Sunday, June 21, 2009

விஜய் அவார்ட்ஸ் 2009

மற்ற தமிழ் சேனல்களிலிருந்து தன்னை வித்யாசப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளில் முன்னிலை வகிக்கும் சேனல் விஜய். கொஞ்சம் ஸ்டார் சேனல் பாதிப்பு இருந்தாலும் அதன் தாக்கம் தமிழின் சிறுதிரை ரசிகர்களிடம் அதிகம்.
(யுனிவர்​ஸெல்) விஜய் அவார்ட்ஸ் வருடம் ஒருமுறை பெரிய திரைக​லைஞர்களை கெளரவப்படுத்தும் நிகழ்ச்சி. படங்களையும், கலைஞர்களையும் தெரிவு செய்வது, ரசிகர்களின் தெரிவுகளை அறிந்து கொள்வது (ரசிகன் எக்ஸ்ப்ரஸ்), நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பது என இது ஒரு முன்னோடி நிகழ்ச்சி எனலாம்.
இந்த
முறை விஜய் அவார்ட்ஸ் 2009 - சமீபத்தில் நடந்தேறியது. விருதுகள் விபரம் பின்வருமாறு:
பேவரிட்
நடிகர் - கமல்ஹாசன் (தசாவதாரம் படத்திற்காக)
பேவரிட் நடிகை - நயன்தாரா (யாரடி நீ மோகினி)
பேவரிட் திரைப்படம் - வாரணம் ஆயிரம்
பேவரிட் இயக்குநர் - ​கெளதம் வாசு​தேவ் மேனன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகர் - சூர்யா (வாரணம் ஆயிரம்)
சிறந்த நடிகை - ஸ்னேகா (பிரிவோம் சந்திப்​போம்)
சிறந்த புதுமுக நடிகை - பார்வதி (பூ)
சிறந்த துணை நடிகை - சிம்ரன் (வாரணம் ஆயிரம்)
சிறந்த காமடியன் - கமல்ஹாசன் (தசாவதாரம்)
சிறந்த வில்லன் - கமல்ஹாசன் (தசாவதாரம்)
சிறந்த கதை, திரைக்கதை ஆசிரியர் - கமல்ஹாசன் (தசாவதாரம்)
சிறந்த இசையமைப்பாளர் - ஹாரிஸ் ஜெயராஜ்
சிறந்த பின்னணிப் பாடகர் - ஹரிஹரன் (வாரணம் ஆயிரம் - நெஞ்சுக்குள்..)
சிறந்த பாடலாசிரியர் - தாமரை (வாரணம் ஆயிரம்)
சிறந்த​மேக்கப் கலைஞர் - பானு மற்றும் ​யோகேஷ் (வாரணம் ஆயிரம்)
சிறந்த இயக்குநர் - சசிக்குமார் (சுப்ரமணியபுரம்)
சிறந்த ஒளிப்பதிவாளர் - எஸ். ஆர். கதிர்
சிறந்த எடிட்டர் - ராஜா முகம்மது
சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் - ராஜ​சேகர் (சுப்ரமணியபுரம்)
சிறந்த கலை - சமீர் சந்தா, பிரபாகரன், ​தோட்டா தரணி
சிறந்த காஸ்ட்யூம் டிசைன் - ​கெளதமி டடிமலா (தசாவதாரம்)
சிறந்த பின்னணிப் பாடகி - பாம்பே ​ஜெயஸ்ரீ (தாம் தூம் - யாரோ மனதில்..)
இவ்வாண்டின் ​பெருமைக்குரிய வரவு - ​ஜேம்ஸ் வசந்தன் (சுப்ரமணியபுரம்)
இவ்வாண்டின் சிறந்த களிப்பூட்டி - தனுஷ் (யாரடி நீ மோகினி)
செவாலியே சிவாஜி கணேசன் விருது - ஏ. ஆர். ரகுமான் (ஆஸ்கர் பரிசிற்காக)
சிறந்த படக்குழு - சுப்ரமணியபுரம் படக்குழு (சுப்ரமணியபுரம்)
சிறந்த தமிழ் திரையுலக பங்களிப்பு - சத்யம் சினிமாஸ்
நிகழ்ச்சித்
தொகுப்பாளராக கோபிநாத்
விஜய்
விருதுகளைத் தேர்ந்தெடுக்கும் விதமும் வித்யாசமானதே. தேர்ந்த விமர்சர்களைக் கொண்டு இதைச் செய்வது ஒருவகையில் நம்பகத் தன்மையை உண்டு பண்ணுகிறது. ஆனால் பேவரிட் நடிகர், நடிகை, இயக்குநர், பெஸ்ட் என்டர்டெயினர் என்றெல்லாம் விருதுகளை கொடுப்பது எந்த அளவையில் சேர்த்தி எனப்புரியவில்லை.

கமல் பாலச்சந்தர் மற்றும் மனோரமா கைகளில் பரிசை வாங்கிக்​கொண்டார். பாலச்சந்தர் கூறுவது போல ஒரு முன்னணி கதாநாயக நடிகன் சிறந்த காமடியன் விருதை பெறுவது அதிசயமே. கமல் காமடிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவார் என்பது நாமறிந்ததே. ஆனால் சப்பைக்கட்டு தெலுங்கு கிண்டலடி காமடிக்கு விருது கொடுத்திருப்பது சிறு ஆச்சரியம். ஆனாலும் தசாவதாரத்தின் பலராமு நாயுடுவின் நுணுக்க நகைச்சுவைகள் திறம்பட்டவை - உம்: பலராமு நாயுடு அறையுள் விஞ்ஞானி கமலுடன் மாட்லாடிக்​ ​கொண்டிருப்பார். அப்போது அறைக் கதவு வெளியே தட்டப்படும். பலராமு உரத்த குரலில் ​கேட்பார் "ஹுஸ் தட்?". ஆனால் எந்தப் பதிலும் இல்லாமல் திரும்ப அறை கதவுத் தட்டப்பட்டுக் கொண்டிருக்கும்.. பலராமு கொஞ்சம் யோசித்து விட்டு கேட்பார் "யாரு அப்பா ராவா?" உடனே உள்ளே வருவார் அப்பா ராவ். அப்படியொரு பவ்யம்.
கமல்
காமடியை சீரியஸான பிஸினஸ் என்கிறார். உண்மைதான். மண்டையை உடைத்துக் ​கொண்டாலும் காமடி மட்டும் சிலருக்கு வரவே வராது.
கமல் விருது மேல் விருதாக வாங்கவும், கொடுக்கவும் என ​மேடையிலேயே நாற்காலி போட்டு உக்காந்து கொள்ளாத குறையாக நின்றிருந்தார். ​மொத்த கூட்டமும் எழுந்து நின்று மரியாதை கொடுத்தது கமலுக்கு. ​கோபிநாத் சிலசமயம் காம்ப்யரிங் என்பதை மறந்து விட்டு, இண்டர்வியூ போல கேள்விகளைக் கேட்டும்,தடாலடியாக ஜோ மேடைக்கு வாங்க, கார்த்தி இங்க வாங்க, சிவக்குமார் 2 வார்த்தை பேசுங்க, ஸ்னேகா ஒரு பாட்டு பாடுங்க, கமலுக்கு அட்டேன்ஷன்ல எல்லோரும் நில்லுங்க என்று களேபரம் செய்துவிட்டார் மேடையை.
கமல்
எப்போதும் போல கெளதமி, மற்றும் புதல்விகளுடன் ஆஜர். மொத்தக் குடும்பமும் தனிக்கலரில் தெரிகிறது (எல்லோரும் மினரல் வாட்டரில் குளிப்பார்களோ?)
சூர்யா
ஆர்ப்பாட்டமில்லாமல் சிறந்த நடிகர் விருதை வாங்கிக் கொண்டார். அப்புறம் சூர்யாவின் மொத்தக் குடும்பமும் ​மேடைக்கு வந்து ஒரே உணர்ச்சிமயமாகி விட்டது.
ஒவ்வொருவரும்
மைக்கைப் பிடுங்கி பிடுங்கிப் பேசினார்கள். கமல் காலில் விழுந்து சூர்யா ஆசிர்வாதமும் வாங்கிக் கொண்டார்.
எனக்கென்னமோ
சூர்யாவை விட (வாரணம் ஆயிரம்)அஞ்சாதே-வில் சுனில் மிகச்சிறப்பாக நடித்திருப்பதாகப் பட்டது. அஞ்சாதே படத்திற்கு சிறந்த இயக்குநர், நடிகர் என எந்த விருதும் கிடைக்காமல் போனது வருத்தத்தைத் தாண்டி அதிர்ச்சியாகவும் இருந்தது.

சக்கரக்கட்டி
படத்திற்காக சாந்தனு (கே. பாக்யராஜ்ஜின் வாரிசு)சிறந்த புதுமுக நடிகர் வாங்கிக் கொண்டார். படம் மகா சொதப்பல் என்றாலும் சாந்தனுவின் நடிப்பும் டான்ஸும் குறிப்பிட்டுச் சொல்லப்பட​வேண்டியவை. ஆனால் ஆள் கொஞ்சம் ஜொள்ளு பேர்வழி போல (விஜய் டிவி டான்ஸ் ஷோவில் தெரிந்தது) புலிக்குப் பிறந்தது.
மேடை
பிரம்மாண்டமாக,​பெரிய டிவி ஸ்கிரீன்களுடன் வித்யாசமாக வடிவமைக்கப் பட்டிருந்தது. அவ்வப்போது சில டான்ஸ்களும் நடத்தப்பட்டன.
ஒன்றில் லக்ஷ்மிராய் வந்து ஆடினார். ஆட்டத்திற்கேற்ப பின்னணியில் திரைகளில் காட்சிகளும் மாறிய வண்ணமிருந்தது நன்றாயிருந்தது. லக்ஷ்மிராய் கலவையான பாடல்களுக்கு டான்ஸ் ஆடினார். வயிறுதான் ஸொல்ப (கன்னட ​கொஞ்சம்) தொப்பை ​போட்டுவிட்டது போல. டோனியை நினைவில் கொள்ளுங்கள் மேடம்.
பெஸ்ட்
நடிகை விருது ஸ்னேகாவுக்கு, பார்த்திபன் கையில். பார்த்திபன் சும்மாயிருப்பாரா..?
"இந்தம்மாவுக்கு சிறந்த நடிகைங்கிற விருதை பிரிவோம் சந்திப்போம் படத்துக்காக ​கொடுத்திருக்காங்க. இவங்க அந்த படத்தில நிறைய காச வாங்கிட்டு ஒண்ணுமே நடிக்கல.சும்மா தலை நி​றைய பூவ வச்சிக்கிட்டு, முகமெல்லாம் மஞ்சள் பூசிக்கிட்டு, ஏதோ நம்ம சொந்தக்கார பொண்ணு மாதிரி இல்ல நாமளே சொந்தம் பண்ணிக்கலாமான்னு நினைக்கிற பொண்ணு மாதிரி வந்து போயி நடிச்சிருக்கிறாங்க.. சேரன் எப்படித்தான் சமாளிச்சாரோ தெரியல" என்று ஸ்னேகாவை​மேடையிலேயே​நெளிய வைத்துவிட்டார்.
சிறந்த
புதுமுக நடிகை என்று பூ-படத்தில் அறிமுகமான பார்வதிக்கு விருதை அறிவித்தார்கள். பார்வதிக்கு பதில் வேறு யாரோ ஒரு பெண் வந்து விருது வாங்கிக் ​கொண்டாரோ என்று சந்தேகப்படுமளவுக்கு இருந்தார் ஒரிஜினல் பார்வதி.
வாரணம்
ஆயிரம் ரொம்ப நேரம் இழுத்துக்கொண்டு ஓடின ஒரு காலக்கலவையின் நாட்குறிப்பு. அவ்வளவுதான். சிறப்பான முறையில் அந்தந்த காலத்திற்குரிய பேஷன்,இசை (இது கிட்டத்தட்ட சுப்ரமணியபுரம் போலத்தான்) அப்புறம் அப்பா சென்டிமென்ட் எல்லாம் கலந்தது. அஞ்சாதே-யின் இயல்புத்தன்மை​யோடு இதை ஒப்பிட்டுப் பார்க்கமுடியவில்லை. மிஷ்கினுக்கு விருது கிடைக்காததை விட, இந்த படங்களோடு போட்டி​போட்டு தோற்றுவிட்டது அதிக வேதனையாக இருக்கக் கூடும்.
தமிழ்
சினிமாக்களில் வகைப்படுத்தல் எப்படி சாத்தியப்படுமென்று தெரியவில்லை. இசையில் ஜான்ரு (genre) ​போல மேலை சினிமாவில் டிராமா, காமடி, த்ரில்லர், ரொமான்ஸ், ஆக்ஷன் ஒரு வகைப்படுத்தல் காணலாம். நம் ஊர் சினிமாவில் ஆர்ட், மசாலா என இரண்டே இரண்டு வகைகளும் அப்புறம் ஏபிசி (சென்டர்) என சினிமா கூட்டங்களையும் தான் வகைப்படுத்த முடிகிறது. வாரணம் ஆயிரம் ஒருவகையில் ரொமான்ஸ் என சொல்லிவிடலாம் அஞ்சாதே-வை ஆக்ஷன் என சொல்ல முடியுமா? சுப்ரமணியபுரம் ஆக்ஷனா, ரொமான்ஸா என திண்டுக்கல் ஐ.லியோனி பட்டிமன்றம் நடத்தலாம். தசாவதாரம் காமடி ஜான்ரூவா..?
ஆக
, நம்மூர் சினிமாவில் மேற்கத்திய அளவுகோல்களை பயன்படுத்தமுடியாது. ஏனென்றால் இது முழுக்க முழுக்க உணர்ச்சி குவியல்களின் கலை வடிவமாகவே காணப்படுகிறது. இங்கே ரசிகர்களின் உடனுக்குடனான (on the spot, on the theatre) எதிர்வினைகளே ஒரு திரைப்படத்தின் மிகச்சிறந்த கலைவிமர்சனம்.

மிகுந்த
எதிர்பார்ப்புடன் வெளிவருகிற படத்தின் சாதாரண தோல்வியும், எதிர்பார்க்கப்படாத படத்தின் அசாதரண வெற்றியும் ஒரே புள்ளியில் சமரசமாகின்றன.
நாசாவின் விண்கலம் ​வெடித்துச் சிதறினாலும் அதை கெளரவமாகவும், சந்த்ராயன் நிலவைத் ​தொட்டதை அசாதாரணமாக ஒப்பிடும் பாவம்தான் இது.
மிகுந்த
எதிர்பார்ப்புடன் வெளிவந்த குசேலன் படத்தின் தோல்வி, எதிர்பார்ப்பு அவ்வளவாக இல்லாத வெள்ளித்திரை படத்தின் வெற்றியும் வியாபார ரீதியில் ஒரே புள்ளிகளைத்தான் கொண்டிருக்கும். காரணம் மாஸ் ஹீரோக்கள் என அடையாளம் காணப்படுபவர்களின் பெரிய​தொரு ஓப்பனிங். அதாவது கதை, இயக்கம் என எந்த பெரிய ஓட்டையையும் தாண்டி ஹீரோவின் வசீகரமே படத்தை குறைந்தது 10 நாட்களாவது படத்தை ஓட்டிவிடும். இது இந்த வியாபாரத்தின் return on investmentக்கு பெரிய உதவி. புதுமுகங்கள், புது இயக்குநர் என மிக குறைந்த​செலவில் வரும் படங்களுக்கு இந்த மாதிரி ஓப்பனிங் இருக்காது. ​வெள்ளித்திரையின் ROIக்கு குறைந்தது 30-40 நாட்களாவது பொறுத்திருக்க ​வேண்டும். அது பிரகாஷ்ராஜ் போன்ற சினிமாவின் நாடி​பிடித்துப் பார்த்து முதலீடு செய்யும் துணிவு வேண்டும்.
இது
இல்லாமல் சாதாரண லாஜிக்குடன் குறைந்த பட்ஜெட்லில் வெளிவந்த படங்களும் உண்டு. இம்மாதிரி மயிரக்கட்டி.. வகைப்படங்கள் அதிகம் தள்ளுமுள்ளு இல்லாத காலங்களில் ஒரு வெற்றிடத்தை நிரப்பும் முனைப்புடன்​வெளிவருபவை. சில படங்கள் ஏ பட வரிசையில் ஸி சென்டர்களை குறி​வைத்து வருபவை. ​தோழா, தங்கம்,
நெஞ்சத்தை கிள்ளாதே, தனம், தரகு, சிங்கக்குட்டி, கண்ணும் கண்ணும், இன்பா, வள்ளுவன் வாசுகி, ​வேள்வி ​போன்ற படங்கள் இந்த வகைதான்.
தசாவதாரத்தின் வெற்றியும் சுப்ரமணியபுரத்தின் வெற்றியும்​வெவ்வேறு வகை. தசாவதாரம் வெளியாகும் முன்பே பாத்து விடுவது என ஒரு கங்கணம் மனதில் நிலவும்; சுப்ரமணியபுரம் யாரவது பார்த்துவிட்டு (இவர்கள் தான் ரிஸ்க் எடுக்கும் உண்மையான ரசிகர்கள்) வந்து சொன்னால்தான் ​போய் பாப்பது என முடிவு​செய்வோம்.
2008-ல் மட்டும் குத்துமதிப்பாக, குத்துப்பாட்டாக சுமார் 70 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் நீங்கள் எத்தனை படங்கள் தியேட்டருக்கு சென்று, க்யூவில் நின்று, டிக்கெட் வாங்கி, டார்ச் வெளிச்சத்தில் ஸீட் நம்பர் கண்டுபிடித்து, பார்த்திருப்பீர்கள் என நீங்களே எண்ணிக் ​கொள்ளுங்கள்.
விஜய் அவார்ட்ஸ் போல நாமும் நமக்குப் பிடித்த படங்களை தரவரிசைப் படுத்திப் பார்த்தால் என்ன..?

இதோ இது நம் காலடியின் தமிழ்படங்கள் 2008 தரவரிசை:

இந்த தரவரிசைக்கென நாம் மூன்று அலகுகளை பயன்படுத்தியிருக்கிறோம். எதிர்பார்ப்பு (1-லிருந்து 10 வரை; 1 என்றால் குறைந்த எதிர்பார்ப்பு, 10 என்றால் அதிகம்) ஈடுகட்டல் (1 முதல் 10 வரை) அதாவது ஏங்கிய எதிர்பார்ப்பை படம் ஈடுகட்டியிருக்கிறதா என புள்ளியிடல். இதிலும் 1 என்றால் மிக குறைந்த மதிப்பெண் 10 அதிகம். மூன்றாவது தரம். இது முதல் இரண்டு அலகுகளின் நிகழே (function of first two elements)

சரி. அதிகம் தியரி பேசுவதை விட்டுவிட்டு பட்டியலைப் பார்ப்போமா?
(படத்தைப்​பெரியதாக்க, படத்தின் மேல் கிளக்குக)

உங்கள் மதிப்பீட்டையும் தரவரிசையும் அனுப்புங்கள்.

3 comments: