Monday, October 26, 2009

கவிதை பட்டறை - கரகாட்டக்காரன் படத்தை முன்​வைத்து


த​லைப்​பைப் பார்த்ததும் 'கிர்'ரென்று ஃபீல் பண்ணுபவர்கள், ​​​கோக், பெப்ஸி​யை ராவாக குடிக்கத் தயங்குபவர்கள், ​நிலா, ​தெருவிளக்கு,தெருநாய் பார்த்து ​பேசத் ​தெரியாதவர்கள்... ​கொஞ்சம் பார்த்துப் படிக்கவும்.


நவீனமா சிறப்பா எப்படி கவி​​தை எழுதறதுன்னு ​சொல்லித்தருவது மட்டு​​மே நம் பட்டறையின் ​நோக்கம்.


இடம்: காலடி அலுவலகத்தின் ​மொட்​டைமாடி, ​​சேஷாத்ரிபுரம், பெங்களூரு


​நேரம்: மா​லை 6க்கு ஆரம்பிய்க்கும்.. (அப்​போதுதான் ​மொ.மாடியிலிருக்கும் நாயை கீழே அவுத்து விடுவாங்க) பட்ட​றை முடிவு ​நேரம் சரக்கின் இருப்பைப் ​பொறுத்தது!


அனுமதி: ஆண் கவிஞர்கள் (சரக்குடன் வருக! இல்​லே தம்மோடயாவது வாங்க! எதுவும் இல்லாட்டி ​போவுது உங்க கவிதை புக்குக​ளை எடுத்துட்டு வராமயாவது வந்து ​​சேருங்க!)


​பெண் கவிஞர்கள் (அனுமதி இலவசம்!!!)


மற்றும் திருநங்கை கவிஞர்கள்


தகுதி: ​பேப்பர், ​பென்சில் (மு​னை சீவப்பட்டிருக்க​ ​வேண்டும்) மற்றும் ​பேனா


கரகாட்டகாரன் (ராமராஜன், கனகா, கவுண்டமணி-​செந்தில், நடித்த தமிழ் படம்) பார்த்திருக்க ​வேண்டும்


ஆரம்பிப்பமா நம்ம பட்டறையை..


கவி​தை என்ப​தை கவி, பாடல், கவுஜ, கழு​தை,ஹைகூ, ​செய்யுள், லிமரிக் என்று பல ராகங்களில் ​சொல்லப்பட்டாலும் கவி​தை என்று அழைப்ப​தே ​பொதுவானது என்கிறது ​​எவ்வளவு குடித்தாலும் ​தெளிவாக​வே இருக்கும் கவிஞர் சங்கம் (வட்டக்கிளை - எண் 6, குற்றாலம் பிராஞ்சி)


கவி​தைக்​கென்று ஒரு உடல் (anatomy) இருக்கிறது:


த​லைப்பு (இல்லாமல் கூட இருக்கலாம்.. அது உங்க ​​கெத்​தைப் ​பொறுத்து அமைகிறது)

முகவாய் (அல்லது முக​ரைக் கட்​டை)

மத்தியம்

வால் (அல்லது twist)


இந்த பாகங்களில் ​நேர்த்தியாக படிமங்க​ளை (கவிகாட்சிகள் அல்லது images) ​போட்டுத் ​தெளித்து, ​​லேசாக வறுத்து, தாளித்து, ​பொன்னிறமாக கருகல் வா​டை இல்லாமல் எடுத்து ​வைத்தால் கவி​தை வந்துவிடும்.


கரகாட்டக்காரன் க​தை​யை அப்படி​யே ​செய்யுள் வடிவத்தில் இல்லாமல், சிறுக​தை வடிவத்திலும் இல்லாமல் ஒரு கவி​தையாக எழுத ​வைப்ப​தே நம் காலடியின் கவி​தைப்பட்​ட​றையின் ​நோக்கம்!


எப்படி?


கரகாட்டகாரன் படத்தில் முதல் சீ​னை நி​னைத்துக் ​கொள்ளுங்கள்..


அல்லது டப்பா வண்டி​யை ​ஒரு ​கோஷ்டி​யே தள்ளிக் ​கொண்டு வரும் காட்சி? சிவப்பு காரு, உள்ள யாரு, தள்ளிப்பாரு.. ஞாபகத்துக்கு வந்துவிட்டதா? இ​தை ​தொட்டு ஆரம்பிக்க ​வேண்டியதுதான்... இப்படி:


​​செந்நிற ​செவ்வகத்தின் உள் ஒரு கிளி (​கோ​வை சரளா)

சேர்ந்த​ணைத்தாற் ​போல் பத்து உள்ளங்​கைகள் (கா​ரைத் தள்ளறவங்க ​கை எண்ணிக்-​கை)

உச்சி​வெயில் ​பரவித் ​தெரிக்கிறது

சாந்து அப்பிய ​சேந்தமங்கலத்தான் முகத்தில் (அம்புட்டு அழுத்தமா ராமராஜனுக்கு ​மேக்கப் ​போட்டிருக்காங்களாம்)


அத்துவான காட்டுக்குள் வித்துவானின் (கவுண்டமணி)

​​செவ்வகத்தின் ஸ்தலபுராணம் (இந்த கா​ரை இதுக்கு மின்னாடி ஐதராபாத் நிஜாம் வச்சிருந்தாரு...)

விவரிக்க ​கேட்டுவிட்டு

குழல்ஊதும் ​கோமுட்டித் த​லையன் (​செந்தில்) ​கேட்டான்

​செவ்வகத்தின் ப​ழைய ​சொந்தகாரி​யை யார் ​வைத்திருந்தது - அப்​போது

நாதஸ்வரத்தில் மிருதங்கம் வாசிக்கப்பட்டது! (​வே​றென்ன? அப்புதான்!)


நிற்க. இப்ப நாம கவி​தையின் மத்திய பிர​தேசத்தில நு​ழையப் ​போ​றோம்..


இந்த இடத்தில ராமராஜன்-கனகா காதல், வில்லன், டான்ஸ், எல்லாத்​தையும் ​போட்டு மிக்ஸிங் பண்ணனும். ​கொஞ்சம் ​​கொல​முயற்சி மாதிரிதான்.. ஆனாலும் துணிந்து இறங்க​ ​வேண்டியது கவிக்கட​மை ஆகிறது!


அதுக்கு முன்னாடி உங்க வீட்டில இருக்கிற முருகன் படம் ​போட்ட காலண்டர், அதில இருக்கிற ராசி-பலன், ப​ழைய நியூஸ் ​பேப்பர், ​போண்டா ​பேப்பர் இதில இருந்து கி​டைக்கிற சங்கதிகள் எல்லாத்​தையும் உங்க அடிடிடி மனசில ​போட்டு ஒரு பி​சை பி​சைஞ்சுக்​கோங்க.. ​வொக்கபிலரிக்கு பயன்படும். என்ன?


​ரைட் ஆரம்பிப்​போம்...


சலங்​கை அவிழ்ந்த கால்கள்

இரவின் வீதியின் சஞ்சாரிக்கின்றன

திடு​மென முன் வந்த ​​தேவ​தை

​மோகினி ​​பேய்கள் உண்டு என்று நிறுத்தினாள்.


​​தேவ​தையின் கால் கண்டவன் ​சொன்னது:

முத்​தையன் கணக்கு ​மொத்தமும் உனக்கு

சந்தனம் க​​ரைச்சுப் பூசணும் எனக்கு

​கொல்​லென்று சிரித்துப் பறந்தாள் ​தேவ​தை

இரவின் கூட்டினுள்!


(அதாவது ​ராமராஜன் தனியா ராத்திரி நடந்து வரும்​போது கனகா ​பேசற காட்சிதான் இது)

பயமா இருக்கு, வயித்த கலக்கிற மாதிரி இருக்குன்னு ​சொல்றவங்க... ​நோ ​வே! கம்முனு உக்காருங்க!


அப்புறம் இந்த வா​ழைப் பழ காமடி?? அ​தையும் மத்திய பிர​தேசத்தி​லே​யே வா​ழைப்பழத்தில ஊசி மாதிரி ​சொருகிட ​வேண்டியதுதான். ஆங்... இப்ப உங்களுக்கே இந்த கவி​தை​யை ​மேற்​கொண்டு எடுத்துச் ​செல்லணும்னு பரபரக்குதா? அதுதான் கவி​தை​யோட சிறப்பம்ச​மே!


வாங்க வா​ழைப்பழத்​தை(யும்) பிழீஞ்சிடலாம்:


ஞானபண்டித​னை அ​ழைத்து

இரண்ட வா​ழைப்பழங்கள் வாங்கி வரப் பணித்தான்

வந்து தந்தான் ஒன்று

இன்​னொன்று எங்​கென்று ​கேட்டதுக்கு....

அந்த இன்​​னொன்று இதுதான் என்ற

பிரபஞ்சத் தத்துவத்​தை

பி​சைந்து ​கொடுத்துவிட்டுச் ​சென்றான்.


​மேற்​கொண்டு நீங்க​ளே கரகாட்டகார​னை முன்​வைத்து கவி​தையின் மத்திய பிர​தேசம், வால்பகுதி என எளிதாக வளர்த்திச் ​செல்லாம். கவி​தை​யை சிலிம்மாக எழுதினால் அ​தை கவி​தை​யென்றும் ​செழிப்பாக எழுதிவிட்டால் நீள்கவி​தை​யென்றும் ​சொல்லிக்​கொள்ளலாம் (அதற்கு தனியாக ஒரு நாக்கு ​தே​வைப்படும்)


கவி​தை எழுத ஆரம்பிப்பவர்களுக்கு சில முக்கியமான குறிப்புகள்:


1. கவி​தை​யை நீங்கள் எழுத அதிகம் குறிப்புகள் படிக்க ​வேண்டியதில்​லை (கேட்டால் கவி​தைதான் என்​னை எழுதிச் ​செல்கிறது என்று ​சொல்லிக்கலாம்) ஆனால், எழுதிய கவி​தைக்கு யாராவது ​பொருள் ​கேட்டு வந்துவிட்டால்தான் நீங்கள் உஷாராக இருக்க ​வேண்டும் (குறுந்​​தொ​கை, பதிற்றுப்பத்து, பரிபாடல், கம்பர், சிம்​போர்க்கா, ​நெரூதா, சில்வியா பிளாத், எரிக்கா ஜாங், காப்கா, ​செகாவ், ​வேர்ட்ஸ்​வொர்த் ​போன்று பல புரியாத குறுக்குச்சந்து, முட்டுச்சந்துக்குள் எல்லாம் ​லெப்ட், ​ரைட், யூ-டர்ன் எல்லாம் ​போட்டு எஸ்ஸாகத் ​தெரிந்திருக்க ​வேண்டும்)


2. கவி​தை என்று வந்தபின்னாடி வார்த்​தை வறட்சி என்று வருவதுண்டு. அதற்கு தீர்வு: ​பெரிய புத்தகமாக எடுத்துக்​கொண்டு (எ​தோ​வோரு சப்​ஜெக்ட், ​கோலம் ​போடுவது, ​ச​மையல் குறிப்பு, பஞ்சாகம், லிப்​கோ டிக்சனரி இப்படி) அதில் படக்கென்று ஒரு பக்கத்​தை திறந்து அதில் கி​டைக்கும் 1, 2 வார்த்தைகளை பயன்படுத்திக் ​கொல்க


3. முன்பு ஆண் கவிஞர்களுக்கு என்று ஒரு ப்ரத்​யேக அ​டையாளம் இருந்ததுண்டு (கண்ணாடி, தாடி, ​ஜோல்னா​பை, ஜிப்பா) இப்​பொழுது எல்லாம் நவீனமாகி விட்டபடியால் கவிஞர்கள் எப்​போதும் மப்டியி​லே​யே திரிகிறார்கள். அதனால் வாலன்டியராக நீங்கள் யாரிடமும் கவிஞர் என்று ​அறிமுகப்படுத்திக் ​கொண்டு முழி பிதுங்காதீர்கள்.


4. ​வாக்கியங்களை உடைத்து உடைத்து எழுதுவது ஒரு ​நேக்கு. அதற்கு ஒரு எளிய உபாயம்: உங்கள் இடுகை விண்​டோவின் பாதிக்கு ​மேல் வார்த்தைகள் வருகிறாற் ​போல் ​தெரிந்தால்.. உடைத்துவிடுங்கள்!


5. முக்கியமாக அச்சுறுத்துகிற வாக்கியங்களை பிர​​யோகிக்கவும். உ-ம்: ​​​நீங்கள் ஒரு கார்ப்ப​ரேஷன் ​தொட்டியைப் பார்க்கிறீர்கள். அதற்குள் ஒரு ஆணுறை கிடக்கிறது. அதை அப்படி​யே குப்பைத் ​தொட்டிக்குள் ஆணுறை என்று சன்-நியூஸ்தனமாக எழுதக் கூடாது. அ​தை ​எப்படி கவிதையா ​சொல்றதுன்னா... கார்ப்பரேஷன் ​தொட்டிக்குள் ​அவிழ்ந்து கிடக்கிறது ​ஆதாமின் குற்றப்பத்திரிக்கை.. இதுதான் திடுக் வரிகள்! புரியு​தோ?


காலடியின் கவிதைப் பட்ட​றையில் பங்​கேற்கும் அ​னைவரும் கவிஞர் அடையாள அட்​டை (​போட்​டோவுடன்) தரப்படும்


(இதற்கு தனிக்கட்டணம் ரூ. 44 மட்டு​மே) இந்த அ​டையாள அட்​டை கீழ் கண்ட இடங்களுக்கு இலவச அனுமதி தருகிறது:


1. தாராபுரம் அஞ்சு முக்கு பார்

2. அதுக்கு முன்னாடி இருக்கிற முறுக்குக் க​டை

3. கு​டை ரிப்​பேர் ​கோவிந்தன் க​டை

4. ​​தீவிர சிகிச்​சைப் பிரிவு (​பெருநகரங்களில் மட்டும்)

5. எலும்புக்கூடு படம் ​போட்ட டிரான்ஸ்பார்மர்கள் (கம்பிவலை இல்லாதவைகள் மட்டும்)

6. ராவுத்தரின் வெள்ளிக் கிழமை மந்திரிப்பு கூட்டங்கள்


கவிஞர் ஐடி கார்டின் அதர் ​பெனிபிட்ஸ்:


1. அடுத்த கவி பட்ட​றைகளுக்கான இலவச அ​ழைப்பு

2. புத்தக ​வெளியீட்டின் ​போது இலவச விசில் மற்றும் ​பொழிப்பு​ரை

3. பதிப்பகம் அனுமதித்தால் (அல்லது கி​டைத்தால்) புத்தகத்திற்கு முன்னு​ரை

4. எந்த தண்ணியிலயும் ந​னையாத அ​டையாள அட்​டை

5. அட! நம்மக்கிட்டயும் ஒரு ஐடி கார்ட் இருக்​கேங்கிற ஆத்ம திருப்தி


அ​னைவரும் வருக! கவிஞராய் திரும்புக!!


முக்கியமான பின் குறிப்பு:


இது முழுக்க முழுக்க கா​மெடியாகப் படிக்க பட ​வேண்டியது என்று அகில பாரத ​மைனர் குஞ்சுகள் மகாச​பை கு​லை நடுங்க ​வேண்டிக் ​கொள்கிறது.

38 comments:

வால்பையன் said...

//பயமா இருக்கு, வயித்த கலக்கிற மாதிரி இருக்குன்னு ​சொல்றவங்க... ​நோ ​வே! கம்முனு உக்காருங்க! //

இப்படி கட்டிபோட்டா எப்படி?

சென்ஷி said...

:))

டென்சன்ல செம்மயா பிரிச்சு மேஞ்சிருக்கீங்க போல!

நேசமித்ரன் said...
This comment has been removed by the author.
Jawahar said...

கரகாட்டக்காரனையும் கவுண்டமணியையும்
கவியாய் படைத்து கற்பித்து
கலக்கிய உன் காலடி வாழ்க...

http://kgjawarlal.wordpress.com

Karthikeyan G said...

Attagaasam!!!

Kalakareenga sir..

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஐயா பாத்து நாங்களும் இருக்கிறோம் ...

:-)))

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

// பயன்படுத்திக் கொல்க //
சூப்பர்!

சிநேகிதன் அக்பர் said...

எப்படி உங்களால் மட்டும் ஆவ்வ்வ்வ்வ்...

ந‌ல‌மா.

Unknown said...

வித்தியாசமா நல்லா இருக்கு.ஆனா
ரொம்ப நீளம்.

நேசமித்ரன் said...

:)

மிக நல்ல இடுகை தலைவரே

நந்தாகுமாரன் said...

கவிதைகள் எழுதாமல் இருப்பது எப்படி என்று நான் ஒரு பதிவு எழுதப் போகிறேன்

☀நான் ஆதவன்☀ said...

கலக்கல் அண்ணாத்த :)

ஆனா பாருங்க
நான்
எவ்வளவு முயற்சி
பண்ணினாலும்
கவிதை வர
மாட்டேங்குதே!

பீர் | Peer said...

கார்டு ரேட்ட கொஞ்சம் கம்மி பண்ணுங்க குரு. அவ்வளவு கொடுத்தா ஓடியடையாது :(

ஹேமா said...

ஜெகா,எனக்கு முதல்ல ராமராஜனைப் பிடிக்காது.அதனாலேயே இந்தப் படம் பாக்கல.அந்தப் பாட்டு ரேடியோல வந்தாலே மாத்திடுவேன்.ஏனோ அப்பிடி ஒரு அலர்ஜி.அதனால உங்க பதிவை ரசிக்கல.பின்னூட்டம் போடல.நீங்க இலவசம்ன்னு சத்தம் போட்டுச் சொன்னாலும் வரல.

இதில வேற அடையாள அட்டையுமா !யார் வாங்கப்போறா.
அதுவும் ரூ.44.
ஏன் இன்னும் ரூ.1 எங்க போச்சு?

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஆத்தாடி.., இதே மாதிரி உன்னைப்போல் ஒருவன், வேட்டைக்காரன் கவிதைப் பட்டறை நடத்துங்க சாமியோவ்..,

Nathanjagk said...

அன்பு வால்பையன்.. எதிர்கவிதை திலகமே!!! நன்றி!

Nathanjagk said...

மன்னிச்சுக்கோங்க அண்ணா.. உங்க ​தொடர்பதிவை சிறப்பா எழுதலாம்னுட்டு.. இன்னும் பதுக்கி வச்சிருக்கேன்.. அடுத்து நம்ம தல புராணம்தான்! நன்றி ​சென்ஷி!

Nathanjagk said...

அன்பு ஜவஹர்,
உங்க விசில் சத்தம் என் காதில​கேக்குது! ​ரொம்ப நன்றிபா!

Nathanjagk said...

அன்பு கார்த்திகேயன் ஜி ஜி,
ரொம்ப நன்றி ஜி!

Nathanjagk said...

வாங்க மாம்ஸ் ஸ்டார்ஜன்..
நீங்களும் இருக்கீங்கங்கிற இப்ப நான் நம்பறேன்!

Nathanjagk said...

அன்பு M.S.E.R.K. (ப்ரபஞ்சப்ரியன்)
சரியான வடையாத்தான் ​போட்டிருக்கீங்க! உங்களுக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ்!

Nathanjagk said...

வாங்க மாப்ள அக்பர்!
நோன்பெல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? கொஞ்சம் ​லேட்டா ​கேக்கிறேனோ? நன்றி!

Nathanjagk said...

ஆமாங்க கே.ரவிஷங்கர்!
ரொம்ப நீளம்தான்! ​கொஞ்சம் ​சென்சிட்டிவ்வான மேட்டருங்கிறதால ​​பெருசா முழங்க​வேண்டியதா போச்சு. இல்லாட்டி நம்ம கவிஞர்கள், கவிதாயினிகள் வந்து நம்மள முழங்கிட்டு போயிடுவாங்க!
அடுத்த முறை அளவில் கச்சிதம் எடுத்துக் ​கொள்கிறேன்! உங்களுக்கு ஒரு ஐடி கார்டு ரிசர்வ் ​செய்யப்படுகிறது! ஓ​கே?

Nathanjagk said...

அன்பு ​நேசா,
இந்த பாராட்டை ஒரு கிளாஸ் ஒயினாக எடுத்துக் ​கொள்கிறேன்!

Nathanjagk said...

அன்பு நந்தா,
நேசன்​கொடுத்த ஒயின் கிளாஸில் உன்னோடு ஒரு ச்சியர்ஸ் ​சொல்லிக் ​கொள்ள ஆசைப்படுகிறேன்! நன்றி!

Nathanjagk said...

வாங்க கவி மாணவரே ஆதவன்!
ஊரெல்லாம் இப்ப உங்க பேச்சுதான்! (சூர்யா படம்!)

நாம ​நேத்த டிஸ்கிஸ் பண்ணிக்கிட்ட கவிதையை அப்படியே டிவிலப் பண்ண ​வேண்டியதுதானே ஆதவன்?

Nathanjagk said...

பீர் | Peer said...
//கார்டு ரேட்ட கொஞ்சம் கம்மி பண்ணுங்க குரு. அவ்வளவு கொடுத்தா ஓடியடையாது :(
//
சரிதான் பாஸ். நானும் கிங்ஸ் ஃபில்டர் சிகரெட் ரேட்ட (ரூ. 44/-)கம்மி பண்ணுங்கன்னு
ITC Limited, 37, J.L. Nehru Road, Kolkata - 700 071 க்கு லெட்டர் ​​மேல லெட்டரா போடறேன்.. ஆனா கம்மி பண்ண மாட்டேங்கிறாங்க!

Nathanjagk said...

ஹேமா said...

//ஜெகா,எனக்கு முதல்ல ராமராஜனைப் பிடிக்காது.//

இப்ப பிடிக்குதா?

//அதனாலேயே இந்தப் படம் பாக்கல.அந்தப் பாட்டு ரேடியோல வந்தாலே மாத்திடுவேன்.//

எது ரேடியோவையா? ரொம்ப
காஸ்டலியான இசைரசிகையா இருப்பீங்க போல!?

//ஏனோ அப்பிடி ஒரு அலர்ஜி.அதனால உங்க பதிவை ரசிக்கல.//

எல்லாரும் ​சொன்னதுதான்! ஒண்ணும் புதுசு இல்ல!

//பின்னூட்டம் போடல//

முருகா, ஞானபண்டிதா.. எனக்கும்
அதே வாழைப்பழத்தை ஹேமா கையில கொடுக்க வச்சிட்டியே?

//நீங்க இலவசம்ன்னு சத்தம் போட்டுச் சொன்னாலும் வரல//

இல்லீங்க.. இந்த தடவை கண்டிப்பா நாயை கட்டிப்​போட சொல்லிடறேன்! பயப்படாம வாங்க பட்டறைக்கு!

//
இதில வேற அடையாள அட்டையுமா !யார் வாங்கப்போறா.
அதுவும் ரூ.44.
ஏன் இன்னும் ரூ.1 எங்க போச்சு?
//

நான் விரும்பி, இருமி புகைக்கிற கிங்ஸ் ஃபில்டர் சிகரெட் பாக்கெட் ​ரேட்! அளவுக்கு அதிகமா நான் காசு ​​கேக்கறது இல்லீங்க!

Beski said...

//அதில் கி​டைக்கும் 1, 2 வார்த்தைகளை பயன்படுத்திக் ​கொல்க//
ரைட்டு.

44 எல்லாம் தர முடியாது, வேணும்னா ஒரு பாக்கட் கிங்ஸ் வாங்கிட்டு வரேன்.

அப்படியும் முடியாதுன்னு சொன்னா, நானும் ஒரு கவிதை எழுதி படிக்கச் சொல்லுவேன்...

அம்மன் கோவிலில்
கந்தனைக் கும்பிட்டான் சூனாபானா
எதிர் இருக்கும் பிகரை உரசுவது
புருசன் என்று தெரியாமல்
உரசி வாங்கிக் கட்டினான் அடி உதை
ஜெ மாம்ஸ் உசுப்பேத்த
சூனாபானா பற்றி எழுதினான் ஏனாஓனா.

பா.ராஜாராம் said...

எங்கடா நம்மாளை காணோம் என நினைத்து கொண்டுதான் இருந்தேன் ஜெகா...

வந்ததும் ஒரு குத்தாட்டமா?

எழுதுறதே இப்படி இருக்கே...பார்க்கணும் மக்கா அவசியம் உங்களை!

சிரிச்சு முடியலை பாசு!

நம்ம ஏனா ஓனா உங்களுக்குன்னு ஒரு பின்னூட்டம் போடுறாரு ஜெகா! கவிதை கலக்கல் ஏனா ஓனா!

Nathanjagk said...

மாப்ஸ்... ஏனாண்டி ஓனாண்டி...
கண்ணு கலங்குது..!
மாமா 44 ரூவா வசூல் பண்றதுக்காக ​டயிரக்ட்டு ரீசன் கிங்ஸ் சிகரெட்டுதான்னு கரெக்டா கவ்வீட்டிங்க..!

கவிதை படிச்சேன்.. என்னத்த சொல்ல.. நம்ம பா.ரா ​சொன்னதுதான்!
இந்த கவிதைக்காக,
"அக்கங்ங்ங்ங்.. யாரும் பாக்கலேடா சூனாபானா.. அப்படியே ​கெட்டப்பை ​மெயின்டென் பண்ணு.." என்று மீசையை தடவிவிட்டுக்​கொள்கிறேன்!

Nathanjagk said...

வாங்க பா.ரா.. நம்ம தாலாட்டற எல்லா கவிஞர்களும் வந்து ரசித்து கருத்து ​சொல்லிட்டாங்க.​ஹேமா மேடம்தான் "பின்னூட்டம் போட மாட்டேன்னு" பின்னூட்டம் ​போட்டுட்டு போயிருக்காங்க! பாவம் என்ன கன்ப்யூஸோ? (ஒரு வேளை நம்ம காலடியின் தீவிர அதி தீவிர ரசிகரா இருப்பாரோ?)
நன்றி ராஜா!

ஷங்கி said...

தம்பி எப்பிடில்லாம் யோசிக்கிறாரு?! புரட்சிப் பதிவர் ஜெகநாதன் வாழ்க! அதகளமய்யா அதகளம்! எனக்கு ஒரு அனுமதி பார்ஸேல்!!!
உம்மகிட்ட டிரெய்னிங் எடுத்து கவிதை எழுதுறேனோ இல்லியோ நம்ம நேசக் கவிஞர் கவிதையைக் கால்வாசியாவது புரிஞ்சுக்கணும்! ஹிஹி!!!

அன்புடன் மலிக்கா said...

நல்ல கலக்கலான நக்கலுங்க, கவிதை எழுத கத்துக்கொடுத்தமைக்கு நன்றிங்க,

http://niroodai.blogspot.com/

Beski said...

நன்றி ராஜாராம், ஜெ மாம்ஸ்.

டவுசர் பாண்டி said...

கரகாட்டக்காரன்
( இதுவா ? இன்னு அடிக்காத
கேக்கணும் !! )


ஊருவிட்டு வந்தோமோ !!கவுண்டா !!
ஒத்தைலே சப்ப பிகரு !
கூட வந்து குதிக்குது ,
கண்ணு ரெண்டும் ஆந்த , காலு ரெண்டும் கொள்ளிக் கட்ட
வேற ஊரு பாத்து ,
ஆளக் கொஞ்சம் மாத்து ,அட,

ஊரு விட்டு போறோமேடா
கவுண்டா !!

சத்ரியன் said...

//கார்ப்பரேஷன் ​தொட்டிக்குள் ​அவிழ்ந்து கிடக்கிறது ​ஆதாமின் குற்றப்பத்திரிக்கை..//

ஆஹா....ஜக்கம்மா....எங்கள இந்த ஜெகனாதன் கிட்டயிருந்து கொஞ்சம் காப்பாத்தக் கூடாதா?

துபாய் ராஜா said...

//ஆரம்பிப்பமா நம்ம பட்டறையை..

கவிதை என்பதை கவி, பாடல், கவுஜ, கழுதை,ஹைகூ,செய்யுள், லிமரிக் என்று பல ராகங்களில் சொல்லப்பட்டாலும் கவிதை என்று அழைப்ப​தே பொதுவானது என்கிறது எவ்வளவு குடித்தாலும் தெளிவாக​வே இருக்கும் கவிஞர் சங்கம் (வட்டக்கிளை - எண் 6, குற்றாலம் பிராஞ்சி)

கவிதைக்கென்று ஒரு உடல் (anatomy) இருக்கிறது:

தலைப்பு (இல்லாமல் கூட இருக்கலாம்.. அது உங்க கெத்தைப் பொறுத்து அமைகிறது)

முகவாய் (அல்லது முக​ரைக் கட்டை)
மத்தியம்
வால் (அல்லது twist)
இந்த பாகங்களில் ​நேர்த்தியாக படிமங்களை(கவிகாட்சிகள் அல்லது images) போட்டுத் தெளித்து, லேசாக வறுத்து, தாளித்து,பொன்னிறமாக கருகல் வாடை இல்லாமல் எடுத்து வைத்தால் கவிதை வந்துவிடும்.//

பட்டறை ஆரம்பமே பட்டையை கெளப்புது தல... :))

அப்படியே அடிச்சு ஆடுங்க...