Wednesday, March 3, 2010

பெண்களுக்குப் பேராபத்து..

டைம்ஸ் ஆப் இந்தியா, பெங்களூர் பதிப்பு, 16 பிப்ரவரி 2010 நாளிதழின் முதல் பக்கத்திலிருந்து..


'கணவர்கள் அல்லது​சொந்தங்களே குற்றங்களுக்கு காரணம்' என்ற தலைப்பில் வந்த இந்த செய்தியைப் படித்த யாவரும் பெங்களூர் பெண்கள் பாவம் என்ற முடிவுக்கு வருவார்கள். செய்தியும் படமும் அதிலிருக்கும் புள்ளிவிபரமும் (தகவல் ஆதாரம் State Crime Records Bureau (SCRB) என்று குறிப்பிடப் பட்டுள்ளது) அப்படி..!

அப்படியா?

மேற்கண்ட படத்தை நீங்களும் உற்றுப்பாருங்கள்.
1. முதலில் உங்கள் கண்ணைக் கவருவது பெல்ட்டால் அடிபடும் பெண் படம்

2. அடுத்து அதன் ப்ளூ ப்ளூ பட்டைகளாத் தெரியும் அட்டவணை (ப்ளூட்டவணை?)

3. இன்னும் கொஞ்சம் 'தம்' கட்டினீர்களேயானால் மேல் வலது மூலையில் இருக்கும் இன்னொரு அட்டவணையையும் காணலாம்.

அட்டவணைப் படுத்தப்பட்ட எண்கள் யாவுமே புள்ளிவிபரங்கள்தான் என்ற ​தெளிவு நம் நாட்டில் உண்டு. நாமும் அதை அப்டியே பின்பற்றுவோமாக.

ஆனால்?

செய்தித்தாள் வெளியிட்ட படத்தில் நிறைய அபத்தங்களும், தகவல் பிழைகளும் நிறைந்திருக்கின்றன. அவை:

1. புள்ளிவிபரம் அழுத்தமான பின்ணணி வண்ணத்தில் (ஊதா) ​கொடுக்கப்பட்டிருப்பதால் எண்களை எளிதில் படிக்க முடியாதது

2. பெல்ட்டால் அடிக்கப்படும் பெண்ணின் படம் அட்டவணை அளவுக்கு​நிறைய இடம் பிடித்துக் கொண்டிருப்பது

3. ப்ளூட்டவணையில் Crime (குற்றம்) என்று தலைப்பிடப் பட்டிருக்கிறது. ஆனால் வலதுகோடியில் இருக்கும் அட்டவணையில் No. of Cases (குற்றப்பதிவுகள்) என்றிருக்கிறது. குற்றமும் குற்றப்பதிவும் ஒன்றா??

4. வெறும் எண்களால் நிரப்பட்ட நெருக்கமான அட்டவணையை எளிதில் ஒப்பீடுகள் செய்யமுடியாதது

சரி. நாம் அதை ஒப்பீடு பார்த்தால் என்ன? இப்படி:

1. முதலில் ப்ளூட்டவணையின் நீலச்சாயத்தை வெளுப்போம் (டும் டும் டும்). அட்டவணையின் பின்ணணி வண்ணத்தை மென்மையாக்குவோம். இப்போது படிக்க எளிமையாகிறதல்லவா?


இதுபோல் தேவையற்ற வண்ண ஆதிக்கத்தை அட்டவணையில் ஏற்படுத்தியது செய்தித்தாளின் முதல் தவறு.

2. செய்தியில் கொடுக்கப்பட்ட அதே புள்ளிவிபரத்தை வரைபடங்களாக்கினால் (Graphs) புரிந்து கொள்ள எளிமையாக இருக்கும். ஒவ்வொரு குற்றத்தின் வருடரீதியான ஏற்ற இறக்கங்களை காண்பிப்பதே பின் வரும் வரைபடங்களின் நோக்கம்.

3. வரைபடத்தில் குற்றங்களின் எண்ணிக்கை கொடுக்கவில்லை. ஒப்பீடு ​செய்வதற்கு வரைகோடுகள் மட்டும் இருப்பது எளிமையாக இருக்கும் என்பதனால். தெளிவுக்காக இரண்டு க்ராஃப்களாகப் பிரித்திருக்கிறேன்.

5. வரைபடங்களில் அனைத்து குற்றங்களும் ஏறுமுகமாய் இருக்கின்றன, கொத்தடிமைத்தனத்தை (trafficking) தவிர. ஏன்? குற்றங்களைப் பதிவு செய்யும் விழிப்புணர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது. விழிப்புணர்ச்சி இன்னொரு விளைவாக trafficking வேகமாகக் குறைந்து கொண்டே வருகிறது.

7. செய்தித்தாள் இதை HARD TIMES என்று சொல்வது அதீதமாக / அபத்தமாகப் படவில்லையா?

8. இன்னொரு பெருந்தவறு செய்திருக்கிறார்கள். அவர்களே கொடுத்திருக்கும் ப்ளூட்டவணையில் உள்ளதைக் கூட்டிப் பார்த்தால் வரும் கூட்டுத்​தொகைக்கும், வலது மூலையில் கொடுத்துள்ள பட்டியலுக்கும் ஏக வித்யாசம்.

முடிவாக..

  1. செய்தி ஊடகங்கள் சரியான தகவல் காட்சிப்படுத்தலை (data visualization) வடிவமைத்தலைக் கையாள வேண்டும்
  2. பெங்களூர் (இன்னும்) பெண்களூர்தான்!

7 comments:

சிநேகிதன் அக்பர் said...

மாம்ஸ். பத்திரிகை செய்தியை விட உங்கள் கைவண்ணம் எளிமையாக புரிந்து கொள்ள முடிந்தது. மனதில் பாதிப்பையும் ஏற்படுத்தியது.

எல்லா இடங்களிலும் இதே பிரச்சினைதான் போல.

☀நான் ஆதவன்☀ said...

ஆஹா... பிரச்சனைய எளிமையா சொல்றது பத்திரிக்கையோட கடமை தான். நீங்க அதை செஞ்சுட்டீங்கண்ணே.

கலா said...

தகவல் அறியத் தந்ததற்கு நன்றி
ஜெகன்.

ஷங்கி said...

அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். செய்தித்தாள்னா எதையாவது எழுதுவாங்க. அதெல்லாம் இப்படிக் கண்ணுல விளக்கெண்ணையை விட்டுப் படிச்சா, எப்படி? பாவம் விட்டுருங்க. கேப்டன் ஜெகன் வாழ்க!!!!

Nathanjagk said...

ரைட்டு.
இந்த மாதிரி 'ஈஸ் ஈக்வல் டூ' அல்ஜீப்ரா இடுகை ​போட்டா ​ரெகுலர்ஸே ரிவர்ஸ் கியர் ​போடுவாங்கன்னு புரிஞ்சிடுச்சி (டூ ​லேட் ஜேக்)

Nathanjagk said...

அன்பு மாப்ஸ்,
அன்பு தம்பி ஆது,​
அன்பு கலா
மற்றும் அன்பு சங்கா அண்ணா (ரமணா ஆக்கிட்டீங்களே)...
ரொம்ப நன்றி!

இரசிகை said...

nutppum........