Tuesday, May 11, 2010

குரல்களின் வேட்டை

ஏன் பாடகர்கள் துதிக்கப்படுகிறார்கள்?

ஏன் பாடகர்கள் பிரபலங்களாக இருக்கிறார்கள்?

உங்களுக்குத் எவ்வளவு புல்லாங்குழல் / வயலின் / மிருதங்க / பிற வாத்திய இசைக் கலைஞர்கள் பெயர்கள் தெரியும்?

இசையில் குரல் என்பதும் ஒரு கருவியே (instrument) என்ற எண்ணத்தை சிலகாலங்களுக்கு முன்னேதான் பெற்றேன். இசைக்கோர்வையில் பாடகர் தன் குரல் எப்படி பங்காற்றுகிறதோ அதேயளவுக்கு அல்லது அதையும் விட அதிகமாக வாத்தியங்களின் இசையும் பங்காற்றுகின்றன.

ஆனால் பாடல் முன்னிறுத்தப்படுவது குரலிசைக் கலைஞர்களால்; பாடகர்களால்; இசையமைப்பாளரால்.

முகம் தெரியாத, அடையாளங்கள் தொலைந்த பின்னணி வாத்திய இசைக்கலைஞர்கள் மற்றும் இசைசேர்க்கை வல்லுநர்கள் அனைவரையும் சோகமும் இயலாமையும் சேர நினைத்துக் கொள்கிறேன். என்னால் ஒரு புல்லாங்குழல் கலைஞரை, வயலின் வித்வானை எப்படி வியக்க முடிகிறதோ அவ்வளவே குரலிசைக் கலைஞரையும் (பாடகர்கள்) ரசிக்க முடிகிறது.

ஏன் பாடகர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரபலமாகிறார்கள்? அல்லது பிரபலமாக்கப்படுகிறார்கள்?

0. இயல்பிலேயே நாம் அனைவரும் பாடகர்களாக இருக்கிறோம்.
1. குரல் என்பது இயற்கையான இசைக்கருவி. தொண்டை மட்டும்தான் மூலதனம்.
2. யார்​வேண்டுமானாலும் இந்த இசைக்கருவியை எங்கு​வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு பான்ஸுரி 'F' புல்லாங்குழலுக்கு நீங்கள் குறைந்தது ரூ.500/-வது ​செலவு செய்ய வேண்டும். அப்புறம் வெறும் ஓசை வரவைக்கவே மணி/நாள்/மாதக் கணக்கில் பயிற்சி எடுக்க வேண்டும்.
3. குரல் நம் ஆத்மாவுக்கு, கற்பனைக்கு, படைப்பாற்றலுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது. ஒரு ட்யூனை 'ஹம்' செய்துவிடல் சுகமானது. அதையே ஒரு கிதாரின் நரம்புகளுக்கோ, பியானோவின் கட்டைகளுக்கோ மாற்றுவது கிட்டத்தட்ட அல்கெமிஸ்ட் வேலை மாதிரி.
4. இந்த குரல் இசைக்கருவியை (?!) யாருக்கும் தெரியாமல் சுலபமாக எடுத்துச்​செல்லமுடியும். டூர் கிளம்பும்​போது உதாராக கிதாரை எடுத்துக் கொண்டு வரும் பயபுள்ளைக அதை தோளில் சுமந்து கொண்டு (கிதார் ஒரு தோளிசைக் கருவியா??) முழி பிதுங்குவதே மேஜராக இருக்கும்.
5. .......... ஸ்டாப்பிட்!! நாம் ஏன் இப்படி டிஎன்பிஎஸ்ஸி, குரூப்-2 வினாத்தாள் போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் போய்க்​கொண்டிருக்கிறோம்..??

சொல்றேன்.

அநன்யா மஹாதேவன் நம்மிடம் பிடித்த பாடகர்கள் ஐவரை எழுதப்பணித்திருக்கிறார். அதுதான் நாம், நம் ஸ்ஸ்டைலில் கிர்ர்ரடித்துக் கொண்டிருக்கிறோம். போதும் வெளாட்டு; ஆளைக் காமி, நாங்க கிளம்பணும் என்பவர்களுக்காக...

எனக்குப் பிடித்த பாடகர்கள்:

1. கீதா தத்:

ஒரு பெங்காலி. இவரது அசாதாரண வாழ்க்கை முறையே என்னை ஈர்த்தது எனலாம். 1930ல் கிழக்கு வங்காளத்தில் பிறந்த கீதா ராய், பம்பாய்க்கு குடிபெயர்ந்து பின் எஸ்.டி.பர்மன் மூலம் இந்தி திரையிசையில் முக்கிய இடத்தைப் பிடித்தவர். பின்னர் புகழ்பெற்ற இயக்குனர்-நடிகர் குரு தத் படத்தில் (Baazi) பாடும் போது இருவருக்கும் காதல் மலர்ந்து கல்யாணமும் ஆனது.

கீதா ராய், கீதா தத் ஆனார்.

கீதா தத் பாடலை நீங்கள் முதலில் கேட்கும்​போது அது உங்களைப் பெரிதும் கவரவில்லை என்றால் நான் ஆச்சரியப்பட மாட்டேன். கீதாவின் குரல் கவர்ச்சி மிக்கதாக தோணாது. ஆனால், பாடலுடன் அந்தக் குரல் பயணிக்கும் விதம் நம்மை கொள்ளைக் கொள்ளும். நம் காதுகளுக்கு கீதாவின் பிளாக்-அன்ட்-ஒயிட் குரல் தொன்மையானதாகத் தோன்றும். அதில் ஒரு அமானுட வசீகரம் அக்குரலின் பயணத்தில் சிக்கும். Babuji dheere chalna என்ற பாடலைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு இப்பாடலில் ஏதாவது வித்யாசம் நிரடினால் உங்களுக்கு கீதாவைப் பிடிக்க வாய்ப்புண்டு. இல்லாவிட்டால் Pyaasa படத்தில் வரும் Jane Kya Tune Kahi பாடலைக் கேளுங்கள்.

பொதுவாக 1950-களில் ஹிந்தி சினிமாவில் பிரபலாமான சிஜடி வகைப் படங்களின் Jazzy வகை பாடல்கள் (Ankhon Mein Tum Dil Mein Tum Ho ஒரு உதாரணம்), பஜன்கள், விரகதாபப் பாடல்கள் மற்றும் சோகமயப் பாடல்கள் (விசும்பி விசும்பி அழுது​கொண்டே பாடுவது) இவற்றுக்குப் பொருத்தமாக இருந்தது கீதாவின் குரல்.

லதா மங்கேஷ்கரின் வருகைக்குப் பிறகு கீதா 2ம் இடத்துக்கு தள்ளப்பட்டார். லதா தேர்ந்த சாஸ்திரீய ஞானமும், பலதரப்பட்ட பயிற்சியும் கொண்டவர். சிறுவயதிலிருந்தே பாடகியாக இசைக்காகவே வளர்க்கப்பட்டவர். சாதாரண குடும்பத்தில் எவ்வித இசைப் பின்புலமும் பயிற்சியும் இல்லாமல் வளர்ந்த கீதா 2ம் இடத்துக்கு வந்ததும் நியாயமே. இருந்தும் லதா மங்கேஷ்கருக்கு கீதா மேல் ஒரு பயம் இருந்து​கொண்டே இருந்தது.

கீதாவின் குரலின் இழுவிசை சாஸ்திரீய ஜாலங்களுக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இருந்தும் இசையமைப்பாளர்களால் சோகப்பாடல்கள் பாடுவதற்காக விதிக்கப் பட்ட குரலாக அது மாற்றப்பட்டது. Aayega aanewala பாடல் இவ்வகையே. சோகப்பாடல்கள் கீதாவை முழுமையாக எடுத்துக் கொண்டுவிட்டன எனலாம். ​சோகமயமாக அவரின் இயல்பு வாழ்க்கையும் மாறியது.

கீதாவின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை - வஹீதா ரஹ்மானால். புகழ்பெற்ற ஹிந்தி நடிகை (செங்கல்பட்டுக்காரர்). வஹீதாவுக்கும் குரு தத்-க்கும் காதல் மலர்ந்தது. கீதாவைப் புறக்கணிக்க ஆரம்பித்தார் குரு. குருவின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார் வஹீதா. பாருங்கள்.. திரையில் வஹீதா வாயசைக்கும் பாடல்களை கீதாவே பின்னணியில் பாட​வேண்டியிருந்தது. காகஸ் கீ பூல் இந்த பின்னணி நாடகத்திற்கு ஒரு உதாரணம்.
இரு பெண்களின் காதல்களுக்கிடையே ஊசலாடிய குருதத் பின் தற்கொலை செய்து கொண்டார். கீதா குடிக்கு அடிமையானார். மீளாப்பயணமாக அது அமைந்தது. பணச்சிக்கல்​பொருட்டு ஒரு பெங்காலிப் படத்தில் கதாநாயகியாகக் கூட நடித்தார். எதுவும் குருதத் இழப்பை ஈடுகட்ட முடியவில்லை. சிந்து பைரவி சிவக்குமார் மாதிரி மிதமிஞ்சிய குடிபோதையில்​மேடையிலேயே ஆர்மோனியப் பெட்டி மீது சரிந்தும் விழுந்திருக்கிறார். தன்னை அழித்துக்​கொள்ளும் முனைப்பு கொண்டவர் போல் குடிக்க ஆரம்பித்தார். ஈரல் பாதிக்கப்பட்டு, 1972 ஜூலை 20 அன்று கீதா தத் மறைந்தார்.


ஷாஜி எழுதிய​சொல்லில் அடங்காத இசை புத்தகம் கீதா தத்தை அறிமுகப்படுத்தியது. காதில் விழும் கீதாவின் குரல் கறுப்பு-வெள்ளைப் பின்னணியில் பழைய காலத்துத் தெரு, பூங்கா, மாதர்கள், மெளனமாக ஊறும் மங்கலான மாலைப் பொழுது என என்னை காலங் கடத்துகிறது.

2. மனையங்கத்து சுப்ரமணியன் விஸ்வநாதன்

எம். எஸ். விஸ்வநாதன் படைப்பாற்றல் மிக்க பாடகராக எனக்குத் தோன்றுகிறார். நல்ல பாடகரின் தரம் ஒரு பாடலை மீண்டும் மீண்டும் புதிதாக பாடி உருவாக்க வேண்டும். சமரசம் அற்ற தனித்த குரலாக இருக்க வேண்டும். எம்எஸ்வி அப்படித்தான். அவரின் பாடகர் அவதாரம் மிகத்தனித்துவமானது. பிரம்மாண்டமானது.

எனக்கொரு காதலி இருக்கின்றாள் (முத்தான முத்தல்லவோ) என்ற படப்பாடலில் எஸ். பி. பாலசுப்ரமணியத்தோடு இணைந்து பாடியிருப்பார். ஒரே வரிகளை பாடுவதில் எம்எஸ்விக்கும் பாலாவுக்கும் உள்ள வித்யாசத்தை கவனிக்கலாம். இயக்குநர் சரணின் முதல்படமான 'காதல் மன்னனில்' எம்எஸ்வி நடித்திருப்பார். அதில் இதேப் பாடலை அவர் ஒரு காட்சியில் பாடும் போது அசாதாரண மாற்றங்களோடு இருக்கும். ஏனென்றால் எம்எஸ்வி ஒரு படைப்பாளி. ஒரு மெட்டை உருவாக்கும் படைப்பூக்கம் அப்படியே பாடலைப் பாடுவதிலும் கொண்டுவருகிறார்.

பார் மகளே பார் (பார் மகளே பார்), ஜகமே மந்திரம்.. சிவசம்போ (நினைத்தாலே இனிக்கும்)
யார் அந்த நிலவு (சாந்தி), நீ நினைத்தால் இந்நேரத்திலே (நிலவே நீ சாட்சி), சொல்லத்தான் நினைக்கிறேன் (சொல்லத்தான் நினைக்கிறேன்) , கண்டதைச் சொல்கிறேன் (சில நேரங்களில் சில மனிதர்கள்) போன்ற பழைய பாடல்களில் அவரின் பாடு-வளமை வேறு யாராலும் தொடரமுடியாத ஒன்று.

டி.எம். செளந்தர்ராஜன் 'யார் அந்த நிலவு' பாடலை எம்எஸ்வி பாடிக்காட்டியபோது பயந்துவிட்டேன் என்றிருக்கிறார்... பி.பி.ஸ்ரீனிவாஸ் - அவர் பாடியதில் பத்து சதவீதத்தை மட்டும் தன்னால் குரலில் கொண்டுவர முடிந்துள்ளது... பி. சுசீலா - எந்த ஒரு பாடகருமே எம்எஸ்வி பாடிக்காட்டிய அளவுக்கு அவருடைய மெட்டுக்களை உயிரோட்டத்துடன் பாடியதில்லை. எம்எஸ்வி பாடிக் காட்டியதுபோல மெட்டுக்களைப் பாட முடியாமல் அவர் ஒலிப்பதிவகத்திலிருந்து கண்ணீருடன் வெளியேறியிருக்கிறார்... வாணி ஜெயராம் - எம்எஸ்வி பாடும்போது வரும் எண்ணற்ற நுண்ணிய மாற்றங்களை எந்தப் பாடகராலும் மீண்டும் பாடிவிட முடியாது... என்கிறது ஷாஜியின் சொல்லில் அடங்காத இசை.

ஆலால கண்டா (சங்கமம் - ஏ. ஆர். ரஹ்மான்) என் விருப்பப் பாடல்களில் ஒன்று. அதன் உச்ச ஸ்தாயி ஆலாபனைகளும் ஜதியும் அம்மெட்டை பிரம்மாண்டமாக ஆக்கிக் காட்டுக்கின்றன.

மெட்டுத்தேடி தவிக்குது ஒரு பாட்டு (காதல் மன்னன் - பரத்வாஜ்), விடைகொடு எங்கள் நாடே கன்னத்தில் முத்தமிட்டால் - ஏ. ஆர். ரஹ்மான்) என அவரின் சமீபத்திய பாடல்களும் வேறொருவர் இசையமைத்த பாடல்களையும் தன் சொந்த படைப்பாற்றலால் வேறு பரிமாணத்தில் அளித்திருப்பார் எம்எஸ்வி.

எம். எஸ். வி முடிவில்லாத படைப்பாற்றல் மிக்க பாடகர்.

....
அநன்யா ஐம்பாடகர்களைக் குறிப்பிட வேண்டும் என்றிருக்கிறார். மேற்கத்திய இசையில், நம் மரபிசையில் என்று குறிப்பிட்டுச் சொல்லத்தக்க ஆளுமைகள் நிறையபேர் உள்ளனர். ஆனால் அது எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கும் ஒரு பட்டியலாகத் தோன்றுகிறது. எல்லாக் காலத்திலும் நிலையாக மனதில் ஒலித்துக் கொண்டிருக்கும் குரல் அல்லது பாடல் என்று எதுவும் இருப்பதாகத் தோன்றவில்லை. நித்யஸ்ரீ-யின் செளக்யமா கண்ணே செளக்யமா-வை 4 மணிநேரங்கள் தொடர்ச்சியாகக் கேட்டதுண்டு. ஆனால் அவர் பெயரை இங்கு சொல்ல முடியவில்லை. இசை, பாடகர்களைப் பற்றி எழுதுவது சாதாரணமல்ல என்றிருக்கிறது.
இப்போதைக்கு, கீதா தத் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இவர்கள் இருவரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. என் குரல்களின் வேட்டையில் சிக்கியது இவ்வளவுதான். எனக்கு இசை ஞானம் கம்மி அல்லது கணக்கில் வீக் என்று நினைத்துக் கொள்ளுங்களேன் :))

41 comments:

Ananya Mahadevan said...

ரொம்ப ஃப்ளாஷ் பேக்குக்கு போயிட்டீங்க! கீதா தத் அந்தக்காலத்தில் ரொம்ப பிரபலம். பாபுஜி தீரே சல்னா அவங்க தான் பாடினாங்களா? மெதுவா அவங்க வாழ்க்கை வரலாறை சின்ன கதை மாதிரி எழுதிட்டீங்களே? வஹிதா ரெஹ்மான் தஞ்சாவூரைச்சேர்ந்தவர்ன்னு அப்பா சொல்லுவார். ஹ்ம்ம்.. சிந்து பைரவியில் வருமே ஒரு பாடகரின் வாழ்க்கையில் ஆரோஹணம் அவரோஹணம் அது மாதிரி இருந்தது. :(.
எம்.எஸ்.வியை ஒரு பாடகனாக பார்த்திருக்கிறீர்கள். வித்தியாசம்.
இண்ட்ரொடக்‌ஷன் கூட ரொம்ப அழகு. நீங்க என்ன கீபோர்டு யூஸ் பண்றீங்க? உங்க கீபோர்டுல தான் இப்பிடி எழுத்து விழுகுதா? ஹய்யோ.. ஜெகன்நாதா.. ஜெகன்நாதா...

Raju said...

எம்.எஸ்.வியோட, ”ஹைபிச்” யாரும் தொட முடியாது.
ஐ லவ் எம்.எஸ்.வி.

விஜய் said...

இரண்டு பேருமே நல்ல தேர்வு

MSVயின் High Octave பாடல்கள் பாடுவது ரொம்ப சிரமம்

சில சமயம் இசையமைப்பாளர்கள் பாடும் பாடல்கள் உயிரூட்டத்துடன் உள்ளதாக நினைக்கிறேன்.

ரஹ்மானும் higher octaveவில் பாடுவதில் வல்லவர்.

நான் Guitar தோளில் சுமப்பதில்லை, கழுத்தில்தான்.

விஜய்

இரசிகை said...

munnurai...sinthikka vaikkum vishayam.

2 paadakarkal..athilum oruththaraiththaan(MSV) theritum.
MSV(itharkkana vilakkamum ippo thaan theriyum)

//
இசை, பாடகர்களைப் பற்றி எழுதுவது சாதாரணமல்ல என்றிருக்கிறது. இப்போதைக்கு, கீதா தத் மற்றும் எம். எஸ். விஸ்வநாதன் இவர்கள் இருவரை மட்டுமே குறிப்பிட முடிகிறது. என் குரல்களின் வேட்டையில் சிக்கியது இவ்வளவுதான். எனக்கு இசை ஞானம் கம்மி அல்லது கணக்கில் வீக் என்று நினைத்துக் கொள்ளுங்களேன் :))
//

appo........naanlaam.

zero balance..thaan:))

vaazhthukkal jeganaathan sir!

Vidhoosh said...

//தாண்டுக..//

முடில... ரொம்ப வெயிட்டு... பதிவு.

முக்கியமான ஒன்றை சொல்லாமல் விட்டுடீங்களே.. யாராவது வந்து திட்டும் வரைக்கும் ........ பாத்ரூமில் பாடலாம், ரயில் பயணங்களில் அந்தாக்ஷரி விளையாடலாம்

my fav list here. :-)

தத்பீர் சே பிக்டி ஹுயி தக்தீர் பனா லே..

வக்த் நே கியா கா ஹசீன் சிதம்

Aye Dil Mujhe Bata De

jaane kahan mera jigar gaya ji

Mera naam chin chin choo / Dekho Jadoo Bhare More Nain - both starring Madhubala - should search and watch in youtube.

Piya Aiso Jiya mein Samaye Gayo

ஈரோடு கதிர் said...

//விடைகொடு எங்கள் நாடே//

அந்தக் குரலுக்காகவே...
ஆல்டைம் பேவரைட்

கலா said...

ஜெகன் என்ன!!
ஐந்துக்கு: இரண்டுதானா?
அப்ப நீங்க சொன்னது சரிதான்
போலும்!!

எனக்கு முதலாமவரைப் பற்றித்{கீதா தத்}
தெரியாது.உங்கள் விளக்கம் மூலமாய்த்
தெரிந்து கொண்டேன் நன்றி

இரண்டாமவர்{எம்.எஸ்.வி}
ஆம் அருமையான பாடகரும் தான்
ஏன்?நல்ல நடிப்பையும் ஒரு படத்தில்
பார்த்திருக்கின்றேன் படம் ஞாபகம்
இல்லை{சாப்பாட்டுக் கடை நடத்துபவராக}
நல்ல நகைச் சுவையுடன்,அடிக்கடி பாடல்களுடனும்
நடித்திருந்தார்.

சிவகாமியின் செல்வனில் ஒரு பாடல்
மிகவும் மனதைத் தொட்ட தத்துவப்
பாடல் எனக்கு மிகவும் பிடித்தது
“எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திருமகளே” என்ற பாடல்

எனக்கு இசை ஞானம் கம்மி
அல்லது கணக்கில் வீக்
என்று நினைத்துக்
கொள்ளுங்களேன் :))\\

இதை நாங்க...நாங்க நம்பனுமாக்கும்!!
நன்றி ஜெகன்.

ஹேமா said...

ஜே...ஏதாவது ஒரு இடத்தை விட்டு வையுங்க.வரைதல்,பாடுதல்,கவிதை,கதைன்னு எல்லாத்தையும் குத்தகைக்கு எடுத்திருக்கீங்க.

எனக்கும் முதலாமவர் பற்றித் தெரியவில்லை.எம்.எஸ்.வின் பல பாடல்கள் பிடிக்கும்.பொதுவாகப் பாடல்கள் பற்றி நிறையக் கதைக்கலாம்.அவ்ளோ இருக்கு.

நான் தேடி நீங்கள் எடுத்துத் தந்த பாடல் ஞாபகம் வருகிறது.சேமிப்பில் வைத்திருக்கிறேன்.நன்றி.

Menaga Sathia said...

கீதா தத் பற்றி இப்போழுதுதான் தெரிந்துக்கொண்டேன்..நன்றி!!

இரசிகை said...

solla ninaiththu ninaiththu maranthu ponathu.....

unga banner -ril irukkum .....alai kaalth thadam.. athu keezha irukkum caption yellaame azhagu...
pidichchurukku![appaadi solliyaachchu]

சாந்தி மாரியப்பன் said...

babuji teere chalna.. pyar me zara samalna இந்தப்பாட்டை விரும்பி கேட்டதுண்டு. பாடியவர் கீதா தத் என்பது புதுத்தகவல்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

பாடகர்கள் என்பவர் சினிமாத்துறைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை அருமையாக சொல்லிருக்கீங்க ஜெகா.

ஆமா அநன்யா சொன்ன ஐந்துபேரில் மூன்றை காணோம் எங்கே?..

ஸ்ரீராம். said...

மிச்ச மூன்று பேரை அவரவர்கள் விருப்பத்துக்கு நிரப்பிக் கொள்ளலாம் என்று சொல்லிவிடுங்கள் ஜெகன்... MSV யை பாடகாரகப் பார்ப்பது நியாயமா? எனினும் எல்லாம் நல்ல பாடல்களே...உங்கள் லிஸ்ட்டில் அவரின் "இக்கரைக்கு அக்கரைப் பச்சை" பாடலையும் சேர்த்துக் கொள்ளுங்கள். "அல்லா அல்லா" தனி ரகம்.

பத்மா said...

ஜகன் ஐந்து பாடகர்கள் என்பது மிகவும் கடினமான விஷயம் . ஒரு சாக்லேட் குவியலுக்கு நடுவே ஒரு குழந்தை யை விட்டால் எதை எடுப்பது என்று திண்டாடுமே அப்படித்தான் திண்டாட வேண்டும் .உங்கள் கையில் நல்ல தரமான five ஸ்டாரும் ,பெரிய டைரி மில்கும்
கிடைத்துள்ளது .நன்றாக அனுபவித்து ருசித்து எங்களுக்கும் சிறிது காக்கை கடி தந்துளீர்கள் .இனிக்கிறது .
கமர்கட்டை வாயில் ஒழுக விட்டுக்கொண்டு orange மிட்டாய் தேடும்
பத்மா

சிநேகிதன் அக்பர் said...

முதலாமானவர் எனக்கு அறிமுகமில்லை.

எம் எஸ் வி யை நானும் நன்றாக ரசித்திருக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி மாம்ஸ்.

ஹேமா said...

எம்.ஸ்.வி அவர்களின் முழுப்பெயர் அறியத் தந்ததுக்கு நன்றி ஜே.

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

எம்.எஸ்.வி இன் ' உனக்கென்ன குறைச்சல் .. நீ ஒரு ராஜா... வந்தால் வரட்டும் முதுமை...' என்றப் பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் ஜெகன். படம் பெயர் ஞாபகமில்லை.( வெள்ளி விழாவா?)
அவருக்கு மரியாதை செய்திருக்கிறீகள் ஜெகன். நன்றி.
கீதா தத்! மூன்று முறை தற்கொலை முயற்சிக்குப்பின் , குடியால் கல்லிரல் பாதிக்கப்பட்டு இறந்த அருமையான பாடகி! அவர் தலத் மேஹமூதுடன் பாடிய ' தும்சா மீத் மிலா' என்ற 'மிட் நைட்' படத்தின் பாடல் எனக்கு மிகவும் பிடித்தப்பாடல். So sad....

பா.ராஜாராம் said...

இன்னும் என்ன துறைகள் பாக்கி ஜெகா?

வர, வர, உங்களை பார்த்தால் பயமா இருக்கு, ஜெகா.

இந்த ஆளாயா நம்ம கவிதைக்கெல்லாம் பின்னூட்டம் போடுறாரு என.

நட்பு என வரும் போது கவிதை என்ன..இல்லையா? :-)

இரசிகை said...

//
பா.ராஜாராம் said...
இன்னும் என்ன துறைகள் பாக்கி ஜெகா?

வர, வர, உங்களை பார்த்தால் பயமா இருக்கு, ஜெகா.

இந்த ஆளாயா நம்ம கவிதைக்கெல்லாம் பின்னூட்டம் போடுறாரு என.
//

aahaa!
ippadiththaan rajaram sir..,
naanum kooda yenakkulla polambikkittu irunthen.

yen saarbaa neenga solleetteenga..
nantri makka[avvv]......:)

இரசிகை said...

//
ஏன் பாடகர்கள் துதிக்கப்படுகிறார்கள்?

ஏன் பாடகர்கள் பிரபலங்களாக இருக்கிறார்கள்?

உங்களுக்குத் எவ்வளவு புல்லாங்குழல் / வயலின் / மிருதங்க / பிற வாத்திய இசைக் கலைஞர்கள் பெயர்கள் தெரியும்?

இசையில் குரல் என்பதும் ஒரு கருவியே (instrument) என்ற எண்ணத்தை சிலகாலங்களுக்கு முன்னேதான் பெற்றேன். இசைக்கோர்வையில் பாடகர் தன் குரல் எப்படி பங்காற்றுகிறதோ அதேயளவுக்கு அல்லது அதையும் விட அதிகமாக வாத்தியங்களின் இசையும் பங்காற்றுகின்றன.

ஆனால் பாடல் முன்னிறுத்தப்படுவது குரலிசைக் கலைஞர்களால்; பாடகர்களால்; இசையமைப்பாளரால்.

முகம் தெரியாத, அடையாளங்கள் தொலைந்த பின்னணி வாத்திய இசைக்கலைஞர்கள் மற்றும் இசைசேர்க்கை வல்லுநர்கள் அனைவரையும் சோகமும் இயலாமையும் சேர நினைத்துக் கொள்கிறேன். என்னால் ஒரு புல்லாங்குழல் கலைஞரை, வயலின் வித்வானை எப்படி வியக்க முடிகிறதோ அவ்வளவே குரலிசைக் கலைஞரையும் (பாடகர்கள்) ரசிக்க முடிகிறது.

ஏன் பாடகர்கள் எல்லோரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு பிரபலமாகிறார்கள்? அல்லது பிரபலமாக்கப்படுகிறார்கள்?

0. இயல்பிலேயே நாம் அனைவரும் பாடகர்களாக இருக்கிறோம்.
1. குரல் என்பது இயற்கையான இசைக்கருவி. தொண்டை மட்டும்தான் மூலதனம்.
2. யார்​வேண்டுமானாலும் இந்த இசைக்கருவியை எங்கு​வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஒரு பான்ஸுரி 'F' புல்லாங்குழலுக்கு நீங்கள் குறைந்தது ரூ.500/-வது ​செலவு செய்ய வேண்டும். அப்புறம் வெறும் ஓசை வரவைக்கவே மணி/நாள்/மாதக் கணக்கில் பயிற்சி எடுக்க வேண்டும்.
3. குரல் நம் ஆத்மாவுக்கு, கற்பனைக்கு, படைப்பாற்றலுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது. ஒரு ட்யூனை 'ஹம்' செய்துவிடல் சுகமானது. அதையே ஒரு கிதாரின் நரம்புகளுக்கோ, பியானோவின் கட்டைகளுக்கோ மாற்றுவது கிட்டத்தட்ட அல்கெமிஸ்ட் வேலை மாதிரி.
4. இந்த குரல் இசைக்கருவியை (?!) யாருக்கும் தெரியாமல் சுலபமாக எடுத்துச்​செல்லமுடியும். டூர் கிளம்பும்​போது உதாராக கிதாரை எடுத்துக் கொண்டு வரும் பயபுள்ளைக அதை தோளில் சுமந்து கொண்டு (கிதார் ஒரு தோளிசைக் கருவியா??) முழி பிதுங்குவதே மேஜராக இருக்கும்.
5. .......... ஸ்டாப்பிட்!! நாம் ஏன் இப்படி டிஎன்பிஎஸ்ஸி, குரூப்-2 வினாத்தாள் போல சம்பந்தா சம்பந்தமில்லாமல் போய்க்​கொண்டிருக்கிறோம்..??

//

ithai naan thirumbath thirumba yosiththuk kondum..,
neram kidaikkum pothellaam vaasiththuk kondum irukkiren.

isaik karuvikal/kavingarkal mathippirkuriyavarkal thaan.thiranaalikalthaan.
irunthaalum kuralin meethu irukkum mokam thaan yennul perithaai nirkirathu.

oru raagaththai oru isaikkaruvi vaasikkirathu/meettukirathu.aanaal,
kural thaane paadukirathu?

uchcharippukalum..,expressions - um oru kuralaalthaane miga athikamaaka kodukka mudiyum.

oru isaik karuviyil[ex.vayalin] irunthu yeththanai vithamaana saththangalai naam pera mudiyum?
aanaal,naam yeththanai vithamaana paadakarkal kuralaik[saththangalai] ketkirom.

ippadiye oodukirathu.

yenna solla varreenga nu kekkaatheenga??........:))
anaal,neengale pathil sollidungalen.
//
ஏன் பாடகர்கள் துதிக்கப்படுகிறார்கள்?

ஏன் பாடகர்கள் பிரபலங்களாக இருக்கிறார்கள்?
//

நேசமித்ரன் said...

உங்கள் யானையை பார்த்தேன் ஜெகன்
பென்சில் ட்ராயிங்கா அது ..

இங்கு இசையைப் பற்றி....

என் தளத்தில் கவிதையே பின்னூட்டமாய்

எதாவது மிச்சம் இருக்கா ?


வாழ்த்துகள் ஜெகன்

Nathanjagk said...

அன்பு அநன்யா,
பிடித்த பாடர்கள் வாய்ப்பளித்தற்கு நன்றி! சமீபத்தில் படித்த ஷாஜியின் ​சொல்லில் அடங்காத இ​சை இந்த இடுகைக்கு இன்​னொரு ஊற்றுக்கண் எனலாம். கீதா தத் பாடல்கள் நான் இப்போதுதான் ​கேட்கி​றேன். இதன் மூலம் சிலரின் ஞாபகங்க​ளை கிளறி விட்டதில் திருப்தியாகி​றேன்.

*

நன்றி ராஜு!

பிச்சு (pitch) என்றா​லே விச்சுதான் என்றே ​சொல்லாடல் உண்டாம்.

*

அன்பு விஜய்,
உண்​மைதான். ​ஹை-ஆக்​டவ் மட்டுமல்லாமல், improvisation ​செய்வதிலும் vocal dynamics என்ற வித்தகத்திலும் தனிப்பட்ட சிறப்பு வாய்ந்தவர் எம்எஸ்வி.
நீங்க கிதாரிஸ்டா? எங்கள்-பிளாக்கில் உங்கள் கிதாரி​சைக் ​கேட்க ஆவ​லோடு இருக்கி​​றேன்!

*

நன்றி இரசி​கை மேடம்!
உங்களிடம் 'ஸீ​​ரோ பாலன்ஸ்' என்பதை நம்ப மாட்​டேனாக்கும். இருந்தாலும் பரவாயில்​லை. எனக்கு 'மிஸ்டு-கால்' ​கொடுங்கள். நான் உதவுகி​றேன் :))

Nathanjagk said...

விதூஷ்,
அ​தே பாடல்க​ளையும் பட்டியலிட நினைத்து அப்புறம் எடுத்து விட்​டேன்.
கீதா தத் மறக்கப் படமாட்டார் என்பதற்கு நீங்க​ளே உதாரணம்!
Go To Top என்ப​தைத்தான் தாண்டுக ஆக்கியிருக்கி​றேன் (காலடியாச்​சே?) நன்றி!!

*

அன்பு ஈ​ரோடு கதிர்,
மிக்க நன்றி!!

*

ஹ​லோ கலா,
​​கொஞ்சம் ​மெதுவாப் ​போங்க. எம்.எஸ்.வி பாட்டு பாடி நடித்த அந்தப் படம் பற்றியும் இதி​லேயே எழுதியுள்ளேனே? திரும்பப் பாருங்க!
​சிவகாமியின் சபதம் - பாடலும் அருமையான ஒன்று. அ​தை எழுதநி​னைத்து விட்டுவிட்​டேன். நினைவூட்டியதற்கு நன்றி!!

*

அன்பு ​ஹேமா,
க​தை, கவி​தை, ஓவியம், இ​சை எல்லாக் க​​லையும் ஒன்றுதா​னே?
பாடல்கள் பற்றி ​பேசுவது சிறப்பானதுதான்.. சிலருக்கு ​பேச்​​​சே பாட்டாகத்தான் இருக்கும். ​தென்றல் வந்து என்​னைத் ​தொடும் என்ற பாடல் எனக்கு கி​டைத்தது இப்படித்தான்.


*

அன்பு சஷிகா, மிக்க நன்றி!

Nathanjagk said...

இரசி​கை,
மிக்க நன்றி! பிளாக் வடிவ​மைப்பில் நான் கவனம் ​கொள்ளும் விஷயங்கள்:
1. கண்ணுக்கு எளி​மை
2. டவுன்-​லோடு ஆக எடுத்துக் ​கொள்ளும் ​நேரம்
3. முடிந்தவ​ரை கு​றைவான வண்ணங்களைப் பயன்படுத்துவது
நான் ​கவன​மெடுத்து ​செய்த ​வே​லை இது. உங்கள் கவனிப்பும் பாராட்டும் எனக்கான சிறகுகள்!

Nathanjagk said...

நன்றி அ​​மைதிச்சாரல்!

*

நன்றி ஸ்டார்ஜன்,
3 ​பேர் இல்​லை என்று சரியாக கண்டுபிடித்துவிட்டீர்கள். இதுக்கு காரணம் என்னன்னு ​​சொல்லணுமா?

*

அன்பு ஸ்ரீராம்,
இக்கரைக்கு அக்கரைப் பச்சை, அல்லா அல்லா பாடல்களும் குறிப்பிட்டுச் ​சொல்லப்பட ​வேண்டிய​வைதான். எம்எஸ்வி பாட்டிலும் ஒரு ப​டைப்பாளியாக​வேத் ​தெரிகிறார். நன்றி ஸ்ரீ!

*

அன்பு பத்மா,
ஐந்து ​கொஞ்சம் சிரமம்தான். இப்​​ப மனசுக்குத் ​தோணின 2 ​பே​ரை... இல்​லே.. மிட்டாய்க​ளை என் ​கைப்பக்குவத்தில் ச​மைச்சு பரிமாறியிருக்​​கேன் :)
ஒரு பாடகியா உங்களின் குரல் இப்ப காதில் ஓடிக்கிட்டிருக்கு. எங்கள்-பிளாக்கில் உங்கள் பாடல் மிக அருமை!
ஒரு நாள் யா​ரோ, என்ன டாஃபி பிட்டுத் தந்தா​ரோ.....!!

*

அக்பர் மாப்ள,
​செளக்யமா? நன்றி!!

Nathanjagk said...

அன்பு ப்ரபஞ்சப்ரியன்,
நீங்கள் குறிப்பிட்ட பாடல் எம்.குமார் இசையில் எம்எஸ்வி பாடியது. படம் வெள்ளி விழா-தான்!
http://kadirveechu.blogspot.com/2010/05/time-machine.html-என்ற ப்ரபஞ்சப்ரியனின் இடுகை இசையைக் கொண்டு நம் வாழ்வின் பருவங்களை மீட்டெடுக்கும் அழகிய முயற்சி! அனைவரும் படித்துப் பயணிக்க வேண்டிய காலஇயந்திரம் அது.
வாழ்த்துகிறேன் நண்பா!

*

அன்பு பா.ரா.,
எல்லா இடங்களையும் நுனிபுல் மேய்ப்பவனாகிறேன். ஆழ்ந்து கூர்ந்து பதிந்த வேராக உங்களின் கவிதைகளை உணர்கிறேன். கருவேலநிழலில் காலடித்தடம் பதிய மறுக்குமா என்ன?கருவேல மரம் ஒரு வேடந்தாங்கல்! நட்பாக நன்றி ராஜா!

*

ஹலோ இரசிகை,
என்ன நீங்களும் ராஜா கூட சேர்ந்தாச்சா?

இருபுறமுமாய் கால்களிட்டு
நெஞ்சில் உறங்கும் குழந்தையென..
ஜன்னல் கம்பிகளில்
வாழ்த்தட்டைகள் !!


என்ற கவிதை போதும்... எங்களை உங்களின் ரசிகர்களாக்க! சில சமயங்களில் சிறந்த ரசிகனாய் இருப்பதே பெரிய இலக்கியப் படைப்பாக மாறிவிடுகிறது.

Nathanjagk said...

இரசி​​கை,
பாடர்கள் ஏன் துதிக்கப் படுகிறார்கள் என்ற ​கேள்வி எனக்குள் நிரம்பிய அன்று இ​சைக்கருவி க​லைஞர்கள் எனக்கு ​வேறு பரிமாணத்தில் ​தெரிய ஆரம்பித்தார்கள்.
ஒரு ​இ​சைவடி​வை கருவியில் வாசிப்பது கடினமான ஒன்று. இ​சை பூர்வமான ஒரு கற்ப​னை​யை கருவிக்கு கடத்திச் ​செல்வது ஒரு சாகசப் பயணம் மாதிரிதான். ​பேசுவதற்கும் எழுதுவதற்கும் அல்லது வரைதலுக்கும் உள்ள வித்யாசம் இது.
நி​றைய விரிவாக ​பேச ​​வேண்டியுள்ளது. பின்னிசைக் கலைஞர்களையும் நி​னைத்துப் பார்க்க ​​வேண்டும் என்ற எண்ணம் நம்முள் ​தோன்ற ​வேண்டும்.
அதற்காகத்தான் இந்த இடு​கையின் பாதி​​யைச் ​செலவிட்டிருக்கி​றேன்.
அ​தை சரியாக எடுத்துக்​கொண்டு என் திருப்தி​யை ஒரு ​புன்ன​கையாக ​​மார்ஃபிங் ​செய்ததற்கு மிக்க நன்றி! (​மேடம்)

*

​நேசன்,
என்ன வி​ளையாட்டு இது?
​ஹேமா, ராஜா, ​ரசி​கை அப்புறம் ​நேசன் 4 ​பேரும் ஒ​ரே மாதிரி பின்னூ ​போடறீங்க​ளே?
இதுதான் கவித்துவ​மோ?
யா​னை ​பென்சில்தான்!
நன்றியும்!

இரசிகை said...

maaperum angeekaaram..,
ungal thalaththil en kavithai.
nantri..![rajaram sir orumurai koduththaanga]

yellaa pathilkalukkum anbum nantriyum:)

Aathira mullai said...

இப்போதுதான் கீதா தத் பற்றி விரிவாக அறிந்து கொண்டேன்.. இசையிலும் தாங்கள் ஞானி என்பதை இப்பதிவு வெளிச்சமிட்டு பிரமிக்க வைத்தது. எனக்கும் பிடித்த மெல்லிசை மன்னரை இமையத்தில் ஏற்றிய பாங்கு அருமை. ஜெகன், ஏழிசையாய் இசைப்பயனாய் என்னுடைய தோழனுமாய் என்றும் நீ இருக்க வேண்குகிறேன். அன்புடன்...ஆதிரா..

Shanmugam Rajamanickam said...

அண்ணா வலைபதிவு எழுத எப்பலாம் டைம் கிடைகிறது இல்ல இருந்தாலும் உங்களுக்காக நான் எழுதுவேன் ..........

உங்கள் பாசத்துக்கு நன்றி அண்ணா

பத்மநாபன் said...

ஜெகன்...உங்கள் பதிவுகளை படித்துவிட்டு..ஒரு வார்த்தை ,ஒரு வரி பின்னூட்டங்கள் போட மனமில்லாமல், நிறைய எழுத வேண்டுமென்ற எனதாசைக்கு வார்த்தையும் ,நேரமும் கிடைக்காமல் நன்றாக ரசித்து விட்டு மட்டும் போவேன்...இரண்டு குரலாளர்களை மட்டும் எடுத்து , பாட்டு பாடகன் விஷயங்களை மிக ஆழமாக சொன்ன விதம் என்னுடய ரசிப்பு தன்மைக்கு புதிய விஷயங்கள்..உயிர்ப்பான பதிப்புகளுக்கு பாராட்டுகள்..நன்றி..

ஷங்கி said...

”பாபுஜி தீரே சல்னா” - வெகுகாலம் முன்பு கேட்டிருக்கிறேன். ஆனால் பாடகி யாரென்று தேடியதில்லை. இப்போது மீண்டும் கேட்டுப் பார்க்கையில் பதின்மப் பாலையின் கீற்று வந்து போகிறது. அனேகமாக இந்தப் பாடலை பதின்ம வயதில் ஒரு வியாழக்கிழமை மத்தியானம் இரண்டரை மணியளவில், ஏதோ ஒரு பக்கத்து வீட்டிலிருந்து வரும் பாட்டாகத்தான் கேட்டிருப்பேன். இந்த, இந்தக் குரல்களைத்தான் நான் உங்கள் மற்றுமொரு இடுகையில் சொல்லும்போது பாலை உணர்ச்சியைத் தூண்டும் பாடல்கள் என்று சொன்னேன். அந்த இசை, குரல், யாருமற்ற மத்தியான வேளை, காற்றில் மிதந்து வரும் இசை.... நான் மத்திய கிழக்குக்குச் செல்ல வேண்டியதில்லை.
தமிழில் சுசீலாவின் சில பழைய பாடல்கள் அந்த மாதிரி உணர்ச்சியைக் குடுத்திருக்கின்றன. எல்லாமே பதின்ம வயதில் மாற்றான் தோட்டத்து மல்லிகையாக நுகர்ந்தவைதான்.

எம் எஸ் வி என்று முதலில் நான் கவனித்தது , ”ஜகமே மந்திரம்.. சிவசம்போ” தான். நல்ல தேர்வுகள்.

நன்றி என் பதின்மப் பாலையை மீண்டும் தூண்டியதற்கு...
நெஞ்சம் மறப்பதில்லை அது தன் நினைவை இழக்கவில்லை. நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?....

Nathanjagk said...

மீண்டும் நன்றிகள் இரசிகை!

*

அன்பு ஆதிரா,

இசையில் ஒரு இரசிகன் அவ்வளவே. ஞானி என்றெல்லாம் சொல்லி என்னை காமடி பீஸாக்கி விடாதீங்க ஆதிரா :)))
அன்புக்கும் நன்றி!! உங்களின் எளிமையான அன்புக்கு முன்னால் எல்லாம் தலைவணங்கும். என்றும் தோழமையுடன்..!

*

தம்பிரி சம்முவம்,
நல்லா எழுதுங்க. பரம்பரையில் முதன்முதலில் பிளாக் ஆரம்பிச்சது எங்க அப்பாதான்னு மகனும், சம்முவம் தாத்தா-தான் என்று பேரனும் முழங்க வேண்டாமா?

*

அன்பு பத்மனாபன்,
சுஜாதா பற்றி நீங்கள் எழுதிய பதிவுதான் என்னை உங்களிடம் சேர்த்தது எனலாம். சுஜாதாவை நீங்கள் அணுகிய விதம் என்னை பிரமிக்க வைத்தது. இன்று கூட எங்கள்-பிளாக்கில் சுஜாதா பற்றி வாசித்தேன். அது உடனே உங்களை நினைக்க வைத்துவிட்டது. இன்று பார்த்தால் உங்கள் பின்னூட்டம். மிக்க நன்றி நண்பரே. சுஜாதா பற்றி எழுதியதற்கு பிறகு எதுவும் எழுதவில்லையா? காத்திருக்கிறோம்!

Nathanjagk said...

சங்காண்ணா... சங்காண்ணா...
எங்க சங்காத்தமே வேணாம்னு இருந்திட்டீங்களா??
இன்னிக்கு உங்களுக்கு மெயில் அனுப்பலாம்னு இருந்தேன். நல்லவேளை பின்னூ போட்டு ஆஜராகிட்டீங்க. (இல்லேன்னா ப்ரான்ஸ் காஃப்கா, இடாலோ கால்வினோ, லா.ச. ராமிர்தம் சொன்னாங்கோன்னு பெர்ஸாஸா ஒரு மெயில் வந்திருக்கும் - இங்கே சம்மர் வேற)
உங்க பின்னூட்டம் பார்க்காத வறட்சியில், எனக்கே நானே உங்க பேர்ல பின்னூ போட்டுக்கிற அளவுக்கு டெரரா திங் பண்ணினேன். ஒரு பினாமி பின்னூட்டத்தை தடுத்த புண்ணியத்தை சம்பாதித்துக் கொண்டீர்கள்! நன்றிங்ணா :)))

ஷங்கி said...

சங்காத்தமே வேண்டாம்னு விடக்கூடிய ஆளில்லையே என் தம்பி தங்கக்கம்பி! நான் பழகிய பெரிய படி(டை)ப்பாளி நீங்கள்தான். அதனால் அப்படி ஓடிப் போக முடியாது.
பால்மரின் தோல்விக் கடலலை திரும்பி வந்து விட்டது. அதில் கொஞ்சம் கால் நனைத்துக் கொண்டிருந்தேன். இடுகையைச் சில நாட்கள் முன்னரே படித்து விட்டாலும் பின்னூ போடச் சில நாட்கள் எடுத்துக் கொண்டேன்.
காலடியின் தீ.அதிதீ. ரசிகர் மன்றத் தலைவர் பதவியை அவ்வளவு சீக்கிரம் விட்டு விடுவேனா?! இன்னும் கொஞ்ச நாளைக்கு வாசகன் மட்டும்தான், உங்களை மாதிரி படைப்பாளிக்கு. (என் இடுகைகளையெல்லாம் தூக்கி விட்டேன்!)

Nathanjagk said...

சங்கத்தலைவர் சங்காண்ணாவின் சங்காத்தம் சந்தோஷமா இருக்குவேய்!!
ஆமாண்ணே.. என்னுள்ளே போயி பார்த்தேன்.. எதையும் காணோம். என்-உள்ளே மறைத்து வைக்க எதுவுமில்லை என்று நினைத்து விட்டீர்களோ??

சீக்கிரம் மரத்தடி மாமுனி, ​
போர்ட்ரெய்ட், தங்கமணி தகவல்கள், ​மோட்டுவளைச் சிந்தனை இல்லே வீக்-என்ட் போனஸ் எதையாவதுப் போட்டுத் தாக்குங்க. ப(டி)ப்பாளின்னு​வேற ​சொல்லிட்டீங்க.. படிக்கறதுக்காக ஏதாவது எழுதுங்ணா.

'என்னுள்ளே' போர்ப்படைத் தளபதிங்கிற முறையில் கேட்டுக்​கொள்கிறேன்: ஷங்கே முழங்கு!

சுந்தர்ஜி said...
This comment has been removed by the author.
adhiran said...

lataa vanthaalum lattest naan jegan.

nalla thervu. vani yum L R Esvariyum unakku pidikalainaalum konjam avangalap paththi ezhuth. ennaip poruththavarai LR ammaa MSV-yoda coumter part. hindiyila usha udoop. try pannalaam.

vaazhththukkal. nanri.

மனோ சாமிநாதன் said...

கீதா தத், விஸ்வநாதன் பற்றிய ஆழ்ந்த ரசனை மிக்க விமர்சனங்கள் அருமை!
படித்ததும் சுசீலா, லதா, பி.பி..ஸ்ரீனிவாஸ், ரஃபி, கிஷோர், டி.எம்.செள்ந்தரராஜன், மெஹ்திஹாஸன் என்று ஆழ்ந்த, கம்பீரமான, பல தேன்மதுரக் குரல்கள் சில மணி நேரங்களுக்கு வலம் வந்தன.

ஆழ்கடலுக்குள் மூழ்கி நல்முத்துக்களை எடுப்பது என்பது மிகவும் சிரமமான விஷயம். ஆனால் கிடைப்பதெல்லாமே நல்முத்துக்கள் என்றால் எதைக் குறியிட்டுச் சொல்வது? அதுவும் மிகவும் சிரமமே.

இருந்தாலும் சுசீலாவின் ‘மாலைப்பொழுதின் மயக்கத்திலே,’
லதாவின் ‘ ஜப் கபி பி சுனோங்கே கீத்’,
மெஹ்திஹாஸனின் ‘ யே தேரா ஆனா’,
கிஷோரின் ‘ஹமேன் தும்சே ப்யார் கித்னா’,
ரஃபியின் ‘ கபி குத் பர்’ –ன இப்படி ஆன்மாவையே அசைக்கும் பாடகர்களைத் தாண்டி ‘கீதா தத்’ பற்றி எழுதியிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது!

தினசரித் தேவைகளின் மின்சார ஓட்டங்களிடையே, உங்களின் ரசனையான பதிவின் தாக்கம், பல அருமையான பாடல்களை நினைவுக்குக் கொண்டுவந்து விட்டது. உங்களுக்கு என் நன்றி!!

Nathanjagk said...

அன்பு மனோ,
நீங்கள் குறிப்பிட்ட பாடல் வரிசை வேறொரு களத்திற்கு என்னை இழுத்துச் செல்கிறது.

மெனுஹ்தி ஹஸன் பற்றிக் கூடக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். நல்ல ரசனை. உங்கள் இசை ரசனை பற்றி எழுதினால் நிச்சயம் சுவாரஸியமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

ஏற்கனவே எழுதாவிட்டால் இதை ஒரு வேண்டுகோளாக எடுத்துக் கொண்டு எழுதுங்கள்.
நன்றி!

Anonymous said...

MSV in kaaviya thalaivi

நேரான நெடுஞ்சாலை ஓரிடத்தில் இரு கூறாகப் பிரிவதுண்டு
கூறாகப் பிரிந்தவை வேறிடத்தில் வந்து ஒன்றாக இணைவதுண்டு
....
தாயெனும் சுமைதாங்கி

இந்த பாடலை கேட்டால் நீங்கள் அழுது விடுவீர்கள்