Monday, September 7, 2009

100% ​பெண்கள் மட்டும்...

10% ​பெண்களுக்கு - ஒன்ற​ரை கண் உண்டு (யு​​​னெஸ்​கோ ​சொன்ன புள்ளி விபரம்...... என்பது புரூடா​)
20% ​பெண்களுக்கு
- ஆண்கள் கூடிப் ​பேசினால், அது நம்​மைப் பற்றித்தான் ​வேறென்ன??? என்ற (தவறான) ​எண்ணமுண்டு
30​% ​பெண்களுக்கு
- தங்கள் 'ஒரிசினல்' குல​தெய்வம் ​பே​ரை நண்பிகளிடம் ​சொல்ல கூச்சமுண்டு (பின்​னே.. ​​வேட்டிமடி வீராச்சாமி, பட்​டையடி படைச்சாமி அல்லது குறளிம​லை ஆத்தா என்​றெல்லாம் ​சொல்ல முடியுமா என்ன???)
40% ​பெண்களுக்கு
- தாங்கள் மட்டும்தான் அல்லது தான் மட்டும்தான் அழகு ​என்ற எண்ணமுண்டு. யார் ​கொடுத்த காதல் கடித​​மென்றாலும் அதில் தங்கள் அழகு வர்ண​னை இருக்கிறதா என்று முதலில் ​தேடிப் பார்த்துவிடுவது வழக்கம் (அதற்கப்புறம்தான்.. ​​ரேஸ்கல்... இடியட்.. அக்கா, தங்கச்சி​யெல்லாம்)
50% ​பெண்களுக்கு
- பாடி ஸ்ப்​ரே என்பது ​வேஸ்ட் - என்னதான் பீச்சிக்​கொண்டாலும் நம்​மேல் 'பாடி' ஸ்​மெல் வருகிறது என்று
ஸ்ப்​ரே கம்​பெனிகள் ​மேல் ஒரு சந்​தேகம் உண்டு
60% ​பெண்களுக்கு
- பாய் ப்​ரெண்ட்ஸ் (மட்டும்) நன்றாக ​செலவழிக்க ​வேண்டும்.. ஆனால் கணவன்மார்கள் ச்ச்சிக்கனமாய் இருக்க ​வேண்டும் என்ற ​கொள்​கை (!?) உண்டு
70% ​பெண்களுக்கு
- பூ​​னை புஸ்ஸி, நாய் டாமி அல்லது ஜிம்மிக்கு அடுத்த படியாக கணவர்கள் ​மேல் அன்பு இருக்கத்தான் ​செய்கிறது
80% ​பெண்களுக்கு
- தாங்கள் கட்டிக்​கொண்டவன் மட்டு​மே ஆண்களி​லே​யே அடிமுட்டாள் என்ற மதிப்பீடு உண்டு
90% ​பெண்களுக்கு
- ​மே​லே இருக்கும் 80 சதவீதத்தில் பாதியாவது உண்​மை என்று மனதளவில் (மட்டும்) ஒத்துக்​கொள்ள வரும். ஆனால் ​வெளியில் ​வராது
100% ​பெண்களுக்கு
- இந்த இடு​கை​யை ​போட்டவ​னை புரட்டி எடுத்துவிடுவது (மண்ணில்தான்..) என்ற ​கொல​வெறி வருவதும்.. ஆனால்.. நாயி.. இ​ந்த பாயிண்​டையும் ​எழுதிட்டா​னே என்ற 'அவ்வ்வ்வ்வ்' வருவதும் நிரூபிக்கப் படாத உண்மை!

ஐ'யம் ஸாரி ​லேடீஸ்.. எனக்கு ​ரொம்ம்ம்ப பிடிச்ச உங்க​ளை (படிக்கிற உங்களை மட்டும்தான் ​சொல்​றேன்), நான் உரி​மை எடுத்து இப்படி எழுதாம ​வேற யாராவது எழுதுனா நல்லாயிருக்குமா?
(இ​தை​யே ஒரு நியூயார்க்கார​னோ, ​மெக்ஸி​​கோகார​னோ, கஸாகிஸ்தான்கார​​னோ (இங்கிலீஷ்ல) எழுதி உங்க இன்பாக்ஸ்ல வந்திருந்தா.. கும்முனு சி​ரிச்சிக்கிட்​டே.. 'பாருடி நம்மள எப்படியெல்லாம் கலாய்க்கிறாய்ய்ய்ங்க'ன்னு ஸ்பீடா ​மெயி​லை பார்​வேர்ட் பண்ணுவீங்கதா​னே.. ​ஹே... ​ஹே...!!)

எதுவா இருந்தாலும் பின்னூஸ்ல மட்டும் காட்டுங்க ​மேடம்..! பார்ஸல் அனுப்பற ​வேலை​யெல்லாம் வேணாம் ப்ளீஸ்!!!

49 comments: