Monday, May 24, 2010

Cyan நிறத்துப் பூக்கள்

வாகனங்கள் வடிந்த பின்மாலையில்
சவத்தின் கனத்தில் திரிகிறது காற்று

பெளணர்மி தினவில் கரை மோதும்
தூரத்து நீர்ம சுருள்கரங்கள்
எல்லாக் கறைகளையும் கரைக்க வல்லது -
சூரியன்கள், நிலாக்கள், உதிரம் படிந்த மண்துகள்கள்.

கேவல்கள் தராசில் அளந்த கவனம் கொண்டன
இரவுக்குள் நீலம் போல இங்கு
அழுகை கரைந்து கொண்டிருக்கிறது.
தனியாக வரும் கொழுத்த வண்டிகள் பிரேதங்களையும்
அயன்களாக மாறி குருதியுடன் கலக்கும்
cyan நிறத் துகள்கள் மரணத்தையும் தருவிக்கின்றன.

கழுவப்பட்ட வீட்டின் ஈரம் காயும்முன்
அடுத்தடுத்த வீடுகளில் கேவல்கள் அரும்ப
புதைத்தவன் மண்ணில் பூக்கள்
cyan நிறத்திலேயே பூக்கின்றன.

23 comments:

விஜய் said...

கவிதை பிடித்தது

வாழ்த்துக்கள்

(அடுத்து CMYKவில் அடுத்து MYK எதிர்பார்கிறேன்)

விஜய்

சிநேகிதன் அக்பர் said...

மாம்ஸ். ஏதோ துக்கத்தை சொல்ல வருவதுபோல புரிகிறது.

ஒரு வேலை நேசமித்ரன் சாருக்கு போட்ட பின்னூட்டத்தோட பாதிப்பில் எழுதினீர்களோ. வார்த்தைகளில் அடர்த்தி அதிகம்.

Ananya Mahadevan said...

ஆஹா ஆஹா..கவுஜ கவுஜ!

Ananya Mahadevan said...

புனரபி ஜனனம், புனரபி மரணம்!

கலா said...

ஜெகன் அத்தனை எழுத்துகளும்,
வரிகளும் உயிர்பித்து சொல்கிறது
ஈழத்தில் இழையோடிய...
இன்னல்களையும்,இழப்புகளையும்.

கழுவப்பட்ட வீட்டின் ஈரம்
காயும்முன்
அடுத்தடுத்த வீடுகளில்
கேவல்கள் அரும்ப
புதைத்தவன் மண்ணில்
பூக்கள்
cyan நிறத்திலேயே
பூக்கின்றன. \\\\\\

இவ்வரிகள் மட்டுமே போதும்
உங்கள் எண்ணத்தின் ஆழத்தை
அளவெடுக்க!
அதிலும் “கேவல்”அற்புதமான
ஒரு வார்த்தை நன்று,நன்றி
நினைவூட்டியதற்கு
நண்பரே!

ஆம் மடிய,மடியப் பூப்பதுதான்
மலர்கள்.
கசக்கினாலும்,சுட்டாலும்,பறித்தாலும்,
இதழிதழாய்ப் பிய்த்தாலும்..
எழுச்சியுடன் மறுபடியும் பூக்கும்,
பூக்கின்றன.

கடுகு சிறிசானாலும் காரம் பெரிது
ஜெகன் நன்றி.

ஹேமா said...

கவிதை என்னவென்று சரியாகப் புரிந்துகொள்ள முடியவில்லை ஜே...!

அழக்கூட தைரியமற்று உள்ளுக்குள் அழும் மனதின் வெளியில் சொல்ல முடியா அழுத்தம்,வேதனை,தவிப்பு ஒவ்வொரு வரிகளிலும்.

வாழ்வு ஒவ்வொரு சந்தியிலும் நின்று பின் அடுத்த அலுவலுக்காக நகர்வதாய் கடைசிப் பந்தி புரிந்துகொள்கிறேன் !

க.பாலாசி said...

வலியுணர்த்தும் வரிகள்... தலைப்பே பாதி...

நேசமித்ரன் said...

மீப்பெரும் வாதை பேசும் காற்றின் கனம் ஒத்திருக்கும் அரவமற்ற சாலை இன்மை மற்றும் இருப்பின் கனம்

தினவில் கழுவித்துடைக்கப்படும் ஆகாயமும் சிவந்த பூமியின் துகள்களும்
தராசில் அளக்கும் கேவல்களும் நீர் தீர்ந்து போன கண்களுமாக

சயான் நிறப் பூக்களும் குருதி கலக்கும் அயன்களின் பரிணாமமும்

அரிந்த தசையிலிருந்து கசியும் திரவமென வதைக்கும் துயர் பேசும் கவிதை

தொடர்க ஜெகன் !

VELU.G said...

நன்றாக இருக்கிறது நன்பரே

பத்மா said...

கவிதை சொல்ல வந்ததை சரியாக புரிந்து கொண்டேனோ என்னவோ ? எனக்கு மனதில் தோன்றியது இது
cyan என்றால் bluish green
cyanide இன் தமிழாக்கம் மயில் துத்தம்
மயிலின் நிறமும் bluish green தானே ? இந்த வார்த்தை association கொஞ்சம் பிரமிப்பாய் இருக்கும் .மயில்மாணிக்கம் செடி போல ....
இந்த கவிதையின் cyan க்கும் cyanide க்கும் சம்பந்தம் உண்டா ? நீல மலர்களை பார்க்கும் நேரம் கொஞ்சம் துணுக்குறுவேன் போல! எங்கனம் மலர்ந்ததொவென்று ?.

Nathanjagk said...

இயற்கையிலேயே சில தாவர விதைகளில் சயனைட் ஒளிந்திருக்கிறது.

காஸாவா அல்லது ஆப்பிரிக்க மானியாக் வேர்களில் சயனைட் கிடைக்கிறது.

வரைபடவியல் ப்ளூப்ரின்ட்கள் தயாரிக்க உதவும் அடர்-நீலம் (prussian blue) இதனால் செய்யப்படுகிறது. இந்த நீலத்தை சயான் (cyan) என்று அழைக்கப்படுகிறது.

சயானிலிருந்து சயனைட். சயனைட் மரணத்திற்கு சயனாஸிஸ் (cyanosis).

Cyanide travels as ions through the bloodstream, binding to the iron atom of the enzyme cytochrome c oxidase in the mitochondria of muscle cells.

This union changes the shape of the cell, denaturing it to the effect the cell is no longer able to absorb oxygen.

Effected cells, primarily the central nervous system and the heart, can no longer produce energy.

1978 ஜான்ஸ்டவுன் 900 மக்கள் கூட்டமாக சயனைட் தின்று தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

2ம் உலகப்போர்: நாஸி சீரமைப்பு முகாம்களில் லட்சக்கணக்கான யூதர்கள் சயனைட் மூலம் கொலை செய்யப்படுகிறார்கள்.

ஹிட்லர், ஹிட்லரின் மனைவி ஈவா பிரான் சயனைட் தின்று உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்.

1950களில் வல்லரசுகளின் பனிப்போரில் அமெரிக்க உளவாளிகள் தடிமனான சட்டங்கள் உடைய மூக்குக் கண்ணாடிகள் அணிந்திருந்தார்கள். பிடிபட்டால் இயல்பாக கண்ணாடியின் சட்டங்களை பற்களால் மெல்லுவார்கள், தடிமனான கண்ணாடிச் சட்டங்களினுள் சயனைட் விஷம் நிரப்பப் பட்டிருந்தது.
இந்த வகை கண்ணாடிகளின் மேலான பிரேமையால் Buddy Holly, Elvis Costello போன்ற இசை நட்சத்திரங்கள் அதே போன்ற கண்ணாடிகளை அணிய 50களில் அவை பிரபலமாகின.

நமக்கு சயனைட் அறிமுகமானது எப்படி என்று யோசித்துக் கொள்ளுங்கள்.

நேசமித்ரன் said...

//நமக்கு சயனைட் அறிமுகமானது எப்படி என்று யோசித்துக் கொள்ளுங்கள்//

!!!!!

ஹேமா said...

எனக்கு சயனைட் அறிமுகமானது எங்களது ஆயுதப்போரின் பின்னர்தான் !

பத்மா said...

நன்றி ஜகன் ..
ஒருமுறை என் chemistry class நினைவுகள் .cyanide ஒரு மேஜர் கேள்வி அப்போது ..
இப்போது கவிதையினால் மனது கனக்கிறது

Nathanjagk said...

அன்பு விஜய்,
வண்ணவரிசையில் கவிதை எழுதலாம்தான்.. நல்ல யோசனை. நன்றி!

-

அக்பர் மாப்ள,
நேச பாதிப்பு உண்மைதான். ஆனா இது பக்கவிளைவுகள் இல்லாதது. கவிதை ஒண்ணும் பிரமாதமாயில்லே.
சயனைட் பற்றி சமீபத்தில் படித்த குறிப்புகளால் எழுதியது. நன்றி!

-

அன்பு நந்தா,
ஒண்ணா படம் இருக்கணும்; இல்லே கவிதை இருக்கணும். அப்பத்தான் ஐயா வருவாரு :)) நன்றி!!

-

ஆஹா.. அநன்யா..
இனிமே உன் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டேன்னு சொல்லப்போறீங்கன்னு நெனச்சேன். தாங்க்ஸ்பா!
யாரங்கே.. ஜில்லுனு ஒரு பன்னீர் சோடா எடுங்க..!

-

அன்பு கலா,
மிக்க நன்றி! காட்சிப்படுத்தலின் நீட்சி நம் சொந்த அனுபவங்களைச் சார்ந்தது. உங்கள் புரிந்துணர்வு இதமளிக்கிறது.
சொந்த தேசத்தின் துயரங்கள் எளிதில் வடிந்துவிடக்கூடியவை அல்ல.கவிதையில் வடித்துவிடக்கூடியனவும் அல்ல.
வருகைக்கு நன்றி!

Nathanjagk said...

அன்பு ஹேமா,

தங்களின் 2வது பின்னூட்டத்தில் சரியாகச் சொல்லிவிட்டீர்கள்.
நீங்கள் சொன்ன விதத்திலேதான் எனக்கும் சயனைட் அறிமுகமானது.
ஒரு குறிப்பிட்ட நிலவெளியை மையப்படுத்தாமல் பதட்டமான சூழலை மட்டும் காட்சிப்படுத்த முயன்றிருக்கிறேன் - கவிதையாக. நன்றி!

-

அன்பு க.பாலாசி,
மிக்க நன்றி!

-

அன்பு நேசா,
இருப்பின் கனம், பதட்டத்தின் குரல்வளை, இறப்பின் பருண்மை இவைகள்தான் நிலவெளியின் கோரமையின் அடையாளங்கள்.
சயனைட் பற்றிய குறிப்புகள் Snuff (by Chuck Palahniuk) நாவலில் படித்தது இதற்கு ஒரு உந்துதல். ஹைட்ரஜன் சயனைட்டின் நிறமாக சயான் ஒரு படைப்புக் கவர்ச்சி நிரம்பியதாக இருக்கிறது. இந்த வண்ணம் காமத்தையும் பிரேதத்தையும் இரக்கமின்றி உணர்வுகளாகத் தோற்றுவிக்கின்றன. நன்றி நண்பா!

-

அன்பு வேலு. ஜீ
மிக்க நன்றி!

-

அன்பு பத்மா,
சயனைட் பற்றி தங்களின் குறிப்புகள் தனித்துவமாக இருக்கின்றன. மயில் கழுத்துடன் இணைகிற சயானிலிருந்து வேறு வித உணர்வுகள் எனக்குள் கிளர்கின்றன. சயானை ஒரு பெருமயக்கமாக இறப்பாக உருவகித்த எனக்கு மயில் ஒரு அழகியல் குறியீடாக சயானைக் காட்டுகிறது.
உங்கள் ஆளுமை உணர்வுமயமானது என்று நம்புகிறேன். நன்றி!

சாய் ராம் said...

சர் ரியலாய் காட்சிகளை தீட்டி விட்டு போகின்றன உங்க வரிகள். வாழ்த்துகள்.

ஷங்கி said...

என் சிற்றறிவிற்கு எட்டாத, புரிபடாத விஷயங்கள். கவிஞர்களின் பின்னூட்டத்திலிருந்து அருமையாக எழுதியிருக்கிறீர்களென்று புரிந்து கொள்ள முடிகிறது. வந்தாச்சு, படிச்சாச்சு! சயான்/சயனைட் பத்தி இன்னும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிட்டாச்சு, அவ்வளவுதான்!

www.thalaivan.com said...

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com

பத்மநாபன் said...

//இரவுக்குள் நீலம் போல இங்கு
அழுகை கரைந்து கொண்டிருக்கிறது// மிகவும் ரசித்த உவமை...சைனடு உயிர்கொல்லிக்குள் இவ்வளவு விசயங்களா..உங்கள் வார்த்தை வித்தை அருமை..நண்பர் ஒருவர் சொன்னது போல்..ஒவ்வொரு வண்ணமாக உங்கள் தமிழ் கொண்டு தீட்டலாம்..வாழ்த்துக்கள்

ஜெயசீலன் said...

அருமை...

Shanmugam Rajamanickam said...

அன்ன தங்கள் வலைப்பதிவை படிக்கவில்லை என்றல் தூக்கம் வரமாட்டேங்குது என்ன காரணம்

இப்படிக்கு காலடியின் தீவிர அதிதீவிர ரசிக கண்மணிகள்.................

thamizhparavai said...

enakku ithu thuuram....illai naanthaan ithukku rompa thuuram...