Friday, June 26, 2009

இம்சை அரசன் இட்ட உத்திரவு

மன்னர்: அமைச்சா..
அமைச்சர்:
மன்னர் மன்னா..
மன்னர்
:
அமைச்சா, நம் நாட்டில் ஆண் யாரும் இறந்துவிட்டால் அவனுடன் அவன் துணைவியும் உடன்கட்டை ஏறும் பழக்கம் உண்டுதானே?
அமைச்சர்
:
இதிலென்ன சந்தேகம் மன்னா? ஒருவன் இறந்துவிட்டால் அவன் மனைவி இல்லை காதலி யாராக இருந்தாலும் உடன்கட்டை ஏறிவிடுவது இல்லையென்றால் கட்டி போட்டாவது ஏற்றிவிடுவது - இதுதானே நம் மரபு மன்னா.. இது தாங்கள் போட்ட உத்திரவாயிற்றே!
மன்னர்
:
நன்றாகச் சொன்னாய்! நீ ஒரு நல்ல மதி மந்திரி என்பதை நிரூபித்துவிடுகிறாய் - அவ்வப்போது.. ஹா ஹா ஹா
அமைச்சர்
:
(மனதுக்குள், நீ​தான் எப்பவும் முட்டாளாச்சே) நன்றி மன்னா!
மன்னர்
:
ஒரு யோசனை அமைச்சா! இனி மேல் நம் நாட்டில் எந்தப் பெண் இறந்துவிட்டாலும் அவளின் புருஷனோ இல்லை காதலனோ உடன்கட்டை ஏற​வேண்டும். இது என் உத்திரவு.. திரவு.. ரவு... வு..
அமைச்சர்
:
(அடங்கொக்கமக்க, இவன்கிட்ட இருந்து முதல்ல விஆர்எஸ் வாங்கிடணும்) மன்னா..........????
மன்னர்
:
ஏனிந்த அதிர்ச்சி அமைச்சா?
அமைச்சர்
:
மன்னா நன்றாக யோசித்துதான் சொல்கிறீர்களா? இதன் பின்விளைவுகள் பற்றி தாங்கள் யோசிக்கவில்லையா?
மன்னர்
:
புரிகிறது அமைச்சா! நம் மகாராணி மரித்துவிட்டால் இந்த மன்னாதிமன்னனும் உடன்கட்டை ஏற​வேண்டுமே என்பதுதானே உன் கவலை? அடடா உன் ராஜவிசுவாசம் என்னை மெய்சிலிர்க்க வைத்துவிட்டது!
அமைச்சர்
:
(ங்கொய்யால.. இப்படியொரு​நெனப்பு வேறய) அதுமட்டுமில்லை மன்னா....
மன்னர்
:
(புரியாமல்) வேறு என்னதான் சொல்லித்​தொலையும்
அமைச்சர்
:
மன்னா, தாங்கள் இறந்தால் அது ஒரு குடும்பத்திற்கு மட்டுமே சேதம்..
மன்னர்
:
அது தெரிந்ததுதானே..?
அமைச்சர்
:
நம் மகாராணி இறந்துவிட்டாலோ ஒரு நாடே சேதமாகிவிடும் மன்னா..
மன்னர்
:
(அதிர்ச்சியுடன்) என்ன.........???
அமைச்சர்
:
இதில் சில பக்கத்து நாடுகளும் அடக்கம் மன்னா...!!!

4 comments:

ஷங்கி said...

’ஏ’ டயலாக் by ஜெகநாதன்?!

Nathanjagk said...

சும்மா ஒரு அவசரத்துக்கு அடிச்சு விட்டது. கண்டுக்காதீங்க! இதவிட பயங்கரமான இடுகையோடுதான் இந்த வலப்பூவ ஆரம்பிச்சிருக்கேன். ​ரோசாமகன் ஆரம்பித்த பிளாக் - படிச்சுப் பாருங்க!
அட நீங்க கோபிகிருஷ்ணனின் ரசிகரா? ​ரொம்ப நல்லதாப் ​போச்சு :-)

Anonymous said...

அடடடாஅ

Anonymous said...

juperru...