அவள் ஒரு மலையோரச் சிறுமி:
கல்லூரி படிக்கும்போது குதிரையாறு அணையில் மாணவர்கள் சேவை முகாமிட்டிருந்தோம். மலையும் காடுகளும் அணைந்த சில்வண்டு வெளி. ஊரின் ஒற்றை டீக்கடை ஓனரம்மாளின் ஒரே மகள். பெயர் ஸ்ரீதேவி. மயில் என்ற பெயர் கூட அவளுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கும். 10 வயது சிறுமி. வியப்பு தடவிய பெரிய விழிகளால் என்னைப் பார்த்தது இன்றும் நினைவிலுண்டு. நெல்லிக்கனி, டீக்கடை ரொட்டி, டீ என்று எனக்களிக்க எப்பவும் கைவசம் ஏதாவதுண்டு அவளுக்கு. 10 நாள் கேம்ப் முடிந்து கல்லூரி வந்தாயிற்று. ஒருவாரம் கழித்து குதிரையாறிலிருந்து கல்லூரிக்கு வரும் நண்பன் என்னிடம் ஒரு கடிதம் நீட்டினான். ஸ்ரீதேவி என்ற மலையோரச் சிறுமி ரூல்டு பேப்பரில் எழுதிய ஒரு கடிதம். அவள் கண்களை ஒத்த குண்டு குண்டான கையெழுத்தில் மலை எல்லைகளைத் தாண்டி வந்திருக்கிறது. அணைகள் தடுப்பதில்லை என்று உணர்த்தினாள் அன்று.
பாம்புகளைப் பின்தொடருபவள்:
கேட் ஜாக்ஸன் (Kate Jackson) என்ற விலங்கியல் பேராசிரியை Passion for Snakes என்ற ரீடர்ஸ் டைஜஸ்ட் கட்டுரையில் படித்தது. கேட்டின் நேர்மையும் தைரியமும் நிரம்பிய ஆப்பிரிக்க பாம்பு வேட்டை அனுபவங்களுக்காக ரொம்ப பிடித்திருந்தது.
அவர் பற்றி அறிய: http://people.whitman.edu/~jacksok/ தற்போது Assistant Professor Department of Biology ஆக Whitman College யில் பணிபுரிகிறார்.
நீங்கள் விரும்பினால் கட்டுரையை தட்டச்சி அனுப்புகிறேன்.
செம்மாம்பழம் போலே..:
பழைய கருப்பு-வெள்ளைப் பட நாயகிகள் அனைவரும் அலாதி ப்ரியத்துக்குரியவர்கள்தான். மடி மீது தலைவைத்து விடியும் வரை தூங்குவோம் என்ற பாடலின் இசையும், பொங்கும் நிலா பின்புலமும் தேவிகாவை அமர நாயகியாக்கிவிட்டன. நான் என்ன சொல்லிவிட்டேன் (பலே பாண்டியா) பாட்டில் ஒரு வரி: செம்மாம்பழம் போலே கன்னம் சிவந்து விட்டதடி. தேவிகா கறுப்பு. ஆனால் இந்த வரிகளுக்கான அவரின் அபிநயம்... Fair & Lovely!
ஙப் போல் வளை:
நண்பர்கள் எழுதிய பிடித்த 10 பெண்களில் சாதாரணமாய் காரைக்கால் அம்மையார், மூவலூர் ராமமிர்தம், டாக்டர் முத்துலட்சுமி எல்லாம் பார்க்க முடிகிறது. நமக்கு அந்தளவுக்கு சத்து காணாது. ஆகவே ஒளவை!
பிடித்த மூதுரை வரிகள்:
அட்டாலும் பால் சுவையில் குன்றா(து) அளவளவாய்
நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே; சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்.
-
நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை.
ஆத்திசூடி நீதிக்கதைகள் என்று மீனாமுத்து என்பவர் எழுதிவருகிறார். சீரிய முயற்சி!
கிட்டத்தட்ட ஒண்டிக்கட்டை:
அத்வைதா கலா (Advaita Kala) இந்திய சிக்-லிட் படைப்பாளி. ஆங்கில எழுத்தாளினி. அவரின் Almost Single நாவலின் துணிச்சலான நடை, மிடுக்கான நகைச்சுவை, புத்திசாலித்தனம் நிரம்பிய உரையாடல் மிகப்பிடிக்கும்.
மிக்கி மவுஸ் தேவதை:
பிரார்த்தனா. இவள் ஒரு விளம்பர மாடல். சில வருடங்கள் முன்பு சென்னை சில்க்ஸ், லயன் டேட்ஸ் இத்யாதி விளம்பரங்களில் கண்ணுக்குச் சிக்கிய சென்னைப் பொண்ணு. மிக்கி மவுஸ் காதுகள் கொண்ட சிறு தேவதை. இப்ப காணோம். தற்சமயம் திவ்யா பரமேஸ்வர் என்ற விளம்பர தேவதை - த்ரீ ரோஸஸ், ப்ரீத்தி மிக்ஸி, சாம்ஸங், ஹமாம் சோப் இத்யாதி - அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளார்.
பாலகுமாரன் எழுத்து அவளுக்குப் பிடிக்கும்:
காயத்ரி. கம்ப்யூட்டர் இன்ஸ்டிடியூட் பழக்கம். க்ரீஸ் தடவிய வேகத்தில் விழும் ஆங்கிலம். பெரிய வசீகரங்கள் இல்லை. ஆனால் அவளின் கம்பீரம், நடை, கட்டைக்குரல் பேச்சு, கர்வம், அறிவு எனக்கு ரொம்பப் பிடிக்கும். பாலக்குமாரன் எழுத்து, மம்தா பானர்ஜி, உலக அரசியல், சினிமா என எல்லாவற்றையும் பற்றி தீர்க்கமாக விவாதிப்பவள். 'உன்னை சிலசமயம் நினைத்துக் கொள்வதுண்டு. அன்று நீ குளிர்கண்ணாடி (எனக்கு அப்ப மெட்ராஸ் ஐ) அணிந்து வந்திருந்தது அழகாயிருந்தது. உன்னை அப்போது பிடித்திருந்தது. இதனால் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எண்ணிவிடாதே' என்று என் கண்களைப் பார்த்துக் கூறியவள். பார்த்து 10 வருடங்கள் இருக்கும். அவளைவிட நான் 2 வயது சின்னவன் என்பது இன்று வரை அவளுக்குத் தெரியாது.
48 comments:
தலைப்பே கொல்லுதுண்ணேய்..!
ஹும்..இப்பிடி யாராவது தொடர்பதிவு எழுதக் கூப்ட்டாத்தான் எழுதுவீங்களோ..!
:-)
:))
உங்களின் வாசிப்பு மற்றும் நேசிப்பு பரப்பு விரிவு சொல்லும் இடுகை
சொன்னது நீதானா பிடிக்காதா தலைவரே
இன்னும் இசை பக்கம் , இயக்குனர்கள் பக்கம், எமிலி ,சிலுக்கு ... போயிருக்கலாமே
:)
அவ்வையாருக்கு ஜே போட்ட ஜேவுக்கு ஒரு ஓ போடலாம்
முன்பே நான் கூறியது போல உங்களது எழுத்து நடை வசீகரிக்கும் சக்திகொண்டுள்ளதாக கருதுகிறேன்.
வாழ்த்துகள்
ஒரு சந்தேகம் தசா என்று வருமா? அல்லது தச என்று வருமா
விஜய்
ஜெகன்! ரொம்பத்தான் இரசித்து
எழுதிருக்கிறீர்கள்,அதில் ஔவையும்....
அடக்கமா? பிரமாதம்
சத்தியமா நான்இல்லை அந்தக் கலா...ஆஹா
....ஆஹாஹ...ஹ்ஹஹ்ஹ........
உங்கள்
பசுமையான நினைவுப் பயிர்களில்
சிலவற்றை
பிரிந்து நட்டதில்....
நாற்று எங்கள் மனக்
காற்றிலும்..அசைந்தது.
நன்றி ஜெகன்
\\ ஆத்திசூடி நீதிக்கதைகள் என்று மீனாமுத்து என்பவர் எழுதிவருகிறார். சீரிய முயற்சி!\\
அறிமுகப்படித்தியதற்கும் அங்கு வருகை தந்ததற்கும் மிகவும் நன்றி ஜெகன்.
அக்கதைகள் நான் படித்தறிந்தவை தான் அதையே அங்கு பதிகிறேன்.
ஔவையைப்பற்றி குறிப்பிட்டுவிட்டு தொடர்ந்து அவரின் ஆத்திசூடிக்கான கதைகள் குறித்து கைகாட்டியது சிறப்பு!
தங்களின் எழுத்து சுவாரஸ்யமாக இருக்கிறது.வாழ்த்துகள்.
மீண்டும் என் நன்றி
மாம்ஸ் வழக்கம் போலவே கலக்கல்.
இதற்காகவாவது உங்களை தொடர்பதிவுக்கு கூப்பிடனும். அப்பதான் எழுதுவீங்க. நீங்கள் குறிப்பிட்ட பெண்களை எங்களுக்கும் பிடிக்கவைத்து விட்டீர்கள்.
நல்ல பதிவு!!
மாப்ள ஜெகா.. அசத்திட்டீங்க..
உங்களுக்கு பிடித்தவர்கள் எங்களுக்கும் பிடித்தவர்கள்தான்.
டைட்டிலே கலக்கல்..
அண்ணாத்தே இப்படி சொல்வது எனக்கு பிடித்திருக்கிறது.தச மாதுக்கள் என்று இருக்கிறது பத்து பெண்கள் இருக்கிறார்களா.அடிக்கடி என்னால் உங்கள் மேல் பொறாமை கொள்ள முடியாது.தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்.
அன்பு ராஜு,
எழுதுவதில் self-start பிரச்சினை கொண்டவன் நான். sparkக்குகாக காத்திருக்க வேண்டியிருக்கிறது.
சிலசமயங்களில் அது அடுத்தவர்களின் பதிவுகள் மூலம் கிடைக்கிறது.
ஸ்பார்க் கிடைத்த உத்வேகத்தில் அந்த பதிவிலேயே பெரிய பின்னூட்டமாய் போட்டு டயர்டாகி தூங்கி விடுகிறேன்.
ஸிம்பிளா, நான ஒரு பி.தெ. பிளாக்கர் :))
இனிய மைதீஸ் நன்றிகள்..!
அன்பு நேசா,
சொன்னது நீதானா- அப்பாவின் ஃபேவரிட். பாட்டுக் கேட்டுவிட்டால் போதும் ஸ்ரீதரில் ஆரம்பித்து நெஞ்சம் மறப்பதில்லை வரைக்கும் பேசுவார்!
சொன்னது நீதானா-வில் எனக்குக் கேட்பது சிதார் மற்றும் அப்பாவின் பேச்சு. தேவிகா இல்லை :))
அன்பு விஜய்,
தசாவதாரம், தசாபுத்தி, தசாவதானி வகையில் தசாமாது.
ஒளவையைப் பற்றி எழுதும் முன் அவரின் ஆத்திச்சூடி, மூதுரையை பதிவிறக்கம் செய்து படித்தேன்.
http://pm.tamil.net/ - இங்கு (ப்ராஜெக்ட் மதுரை)போனால் முதிய தமிழ் இலக்கியங்கள் pdf கோப்பாகக் கிடைக்கிறது.
என்ஜாய்!
அன்பு கலா,
நீங்களும் எழுதுங்கள். எல்லா கலாக்களையும் மிஞ்சி விடுவீர்கள். உங்கள் அன்பிற்கும் மின்னூட்டமாயிருக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிகள்.
*
நன்றி பத்மா!
*
அன்பு மீனா,
நன்றி! ஆத்திச்சூடியை கதைவடிவில் பெறுவது மகிழ்ச்சியாயிருக்கிறது. உங்கள் உழைப்பு வீண்போகாது. தொடர்ந்து எழுதுங்கள்!
வாங்க அக்பர் மாப்ஸ்,
இன்னும் கொஞ்ச பேர் இருக்காங்க.. பட் எழுத துணிச்சலில்லை!
Ex.
கடந்த வாரத்தில் ஒரு செருப்படி
----------------------------
ஒரு பெண்ணால் ட்ரெயினில் விழுந்தது. என் பெயர் ராமசேஷன் படித்துக் கொண்டிருந்த போது நல்ல கூரான செருப்பு உச்சந்தலையில் விழுந்தது. செருப்படி விழும் போது பக்கத்திலிருந்த அம்மிணி கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிக் கொண்டிருந்தாள். ட்ரெயின் பேன் மேல் செருப்புகளை கழட்டி வைக்கும் அன்பர்கள் தயவுசெய்து திருந்துக.. தலை வலிக்குதுபா. இருந்தும் வாழ்வில் முதன்முதல் அனுபவம் என்ற கர்வத்தில் சம்பவத்தோடு அந்த மலபார் பெண்ணும் நினைவில் அமர்கிறாள்.
--
இதை எழுதிட்டு அப்புறம் தூக்கி BUZZல போட்டுட்டேன். சுனாபானா மாதிரி!
நன்றி மேனகா!
*
நன்றி ஸ்டார்ஜன்..!
தொடர்பதிவுக்கு அழைத்ததற்கு மிக்க நன்றி! முக்கியமான சில நினைவுகளைப் புரட்டிப் பார்க்கவும் அதை பதிவிடவும் சாத்தியமாயிற்று.
நான் முன்பே பதிவிறக்கம் செய்து விட்டேன்.
நன்றி நண்பா
விஜய்
உம்முள் உள்ள ரசிகன் வெளிப்பட்டிருக்கிறான்.
ஆனாலும் சொல்லியவற்றை விட சொல்லாமல் விட்டவைகள் எப்போதும் சுவாரசியம் என்ற குறுகுறுப்பில்... அதை அசைபோட்டுக் கொண்டே இந்த மயில் தோகை இடுகையை என் நினைவடுக்குகளில் பொத்தி வைக்கிறேன்,என்றாவது ஒரு நாள் அது சொல்லாமல் விட்ட காரிகைகளைப் பெற்றெடுக்கும் என்ற் நம்பிக்கையில்...
அழகுண்ணே. ரொம்ப பிடிச்சிருக்கு இந்த பதிவு.
மிகவும் சுவாரஸ்யமான பதிவு .... "ஸ்ரீதேவி" அணைகள் தடுப்பதில்லை என்று உணர்த்தினாள் அன்று. மொத்தத்தில் அழகு ஜெகநாதன்!!!
ஸ்ரீதேவி என்ன எழுதி இருந்தாள் என்றும் கூறினால் இன்னும் நன்றாக இருக்கும்.
கேட் ஜாக்சனின் ஆப்ரிக்க காட்டு அனுபவ வீடியோ முன்பே எங்கோ வலையில் பார்த்தது, இப்போது தேடுகிறேன் கிடைக்கவில்லை... Amazing Lady!
நானும் ' நான் என்ன சொல்லிவிட்டேன்' பாடலின் ரசிகன். அந்த வரியில், தேவிகாவின் கண்களும்,கன்னமும்,முத்துப்பல் வரிசையும் காண்பவரை வசீகரிக்கும்.
'நல்லார் ஒருவர் உளரேல் ....' நான் வேண்டுமென்றே (deliberately) நம்ப முயலும் வரிகள்.
'Almost Single'. e-book கிடைக்கிறதா என்று பார்க்கவேண்டும். ஏற்கனவே ஒரு முறை அத்வைதா கலாவை குறித்து எழுதி இருக்கிறீர்களா ஜெகன்?
மிக்கி மவுஸ் காது :) ! இப்போதுதான் நினைவுக்கு வருகிறது.
'கட்டை குரல்' (husky voice) பெண்கள் பெரும்பாலான ஆண்களை கவருகிறார்கள் என்பது உண்மையா? என் பதில் ' ஆமாம்'! [http://www.voices.com./ ] அதேப போல பெண்களுக்கும் ஏதாவது அபிப்பிராயம் இருக்குமா?
'உங்களைக் கவர்ந்த பெண்கள் யார் யார் ?' என்று கேட்டால், அம்மாவையும், பெண்டாட்டியையும் கைக்காட்டும் உலகில்...(தவறில்லை என்றாலும் கூட) இது ஜெகநாதனின் ஸ்டைல் ! அருமை
பல சுவையில் கலக்குரீங்க, தினா கானா வலசு தம்பி.
நன்றி வினூ..!
*
அரவிந்த்,
ஹிஹி.. தப்பைக் கப்புன்னு புடிச்சிட்டீங்க தம்பி!
சப்தமாதுகள்-ன்னு மாத்தலாமான்னு யோசிக்கிறேன்.
அன்பு சங்காண்ணா,
கவிதை மாதிரி பின்னூட்டம் வந்திருக்கே! நான்பெண்களைப் பற்றி எழுதுவதும் என் சுயசரிதையை எழுதுவதும் ஒன்றே. பருவங்களை கோடை - குளிர் என்ற பகுப்பது போல வாழ்வை பெண்களால் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது.
*
நீங்கள் எழுதப்போகும் பி10பெ பதிவுக்கு வெயிட்டிங்.
நன்றி ஆது..!
BUZZ-லயே சுத்தற ஆள இங்க பாக்கிறது சில்லுனு இருக்கு!
*
நன்றி கவிதன்!
குதிரையாறு அணை, ஆறு, முகாம் கலாட்டாக்கள், மலைவாசிகள், நீண்ட இரவுகளில் கேட்கும் மெலிதான பறையொலி, நரி ஊளை, மரங்கள், ஸ்ரீதேவியின் கண்கள்... மறுக்கமுடியாத வலியுணர்வு.
இனிய ப்ரபஞ்சப்ரியன்,
உங்களை எனக்கு மிக அணுக்கமாக உணர்கிறேன் எப்போதும்.
ஒரு புத்தகத்திலிருந்து எனக்குப் பிடித்த ஒரு வார்த்தையை மட்டும் சொல்ல உங்களால் முடியும் எனத் தோன்றுகிறது.
Kate Jackson எழுதிய கட்டுரை (Reader's Digest) இருக்கிறது. வேண்டுமானால் தட்டச்சி அனுப்புகிறேன்.
கறுப்பு-வெள்ளை திரைக்கு ஏற்ற முகம் தேவிகாவினுடையது. அவர் நடித்த வண்ணப்படங்கள் பார்த்ததாக நினைவில்லை. ஒரு வண்ணப் படத்தில் (அந்த ஒரு நிமிடம் என்று நினைக்கிறேன்) கமலுக்கு அம்மாவாக வருவார். கறுப்பு-வெள்ளையின் சுகம் புரிந்தது.
ஆஹா.. சரியாகச் சொன்னீர்கள்..
பெண்களின் ஆர்மோனியக் கட்டைக் குரல் விசேஷமானதல்லவா? எனக்குப் பிடிக்கும். நிறைய முகங்களும் பாடல்களும் இப்போது நினைவிலாடுகின்றன. (சங்காண்ணா.. கட்டைக்குரல் பாடல்கள் லிஸ்ட் கிடைக்குமா? Any language)
நண்பர் கேட்டிருக்கிறார்:
//அதேப் போல பெண்களுக்கும் ஏதாவது அபிப்பிராயம் இருக்குமா?
//
சொல்லுங்களேன் கேட்போம்.
இல்லே 'ஆண்களிடம் பிடித்த 10' என்று ஒரு தொடர்பதிவை ஆரம்பிப்போமா?
நன்றி தாராபுரத்தாரே!
//தினா கானா வலசு தம்பி//
புரியலீங்க..!
நானும்தான்
தாராபுரத்தான்
காந்திபுரத்தான்,
கதவு எண் 276த்தான்!
:)
உஷா உதூப் சட்டுனு நினைவுக்கு வருகிறார்.
எல் ஆர். ஈஸ்வரியும் கொஞ்சம்...
மாலதி, லேசா இருந்தாலும் கொஞ்சம் சளி பிடிச்ச மூக்கோடு பாடுகிற மாதிரி தெரியும்ல?!
உஷாவை அடிச்சுக்க ஆள் கிடையாது. I love her!!!
இப்பத் தேடியது - உஷாவின் http://www.youtube.com/watch?v=ttnl6jIMZm8 (கொஞ்ச நேரம்தான்)
வேகம் வேகம் நினைவிருக்கிறதா?
கிளப்பி விட்டுட்டீங்களே!, உஷாவின் கானத்தில் மயங்க வேண்டியதுதான்.
அப்புறம் எனக்குப் பிடித்த இன்னொரு கட்டைக்குரலி, எனக்கு மட்டும் தெரிந்த பிங்கி! (ஹி ஹி!)
மற்றவர்களைப் பிறகு பார்ப்போம்.
பட்டென்று கட்டைக்குரல் பாடகிகள் பாட்டு வரிசை எடுத்தியம்பிய ஷங்கி அண்ணனுக்கு நன்றி!.
பாடகி அனுபமாவை இந்த வரிசையில் சேர்த்த "சந்திரலேக்க்க்காகாகாகா" (திருடா திருடா) என்று அடம் பிடிக்கிறார்..
மால்குடி சுபாவையும் மறக்க முடியாது (ஆல் த டைம் பாட்டு - நாடோடித் தென்றல்)
இப்ப புதுசு புதுசா நிறைய பேர் நாக்கு மூக்கா, மன்மதா ராசா என்று 8 கட்டையில் கதறுகிறார்கள். அவர்களை இந்த லிஸ்ட்டில் சேர்த்த முடியாது.
வெஸ்டர்னில் ஏகப்பட்ட பாடகிகள் உண்டு. கொஞ்சம் யோசிக்கணும்!!
அட, அட ! இப்பதான் நாடோடித் தென்றல்ல ஒரு ஆங்கிலப் பாட்டு இருக்குமேன்னு தேடிக்கிட்டிருக்கேன். கிடைக்காம மணியே மணிக்குயிலே கேட்டுக்கிட்டே இதை எழுதுகிறேன்.நீங்க மால்குடி சுபான்னு சொன்னவுடனே டக்குனு பத்திக்கிச்சு!
கொஞ்சம் இரவு கொஞ்சம் நிலவு பாடலும் வெகு அருமை!
வெஸ்டர்னில் சட்டுனு இப்ப உள்ள ரிஹான்னா வருகிறார். இன்னும் நிறைய இருக்கிறார்கள்.
சங்கண்ணா,
Natacha Atlas என்ற கரீப் (Arabic) பாடகி பாடிய 'Mon Amie La Rose' என்ற பாட்டைக் கேட்டுப் பாருங்கள்.
http://www.we7.com/artist/Natacha-Atlas?artistId=139716&m=0
பாலையின் வறட்சியும் மணல் நெகிழ்ச்சியும் நிரம்பிய குரல்..!
ஜகா வாங்காத ஜெகா டச் அருமை.
jegan, how can I remove that?
thanks for greet.
தலைப்பிலிருந்தே வித்யாசம்.
ஔவையார் எதிர்பாரா ஆச்சர்யம்.
உங்களது பின்னூட்டங்களை பலதளங்களிலும் பார்த்ததுண்டு.
உங்கள் கோட்டோவியப் பெண் கவிதை ஒன்று முன்னர் படித்த ஞாபகம். ஹேமாவும் அதை தன் தளத்தில் கவிதையாக்கியிருந்தார்
அண்ணாச்சி நான்கூட இப்ப பாலகுமாரன் புத்தகங்களைத்தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.
"இனிது இனிது காதல் இனிது" "ஏழாவது காதல்" இரண்டு புத்தகங்களையும் படித்துவிட்டேன்.
அடுத்ததாக "எனக்குள் பேசுகிறேன்" என்ற புத்தகத்தைப் பற்றி கேள்விபட்டு உடுமலை.காம் யில் இரண்டு புத்தகங்கள் ஆர்டர் செய்திருக்கிறேன். இன்னும் என் வீட்டிற்கு வந்துசேரவில்லை. வந்ததும் படித்துவிடுவேன்.
இந்த வயசுல பாலகுமாரன் புத்தகங்களை படிக்கனும்னு ஆசைப்படுறது சகஜந்தானுங்களே,.
மாப்ள ஜெகா, உங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கியுள்ளேன். பெற்றுகொள்ளவும்.
:-)))
தசா மாதுக்கள்..
யோவ்..:-)
வாசனை திரவியம் ஜெகா நீங்க.மூடியை எப்ப திறந்தா என்ன?
தசா மாதுக்கள் குறைவது போல் இருக்கே?என் கண்தான் நொல்லையோ?
அன்பு துபாய் ராஜா,
எளிதே நனைகிறேன் உங்கள் இனிய அன்பில்! நன்றிகள்!!
*
மகி,
சூட்சுமம் உங்கள் பிளாக்கில் கமெண்ட்டாக..! 100க்கு வாழ்த்துகள்!!
*
அன்பு ஸ்ரீ,
எப்போதாவது நம் காலடி நமக்கே ஓவியமாக தோன்றும் இயல்பு போல அது.மிக்க நன்றி!
சம்மு,
பாலகுமாரன் நம்மிடம் வந்துசேரும் பருவம் அற்புதமானது. காதல்கள், தோல்விகள், ஆன்மீகம், விட்டு விடுதலையாகும் முனைப்புகள், அறிவார்ந்த தேடல்கள் என அனைத்தும் ஒருங்கே சிறகு கட்டிக்கொள்ளும் பருவம்.
உற்றுக்கவனியுங்கள்., பாலாவின் எழுத்து ஒரு வாழ்க்கையை பற்றி முழுமையாகப் பேசும். முழுமைப்படுத்துவதே அவரின் நோக்கமாக இருக்கிறது.
தொடர்ச்சியாக ஒரே மாதிரியான படைப்புகளாக இருப்பதால் ஒரு புள்ளியிலிருந்து நாம் அவரிடமிருந்து விடுபடவேண்டியதாயிருக்கும்.
காதல் களைந்து வெளிவரும் பருவம்போல.
நல்லது. கூர்ந்து வாசியுங்கள் சம்மு!
ஸ்டார்ஜன்,
சன் ஸைன் விருதுக்கு மிக்க நன்றி!
*
இனிய பாரா,
பெண்கள் பற்றி எழுதும்போது எண்களைத் தவறவிடுகிறவனாகிறேன் - எப்போதும் :)
சதமாக எழுத பெண்கள் உண்டு. வாசிக்கிறவர்கள் பொறுக்கமாட்டார்கள்.. இல்லையா?
அதனால்தான் சப்தமில்லாமல் 'சப்த'மாக தசாமாதுகள் :))
தம்பி, கேட்டுப் பார்த்தேன். நல்லாருக்கு! இந்த மாதிரி உணர்வை, மத்தியான வேளைகளில் தெரு அமைதியாக இருக்கும்போது காற்றில் மிதந்து வரும் பழைய பாடல்கள் கொடுத்திருக்கின்றன! அதை வைச்சு ஒரு இடுகையைப் போட்டுருவோம்!
மாம்ஸ் வலைச்சரத்தில் எழுதுகிறேன்.தொடர்ந்து ஆதரவு கொடுங்கள்.
கலக்கல் ஜெகன். பாராவின் கேள்வியும், அதற்கு உங்கள் பதிலும் :)) அருமையான தேநீர் சுவை - வாஹ் தாஜ்!!!
thalaippe super-aa irukkuthu jeganaathan sir:)
yellaame nantru..
gangai karaith thottam kannip penga koottam...
sonnathu neethaana..-intha 2 songs laiyum naan thevika vai athikam paaththutte irunthathundu(close up shots..yenna xpressions!!)
avvai-apaaram:)
meethee.............
3-per yenga sir?
ஷங்காண்ணா,
ஐடியா கலக்கல்.. நமக்குன்னு ஒத்த அலைவரிசையில் ஒரு ஆல்பம் ரெடி பண்ணனும்.. இப்ப ஸம்மருக்கு தகுந்த மாதிரி ஒரு கலெக்ஷன் ரெடி பண்ணிட்டிருக்கேன். அப்புறமா அனுப்பறேன்.
*
அக்பர் மாப்ஸ்..
பூந்து வெளாடுங்க.. வலைச்சரத்தில் சரவெடி வெடிக்க வாழ்த்துக்கள்!
*
விதூஷ்,
நன்றிங்க..! Twinings டீ சாப்பிட்டுப் பாருங்க. உங்கள் "நாற்றங்கால்"
http://nattrangaal.blogspot.com/ குழந்தைகள் சஞ்சிகை சூப்பர்ப்..!
எங்கள் பிளாக்கில் இப்போ புதுசா படைப்பாற்றல் பயிற்சி-ன்னு ஓவியம் வரைவது பற்றி எழுதறாங்க. நாற்றங்காலுக்குப் பயன்படுத்திக்க முடியுமான்னு பாருங்க.
*
அன்பு இரசிகை மேடம்,
சொன்னது நீதானா - நம்ம நேசனின் ஃபேவரிட்!
அப்பாவின் ஃபேவரிட் பாடலும் அதே. அந்தப் பாட்டுக் கேட்டுட்டா நிறைய ப்ளாக் & வொயிட்டா பேசிட்டே இருப்பார். அதனால சொன்னது நீதானாவை - அப்பா வாசத்தோடே அணுக முடிகிறது.
நன்றி மேடம்!
தசாமாதுக்கள்தான் பட் தவறுதலா சப்தமாதுக்களாயிடுச்சி :)))
மேற்கொண்டு பெண்கள் பற்றி எழுதினா என்னோட க்ரைம் ரேட் கூடிடுமோன்னு பயமா இருக்கு!
Post a Comment