Monday, February 8, 2010

காணாமல் போனவர்கள்

அவள்

​நகப்பூச்சுக்கு தக்க சுரிதாரைக் கண்டடைவதில் களைப்படைய மாட்டாள்

​ஹெல்மட் அணியாமல் கூந்தல் விசிற பறந்த ​பொழுதில்

டிராபிக் ​போலீஸ் தண்டம் வசூலித்த அன்றே மாலையில் அப்பனிடம் கேட்டாள்:

டாட், கார் வாங்கிக் ​கொடு எதுக்கு திடீர்னு என்றவரிடம்

​ஹெல்மட் போடப் பிடிக்கலப்பா என்றாள்


அவன்

காலேஜ் காலங்களில் சலூன்காரரிடம் ஒருவருட பாக்கி வைத்திருந்தான்.
பஸ்ஸில் உரசிய எந்தப்​பெண்ணும் இதுவரை​அடித்ததில்லை.
வேலைக்கு சேர்ந்த முதல்நாளே பக்கத்து சீட்டுக்காரியிடம் ஐ லவ் யூ​சொன்னான்
எனக்கு 2 வயசு குழந்தையிருக்கு என்ற ரிப்ளையில் விநாடியில் சுதாரித்து
hot mama என்று சிரித்தான்.. அடுத்த 2 மாதங்களில் அவனிடம் 9000 கடன் கொடுத்திருந்தாள் hot mama

அவர்கள்

அட்டாட்ச்டு பாத்ரூம் டாய்லட் இருக்கிற வீடா பாக்கலாமே?
பாரு இந்த வீடு?
டாய்லட் அட்டாட்ச்டா இருந்தா நல்லாயிருக்கு​ம்...
சரி இந்த வீடு??

ஆனா டாய்லட் அட்டாட்ச்டா...
அடிங்கொய்யால.. இதுக்கு மேல அட்டாச்ட்டு டாய்லட்டுன்னா pampers-தான்டி கட்டிக்கணும்
ஸ்டுப்ப்ப்பிட்.....


அஃது


விரல் மோதிரம் ->

கடித்துக் கொண்டிருந்த புது செருப்பு ->

தலையணை உறை மாற்றும் லாவகமாய்

மாறிக்​கொண்டிருந்தது ->>


அடுத்தது

குழந்தை வெயிட் 3.49 கிலோ என்றான் அவன்.

3.49 கிலோகிராம்-ஃபோர்ஸ் என்றாள் அவள்

நான் சொல்ற பேர்தான் பெஸ்ட்

காதுலயே நுழைய மாட்டேங்குது

உன் காது பத்தி யாரு கேட்டா

ஒண்ணு வுட்டா உனக்கு காது கேட்காதுடி


அவர்களின் அவன்

6மாத குழந்தையாய் தோட்டைப் பிடித்து இழுத்ததில் ஒரு வாரத்திற்கு
அவளின் காதில் ரத்தம் கசிந்து ​கொண்டிருந்தது
விளம்பர இடைவேளையில் மறைந்து​போன​டோராவின் ​மேலுள்ள ​கோபத்தில் டிவியைத் தள்ளிவிட்டு உடைத்தபோது

அவன் வயது 17மாதங்கள்

இப்​போ...

அவள்.. நடந்தா ஒடம்புக்கு நல்லதுதானே பெட்ரோல் செலவும் மிச்சம் என்று விரைகிறாள்.

அவன்.. கடைசி ஸீட்டிலிருந்து எழுந்து வந்து இடங்​கொடுக்கிறான் - குழந்தையோடு நிற்கும் தாய்க்கு.

43 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

வாழ்க்கை என்பது இதுதானோ ? ..

பிறந்தோம் வளர்ந்தோம் சம்பாதிக்கிறோம் ஓய்வெடுக்கிறோம் , இடையில் எத்தனை எத்தனை மாற்றங்கள் நம்முள்ளே ..

ஜனனம் , மரணம் இடையில் ஒரு நூல்போலத் தான் நம் வாழ்க்கை .

அருமை ஜெகா , நல்ல தத்துவங்கள் .

நாந்தான் முதல்லயா ..

ஈரோடு கதிர் said...

நிஜம்தான்

Raju said...

அழகு தலைவா..!
பேம்ப்பர்ஸ் நகைச்சுவையும்.

Anonymous said...

நிஜமாலுமே ரூம் போட்டு யோசிச்சீங்களா?
அருமை

சிநேகிதன் அக்பர் said...

வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் அருமையா சொல்லியிருக்கிங்க மாம்ஸ்.

ரொம்ப சந்தோசமா இருக்கு நீங்க எழுதுறதை பார்க்கும் போது.

அண்ணாமலையான் said...

கலக்குங்க

sathishsangkavi.blogspot.com said...

உண்மைதான்....

Anonymous said...

அருமை

ஹேமா said...

வாழ்வின் யதார்த்தங்கள.ஜே...யின் இயல்போடு கலந்து நகைச்சுவையாக வெளிப்பட்டாலும்,அவற்றின் கஸ்டங்களையும் அதன் சலிப்பு அனுசரிக்கும் தன்மை.ஏமாற்றம் எல்லாவற்றையுமே சொல்கிறது.

என்ன ஜே...வாழ்க்கையில ரொம்ப அனுபவப்படறீங்கபோல !நல்லது !

சென்ஷி said...

அசத்தலுங்கண்ணோவ்வ்வ்வ்வ்வ்வ்

நேசமித்ரன் said...

மீட்டெடுத்தலே வாழ்வாய் இருக்கிறது
தொலைதலின் எச்சங்களில் இருந்து

புது விசைபட்ட சிந்தனைகள் நண்பா

விஜய் said...

வாழ்க்கை பயண ஓடையில் அழகாக பயணம் செய்ய வைத்துள்ளீர்கள்.

(அட்டாச்சிடு டாய்லட் சிந்தனைக்கு பாராட்டுக்கள்)

துபாய் ராஜா said...

வாழ்வின் சில கட்டங்களை வித்தியாசமாய் விவரித்திருக்கும் விதம் அருமை ஜெகன்.

KarthigaVasudevan said...

//அவர்களின் அவன்

6மாத குழந்தையாய் தோட்டைப் பிடித்து இழுத்ததில் ஒரு வாரத்திற்கு
அவளின் காதில் ரத்தம் கசிந்து ​கொண்டிருந்தது
விளம்பர இடைவேளையில் மறைந்து​போன​டோராவின் ​மேலுள்ள ​கோபத்தில் டிவியைத் தள்ளிவிட்டு உடைத்தபோது

அவன் வயது 17மாதங்கள்


இப்​போ...


அவள்.. நடந்தா ஒடம்புக்கு நல்லதுதானே பெட்ரோல் செலவும் மிச்சம் என்று விரைகிறாள்.


அவன்.. கடைசி ஸீட்டிலிருந்து எழுந்து வந்து இடங்​கொடுக்கிறான் - குழந்தையோடு நிற்கும் தாய்க்கு.//

Aha...fantastic; :)

பத்மா said...

இப்படிதான் இருக்கணுமா?

Menaga Sathia said...

அருமை சகோ!! எங்கே போய்ட்டீங்க இவ்வளவு நாளா? இல்லை நாந்தான் உங்க பதிவுகளை படிக்க வில்லையா......

பா.ராஜாராம் said...

ரொம்ப தாமதமாகிப் போச்சு ஜெகா..வேலைப் பளு.

ரொம்ப புடிச்சிருக்கு ஜெகா, உங்க ஆட்டோ கிராப்..இன்னும் கொஞ்சம் நீட்டி இருக்கலாம்.உங்க பேரனுடன் விளையாடுகிற செஸ்/கிரிக்கட் வரையில்...சரி,நான் கிளம்புறேன்.காதலர் தினத்திற்கு கார்டு வாங்கணும்.

:-)

வினோத் கெளதம் said...

கலக்கல் தலைவா..

☀நான் ஆதவன்☀ said...

க்ளாஸ்ண்ணே!

நெட் பக்கம் ரொம்ப நாளா ஆளையே காணோமே? என்னாச்சுண்ணே?

ஷங்கி said...

வாழ்க்கைத் தத்துவத்தை கவிதை மாதிரி சொல்லி அதுலயும் உம்ம குசும்பை நுழைச்சிருக்கிற நீர் ஜெகநாதன் இல்லை ஐயா ஜெகஜாலன்!
வாழ்க்கையே காணாமப் போச்சப்பா!

கலா said...

அவள்====== கன்னிப் பருவம்:

அழகாய்,விதம்விதமாய் உடுத்தி
ஆடம்பரமாய் வாழ{பெண்ணென்ற கோட்டுக்குள்}
அடங்கி நினைத்ததை முடித்து பொறுப்புணர்வு
இல்லாமல்... அடுத்தவரின் {தாய்,தந்தை}யரிடம்
கையேந்தி வாழும் பருவம்.

அவன்============ காளைப் பருவம்

வரவில்லாமல் செலவு செய்யும் காலம்
அடங்காமல்{சிலர்}
அதிக பணம் அடுத்தவரிடம் {தாய்,தந்தை}
கையேந்தத் தயக்கம் காரணம் ஆண் மகன்
அதனால் அடுத்தவரிடங்களில் சாக்குப் போக்குச் சொல்லிக்
கடன் .
தன் தயவில் நிற்கப் போகிறோம் என்ற நினைப்பில்....
அடுத்த பெண்களைச் சீண்டிப் பார்க்கும் பருவம்
கேலி கிண்டல் செய்யும் வயது,அதனுடன்...
காதலும் தலைதூக்கும் பருவம், இதனால் ஏமாறும்
பெண்களும் உண்டு.

அவன்+அவன் ===========அவர்களானால்...
பல எதிர்பார்புடன் கூடிய ஆசைகளுடன்...
வாழ்க்கை வாழ்வதற்கு ஆயத்தமாகும் போது...
புரிந்துணர்வின்மை அப்போதே எட்டிப் பார்கின்றது.

அஃதிருக்க....வாக்கையில்...
மாட்டிவிடுவதும்,கழட்டிவிடுவதும்,உருவியெடுப்பதுமாய்...
நகர்கிறது..

அடுத்து+++========
நான்,நான் என்ற ஈகோவும்,அடக்கிப் போ என்ற
அதிகாரமும் அவ்வப்போதுகளில்.....

அவர்களின்..அவன்====வந்தபோது...
தாய்,தந்தை பதவி அவர்கள் ஏற்கும் போது.....
தானாகவே..அவர்களின் ஆடம்பரம்,அதிகசெலவு,குறும்பு
பொறுப்பின்மை மற்றும் அனைத்தும் அவர்கள்
இளமையுடன் கரைய......

இப்போது,,அவனால்...அவர்கள்;
பொறுப்படைந்தவுடன்
சகிப்புத் தன்மை,சேமிப்பு,புரிந்துணர்வுடன்...
அந்தந்த நேரம்{வயது}வரும்போது அதது
தானாகவரும் என்பதனைக் குறிக்கும் உங்கள்
இடுகையென நினைக்கின்றேன்.காணாமல்
போனவர்களல்ல...அவர்கள் அப்படியேதான்!!
காணாமல் போனது இளமையுடன் முன் நடந்து
கொண்ட செயல்பாடுகள்தான்!!
வாழ்க்கை இளமை இருட்டில்......எதுவும் நன்றாகத்
தெரிவதில்லை....

வாழ்க்கை முதுமையில் வெளிச்சமடைகிறது.

Sanjai Gandhi said...

அனைத்துமே அற்புதம் ஜெகநாதன்..

Nathanjagk said...

மாம்ஸ்டார்ஜன்...
அன்புக்கு ரொம்ப நன்றி!
இந்த முறை கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில ஒண்ணும் சொல்லலியா?

Nathanjagk said...

நன்றிங்க கதிர்!

ராஜு... நன்றி தல.. ​பாம்பர்ஸ்ஸும் அ.பாத்ரூம் தானே குழந்தைங்களுக்கு?

வாங்க சின்ன அம்மிணி,
ரூம் இல்ல.. ரம் :)

Nathanjagk said...

அக்பர் மாம்ஸ்,
​செளக்யமா?
சங்காண்ணாவுக்கு சாவி ​கொடுத்து விட்டிருக்கீங்க ​போல.. அண்ணாச்சி இப்ப அகம் ப்ரம்மாஸ்மின்னு அளப்பற பண்ணிக்கிட்டிருக்காரு..!!
என்​னையும் உற்சாகப் படுத்துவதற்கு நன்றி!!

Nathanjagk said...

வாங்க BrotherHill சார்.. நன்றி!

சங்கவி,
எங்கப் பாத்தாலும் இப்ப சங்கவிமயமா இருக்கு!! சூறாவளிச் சுற்றுங்க நீங்க! நன்றி!

nanrasitha,
நன்றிகளும் அன்புமாய்!!

Nathanjagk said...

வாங்க ​ஹேமா ​மேடம்,
இது ஒரு பு​னைவுதான். நம் தீவிர அதி தீவிர ரசிகர்க​ளை குஷிப்படுத்த இப்படி ஒரு கலக்கல். ​தேடல் நிரம்பிய வாழ்க்​கையில் இது ஒரு சிறு சந்து.
நன்றிகள்!

Nathanjagk said...

வாங்க ​​பெரியண்​ணோவ்..
இதுக்கு முன்னாடி எழுதின எ​தையும் படிக்க​வேயில்ல ​போல..
அதுவும் நல்லதா ​போச்சு!
​கேட்டா ​மெயில்பாக்ஸ் ​ரொப்பிப் ​போச்சுங்கிறது. ம்??

Nathanjagk said...

அன்பு ​நேசா,
எல்லாக் கல்லிலும் ஒரு சிற்பம் உண்டல்லவா? உளி வந்து ​தொடும் வரை ச​மைந்து கிடப்ப​தே கல்.
சில மானுட தரிசனங்களும் அப்படித்தானே?

Nathanjagk said...

அன்பு விஜய கவி,
நலமா?
வாழ்த்துக்க​ளை தங்களின் அன்​போடு ஸ்பரித்துக் ​கொள்கி​றேன்.

Nathanjagk said...

அன்பு துபாய் ராஜா,
இந்த முயற்சி​யை ரசித்த தங்கள் அன்புக்கு மிக்க நன்றி ராஜா!

Nathanjagk said...

கார்த்திகா ​நன்றியும் அன்பும்!!

பத்மா, இப்படியும்..!

Nathanjagk said...

அன்பு ​மேனகா,
நானும் தங்கள் ​கைமணப்பக்கம் வராம ​போயிட்​டேன். எப்படியும் கூகிள் ரீடரில் தவறாமல் வாசித்துவிடுகி​றேன்.

Nathanjagk said...

வாங்க ராஜா,
நலமா? இதன் நீட்சியைத்தானே வாழ்ந்துகிட்டு இருக்கோம்.. மெதுவா எழுதலாம். அன்புக்கு நன்றி ராஜா.

காதலர் தின அட்டைக்கு ஒரு எளிய உபாயம் சொல்கிறேன்:

ஒரு அரைப்பக்கத் தாளில்
உங்கள் கவிதையை
எழுதி நீட்டுங்கள்..
அதைவிட அழகிய
காதல் வாழ்த்து அட்டை
இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை!

Nathanjagk said...

வினு பாய்..!
நலமா? நன்றிப்பா!

Nathanjagk said...

ஆதவன் தம்பி,
நலமா? ​வே​லைப்பளுவில் உழன்று திரிகி​றேன். நிச்சயம் ​பேசி மகிழ்​வோம்!

Nathanjagk said...

வாங்க சங்காண்ணா,
சொல்லித் திருந்தாவர்கள் பட்டுத் திருந்துவார்கள் இல்​லையா? பாடம் தரவென்​றே வருபர்கள்தான் பாலகர்கள்.. இதுவும் ஒரு பால பாடம் தா​னே? :)
அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பாடம் ​சொல்ற சுப்பன்..!

Nathanjagk said...

கலா மேடம்..
அ​டேங்கப்பா!!
நீங்கதான் ஒரிஜினல் பின்னூட்டச் சூறாவளி!
​தெளிவான விளக்கத்திற்கு நன்றி!
அட்சரம்பிசகாமல் எழுதிச் ​சென்றிருக்கிறீர்கள்.
நீங்கள் ஊக்கப்படுத்திய​தில் விளைந்ததே இந்த இடு​கை.
அதற்கு தனியாக நன்றிகள்!
அன்பும் ம​ழையும் பாட்டுமாய் இருக்கிறது இப்ப!

Starjan (ஸ்டார்ஜன்) said...

/// இந்த முறை கன்னடம், தெலுங்கு, மலையாளத்தில ஒண்ணும் சொல்லலியா? ///

அன்புக்கு ரொம்ப நன்றி!

வாத்யார் தான் மாணவனுக்கு சொல்லித் தரணும் .

பித்தனின் வாக்கு said...

நல்ல தலைமுறை இடைவெளியின் மாற்றங்கள். நல்ல கவிதை. நன்றி.

சிநேகிதன் அக்பர் said...

//காதல் நிரம்பி வழியுதுங்க ஸ்டார்ஜன்!//

என் பெயர் அக்பர் மாம்ஸ்

இரசிகை said...

:)

kaalam yelaaththaiyum maatri konde selkirathu.maaruvathu maaraathathum nam kaiyil....sila neram soozhnilaiyin kaiyil.

இரசிகை said...

:)

kaalam yelaaththaiyum maatri konde selkirathu.maaruvathu maaraathathum nam kaiyil....sila neram soozhnilaiyin kaiyil.