Friday, May 7, 2010

வைரமுத்துவை வாசிக்கும் காலம்


மெல்லினங்கள் பாடு கண்ணே
வல்லினங்கள் வாய் வலிக்கும்
- ​வைரமுத்து.
அன்பு அண்ணன் க.சீ.சிவக்குமார் தன் வலைத்தளமான நள்ளென் யாமத்தில் கசடதபற என்று இடுகையிட்டிருக்கிறார். அதற்கு அண்ணனுக்கு நான் தீட்டிய ப்ப்பின்னூட்டத்தை இங்கு பதிவாக்கியிருக்கிறேன். காலடியின் தீவிர அதி தீவிர ரசிகக் கண்மணிகளுக்கும் இது போன்ற சிந்தனாசிந்தனைகள் வந்து சேரவேண்டுமென்பதே நம் அவா.. பேரவா!

அன்பு சிவா,

நர்சிம்-இன்
பிறந்த நாள்-கவிஞர் வைரமுத்து... பதிவைப் பார்த்தேன்.

நமக்கு வைரமுத்துவை இப்போது பிடிக்காமல் போவதற்கு பொங்கி வளர்ந்த அறிவும் மடை திறந்து பாயும் இலக்கிய பிரவாகமும் காரணமாக இருக்கலாம்.

பால்யம் எப்போதும் தார்ரோட்டில் டயர் உருட்டிவிட்டுக்​கொண்டிருக்கிறது. நாம் வளர்ந்து விட்டாலும், பால்யம் யாரோ ஒரு சிறுவனாக இன்னும் அப்படியே மாறாமல் இருக்கிறது.

வாழ்வின் பருவங்கள் அப்படித்தான். அலங்கியம் தண்ட்ஸ் மாமாதான் மு.​மேத்தா கவிதைகளை முதலில் அறிமுகப்படுத்தியது. அப்போது அதே போல கவிதைகள் படைக்க​வேண்டும் என்று முனைப்பு இருவருக்கும் இருந்தது. அது ஒரு பருவம். ஞாபங்களை மீட்டெடுக்கும்​போது ஆசுவாசமாக இருக்கிறது.

உங்களின் ஒரு பழைய காதலை, பழகிய தோழனை, நெருக்கமாயிருந்த மரத்தை, வீட்டு சன்னலுக்கு அப்பாலான தேசத்தை, மழை நனைத்த வீட்டுக்கூரையை, ஒரு பூனையின் தூக்கத்தை, காதலியின் நகங்களை என நம் ஆல்பத்தின் ஏதோவொரு புகைப்படம் ​வைரமுத்துவின் கவிதையால் எடுக்கப்பட்டதாய் இருக்கக்கூடும்.

என் பதின்ம வயதுகளில் வைரமுத்து என்னை எடுத்துக்​கொண்டார். வாங்கிப் படிக்காமல் நம்மிடம் சேரும் கவிதைகள் வரிசையில் வைரமுத்துவிற்கும் இடமுண்டு. அலங்கியம் மாமா அல்லது அரிக்காரன்வலசு பாலா அல்லது அப்பா எடுத்து வரும் நூலக நூல் இப்படி.

பிடித்த ஆளுமைகளை வரைந்து விடும் நோய் கொண்டிருந்தேன். கமல், பீட்டில்ஸ், அப்பாசி இண்டியன், இளையராஜா,​வைரமுத்து இப்படி (சமீபமாக வரைந்த ஆளுமையைப் பற்றிச் சொன்னால் நீங்கள் என்னை மொத்தக் கூடும்)

குமுதத்தில் ஒருமுறை பேராசிரியர் (கவிஞர்) பழமலய்,வைரமுத்து காசுக்காக தன் ஆன்மா​விற்றிவிட்டார் என்று விமர்சித்திருந்தார். அதற்கு வைரமுத்துவும் பதில் (கவிதைதான்) கோபமாக எழுதியிருந்தார்.

அப்போது வைரமுத்துவுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் நான் ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். என்னுடைய டைரியில் பப்ளிஷ்ஷும் பண்ணினேன். அச்சமயங்களில் கல்லூரியில் நண்பர்களிடையே கவிஞன் என்றே அடையாளப்பட்டிருந்தேன். வைரமுத்து பாணியில் நான் எழுதும் கவிதைகளுக்கு ஒரு ரசிகக் கூட்டமும் உண்டு. கல்லூரி விடுமுறையில் ஊர் திரும்பிவிட்டாலும், கடிதங்கள் வாயிலாக கவிப்போக்குவரத்து நடந்த காலக்கட்டம்.

அப்புறம் ஒருகணம் வைரமுத்து போரடித்து விட்டார். என் கவிதைகள் வைரமுத்து சாயல் ஒட்டிக்​கொண்டதாக அல்லது தாக்கம் நிறைந்ததாக உணர்ந்த சமயம் அது.

வைரமுத்துவையும் தாண்டிச்​சென்றால் நாம்தான் அறிவாளி.. அட்லீஸ்ட் கல்லூரி நண்பர்கள் மத்தியிலாவது வித்யாசப்பட்டுத் திரியலாம் என்ற தன்மதியில் வேகவேகமாக வைத்தீஸ்வரன், நா.விச்வநாதன், வ.ஐ.ச. ஜெயபாலன், பாலா, இன்குலாப், இந்திரன், யூமா.வாஸுகி, மனுஷ்யபுத்திரன் போன்றவர்களை வாசிக்க ஆரம்பித்தது. இருந்தும் வைரமுத்துவின் வரிகள் இப்போது கேட்கும்​போதும் / வாசிக்கும்​போதும் நினைவுகளின் சாலையில் டயர் வண்டியை உருட்டிவிடுகிறது.

கோவை ஞானியை ஒருமுறைப் பார்..... ஸாரி, தொட்டிருக்கிறேன் - உங்களுடன் இருந்ததால். ஞானி அப்போது நம்மிடம் பேசியதா அல்லது கனவு இதழில் படித்ததா என்று ​தெரியவில்லை.

ஞானி வைரமுத்துவின் விஷயஞானம் பற்றி குறிப்பிட்ட நினைவுண்டு. ஒரு சர்ச்சைக்குள்ளான புத்தகம் பற்றி ஞானி கேட்ட​போது அதற்கு வைரமுத்து தெரியாது என்று சொன்னாராம். வைரமுத்து போன்ற தேடலும் உழைப்பும் கொண்ட மனிதர் அந்தப் புத்தகத்தை வாசிக்காமல் இருந்திருக்க முடியாது. வைரமுத்து நழுவுகிறார் என்பது ஞானியின் கருத்து.

இப்படி ஒரு வாசிப்பு - புள்ளிவிபரம், பூகோள அறிவு, வரலாற்றுக் குறிப்புகள் இப்படி இருந்தாலும் - கொண்ட வைரமுத்து எளிதாக தன் ஞானத்தை வேறுவகையான படைப்புகள் மூலம் மெய்ப்பிப்பது எளிது. அவரால் யாரையும் தாண்டிவிட முடியும் என்பது என் அனுமானம்.

ஆனால், தனக்கென ஒரு வாசகர்க் கூட்டம் இருப்பதால் அதே தரத்தில் தொடர்ந்து படைக்க வேண்டிய நிலைமையில் இருப்பதாகப் படுகிறது. அதுவே வைரமுத்துவிற்கான அடையாளமும் கூட.

நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன; நாம் வாங்காவிட்டாலும் அம்புலிமாமா, சிறுவர்மலர்கள் விற்கப்படுகின்றன; நாம் தின்னாவிட்டாலும் மிட்டாய்கள் ஜாடியிடப்படுகின்றன..

வைரமுத்து கவிதைகள் அப்படித்தான்!

27 comments:

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

//நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன; நாம் வாங்காவிட்டாலும் அம்புலிமாமா, சிறுவர்மலர்கள் விற்கப்படுகின்றன; நாம் தின்னாவிட்டாலும் மிட்டாய்கள் ஜாடியிடப்படுகின்றன..//
நச் ...

கௌதமன் said...

என்னுடைய அபிப்பிராயங்களும் சற்றேறக்குறைய இவைகள்தான். நீங்க ரொம்ப சுவையாக அழகாக எழுதி இருக்கிறீர்கள்.

Vidhoosh said...

சரிங்ணா... :)

நந்தாகுமாரன் said...

//

நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன; நாம் வாங்காவிட்டாலும் அம்புலிமாமா, சிறுவர்மலர்கள் விற்கப்படுகின்றன; நாம் தின்னாவிட்டாலும் மிட்டாய்கள் ஜாடியிடப்படுகின்றன..

//

உண்மை தான். அருமை.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...
This comment has been removed by the author.
ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அன்பு ஜெகன்,
கோவை வைரமுத்துவிற்கு இவைகளை யாராவது காண்பிப்பார்கள..?
கோவை ஞானியைப் பற்றி இன்னும் கொஞ்சம் விவரமாக கூறமுடியுமா?

விஜய் said...

தங்களுடன் உடன்படுகிறேன்

நோஸ்டால்ஜிக் கவிதைகளை பிரசுரித்தால் நாங்களும் படிப்போமே

வாழ்த்துக்களுடன்

விஜய்

ஹேமா said...

பலதும் பத்தும் அறிந்த நீங்கள் சொல்வது சரியென்றே எனக்கும் படுது.சரியான அலசல்தான் ஜே !

//இறுதியில் குர​லைச்
சேமித்த இவன்
​தேவ​தையின் ஏழு இதழ்களால்
இ​சைக்கப் பட்ட சிம்​பொனிக்குள்
பு​தைக்கப்பட்டிருக்கிறான்.//

அழகான உங்கள் வரிகள் !

பா.ராஜாராம் said...

எங்கிட்டும் நகரவிடாதபடிக்கான argument.

so,

"வாஸ்தவம்தான் தல" என்று வணக்கம் கூறி விடை பெறுவது... :-)

பத்மா said...

ஜகன் அதெல்லாம் போகட்டும் உங்க டைரி லேந்து பழைய கவிதைகள் எல்லாம் போடுங்க .படிக்க ஆவலாய் உள்ளது .
எனக்கு தேன் மிட்டாய் ரொம்ப பிடிக்கும்

Aathira mullai said...

உங்கள் கருத்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்படும் கருத்து..கருப்பு நிலா ஒன்றே போதும். அவரின் புரட்சிச் சிந்தனையைப் பறைசாற்ற, தண்ணீர்தேசம் ஒன்றே போதும் பூகோள அறிவைக் காட்ட, சிறகாயனம் ஒன்றே போதும் அவரின் கருணை உள்ளத்தைக் காட்ட,ஐந்தும் ஆறும் ஒன்றே போதும் என்று சொல்லிக்கொண்டே போகலாம்...விறு விறு மட்டுமல்ல.. விவேகமும் நிறைந்த ஆய்வுக்கட்டுரை இது. வாழ்த்து சொல்ற அளவுக்கு நான் பெரிய ஆள் இல்ல.. ஆமா எப்போ ஜெகநாதன் டைரி ரிலீஸ்? ஆவலுடன் காத்து...

சிநேகிதன் அக்பர் said...

//நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன; நாம் வாங்காவிட்டாலும் அம்புலிமாமா, சிறுவர்மலர்கள் விற்கப்படுகின்றன; நாம் தின்னாவிட்டாலும் மிட்டாய்கள் ஜாடியிடப்படுகின்றன..//

உண்மை மாம்ஸ்.

காலேஜ் கவிதைகளை பதிப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

☀நான் ஆதவன்☀ said...

நச்’ண்ணே. அருமையான விளக்கம்

கலா said...

ஜெகன் என்னெவென்று புரியாமல்
முழித்திகிட்டிருந்தேன்,அங்கு
போய் படித்தபின்புதான் புரிந்தது

உங்களால் தான் இப்படியெல்லாம்
எழுதமுடியும் மிக நன்றாக
இருக்கின்றது விளக்கம்.

நான் பெரிய மனிஷிதான் ஆனால்
சின்ன அறிவு இப்படியெல்லாம்
என்னால் முடியாதப்பா!நன்றி

அப்பாதுரை said...

பொன்மாலைப் பொழுதுக்கப்பால் வந்த வைரமுத்துவை என்னால் ரசிக்க முடிந்ததில்லை. பள்ளி நாட்களில் கவியரங்களிலும் போட்டிகளிலும் மீசை முறுக்குடன் தலைமையுரை என்ற பெயரில் பாப்படித்தவரை நினைக்கும் பொழுது... 'அட' போட்டிருக்கிறேன். இவரைப் போல் எழுத வேண்டுமென நினைத்திருக்கிறேன். இழப்பைச் சற்று நினைத்தாலும்... அப்படியே தொடர்ந்திருந்தால் அந்த வைரமுத்துவை உலகம் என்றைக்கோ மறந்திருக்கும். நல்ல வேளை.
காசுக்காக எழுதினாரோ எப்படியிருந்தாலும் தமிழ்ச் சினிமா பாடல்களில் அவ்வப்போது வீசிய பூவாடை வரிகளுக்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.

இரசிகை said...

//நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன; நாம் வாங்காவிட்டாலும் அம்புலிமாமா, சிறுவர்மலர்கள் விற்கப்படுகின்றன; நாம் தின்னாவிட்டாலும் மிட்டாய்கள் ஜாடியிடப்படுகின்றன..//

:)

இரசிகை said...

sir......ippadi vairamuththuvai sonnaalum..,avar koduththa sila thirai isaip paadal varikal marakkave mudiyaathavai.

neenga aarambiththavai pola suvaiyaana yeththanaiyo undu..
paamaranukkum puriyum.athuve vettri illaiyaa?........:)

மெல்லினமே மெல்லினமே said...

supper pathivu sir!

Nathanjagk said...

பாசத்திற்குரிய டோமி (நண்டு@நொரண்டு) நன்றி!

*

அன்பு கல்யாண்ஜி.. மிக்க நன்றி!!

*

நன்றி விதூஷ் (சுறா பாத்த எபக்டில் இருக்கீங்களோ??)

*

அய்.. நந்தூ..! ​செளக்யமா? நன்றி!

*

அன்பு ப்ரபஞ்சப்ரியன்,
கோவை ஞானி (இயற்பெயர் பழனிச்சாமி) ஒரு மார்க்ஸிஸ்ட். எழுத்தாளர். சமூகஆர்வலர்.

இந்தியாவில் தத்துவமும் கலாச்சாரமும், மார்க்ஸியமும் தமிழ் இலக்கியமும், தமிழ் தமிழர் தமிழ் இயக்கம், மெய்யியல் கட்டுரைகள் என குறிப்பிடத்தக்க நூல்களின் ஆசிரியர்.

தமிழ் நேயம் என்ற பெயரில் பதிப்பகமும் சிற்றிதழும் ​கோவையிலிருந்து நடத்தி வருகிறார்.
தீவிர வாசிப்பு காரணமாக பார்வையைப் பறிகொடுத்தவர் என்று அறிகிறேன்.

பழக மிக இனிய நண்பர்.

Nathanjagk said...

அன்பு விஜய்,
நன்றி.. நிச்சயம்​வெளியிடுகிறேன்!

*

நன்றி ஹேமா,
கவிதையை இப்படியா அம்பலப்படுத்தறது??

*

அன்பு பாரா, உங்களின் கவிதைகள் யாரையும் நகரவிடாமல் தழுவிக்​கொள்ளும் சாமார்த்தியம் மிக்கவை! நன்றிங்க!

*

வாங்க பத்மா, மிக்க நன்றி!
ஒரு நாள் யாரோ என்னப்பாடல் ​சொல்லித்தந்தாரோ - இப்ப காதில்! பழைய கவிதைகள்தானே ​வெளியிட்டலாம்!

*

அன்பு ஆதிரா,
வைரமுத்தை நிறைவாக வாசித்திருக்கிறீர்கள்! குறைவாகப் ​பேசியிருக்கிறீர்கள். விரிவாக எழுதுங்கள் - உங்களுக்குப் பிடித்த இலக்கிய ஆளுமைகள் பற்றி. டைரியை வெளியிடலாம். நன்றி ஆதிரா!

Nathanjagk said...

வாங்க மாப்ள அக்பர்,
செளக்யமா? கவிதைகளைப் பதிப்பிக்கலாம்.. பிக்கலாம்!!

*

அன்புத் தம்பி ஆது..! நன்றி:)

*

வாங்க கலா,
என்னது சின்ன அறிவா? பேசுறதைக்​ ​கேட்டால் அப்படி நம்ப முடியாது. சிங்கப்பூரே வியந்து பேசுகிறதே! அப்புறம் என்ன? நன்றி கலா!

*

அன்பு அப்பாதுரை,
கருவாட்டு வீச்சம் நிரம்பிய சினிமா திரையில் இலக்கிய வாசம் பரப்பியதில் குறிப்பிட்டுச் சொல்லப்பட வேண்டியவர் வைரமுத்து.
தன் திரைப்பாடல்கள் மற்ற மொழியில் மாறும்போது அப்படியே ​மொழிபெயர்க்க​வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தவர். உதாரணமாக பம்பாய் படத்தின் பாடல்கள் ஹிந்தியில் டப் ​செய்யும்​போது ​தமிழில் உள்ள அதே (வைரமுத்து) வரிகளை அப்படியே மொழி மாற்றம் செய்ய​வேண்டும் ஹிந்தி-பாடலாசிரியர். இந்த கர்வம் கலந்த புலமை என்னை மிக கவர்ந்தது. நன்றி அப்பாஸ்!

*

நன்றி இரசிகை (மேடம்....? புனைப்​பெயர்களென்றால் சார் / ​மேடம் கிடையாது; அசல்​பெயர்களுக்கு மட்டும்தான் சார் என்ற உங்கள் ​கொள்கை கவர்கிறது. ஆனால், சில​பெயர்களை புனைவா அசலா என பிரித்தறிய முடியாதே :))

Nathanjagk said...

அன்பு ​மெல்லினமே ​மெல்லினமே..
தமிழினத் தலைவரேப் பாராட்டியதாக அக/புற/பக்கவாட்டென மகிழ்கிறேன்!

இரசிகை said...

//
ஜெகநாதன் said...

சில​பெயர்களை புனைவா அசலா என பிரித்தறிய முடியாதே :))
//

yetho namma arivukku yettiyavarai piriththarinjuttu poka vendiyathuthaan..yenna sollureenga:))

appadiye thappaanaalum..,
theriyaamal seithathuthaane nu mannaith thatti vitukkuvomla:)

Nathanjagk said...

அன்பு இரசி​கை,
நட்புன்னா மண்​ணென்ன ம​லை​யை​யே தட்டி விட்டுக்கலாம். அவரு சார்.. இவிங்க ​மேடம் ​ரெண்டு​ பேரும் ​பேசிக்கிட்டா ஒரே டாக்குதான் ​போங்க என்று யாரு சதாய்த்து விடப்​போகிறார்கள்.
(அதுக்கும் தட்டி விட்டுக்கலாங்கிறீங்களா :)

ஷங்கி said...

வைரமுத்துவை கேட்டதுண்டு. வாசித்ததில்லை. எல்லோரும் சொல்ற மாதிரிதான்...

//நாம் வளர்ந்துவிட்டாலும் இன்னமும் காமிக்ஸ் புத்தகங்கள் பதிப்பிக்கப்படுகின்றன; நாம் வாங்காவிட்டாலும் அம்புலிமாமா, சிறுவர்மலர்கள் விற்கப்படுகின்றன; நாம் தின்னாவிட்டாலும் மிட்டாய்கள் ஜாடியிடப்படுகின்றன//
வி.வாதம் செய்ய முடியாத வாதம்.
கலக்குறீங்க!

அப்புறம், அந்த நித்யானந்தா ஓவியத்தை எப்போ பதிவிடப் போறீங்க! ஹிஹி!!

Nathanjagk said...

சங்காண்ணா,
கரெக்டாச்​சொல்லிட்டீங்க யார் படத்தை வரைஞ்சிருப்பேன்னு. ஆனா ஸ்ரெயிட்டா நித்யானந்தரை வரையலே.. சாரு நிவேதிதாவை வரைஞ்சேன். கலகம் காதல் இசை - ங்கிற அவரோட புக்கைப் படிச்சிட்டு அதன் பின்னட்டையில் உள்ள புகைப்படத்தைத் தீட்டினேன். பின்நவீன ஓவியம்?!
நன்றிங்ணா!

Baccarat Online said...

Prompt reply)))