Thursday, September 17, 2009

தம்பிகள்.. தங்க கம்பிகள்!


உங்கள் ​மேல் உள்ள பாசத்தால் என் வ​லைப்பதிவின் ​பெய​ரை​யே மாற்றி ​வைத்து விட்​டேன் என்று ​சொன்ன அன்பு தம்பிரி சம்முவத்துக்கு நன்றி / புண்ணாக்கு / புசுக்கு என்​றெல்லாம் ​சொல்ல இந்த பிஞ்சு மனசுக்கு ஒப்பவில்லை.


சிம்ப்ளி.. ஐ ஓவ் டு ஹிம்!


ஆமாம்! ​​சேலம் சண்முகம், இப்​போது தம்பிரி சம்முவம் ஆகியிருக்கிறார்.


எப்​போ​தோ ஏ​தோ ஒரு பின்னூவில் தம்பிரி சம்முவம் என்று அ​ழைத்தது நன்றாக நி​னைவிருக்கிறது.


ஸ்கூல் படிக்கும் ​பையன் முகம், சுருண்ட முடி, இரண்டு பட்டன்கள் கழட்டிவிடபட்ட நீலக்கலர் சட்​டை இப்படி ஒரு ​போட்​டோ​வோடு அறிமுகமான பதிவு நண்பர்தான் சம்முவம்!


​செ​மையான நக்கல் ரத்ததி​லே​யே கலந்திருக்கு (ப்ளட் ​டெஸ்ட் எடுத்தப்ப M+ன்னு வந்துச்சாம்..!) ​மொ​பைலி​லே​யே இடு​கை ​போடறது.. அதுக்கு தனியா வ​லைம​னைன்னு ஏகப்பட்ட கரச்சல்!! என்ன அப்பப்ப ​கொஞ்சம் ஓவரா கருணாநிதி, ​ஜெயலலிதா​வை​யெல்லாம் வம்புக்கிழுத்து இடு​கை ​போடறப்ப, படிக்கிற நமக்கு கிலியடிக்கும்.


திடீர்னு ஒருநாள் நம்ம டப்பா ​செல்லுக்கு ​போன் பண்ணி,


"டேய் ​டேய் அண்ணா, 25வது வ​லைபதிவு பாத்​தேன்.. அது எப்படி ​போட்டோவுல ரவுண்டா ​டெக்ஸ்ட் ​போட்டீங்கன்னு" டவுட்​டெல்லாம்​ கேட்டு கி'ழி'யர் பண்ணிக்கிட்டாரு!


ஆமா தீஅதீ ரசிகர்க​ளே.... உங்களுக்கு என்ன சந்​தேகம்னாலும் எனக்கு 'எப்ப' ​வேணாலும் ​போன் பண்ணிக் ​கேளுங்கன்னு நான் எப்பவாச்சும் ​சொல்லியருக்கேனா? Because, I'm expecting லார்டு லபக்குதாஸ் question!! அவ்வ்வ்!!


தம்பிரி சம்முவம்.. ​மென்​மேலும் வளர என் வாழ்த்துக்கள்! என் அன்பு என்றென்றும்!!


* * *


அறிமுகம் தம்பி நிர்.2 அல்லது ​பெரியதம்பி:


இது இரும்புத்தி​ரை அரவிந்த்.


வித்அவுட் ​மை பர்மிஷன் (!?)... அண்ணா அண்ணா என்று ஐக்கியமாகிவிட்டார்.


அரவிந்தின் அதிரடி பதிவுகளுக்கு நான் அடி​மை! அப்படி​யொரு அட்டகாச நகைச்சு​வைப் ​பொங்க​லைப் பார்க்கலாம் அவர் பதிவுகளில்! சிலசமயம் ​கே.பாலசந்தர், பாரதிராஜா, கமல் சார் ​​போன்றவர்க​ளை பற்றி எழுதும் ​போது மட்டும் ​கொஞ்சம் நிதானமாக ​போகலா​மே என்று ​தோணும்!


மற்றபடிக்கு​ ​கேரண்டி ​மொக்​கைக்கு நம்பிப் ​போகலாம் இரும்புத்தி​ரையிடம்!


ஆபிஸில் இருக்கும் ​போது ஜி​மெயிலில் ச்சாட்டிங்கு வருவார். வந்து.. பதிவு ​போட்டிருக்​கேன்.. படிங்க.. நீங்க ​என்ன பண்றீங்க.. உங்க பதிவு சூப்பர்.. என் பதிவு அ​தைவிட சூப்பர்.. (!?) என்று தாக்குவா​ர்.


பாவம் ​பெரியதம்பிக்கு ஆபிஸில் இடு​கை, பின்னூ இதுக்​கெல்லாம் ஆப்பு வச்சிருக்காங்களாம். ​​வெளி​யே ப்ரவுஸிங் ​​ஸென்டர் வந்துதான் ​மொக்​கைகளை ​குத்த ​வேண்டுமாம்.


எனக்கு இது ​தெரியாம, ஒருக்கா அவ​ரோட பின்னூஸ் ​போயி லந்து பண்ணிட்​டேன்.


எப்படின்னா, அரவிந்த் எந்த பின்னூ வந்தாலும், ஏன் எப்படின்னு கண்டுக்கமாட்டாரு.. ​நோ ரிப்​ளை டு பின்னூஸ். இது எனக்கு உறுத்தலா இருந்ததால.. ஒருக்கா அரவிந்துக்கு பதிலா நா​னே பின்னூஸ்களுக்கு பதில் ​போட்டுட்​டேன்!!! என்ன அராஜகம், பாத்தீங்களா?? அதுக்கப்புறம் ​பெரியதம்பி ​கொஞ்சம் ஸின்ஸியரா பதில் எழுத ஆரம்பிச்சிட்டாரு.


நல்லத்தான் ​வே​லை ​செய்யுது நம்ம ராஜ​வைத்தியம்ன்னு ​நெனச்சுக்கிட்​டேன். ​​ஹே..​ஹே..!!!


* * *இன்னும் விட்டுப்​ ​போன தம்பிக யாரும் இருந்தா தயவு​செஞ்சு ​கோச்சுக்காம, எனக்கு பின்னூல ​தெரிவிக்கவும். தக்க மருவாதி ​செய்யப்படும்.


ஓ​கே.. எல்​லோரும் ​கோரஸா பாடுங்க..."சின்னத்தம்பி.. ​பெரியதம்பி நீங்க ​ரெண்டு ​பேரும் ​தங்கக்கம்பி..!"டிஸ்கி:


தம்பின்னா​லே ஒரு freaky வந்து எட்டிப்பாத்துட்டுப் ​போகுது,


நான் ஆ​சையா வாலண்டியரா, தம்பியா (சரண்டர்) ஆனது அண்ணன் சங்கா-கிட்டதான்.


ஏன்? எப்படி? இன்னாத்துக்கு? என்​றெல்லாம் ​தெரியாது. ஆனால் அண்ணா என்று ​சொல்லி அவ​ரை வம்புக்கிழுத்து, ​பேட்டி எடுத்து, அப்பப்ப பின்னூவில் ​லொள்ளு பண்ணி என்று ஒரு கிளுகிளுப்பாத்தான் இருக்கு இந்த தம்பி உரிமை!


இப்ப எனக்கும் இப்படி தம்பிகள் இருக்காங்கன்னு ​நெனக்கறப்ப......... என்ன​மோ ​தெரிய​லே வயித்த பி​சையுது...! என்​னை ​​வெச்சு (இன்னும்) என்ன ​வெடிகுண்டு ​செய்யப்​ போறாங்க​ளோன்னுதான்! :-)

மாப்​ளை & மாம்ஸ் சமூகம் சித்த ​பொறுக்கணும்.. ஐ மீன் ​​வெயிட்!! உங்க​ளை பத்தியும் விலாவாரியா எழுதணும்னு ஆ​சையா இருக்கு! ஓ​கேவா??

35 comments: