிரச்சினையில்லை//

ஒருவேளை இதில் விழுந்தேனா?.. தெரியல.

பாவி.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

// ஒளிஞ்சு ஒளிஞ்சு பிட்டு படம் பார்க்க போன எடத்துல,"வாடா, டீ சாப்பிட்ரயா?" என்று கேட்டார் ராமச்சந்திர பெரியப்பா இன்டர்வெல்லில்.//
என்னிடம் என் மாமா , " டேய்... பில்ல நான் கொடுக்கறேன், நீ போ" என்றார்...... ஒயின் ஷாப்பில்!

வினோத் கெளதம் said...

செம கும்மால்டிக்ஸ்ஸா இருக்கே மேட்டர்..:)

ஸ்ரீராம். said...

நண்பர்களையும் நட்பையும் நினைவு கூர்ந்தது அழகு. நட்புகளுக்குள் பிரத்யேக வார்த்தைகள், சங்கேதங்கள்...எனக்கும் நட்புக் கால நினைவுகளைக் கிளறி விட்டு விட்டீர்கள்...

பத்மா said...

ஆஹா அட்டகாசமான நினைவு மீட்டல். இதெல்லாம் மதுரைகாரங்களுக்கே உரித்தானது.சூப்பர் .

Nathanjagk said...

அன்பு ஆதிரன்,
இந்த வார்த்தைகளின் பிறப்பிடமே உங்க ஊர் ஆத்மாக்கள்தான்!
இன்னும் கொஞ்சம் மண்வாசத்தை நீங்க கிளறலாம் - ஒரு மழை மாதிரி!

-

புது மாப்பி அதி பிரதாபன்,
திருமண வாழ்த்துக்கள்! போன்ல விவரமா கேட்டுகிறேன்.
பின்னூட்டம் கிஜ்ஜுக்கான்னு இருக்கிறதப் பார்த்தா மாப்பி ஈஸ் ஹேப்பி-ன்னு புரியுது :))

-
அன்பு பிரபஞ்சப்ரியன்,
ஆற்றுமீன்களை அழகா லபக்கும் கொக்கு மாதிரி வார்த்தைகளைப் பிடிக்கறீங்க.
ப்ரபஞ்சம் அளவுக்கு ப்ரியம் உங்கள் மேல்! குறிப்பிட்ட நண்பர்கள் ப்ரபஞ்சத்தின் எந்த மூலையில் இருந்தாலும் உங்களைத் தொடர்பு கொள்வார்கள்!
தருமபுரி சரவணன்? எனக்கொரு தருமபுரி சரவணனைத் தெரியும். தருமபுரி ச்சீயான் விக்ரம் ரசிகர் மன்றத்தலைவர். பார்க்க நீட்டாக இருப்பார். வயது 35 இருக்கலாம். அவரா?

Nathanjagk said...

அன்பு ஹேமா,
அதுக்கென்ன தங்கத்துக்கு - ஒரு நம்பிக்கை; கும்மால்டிக்ஸ் - ஒரு கொண்டாட்டம்; கருத்தில்லேன்னுட்டாய்ங்க - ஒரு அழகான மறுப்பு.
வாழ்க்கை கூட சில சமயம் இப்படித்தான்! நன்றி!

-

அடடே, ஹேமா-வைத் தொடர்ந்தே கலாவா?
வாங்க! ரெண்டுபேரும் ஆலோசனை செய்திருப்பீர்களோ?? இவனுக்கு என்னப் பின்னூட்டம் போடலாம்னு :))
பொண்ணு பார்க்கப் போறதா? ஹேஹே.. நல்ல சம்பவத்தைச் சொல்லியிருக்கீங்க. நாளைக்கே இதை இடுகையா எழுதிடறேன்.
என்னிடம் யாரும் இதுவரை பொண்ணு எப்படி என்று விசாரித்தில்லை. ஒருவேளை இந்த மூஞ்சிக்கிட்ட போய் கேட்கிறதான்னு நினைச்சிருப்பாங்களோ ???நன்றி!
-

அன்பு பத்மநாபன்,
உங்களின் செறிவான கருத்துகளுக்கு மிக்க நன்றி! சில வார்த்தைகளுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பதை விட, மொழி அதை அப்படியே சுவீகரித்துக் கொள்ள வேண்டும்.
கும்மால்டிக்ஸ் போன்ற வார்த்தைகளின் பிரபல்யம் கம்மிதான். இதை நாம்தானே முன்னெடுத்துச் செல்லவேண்டும்... கம்.. சொல்ல வேண்டும்.. ஹிஹி!!

Nathanjagk said...

அன்பு மாப்பி அக்பர்,
நூறடிச்ச சிநேகிதனுக்கு கும்மால்டிக்ஸா ஒரு தாங்க்ஸ்!

தங்கம் தங்கம்ன்னு சொல்லிச் சொல்லியே ஆபிஸில் தங்க வச்சு, உருக்கி அடிச்சி பெண்டை நிமித்திடறாங்க! இங்கயுமா??

-

அன்பு பா.ரா.
இவுரும் நூறிச்சிருக்காரு. மனமார்ந்த வாழ்த்துக்கள் ராஜா சார்.
உங்கப் பின்னூட்டத்துக்கு இங்க விஸில் பறக்குது!
அன்பு பிரதானமா இருக்கிற மனுஷங்களுக்கு இடம் பொருள் தெரிவதில்லை.
பஸ்ஸில் தெரிந்தவர் நிற்பதைக் கண்டு, உட்கார்ந்திருப்பவனின் தூக்க நடிப்பைக் காணும் காலத்தில்,
ஆறாத டீயை ஆற அமரக்குடிக்கலாம்.! நன்றி ராஜா!

-

அன்பு வினூ,
அதுக்கென்ன தங்கத்துக்கு.. நன்றி!
என்ன அடுத்த பதிவே காணோம்???

Nathanjagk said...

அன்பு ஸ்ரீராம்,
மிக்க நன்றி! எங்கள்-பிளாக்கில் இதுபற்றி சுவாரஸியமாக ஒரு பதிவை வித்யாசமாக வெளியிடலாமே?
-

அன்பு பத்மா,
மிக்க நன்றி! மதுரை வட்டாரத்தின் சிறப்புகளில் இதுவும் உண்டு. ஊருக்குத் தக்கமாதிரி வெவ்வேறு பரிணாமம் கொள்ளும் வார்த்தைகள் ஏதோவொரு கருத்தைச் சொல்ல வருகின்றன. அதை ஆய்வுக்குணம் கொண்டு அணுகுதல் நல்லது. அல்லவா?

விஜய் said...

எப்படித்தான் இப்படி டிகால்டியா யோசிப்பீங்களோ

வாழ்த்துக்கள் நண்பா

விஜய்

ஷங்கி said...

மொழி வளர்க்கும் புலவர்களுடன் கூத்தடிச்சிருக்கீங்க! கும்மால்டிக்ஸ்ஸாத்தான் இருந்திருக்கும். செம்மொழி வளர்த்த செம்மலே வாழ்க!

//கமுக்கமாக ஆங்கில டிக்ஸ்னரியில் கூடத் தேடிப்பார்த்தேன்// - இதை நான் சில ஆங்கிலப்படப் பெயர்களைக் கண்டு குழம்பி இந்தியாவில் இருக்கும்போது செய்ததுண்டு (படம் பார்க்காமல்/விமர்சனம் படிக்காமல்). கடைசியில் அந்த வார்த்தை கதாநாயகன் (அ) நாயகி அல்லது வேறு யாராவது அல்லது எதனுடையதாவது பெயராக இருக்கும். எப்படில்லாம் பேரு வைக்கிறாங்கப்பா!

மதுரைக்காரங்க மாதிரி நாகரோல்காரங்க (நாகர்கோவில்) எடுத்தாளுகிற நிறைய வார்த்தைகள் நமக்கு ”கருத்தில்லேன்னுட்டாய்ங்க” இருக்கும், ஆனா அவங்களுக்கு கும்மால்டிக்ஸ்ஸா இருக்கும். அப்புறமென்ன ”அதுக்கென்ன தங்கத்துக்குன்னுட்டு” நாமளும் ஜோதியில ஐக்கியமாகிற வேண்டியதுதான்!

Nathanjagk said...

விஜி,
எல்லாம் சும்மா நிந்தநிதுக்குதான் (சத்யராஜ் பாணியில்..)
நன்றி தளபதி!

***

அன்பு சங்காண்ணா,

இந்த கமுக்கத்தேடல் விஷேசமானது. சிலரிடம் ஆங்கிலத்தில் பேசும்போது புதிதாக ஒரு வார்த்தைக் கிடைக்கும். அதுக்கு கைவசம் அர்த்தம் இல்லாவிட்டாலும் அந்த வார்த்தையைப் பிடித்துக் கொண்டே மேற்கொண்டுப் பேச்சை வளர்த்து.. ஒருமாதிரி மையமாக அந்த புதுவார்த்தையின் அர்த்தத்தை அவரிடமிருந்தே அறிந்து கொள்வது. சில வார்த்தைகளுக்கு அந்தக் கொடுப்பினை இருக்காது. நீங்க சொன்ன மாதிரி யெஸ்ஸையும் நோவையும் கலந்த மாதிரி தலையை ஆட்டிட்டு... உனக்கு மட்டும்தான் மண்டை காயவைக்கத் தெரியுமான்னு நாமளுக்கு நம்மகிட்ட இருக்கிற ஒரு தடார் வார்த்தையை கொடுத்துட்டு வந்துடுவோம். என்னா ஜாலி??

எப்போ நீங்க எழுதப்போறீங்க??

ஷங்கி said...

சில மாதங்கள் ஆகலாம். தமிழில் எழுதாமலும் போகலாம். எழுதினாலும் திரட்டியில் இணைக்க வேண்டாமென்று ஒரு யோசனை ஓடுகிறது. (இணைச்சிட்டாலும்!!)

thamizhparavai said...

நாங்களும் மதுரக்காரய்ங்கதேன்...

Nathanjagk said...

அண்ணன் ஷங்கி மாதிரியே எனக்கும் ஒரு யோசனை உண்டு.
டெக்னிக்கலாக ஒரு பிளாக் ஆங்கிலத்தில் எழுத முயன்று வருகிறேன். பார்ப்போம்.
ஆல் தி பெஸ்ட் ஷங்கி ப்ரதர் :))

--

அன்பு தமிழ்ப்பறவை,
நீங்க அந்த ஊர் மட்டுமல்ல இந்தூருக்கும் சேர்ந்தவர்தான்.
இப்ப இந்த ஊருக்கும்!

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அதுக்கென்ன தங்கத்துக்கு - நல்லா இருக்குங்க சூப்பர்...

//கடிதம் எழுதும் போது இப்படிக்கு என்றால் இப் எழுதி அதனுடன் படிக்கட்டு வரைந்து க்கு போட்டு முடிப்பார்//
ஐ... symbolic representation ...அட்டகாசம்

எல்லாம் கும்மால்டிக்ஸ் மயம் தான் போங்க

aavee said...

Is it "Kummaltix" or "kummaldix" or "gummaltix" or "gummaldix".