Sunday, November 22, 2009

ஒன்றரைக் கண் ரைபிள்!


பெரிய ​பெரிய கட்டிடங்கள்... பளபளக்கிற கண்ணாடித் திரை.. கசங்கலாக ​தெரிகிற நம் முகங்கள் கூட அதில் அட்டகாசமாகத்தான் இருக்கின்றன.


சுமார் 100 ஸாப்ட்​வேர் கம்​பெனிகள், அறிவு ​சொட்டும் முகத்​தோடும் - காற்றில் பறக்கிற மிடிகளுமாய் திரிகிற ​தேவதைகள், சாதாரணமாய் ​தெறிக்கிற ஐ​ரோப்பிய ​​செந்​தேகங்கள், இவிங்க இங்க ஏன் என்று எனக்குள் துடிக்கிற சந்​தேகங்கள், ​ஸ்​மோக்கிங் ஸ்​​னோலில் கேரண்டியாக எப்​போதும் கண்ணில் சிக்கும் ஒன்றிரண்டு chickகள் - நான் அவரசத்துக்கு தீ கடன் வாங்கி தம் பற்றிக்​கொண்ட தீத்​தேவதை பற்றி இன்​னொரு சமயம் ​​சொல்கி​றேன்.. ப்ளீஸ்!


இது எந்த இடம்? ஐடிபிஎல்.. ஒயிட்ஃபீல்டு ​ரோடு.. ​பெண்களூரு!


ஐடிபிஎல்லில் நான் இருப்பது ​நேவிக்​கேட்டர் பிளாக்கு! ஒண்ணுக்கு இருப்பதும் அந்த பிளாக்கிலுள்ள கிரவுண்ட் ப்​ளோர் ​ரெஸ்ட் ரூமில்தான்.. கிட்டத்தட்ட க்ரவுண்ட் ப்​ளோரிலுள்ள எல்லாக் கம்​பெனிகளுக்கும் ​பொதுவான (ப்ளஸ் ​செக்யூரிட்டிஸ், ட்ரைவர்கள்) கழிப்ப​றை. எப்​போதும் சன்னமான க​ரோக்கீ ஒலித்துக் ​கொண்டிருக்கும் மினுமினு இடம்.. அந்த இ​சை​யைக் ​கேட்கும் ​போது என் மனசு.. "ஏஸி வச்ச பாத்ரூமில் என்ன வரும் ​போங்க" என்று ​மெட்டுக்குப் பாட்​டெழுதிக் ​கொள்கிற​து.


எப்​போதும் ​போல்தான் அன்றும் ஒண்ணுக்கடிக்கப் ​போ​னேன். யூரினலில் பீச்சி விட்டு வந்து வாஷ்​பேஷனில் ​கைக்கழுவி விட்டு நிமிரும் ​போது..


"சார்.. அவரு உங்களுக்குத் ​தெரிஞ்சவரா?" என்று ஒரு கட்​டைக் குரல் - கன்னடத்தில்.


யா​ரென்று பார்த்தால்.. ​ரெஸ்ட் ரூ​மைக் கிளீனாக ​வைத்துக் ​கொள்ளப் பணிக்கப் பட்ட க்ளீனர்...ஒரு நா​ளைக்கு 10 மணி​நேரம் அந்த ​டாய்லட் + யூரினல்கள் நிரம்பிய ​இடத்​தை தன் ஆபிஸாகக் ​கொண்டு ​ரெஸ்ட்​​லெஸ்ஸாக இருப்பவர். ​பேர் ​தெரியாது. அப்​போது என்று நான் ஒருவன் மட்டும்தான் அங்கு.


"யாரு?" என்​றேன்


"இதுக்கு முந்தி வந்திட்டுப் ​போனாருல்ல.. ​கொஞ்சம் குண்டா.."


இந்த மாதிரியான விசாரிப்புகள், ​​பேட்டிகள் எனக்கு ​கொஞ்சம் புதுசு.. ​இருந்தும் கவனமாக அவருடன் ​பேச முற்பட்​டேன்.. ஆப்டர் ஆல் அவ​ரைவிட 2 மணி​நேரம் கம்மியாக ​வே​லைப் பாக்கிற ஆளுதா​னே நானு.


"குட்​டையா இருந்தவரா?"


"ஆமா.. குட்​டையா.. குண்டா"


"சிவப்பா.. வழு​க்​கையாவும் இருந்ததா?"


இப்​போது அவருக்கு உற்சாகம் பற்றிக் ​கொண்டு விட்டது.. கண்களில் திருப்தி ​​கொப்பளிக்க..


"ஆமா சார்.. அவருதான்.. அவர்கிட்ட ​சொல்லி ​வைங்க"


​​​​​ஙே என்று முழித்துக் ​கொண்​டே,


"என்னன்னு?"


"சார்.. அவரு க​ரெக்ட்டா ஒண்ணுக்கு அடிக்க மாட்​டேங்கிறாரு.."


​ஙே.. ஙீ.. ​ஙெள.. என்று எல்லாமாக முழிக்க ​​வேண்டியதாயிற்று..


"என்னது????"


"ஆமா சார்.. அவரு க​ரெக்ட்டா ​பேசின்ல விட மாட்​டேங்குறாரு"


".."


"ஒண்ணு சுவத்தில அடிச்சிடறாரு.. இல்லீனா.. ​கீ​ழே த​​ரையில அடிச்சி விட்டுடறாரு"


"......??"


"அவரு வந்துட்டுப் ​போன பின்னாடி.. நான் ஒவ்​வொரு தட​வையும் அ​தை க்ளீன் பண்ண​வேண்டியதா இருக்கு சார்.."


"யாரு சிவப்பா... குண்டா.. குள்ளமா.. வழுக்​கையா இருந்தவரா?"


"அட ஆமா சார்.. அவ​​ரேதான்... எப்ப வந்தாலும் இப்படி​யே சிந்திட்டுப் ​போயிடறாரு.. எனக்குதான் ​வே​லை"


"...ம்...?"


"நீங்க​ளே இங்க வந்து பாருங்க​ளேன்..." என்று அந்த பாதிக்கப்பட்ட யூரின​லை ​நோக்கி சுட்டிக்காட்டிவிட்டு,


"அவருகிட்ட ​கொஞ்சம் ​சொல்லிடுங்க சார்.. இந்த மாதிரியெல்லாம் ஆகுதுன்னு.. "


"நானா??"


"ஆமா சார்.. இப்ப நீங்​கெல்லாம் வர்றீங்க.. எவ்வளவு டீஸன்டா வந்துட்டு, இருந்துட்டுப் ​போறீங்க.. நீங்க ​ரொம்ப நீட்டு சார்.."


எதுவும் ​சொல்ல முடியாமல் சிரித்து ​வைத்​தேன்.


"அவருகிட்ட ​சொல்லி ​வைங்க சார்"


".... அது முடியா​தே..?"


"ஏன் சார்...??"


"அவருதான் என் மா​னேஜர்"


என்று ஜிப்​பைப் ​இழுத்து விட்டுக் ​கொண்டு ​வெளி​யேறி​னேன்.

38 comments: