Thursday, October 8, 2009

உங்களுக்கு வடை கிடையாது!

ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு: No Donuts for you! இதை விளக்கறதுக்கு முன்னாடி டோனட்-ன்னா என்னன்னு தெரிஞ்சுக்கிறது மொக்கியம்!

டோனட்டை doughnut, donut இப்படி, எப்பிடி வேணாலும் வளைச்சு வழைச்சு உச்சரிக்கலாம். பிரச்சினையில்லை.. டோனட் ஒரு வளையமான, பொரிச்ச, மாவில செய்யற தின்பண்டம்.. சுருக்கமா நம்மூரு ஓட்டை உளுந்து வடை!

நோ டோனட்ஸ் ஃபார் யூ-ன்னா, உங்களுக்கு ஒரு விருதும் கிடையாது, நயா பைசா கூட கிடையாது, ப்பெப்பப்பே என்று அர்த்தம். ஆக, உங்களுக்கு வடை கிடையாதுன்னா உங்களுக்கு ப்பெப்பப்பே என்று கொள்க. இதை வடை போச்சே என்று கூட சொல்லலாம்!! பட், அது சுய புலம்பல் வகை என்று அறியப்படுகிறது.

அப்படி எந்தெந்த விஷயங்களுக்​கெல்லாம் நமக்கு வடையில்லாம போகுதுங்கிறதை ஆராயலாமா?

Ø

பயங்கர ஸ்பீடா நாலுகால் பாய்ச்சல்ல ஓடி, பஸ்ஸைப் பிடிச்சாலும்.... அது நாம போக வேண்டிய பஸ் இல்லேன்னு தெரிஞ்ச பின்னாடியும்... அமைதியா வேர்வையைத் தொடச்சிக்கிட்டு, நெக்ஸ்ட் ஸ்டாப் ஒண்ணு கொடுங்கன்னு டிக்கெட் எடுக்கிறப்போ.... (நீங்க ஓடின ஓட்டதுக்காக...) உங்களுக்கு வடை கிடையாது!

Ø

மேல கீழ லெப்டு ரைட்டு யூ டர்ன் இஞ்சி மரப்பான் எல்லாம் போட்டு இண்டர்வியூவுக்கு தயார் பண்ணியிருந்தாலும்... ஏன் இப்ப இருக்கிற வடையை.. ஸாரி வேலையை விடுவேன்னு அடம்பண்ணறீங்க என்ற பிசாத்து கேள்விக்கு.. நீங்க முழிக்கும்​போது... உங்களுக்கு வடை கிடையாதுங் சார்!

Ø

எஸ்எம்எஸ்-லேயே பிரண்ட்ஸ்களை வரவழைச்சு, சாமர்த்தியமா ஒருத்தன் தலையில பில்லைக் கட்டி, புல், வாட்டர் பாட்டில், பியர், முறுக்கு, மிக்ஸர், கடலை, ஊறுகாய், சரக்கு கலக்கிறதுக்கு(ன்னே) ஒரு பேனா இப்படி ஜபர்தஸ்தா எல்லாம் ரெடி பண்ணியிருந்தாலும்... மூணாவது ரவுண்டை முடிச்சிட்டு, முட்டிப் ​போட்டு ஒக்காந்து நீங்க மட்டும் தனியா... ஓய்ய்ய்ய்ய்.. ஓவ்வ்வ்வ்வ்வோவ் என்று ​பைக்கை ஸெல்ப்-ஸ்டார்ட் பண்ணினாக்க.... ​நோ வடை ஃபார் யூ!

Ø

ரைட்டு.. சரக்குப் ​போட்டாச்சு.. மம்மி-டாடிக்கிட்ட இருந்து தப்பிக்கணுங்கிறதுக்காக.. ஹால்ஸ், ஜிஞ்சர் ஹால்ஸ், க்ளோரெட்ஸ், ஆர்பிட், நிஜாம் பாக்கு, வாழைப்பழம், புதின் ஹரா, பூமர் சூயிங் கம், கொய்யா இலை (!?) இப்படி மாடு மாதிரி எதைஎதையோ அசைப்​போட்டுக்கிட்டு கனகச்சிதமாக வூட்டுக்குப் ​போயி... காலிங் பெல்லை அமுக்கி விட்டு, மம்மீ வந்து திறப்பதற்குள்... நின்றவாக்கில்.. கதவிலேயே தலையை சரித்து பிளாட் ஆகி விட்டால்.. ​ரொம்ப ஸாரி.. உங்களுக்கு வடை கிடையாது!

Ø

பக்கத்துத் தெரு ஃபிகரை மடிக்கணுங்கிறதுக்காக, அந்த தெரு ஸ்கூல்மெட்டைத் தேடிப் பிடிச்சு ப்ரெண்ட் பண்ணிக்கிட்டு, அப்பிடியே பக்கத்துத் தெரு ப்ரெண்ட் சர்க்கிளை இன்னும் கொஞ்சம் 'எக்ஸ்டென்ட்' பண்ணுனா பிற்காலத்தில ஒடம்புக்கு நல்லதே என்று.. நீங்கள் அந்தத் ​தெரு இந்து முண்ணனி அமைப்பினர், விஜய் ரசிகர் மன்றத்தினர், பழனியாண்டவர் காவடிக்குழு, பால்காரர், டீக்கடைக்காரர், பக்கத்துவீட்டுக்காரர்,​மேல்வீட்டுக்காரர் என்று பயங்கர ப்ரெண்ட் பண்ணி... கடைசியில் ஃபிகரின் அண்ணனையே ப்ரெண்ட் பண்ணி... அந்த அண்ணன் உங்களையும் வீட்டுக்கு அழைச்சிட்டுப் போயி.. பிகர் கூட அறிமுகம் எல்லாம் ஆன பின்னாடி... உங்கள் தெருவுக்கு வந்து, நண்பர்களிடம் "ஆயிரந்தான் இருந்தாலும் அவ என் ப்ரண்ட்டு தங்கச்சிடா. டாவு கட்ட மனசு வர்லே!" என்று ​பேக்-ஃபுட் போட்டால்... உங்களுக்கு வடைன்னு எழுதிக்கூட கிடையாது!

* * *

ஓகே. நான் இந்த ஸ்டாப்பிலேயே இறங்கிக்கிறேன்... நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர்கள்.. இதை இன்னும் கன்டினியூ பண்ணலாம். உங்களுக்குத் தோணற நல்ல உவகி-வை பின்னூவா அனுப்புங்க. யாருது பெஸ்ட்டுன்னு பாப்போம்.

நானே அல்ரெடி மொக்கைக்கு சக்க டிமாண்ட்ல முழி பிதுங்கி திரியறேன்.. இதுல உன் பதிவுல வந்து பின்னூவா என் மொக்கையை வேஸ்ட் பண்ணனுமான்னு நினைக்கிற ரசிகக் கண்மணிகள்.. அவங்க பதிவிலேயே உவகி-யைப் போட்டுத் தாக்கலாம் (அப்ப, எனக்கு வடை கிடையாதா???)

* * *

46 comments: