காக்டெயில் பேரு, தயார் செய்யும் முறை மற்றும் குடிக்கும் ஸ்டைலு:
சன் பிக்சர்ஸ்: ரொம்ப காட்டமான சரக்கு குடிக்க வேண்டியிருக்குன்னா, டிவில ஏதாவது சன் பிக்சர்ஸ் எடுத்த படத்த போட்டுடணும்.. அதப்பாத்துகிட்டே, நல்லா கடுப்பான கொதிநிலைக்கு வந்த உடனே சரக்க ராவா ஒரே கல்ப் அடிச்சிட வேண்டியதுதான்.
பஞ்ச அடி: மாசக்கடசில கட்டிங்கு கூட வழியில்லாதப்ப செய்யற காக்டெயில் இது. ஒரு காலி பாட்டில எடுத்து நல்லா மோந்து பாத்துட்டு, ஒரு கிளாஸ் வாட்டரை மடக்குன்னு முழுங்கிடணும். சைட் டிஷ் எதுவும் தேவையில்லை என்பதே இதன் சிறப்பு.
மாட்டுனநீ: என்னதான் பம்மிக்கிட்டு போனாலும் பொண்டாட்டி கிட்ட மாட்டி மப்பு இறங்கறவங்களுக்கு இது. சரக்கு மேல ஒரு சூடத்தை வெச்சு (முழுகாது) தீப்பத்த வச்சு, வூட்டுக்காரம்மாவ மனசுல நினைச்சுக்கிட்டு
ஒரே முழுங்கு!
திருப்புளி: தைரியமா வூட்டுலேயே சரக்கடிக்கிற குடிம்பஸ்தர்களுக்கு இது, அடடா மிக்ஸ் போடறதுக்கு எதுவுமே வாங்கிட்டு வரலேயேன்னு வெக்ஸ் ஆகறப்ப, வீட்ல இருக்கிற புளி ரசத்தை வெச்சுப் போடறதுதான் திருப்புளி.
ஓசிக்குடி: சைட் டிஷ் மட்டும் வாங்கிட்டு வந்திட்டு மாப்ள எல்லாம் ரெடி சரக்கும் மிக்ஸிங் மட்டும் உன்னோடது என்னும் ஓசிக்குடியர்களுக்கு.. அழுகின எலுமிச்சம் பழச்சாறு, நசுங்கின கருந்திராட்சை, நாற்றமடிக்கிற தக்காளித் துண்டு இதெல்லாம் போட்டு சரக்கோட அடிச்சி (ஜக்கிலிங்) பரிமாறும்போது ஒரு ஈக்குமாத்து குச்சியில் கோவக்காய் குத்திப் பரிமாறவும்.
தேவதாஸ்: காதலிக்காக ரொம்ப ஏங்கிக் குடிக்கிறவரா நீங்க.. அப்படின்னா.. ஒரு கட்டிங் சரக்கு வாங்கி அதை அரை லிட்டர் தண்ணி மிக்ஸ் போட்டுட்டு அப்பிடியே அடிக்க வேண்டியதுதான். பக்கத்தில பினாத்தறதுக்கு ஆள் இருக்காங்களானு பாத்துகுங்க.. ஏன்னா அவங்கதான் அன்னைக்கு உங்க சைட் டிஷ்ஷே!
10 comments:
ரொம்ப காட்டமான சரக்கு குடிக்க வேண்டியிருக்குன்னா, டிவில ஏதாவது சன் பிக்சர்ஸ் எடுத்த படத்த போட்டுடணும்.. அதப்பாத்துகிட்டே, நல்லா கடுப்பான கொதிநிலைக்கு வந்த உடனே சரக்க ராவா ஒரே கல்ப் அடிச்சிட வேண்டியதுதான்.
//
இதுக்குப் பேர்தான் கலக்கலா?
என்ன இப்போ டாஸ்மாக்ல கூட்டம் கம்மியாயிருக்குன்னு குடிக்கு இத்தனை ஐடியாவ குடுத்து தள்ளறீங்க!
நன்றிகள்
*தேவநாயகம்: இன்னும் கலக்கல் நிறைய இருக்கு
*தங்கமணி: டாஸ்மாக்ல கூட்டம் கம்மியா? என்னாச்சு நம்மாளுங்களுக்கு??
அடிக்கடி வாங்க!
இதெல்லாம் உங்க வீட்டம்மாவுக்கு தெரியுமா தல..,
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
கலப்படமில்லாத சரக்கு..
ஹா ஹா நல்லா இருக்கு ;)
என்னோட காக்டைல் இடுகைகளுக்கு எதிரா எவன்டா இப்படி கெளம்பினது-ன்னு வந்து பார்த்தா, உங்க கதை வேற மாதிரி இருக்கு.
நல்ல நகைச்சுவை, கலக்குங்க!
http://joeanand.blogspot.com/2009/06/blog-post_25.html
அமர்களமான நகைச்சுவை நடை
ஜெகநாதன்.மனசு விட்டு சிரித்தேன்.சவுதியில்,
இப்படி படித்து ஆத்திக்கிற வேண்டியது இருக்கிறது..
>> பா.ராஜாராம்
அன்பு ராஜாராம். தங்கள் வருகைக்கும் ஊக்கத்திற்கும் மிக்க நன்றி! அடிக்கடி வருக!
Post a Comment