Template change play maniya (TCP Maniya) என்கிற மர்மமான நோயினால் பீடிக்கப்பட்டுள்ளேன். மருந்து சொல்லுங்கள்.
ஜகன் இந்த பின்னூட்டம் எல்லாரும் படிக்க வேண்டியது.
என்று பத்மா பணித்ததாலும்... இது இங்கு இப்படி இடுகையாகிறது:
என்று பத்மா பணித்ததாலும்... இது இங்கு இப்படி இடுகையாகிறது:
. . .
டெம்பிளேட்டுகளை மாற்றுங்கள். வியாதி அல்ல விளையாட்டுதான். சில கட்டுப்பாடுகள் எடுத்துக்கொள்ளலாம்.
1. நம் எழுத்துக்கு தக்க டெம்பிளேட் முக்கியம் (நிறைய வலைத்தளங்கள் கருநிறப் பின்னணியில் இருக்கின்றன. கவிதை, புனைவு போன்றவற்று இது பொருத்தமாக இருக்கலாம். ஆனால் சமையல் குறிப்பு, அனுபவக் கட்டுரை போன்றவற்றுக்கும் இப்படி அடர்வான நிறங்கள் தேவையா? Blog doesn't mean black of course.)
2. நமக்கென்று ஒரு வர்ணம் அல்லது பல வர்ணங்கள் என நிறுவிக்கொள்ளலாம். வர்ணக் கூச்சல் கண்களை மட்டும் குழப்புவதில்லை (காலடியில் நான் பயன்படுத்துவது இரண்டே வண்ணங்கள்தாம் - சாம்பல் மற்றும் ஊதா)
3. நல்ல வலைத்தளத்தின் அடையாளங்கள் சில:
- குறைந்த எடை (கண்டமேனிக்கு விட்ஜெட்கள் (widgets / gadgets) சேர்த்து லோடிங் டைம்மை அதிகம் செய்யக்கூடாது)
- எளிதான நடை (easy navigation - வாசகர்கள் பெரிதும் பயன்படுத்தும் லிங்குகள் முதலில் வருவது. மற்றவை கடைசியில்)
- நம்பகத்தன்மை (நம் காசுக்கோ அல்லது நேரத்துக்கோ இது குந்தகம் தராது என்ற எண்ணம் வாசகர்களிடம் ஏற்படவேண்டும்)
- தள அமைதி (குறுக்கும் நெடுக்கும் ஓடுகிற வாசகங்கள் அல்லது திடீரென தோன்றுகின்ற பாப்-அப்கள் இல்லாமல் இருப்பது)
4. எழுத்துரு (font) மற்றும் அவற்றின் அளவுகள் (font size) ஒரே தரத்தில் இருப்பது நன்று
5. பின்னணி மென்மையான வண்ணத்தில் இருக்குமானால் எழுத்துக்கள் அடர்வான நிறத்தில் இருத்தல் நலம் (மஞ்சள் நிற பின்னணியில் வெண்ணெழுத்துக்களை வாசிக்க முடியாதல்லவா? அதேபோல் கீழ்க்கண்ட நிறப்பிணைப்புகளைத் தவிர்க்கலாம்
6. வலைப்பூவின் எதிர்பார்ப்புகள், தகுதிகள் மற்றும் சாத்தியங்கள் புரிந்து கொண்டு தளத்தை வடிவமைத்தல் சிறப்பு
- கம்யூனிஷம் தான் உங்கள் பிரதான நிறுவல் என்றால் சிவப்பு நிற அடிப்படையை தவிர்க்க முடியாது
- வானம் என்று பெயர் கொண்ட வலைப்பூவுக்கு ரோஜாப் பூ நிறத்தில் பின்னணி அமைப்பதை விட ஊதா நிறம் உகந்தது
- படிப்பவர்களில் வயதானவர்கள், பார்வை குறைப்பாடுகள் (நிறக்குருடு உட்பட), மற்றும் சிறுதிரையில் பதிவைப் படிப்பவர்கள் (செல்போன் மாதிரி) செளகர்யங்களை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்
- வலைத்தளம் ஒரே வடிவமைப்பில் இருந்தால் அலுத்துப்போக வாய்ப்புண்டு. இதைத் தவிர்க்க அவ்வப்போது சில மாறுதல்கள் கொண்டு வரலாம். சடாரென வானவில் பின்னணியில் இருந்து பீரங்கிகள் அணிவகுப்பு பின்னணிக்கு மாற்றுவது வாடிக்கையான வாசகர்களுக்கு அதிர்ச்சியளிக்கலாம்
- ஒவ்வாமை ஏற்படுத்தும் நிறங்களைத் தவிர்க்கலாம் (மென்சிவப்பு பின்னணி, சிவப்பு பின்னணி போன்றவைகள்)
- நாம் எழுதுவது மட்டும் கருத்தல்ல; வலைப்பூவின் வடிவமைப்பே ஒரு கருத்துதான்
- படிப்பவர்கள் வசதி, காலமாற்றம், ஊடக மாற்றங்கள் மற்றும் நடைமுறை கருத்துக்கள் போன்றவற்றுக்கு ஏற்ப வடிவமைப்பில் அவ்வப்போது புத்தாக்கம் செய்யவேண்டும்
7. கண்களுக்கு கனிவான வலைத்தளம் என்பது அதன் எளிமையான தோற்றத்தால்தான் சாத்தியமாகிறது என்ற புரிதல் அவசியம்
8. இலவசமாகக் கிடைக்கிற காரணத்தால் டெம்பிளேட்டுகளை அடிக்கடி மாற்றுதல் கருத்தியல் ரீதியான நம் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும்
9. முக்கியமாக, இடுகைகளுக்குப் பயன்படுத்துகிற படங்கள் காப்பி ரைட் பிரச்சினையில்லாமல் இருக்கிறதா எனக் கவனித்துப் போடவும்
10. அதிமுக்கியமாக, நம் வலைப்பூவின் வடிவமைப்பு கட்டுப்பாடு மொத்தமும் நம் கைவசம் இருக்கிறதா என்பது முக்கியம் (சிறு மாறுதலுக்குக் கூட அடுத்தவரை நம்புகிற நிலை இல்லாமல் இருக்க வேண்டும்)
39 comments:
நூறு சதவிகிதம் பயனுள்ள பதிவு. நன்றி ஜெகநாதன். உங்களைப் போன்ற பதிவர்களால் தான் பதிவுலகம் சிறக்கின்றது.
நல்ல பகிர்வு .
மேலும் டெம்பிளேட்டுகளை மாற்றுவது எப்படினு விவரமா சொன்னீங்கனா இதைவிட மிகவும் பயனுள்ளாதாக இருக்கும் என நினைக்கின்றேன் ஜெகன் .
டெப்ம்ளேட் பற்றிய இந்த பதிவு புதிதாக எழுதும் மற்றும் தற்பொழுது எழுதிக்கொண்டிருக்கும் பதிவர்கள் அனைவருக்கும் உபயோகமானதாக இருக்கும்,,,
நூறு சதவிகிதம் பயனுள்ள நல்ல பகிர்வு ..
மொதல்ல ஒரு டெம்ப்ளேட் பின்னூட்டம். (இது டெம்ப்ளேட் பின்னூட்டஃபோபியா!) நல்ல பயனுள்ள பதிவு! ஹிஹி!!!
நான் தாங்கள் சொன்னவைகளைக் கடைபிடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். இருந்த இரண்டு விருதுப் படங்களையும் கடைசி சில மாதங்களில் எடுத்து நண்பர்களின் பதிவுக்குத் தொடுப்பு கொடுத்து விட்டேன் (அது வேற எதற்கு லோடிங் டைம் எடுத்துக்கிட்டுன்னு). அப்புறம் முதல் சில இடுகைகளில் மூன்று நான்கு நிறங்கள் இருக்க, தங்கள் அறிவுரைப்படி அதற்குப்பின் இரு வண்ணமாக்கி விட்டேன், இல்லையா?!
இந்த விட்ஜெட், அந்த விட்ஜெட்னு சேர்த்துத்தான் தளத்திற்கு வைரஸ் கொண்டு வருகிறார்கள். ஆனாலும் பட்ட பின்னும் அதைக் குறைப்பதைக் காணோம். பாப் அப், இன்னொரு எரிச்சல் வரவைக்கும் சங்கதி. நாம் அறியாமல் இருமுறை சொடுக்க பாப் அப் வந்து தொலைக்கும். அந்த மாதிரி அனுபவப்பட்டால் அனேகமாக அதுதான் அந்த வலைப்பூவின் கடைசி மேய்தல்!!
//இலவசமாகக் கிடைக்கிற காரணத்தால் டெம்பிளேட்டுகளை அடிக்கடி மாற்றுதல் கருத்தியல் ரீதியான நம் நம்பகத்தன்மையை கேள்விக்குள்ளாக்கும்// - நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குறதுக்கு காரணமெல்லாம் தேவையில்லீங்கோ!, நாங்க நம்பவேண்டாம்னு முதல்ல முடிவெடுத்துருவோம். அப்புறம் எதையாவது காரணத்தைக் கண்டுபிடிச்சிருவோம்! தம்பி வேற ஒரு காரணத்தைச் சொல்லிக் கொடுத்துருக்கிறாரு! அதையும் மனசுல வைச்சுக்கிடுவோம்ல! ஆமா, பதிவையே தூக்குனா?!
நல்ல பயனுள்ள அறிவுப்பூர்வமான இடுகை! (இது டெபி இல்லை!)
நல்ல பதிவு
அருமை.....
தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....
நல்ல விவரங்கள். நன்றி.
ஜெகன் நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை
சில கருமையான நிறங்கள் கண்களுக்கு
அதிர்ச்சி ஊட்டுகின்றன
சில தளங்களை நான் பார்வையிடும் போது..
நல்ல தகவல்களைச் சொல்லிருப்பார்கள்
ஆனால் அதன் எழுத்துக்கள் கண்களைக்
கூசவைக்கும் நிறங்களிலும்,எழுத்துகள்
மிக {வசனம்} நெருங்கியும்,படிப்பதற்கு
மிகவும் சிரமமாய் இருக்கும்.
நல்ல தகவல்களென்றாலும் இப்படியிருந்தால்
{கண்களுக்குக் கெடுதல்} நான் படிக்கவே.
மாட்டேன்.
உங்கள் கருத்துகளை ஏற்று {விரும்பியவர்கள்}
நடப்பார்களென நம்முவோம் நன்றி ஜெகன்
நூறு சதவிகிதம் பயனுள்ள பதிவு.
ஜே...எப்பிடி இருக்கீங்க.கனநாளாக் காணோம்.சுகம்தானே !
நல்ல பதிவு.எனக்கு மிகவும் இப்படியான அறிவுரைகள் தேவைப்படுகிறது.நன்றி.
good...
புரனொஷனலான அணுகு முறை ஜெகன்
ஆதிரன் தளத்திலேயே சொல்ல நினைத்தேன் பஸ் செய்யவும் நினைத்தேன்
ம்:( வாய்க்கவில்லை
இங்கு பகிரச் சொன்ன பத்மாவுக்கு நன்றி
/ (சமீபத்திய உதாரணம் சாருநிவேதிதா வலைத்தளம் :)))//
இந்தா வாங்கிக்கோ !
பதிவை படித்துவிட்டு, சத்தமிலாமல் என் ப்ளாக்கை ஒரு முறை பார்த்து விட்டு வந்தேன் ஜெகன். நானும் கொஞ்ச கை வைக்கவேண்டுமா ? ரொம்ப மோசமாகவா இருக்கிறது? தேவையான யோசனைகள். நன்றி.
நாவல் பழ கலர் நான். மயில் கழுத்து நிற, T-ஷர்ட் சரியா இருக்குமா ஜெகா எனக்கு?
எனக்கு தெரிந்த கேள்வி கேட்க விரும்பினேன். :-)
லிங்கை கண்ணனுக்கு அனுப்பலாம். பொண்டாட்டி மாதிரி பார்த்த முகமா இருக்கு என் தளம்.
மிகவும் உபயோகமான பதிவு!!
//நல்ல பதிவு.எனக்கு மிகவும் இப்படியான அறிவுரைகள் தேவைப்படுகிறது.நன்றி.
//
கண்டிப்பா ஹேமாவுக்குத் தேவையான பதிவுதான்..... :-)
:-)
எல்லாருக்கும்தான்...
தேவையான ப்திவு. நல்ல அறிவுறுத்தல். நன்றி.
நல்ல பகிர்வு மாப்ஸ் ஜெகா..
புதிதாக எழுதவருபவர்களுக்கு பயனுள்ள பதிவு.
உபயோகமான தகவல்கள்
வாழ்த்துக்கள்
விஜய்
நான் வியந்த வலைத்தளம்
Jim Carrey's official websit
http://www.jimcarrey.com/
அன்பு நண்பர்களுக்கு,
தங்களுக்கு என் நன்றி. உங்கள் வலைத்தளம் கண்ணுக்கு கனிவான தளமாக மாற்றுவதன் மூலம் சிறப்பான வாசகர் வட்டத்தைப் பெறமுடியும்.
உங்களுக்கு உதவ ஆர்வமாயிருக்கிறேன்.
» உங்கள் வலைத்தளத்தின் டெம்பிளேட்டை மாற்ற
» அல்லது புதிதாக உங்களுக்கென்று சிறப்பு டெம்பிளேட் உருவாக்க
» தளத்திற்கு கனிவான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்க
» தளத்தின் அமைப்பு, வடிவம் பற்றிய பரிந்துரை மற்றும் மாற்றங்களுக்கு
என உங்கள் தளமேம்பாட்டிற்கு என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
இதற்கு எவ்வித கட்டணமும் கிடையாது :))
தளமேம்பாட்டில் ஆர்வமும் உத்வேகமும் உள்ளவர்கள் எனக்கு மின்னஞ்சல் அனுப்ப வேண்டுகிறேன்:
முகவரி: nathanjagk@gmail.com
Subject: Blog customization (அல்லது) வலைப்பூ மேம்பாடு
மின்னஞ்சலில்..
1. தங்கள் வலைத்தளத்தின் முகவரி
2. தளமேம்பாடு தேவை பற்றிய விபரம்: (டெம்பிளேட் மாற்றம், சிறப்பு டெம்பிளேட் உருவாக்கம், வண்ண மாற்றம், வடிவமைப்பு நேர்த்தி அல்லது அனைத்தும்)
அனுப்பினால்....
உங்களுக்கு பதில் மின்னஞ்சலில் தங்கள் விருப்பத்திற்கான என் திட்ட வரைவை (design) அனுப்புவேன் (proposal)
தங்களுக்கு திருப்தியான டிஸைன் அல்லது திட்டம் கிடைத்ததும் தங்கள் அனுமதியோடு குறிப்பிட்ட தளமேம்பாட்டை நாம் நிறுவலாம்.
நண்பர் க.சீ. சிவக்குமாருக்கு நான் வடிவமைத்த வலைத்தளம் தங்கள் பார்வைக்கு..:
நள்ளென் யாமம்
நண்பர் க.சீ. சிவக்குமாருக்கு நான் வடிவமைத்த வலைத்தளம் தங்கள் பார்வைக்கு..:
நள்ளென் யாமம்
அன்பு கெளதம்ஜி,
எனக்குப் பிடித்த துறையான infovis (information visualization)-ல் வண்ணப்பயன்பாட்டு நேர்த்தி பற்றி அறிந்திருக்கிறேன். Color consultancy இப்போது வணிக ரீதியாக மேம்பட்டு வருகிற துறையாகிறது. பிளாக்கின் சாத்தியங்கள் விரிவடைந்து கொண்டே போகிற நிலையில், நம் பிளாக்கின் வடிவ நேர்த்தியையும் (site ergonomics) நாம் கவனிக்க வேண்டும் என்ற உந்துதலில் இதை எழுதினேன்.
தங்கள் பாராட்டுக்கு உகந்தவனாவேன் என்று நம்பிக்கையுண்டு. மிக்க நன்றி!
---
அன்பு நண்பர் நண்டு@நொரண்டுக்கு,
எதற்கு டெம்பிளேட்டை மாற்றணும்? புதிதாகத் தயாரித்துக் கொள்ளலாமே :)))?
ஏன் யாரோ ஒருவர் ஏதோ ஒரு நாட்டில் அமர்ந்து கொண்டு வடிவமைத்த டெம்பிளேட்டை நாம் பயன்படுத்தணும்?
எனக்கு தனியாக மின்னஞ்சல் அனுப்பவும். nathanjagk@gmail.com.
---
அன்பு ப்ரியமுடன் வசந்த்,
வலைத்தளம் சில இடங்களில் திறக்க அடம் பிடிப்பதைக் கண்டிருக்கிறேன். மிகச்சிறிய தவறுகளைத் திருத்துவதன் மூலம் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரமுடியும். இது ஒரு சிறுமுயற்சி. இதில் தொடர தூரம் நிறைய இருக்கிறது. நண்பருக்கு என் அன்பு!
---
இனிய வெறும்பய,
தங்கள் வரவுக்கும் கனிவிற்கும் என் நன்றிகள்!
அன்பு சங்காண்ணா,
நீங்கள் குறிப்பிட்ட விஷயம் நன்றாக நினைவிருக்கிறது. என் தன்னார்வத்தில் குறிப்பிட்ட கருத்துக்களை அடுத்த இடுகையிலேயே நடைமுறைப் படுத்தினீர்கள். அந்த பச்சைக் கொடித்தான் எனக்குள் ஆர்வத்தை விதைத்திருக்கிறது. சும்மா சொல்லலே.. இடுகை எழுதும்போது எனக்கு நீங்கள் குறிப்பிட்டது நினைவிலாடியது.
விட்ஜெட்கள் பற்றி இன்னும் விரிவாக எழுதவேண்டும். இது கிட்டத்தட்ட நம் வீட்டு வரவேற்பறை அல்லது மேஜையை சீரமைத்துக் கொள்வது போலத்தான்.
கண்டமேனிக்கு (ட்ரை பண்ணுவோம் என்ற நினைப்பில்) விட்ஜெட்களைச் சேர்ப்பது அப்புறம் அதை பயன்படுத்தாமலேயே வைத்திருப்பது இது பற்றி எழுத ஆசை. நம் வீட்டு வரவேற்பறையில் 2007-ம் ஆண்டு காலண்டர் தொங்குவது போலத்தான் இதுவும். அலுவலக மேஜையில் அயர்ன் பாக்ஸ் தேவையா என்ன? சில விட்ஜெட்கள் இப்படித்தான் பயனற்று கிடக்கின்றன.
பார்ப்போம்.. காாலடியின் தீவிர அதி தீவிர எதிர்வினை எப்படியிருக்கிறது என்பதைப் பொறுத்து அடுத்த நடவடிக்கை ஆலோசித்திருக்கிறேன்.
(ஆனால் இருக்கிற இடுகைகளை அப்படியே தூக்கி ஸ்வாஹா பண்ணிட்டு காலியா வலைத்தளத்தை வச்சிருக்கிற டெக்னிக்கை என்ன பண்றதுன்னு தெரியலீங்ணா:)))
---
அன்பு துளசி கோபால்,
வாழ்த்துக்கு நன்றி!
தங்கள் கவனத்திற்கு: படித்ததைப் பரீட்சித்துப் பார்க்க விரும்பினால் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.
அன்பு கலா,
அழகாக விளக்கம்!!
படிப்பவர்கள் பார்வையில் தளக்குறைப்பாடுகளை விளக்க உங்கள் பின்னூட்டம் பெரிதும் உதவும்.
தாங்கள் சொன்ன விஷயங்கள் (நெருக்கமான எழுத்துக்கள், கண்கூசும் நிறங்கள்) படிப்பதின் செளகர்யத்தைக் குறைத்துவிடும்.
பெரிதும் உழைத்து எழுதிய பதிவு, தரமான வெளிப்பாட்டில் இல்லாவிட்டால் படிப்பவர்கள் பாடு சிரமம்தான்.
இது கிட்டத்தட்ட கிளியைச் சிங்காரித்து அலமாரியில் பூட்டுவது போல.
தங்கள் பின்னூட்டத்தால் உதித்தத் திட்டம்தான் தளமேம்பாட்டு உதவி. நண்பர்கள் ஆர்வம் எப்படியிருக்கிறது என்று பார்ப்போம்.
தங்களுக்கு அன்பும் நன்றிகளும்!
---
அன்பு ஜோதிஜி,
தங்களுக்கு நன்றி!
---
அன்பு ஹேமா,
நலமா? நலமே!
வேறு திட்டங்களில் கொஞ்சம் பிஸி. அறிவுரை அளவுக்கெல்லாம் போகவில்லை. ஆலோசனை என்ற நினைப்பில் எழுதியதுதான்.
இது உகந்ததாக இருந்தால், தங்கள் கருத்தை மின்னஞ்சலில் தெரியப்படுத்துக. மிக்க நன்றி!
அன்பு அஹமது இர்ஷாத்,
மிக்க நன்றி!
---
அன்பிற்கினிய நேசா,
நேசனின் பின்னூட்டம் ஒரு ஜெட்-பேக்!
புவியீர்ப்பு கவலைகளை மறக்க வைக்கும் மந்திரம்! நன்றி நண்பா!
--
அன்பு ப்ரபஞ்சப்ரியன்,
தங்கள் வலைத்தளங்கள் (ப்ரபஞ்சப்ரியன் மற்றும் தீர்க்கதரிசி) அறிவியல் ரீதியான ஆக்கத்தைக் கொண்டவை. தங்களின் உழைப்பு குறிப்பிடத்தக்கது.
இவைகளைக் கருத்தில் கொண்டு சிறப்பான தளத்தை அமைக்க முடியும். தங்கள் கனவிற்கேற்ற வடிவமைப்பும், வண்ணமும் இருந்தால் எளிதாக தங்கள் அறிவியல் கருத்துக்களை பரவலாக்கலாம். தங்களின் முனைப்பான உழைப்பு கொஞ்சமும் வீணாகக் கூடாது என்பதில் எனக்கு எப்போதும் ஆர்வமுண்டு. தனியாக மின்னஞ்சலிடுக. தொகுத்து திட்டமிட்டு செயலாற்ற அது உதவியாக இருக்கும். நன்றி நண்பரே!
மிகவும் பயனுள்ள பகிர்வு மாம்ஸ்.
நீங்கள் குறிப்பிட்டவைகளை பல பதிவுகளில் உணர்ந்திருக்கிறேன். அனைத்தும் உண்மையே. சரியான பார்வை.
மாப்ஸ் நீங்க வடிவமைத்த தளம் மிக அருமையாக இருக்கிறது.
நல்லா அருமையான பயனுள்ள பதிவு
நல்லா அருமையான பயனுள்ள பதிவு
அன்பு பாரா..
தளங்களுக்குதான் கலர் பார்க்கணும்.. தங்களுக்கு எதுக்கு? நீங்கதான் தங்கமாச்சே!
பொண்டாட்டி முகம்?? ஹிஹிஹி! கைதிகளைக் கொடுமைப்படுத்த ஒரே வண்ண சுவர்களுடைய அறையில் அடைப்பதுண்டாம்.
என்னத்த சொல்ல :))
--
அன்பு மேனகா,
மிக்க நன்றி!
--
வாங்க தமிழ்ப்பறவை,
நன்றி -- நாம நேர்ல பேசிக்குவோம்!
--
அன்பு இராமசாமி கண்ணன்,
மிக்க நன்றி!!
--
ஸ்டார்ஜன் மாம்ஸ்,
செளக்யமா? நன்றி!!!
--
கவித்தளபதி விஜய்,
நன்றி நண்பா!
அன்பு முனியாண்டி,
நலமா? மிக்க நன்றி!
அன்பு சரவணன்,
ஜிம் கேரியின் வலைத்தளம் ஏற்கனவே பார்த்ததுண்டு. கேரியைப் போலவே அவரின் தளமும் அடாவடிதான். அத்தளத்திலும் நல்ல மாற்றங்கள் கொண்டு வரமுடியும் என்று நம்புகிறேன்.உதாரணமாக ஸைட் ஒலிப்பின்னணியோடு திறக்கிறது. இது எந்த முன்னறிவிப்புமின்றி வருவதால் பலருக்கு தொந்தரவாக அமையும்.
இது போன்ற ஒலிப்பின்னணி கொண்ட வலைத்தளங்கள் முன்னேற்பாடாக படிப்பவர்களுக்கு எழுத்தாகத் தெரிவித்து விடுதல் நலம்.
அலுவலகத்தில் ஒரு ஸைட்டை ஓபன் செய்து படிக்கும்போது இரைச்சலாக தவளையோ அல்லது ஆந்தையோ இரையும் சப்தம் வந்தால் நல்லாவா இருக்கும். மொத்த ஆபிஸூம் என் க்யூப்பிகளையே வெறிப்பாங்க. ஏதாவது பட்டப்பெயர் உபரியா கிடைக்க வாய்ப்புண்டு :))
நல்ல விளையாட்டு தான் போங்க... எதையாச்சும் மாத்த போக எதாச்சும் ஆய்ட்டா ரெம்ப கஷ்டம்... பேசாம இருக்கறதையே வெச்சுக்கறேன்.. ஹா ஹா அஹ
ஜோக்ஸ் அபார்ட் - நல்ல உபயோகமான பதிவு
தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன்
விஜய்
பதிவர்களுக்கு இது அருமையான சேவை பதிவு ஜெகன். இந்த ப்ளேட் மாற்றும் விளையாட்டில் சிக்கி சின்னாபின்னமாகி ,வீட்டிற்க்கு திரும்பினால் போதும் என்ற வகையில் விளையாட்டை நிறுத்திவிட்டேன். நீங்கள் சொன்னது போல் கூச்சலில்லா தளங்கள் பார்ப்பவர்கள் கண்களுக்கும், படிப்பவர்கள் மனதிற்க்கும் இதமாக இருக்கும். என்னைப் போல் மோன பதிவர்களுக்கு,பதிவுகளை இடும் வேகத்தை கூட்டும் வித்தை கைகூடி வந்தபின் தளம் பற்றிய ஞானத்தை ஏற்றிக்கொள்ளலாம்.அதற்கு உங்கள் பதிவும் பின்னுட்ட பதில்களும் மிக நம்பிக்கை ஊட்டுகின்றது.
என்னோடது இல்லை.
kadaisi point thaan manasil nikkuthu.........
[yen kaiyileye irunthirunthaal...ippo en blog um en kaiyileye irunthirukkum]
yeppovo yenakku sonna reply...
muzhu pathivaa..,paakkum pothu innum azhakaa irukku.
vaazhthukkal jegan sir..:)
பொதுவாக ஜெகன் என்றால் அன்பான அறிவுரை. இது என் அனுபவத்தில் நான் கண்டது..ஆனால் இந்த அறிவுரையில் ஜெகனின் அன்பும், அக்கரையும் மிளிர்கிறது. மிகு பயன் தரும் பதிவு இது. முக்கியமாக பதிவுலகில் புதிதாக நுழைந்துள்ள என் போன்றோருக்கு.
ஜெகனுக்கு இன்னும் ஒரு அன்பு வேண்டுகோளும் இங்கு வைக்கலாம் என்று நினைக்கிறேன்..பலமுறை பதிந்த பாதச்சுவடுகளைக் காணாது எங்கள் வலைப்பூக்கள் வாட்டமாக... வாட்டம் தவிர்க்க சிறு ஓட்டமாய் வந்து வண்ணம், வடிவம், மலர்ந்த பருவம் ஆகியவை வீசும் கருத்து மணத்திற்கு ஏற்ப இருக்கிறதா என்று நோட்டமிட்டால் மலர்களின் வாட்டம் மட்டுமல்ல தோட்டக்காரரின் வாட்டமும் தீரும்... வருகையை எதிர்பாத்து வாடிய மலர்.. வருத்தத்துடன்...
Post a Comment