எனது கண்கள் ஒரு ஆப்பிள் போல
மாறிவிட்டது பாரேன்.
அறுத்துப் பார்த்தால் விதைகள் சிலது இருக்கலாம்
அதை வீசி எறிந்துவிடுதல் உனக்கு நலம்!
பழத்தின் பளபளப்பான வெண்பரப்பு ஏகாந்தமானது.
சுழித்தோடும் நதியில் நனைந்து நிற்கும் மரநிழல்
ஒரு பெரிய பகற்பொழுதை மறக்கடித்துவிடக் கூடியது.
எல்லா காரியங்களுக்கும் கால்கள் முளைத்துவிட்ட இவ்வேளையில்
எனக்குரிய கண்களை ஆப்பிள்களாக்கி விடுவதில்
ஒரு ஆறுதல் உணர்கிறேன்.
தோல் சிவப்பானாலும் ஆப்பிள் வெள்ளைதான் - இன்னும்!
மாறிவிட்டது பாரேன்.
அறுத்துப் பார்த்தால் விதைகள் சிலது இருக்கலாம்
அதை வீசி எறிந்துவிடுதல் உனக்கு நலம்!
பழத்தின் பளபளப்பான வெண்பரப்பு ஏகாந்தமானது.
சுழித்தோடும் நதியில் நனைந்து நிற்கும் மரநிழல்
ஒரு பெரிய பகற்பொழுதை மறக்கடித்துவிடக் கூடியது.
எல்லா காரியங்களுக்கும் கால்கள் முளைத்துவிட்ட இவ்வேளையில்
எனக்குரிய கண்களை ஆப்பிள்களாக்கி விடுவதில்
ஒரு ஆறுதல் உணர்கிறேன்.
தோல் சிவப்பானாலும் ஆப்பிள் வெள்ளைதான் - இன்னும்!
19 comments:
மாப்ள ஜெகா.. எப்படி இருக்கீக.. ரொம்ப நாளாச்சே.. கவிதை கலக்கலோ கலக்கல். பின்நவீனத்துவத்துல அசத்துறீக.. வாழ்த்துகள்.
NALLATHU.
PAARAADDUKKAL.
வணக்கம் ஜெகன் .
வாழ்த்துக்கள் .
ச்சே... வாய்ப்பே இல்ல...பிரமாதமப்பா
நலமா நண்பா ?
லேட்டானாலும் லேட்டஸ்ட் கவிதையா ?
வாழ்த்துக்கள்
விஜய்
ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் அருமையான கவிதையோட வந்திருக்கீங்க..
நல் வரவு ஜெகன்.. நன்றி..
கண்கள்..ஆப்பிள்கள், பகலை மறக்கடிக்கும் மரநிழல், ஆப்பிளின் உள் வெள்ளை.. கவிதையில் ஆழ்ந்திருக்கிறேன் .
என்ன மாம்ஸ் சௌக்கியமா? ரொம்ப நாளா ஆளையே காணோம்.
ஆப்பிள் ஆதாம் ஏவாள்ன்னு பின்னுறீங்க.
ஜே...சுகம்தானே நிறைய நாள் ஆச்சு பதிவுகள் பார்த்து !
ஆப்பிள் தோல் சிவப்பானாலும் உள்ளூடல் வெள்ளைதான்.அழகு.
இயற்கையின் நிறங்களை இயல்பாக அறிந்துகொள்கிறோம்.படைப்பின் சில நியதிகளுக்குள் மனிதனின் மனதின் நிறம் மட்டும்...!
புரியலை பாஸ்... :(
அருமையா இருக்குங்க...
அட :)
:) சூப்பர்ணே
ஜெகன்... இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..
அன்பிற்குரிய
ஸ்டார்ஜன் மாம்ஸ்
முல்லை அமுதன்
நண்பர் நண்டு @ நொரண்டு
அண்ணன் க.சீ. சிவா
விஜய் நண்பா
ப்ரியமிகு ரமேஷ்
ஊக்கமூட்டிய பத்மநாபன் சார்
சிநேகித அக்பர் மாப்ள
ஹேமா மேடம்
தமிழ்பறவை நண்பா
தோழர் நந்தா
தம்பி ஆது
அனைவருக்கும் என் நன்றிகள் மற்றும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!
தங்கள் வாழ்வு எல்லா அறிவும் செல்வமும் உடல் ஆரோக்யமும் மனவலிமையும் நிறைந்ததாய் இனிதுற வாழ இந்நாளில் வாழ்த்துகிறேன்!
சிறந்த கற்பனை..!
தொடரட்டும் உங்கள் கவிபயணம் ..!
கா.வீரா
அண்ணா இப்பலாம் பதிவுகளுக்கு நீண்ட நாள் எடுத்துக்குரிங்க போல இருக்கு என்ன ஆச்சு?
neenga solla varrathu puriyala..
but,
vaarthaikal azhaku!
Post a Comment