Saturday, March 5, 2011

பின்பனிக் கால்கள்


நீங்களும் நீயுமாக
ஒரு நாள் இரவு நடந்து கொண்டிருந்தீர்கள்!

உங்களுக்குப் பாந்தமாகவே
வழியெங்கும் பூக்களும்
வட்டமாய் நிலவும் கூட.

இலகுவாய் இறங்கும்
பியானோ கட்டைகள் போல
கால்கள் சாலையில்.

அப்புறம் எப்போதும் போல் உங்களை அள்ளித்
தொடரும் என் கயமை நிறைந்த நிழல்
பின்னேயே வேவுபார்த்தும் வருகிறது.

எனைப் பற்றி நீ வாய்த் திறக்க முயலும் போதெல்லாம்
அவன் அதரம் பற்றுகிறான்.

நிழல் இன்னும் நெருக்கமாகிறது..!

நீங்களும் நீயும் துஞ்சிய ஒரு அவகாசம்..
(ஆஹா.. அவகாசம் என்பது எவ்வளவு அழகாக ஒலிக்கிறது...!!!)
நிழலை விடுத்துப் பிரியும் நிழலாக
எனை நான் பார்த்துக் கொள்கிறேன்.

ஏனோ தெரியவில்லை....
எனக்கு நானே தோள்த்
தடவி சமாதானம் சொல்லப் பார்க்கிறேன்.

ஹ....!!!
தானே தன்னைத் தழுவும் கைகளின்
தண்மை வேறெங்கும் சிக்காது..!

18 comments:

thamizhparavai said...

ஆஹா... எனக்கே தெளிவாகப் புரிகிறது. மிக ரசித்தேன்.
ஏகாந்தம் துரத்தும் நிழலின் கறுமை ஓவியத்தில்(ms paint?) அழகாக வெளிப்பட்டிருக்கிறது ஜெகன்.
இவ்வருடத்தின் முதல் பதிவோ...?!

Nathanjagk said...

பிரண்டு பிரண்டுதான்...!
பெயிண்டு பெயிண்டுதான்..!!!
நன்றி மக்கா.. :))
மொபைலுக்கு அழைக்கவும்.

ஹேமா said...

ஜே...சுகமா.ரொம்ப நாளைக்கப்புறம் எப்பவும் எங்களுக்குள் நாங்கள்தான் நல்லதும் கெட்டதுமாய் !

நந்தாகுமாரன் said...

அட! நல்லாயிருக்கே ... பேஷ்

Raju said...

வாண்ணே..வாண்ணேய்ய்ய்!

Raju said...

\\தானே தன்னைத் தழுவும் கைகளின்
தண்மை வேறெங்கும் சிக்காது..!\\

அதானே; சுய இன்பத்திற்கு நிகரேது...?
:-)

Nathanjagk said...

அன்பு ஹேமா,
அகலவும் விலகவும் முடியாத பந்தமாகி விட்டிருக்கிறது பிளாக் எழுதுவது.
நம்மிடமிருந்துதான் எல்லாம் பிறக்கின்றன.. நல்லதும் கெட்டதும்..!
நன்றி!

---

அன்பு நந்தா,
கட்டியடைக்க முடியாதது இந்த கவிதை எழுதுவது.. என்பதை நிரூபித்துக் கொள்கிறேன் போல..))
என்னதான் கவிதைப் பட்டறை என்று அளப்பறை செய்தாலும்..!!

---

அன்பு ராஜு..
மறக்க முடியாத பயபுள்ளக..! குரலறியவிட்டாலும் .. மிஸ்டு கால் பார்த்து சந்தோஷமடையும் மனமுடையவனாகிறேன்..!
சுயஇன்பத்தையும் நிகர்த்த ஒரு உணர்வாக தன்னைத் தழுவும் நிலையைச் சொல்ல முயல்கிறேன்.
கவிதை எப்போதும் படிப்பவரின் சொத்து..:)) நன்றி!

சந்தான சங்கர் said...

ஒருமையின் ஒரு மையாய்
ஒருமையின் பின்னிலை
கூறும் படர்கையும்
ஒரு மெய்யாய்...


அருமை நண்பா..


நீண்ட இடைவெளிக்கு பிறகு

சந்தான சங்கர்..

சாய் ராம் said...

நீங்களும் நீயுமாக
விதவிதமான கற்பனைகளை துளிர்க்க செய்ய வைக்கின்றன இந்த இரு வார்த்தைகள்.

தானே தன்னைத் தழுவும் கைகளின்
தண்மை வேறெங்கும் சிக்காது..!

சர்ரியல் ஓவியத்தில் உணர்வுகளையும் பெயிண்ட்டாக்கியது போல முடிகிறது கவிதை. தண்மை என்பது எழுத்து பிழை என தவறாக முதலில் நினைத்து விட்டேன்.

விஜய் said...

Classic !!!!!!!

D.Martin said...

நல்லா எழுதுறீங்க வாழ்த்துக்கள் நண்பா.

Shanmugam Rajamanickam said...

வித்தியாசமா இருக்கே..??

//
அகலவும் விலகவும் முடியாத பந்தமாகி விட்டிருக்கிறது பிளாக் எழுதுவது.
நம்மிடமிருந்துதான் எல்லாம் பிறக்கின்றன.. நல்லதும் கெட்டதும்..!
//

என்னாச்சு......?!?!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...
This comment has been removed by the author.
ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...
This comment has been removed by the author.
ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...
This comment has been removed by the author.
vimalanperali said...

நல்ல கவிதை.நடையும் கருத்தும் நன்றாக உள்ளது.வாழ்த்துக்கள்

இரசிகை said...

nallaayirukku jeganathan sir...
thalaippilirunthey!!

InternetOnlineJobHelp said...

Nice Info - follow my Classified Website


classiindia Top India Classified website, SEO . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.in