Tuesday, August 25, 2009

25வது காலடி

அன்பார்ந்த பதிவர்களே, வாசகக்கண்மணிகளே, காலடியின் தீவிர அதி தீவிர ரசிகக்கண்மணிகளே!

இது நம் காலடியின் 25-வது பதிவு..!!

இது பதிவுலகத்துக்கு நல்லதில்லை, என்ட் ஆப் டேஸ், ஆர்மகெடான், டல்கோலக்ஸ், விதி வலியது, ப்ச்.., என்று நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு என் நன்றி!


நான் இருபத்தைந்து இடுகைகள் எழுதியிருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாகவும், அதற்கும் பின்னூஸ் வந்திருக்கின்றன என்பது ஆதுரமாகவும் இருக்கிறது.

பாசமோடு தம்பி, மாப்ள, மாம்ஸ், நண்பா என்று அழைக்கிற முகம் தெரியா பாசக்காரர்களைப் பார்த்தது இல்லை. சங்கா அண்ணன், பெரியண்ணன் ​சென்ஷி, ஸ்டார்ஜன் மாம்ஸ், அக்பர் மாப்ள, மாப்ள ஏனாஓனா, தம்பி ​சேலம் சண்முகம் இப்படி தடாலடியாக பாசமாக அழைப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது!

ஆனாலும் இந்த குறுகிய காலத்திலேயே இவர்கள் அன்பைச் சம்பாதித்தது கண்டு இறுமாப்பு அடைகிறேன்!

இடுகைகளின் நீளத்தை விட என் பின்னூஸ்களின் நீளம் அதிகம். அந்த பின்னூஸ்களையும் (பொறுமையாக) படித்துவிட்டு பாராட்டிய அன்பு நெஞ்சகளுக்கு நன்றி! முக்கியமாக அனுஜன்யா, பீர் Peer, ஈரோடு நாகராஜ், வால்பையன் இவர்களுக்கு நன்றிகள்!

முதலில் பதிவு எழுத வரும்போது தீவிரமாக சிறுகதை, கட்டுரை என்றுதான் வந்தேன். அப்புறம்.. ​மொக்கைகள்தான் நம்மை அடையாளப்படுத்தும் என்று.. எப்படியிருந்த நான் இப்படி ஆயிட்டேன்...!!!

இந்ந மாதிரி என்னை வழிப்படுத்தியது கோவி. கண்ணனின் புதிய பதிவர்களுக்கு சில யோசனைகள் என்ற இடுகைதான். அதற்கு GK-க்கு என் நன்றிகள்!

என்னோட கலை ஆர்வம் (ப்ளீஸ்..) ஓவியத்தில் தொடங்கியது! அப்புறம் மெல்ல மெல்ல கவிதை, கதைன்னு வளர ஆரம்பிச்சிருச்சு! தனியா ரூமில அடைஞ்சு டயரி டயரியா.. கவிதை, டயரியாவே ஆகியிருக்கு!

கவிதை என்றதும் மனங்கவர்ந்த நேசமித்ரன், நந்தா நினைவுக்கு வரும் முன் அவர்கள் கவிதைகள் நினைவுக்கு வந்துவிடுகின்றன.

அப்பா குமுதம், மாலைமதி, முத்தாரம், கல்கண்டு, ஆவி, ஜுவி, நக்கீரன் இப்படி குவியலா வாங்கித் தள்ளுபவர். அப்பா இதுவரைக்கும் குமுதம் ஒரு இதழ் கூட வாங்க மிஸ் பண்ணுனதேயில்லை! நான் 9வது படிச்சிட்டிருக்கும் போது நீல. பத்மனாபனின் தேரோடும் வீதியில்.. கொடுத்து படிச்சிப் பாருன்னாரு! அவர் அதைப் படிக்கலேன்னு நினைக்கிறேன். ஒரே நாள்ல முழுசும் படிச்சிட்டு, நல்லாயிருக்கு இன்னொரு தரம் வாசிக்கணும் என்று மறுவாசிப்பும் செய்தேன். அப்புறம் வீட்டில் ரஷ்ய எழுத்தாளர் + சினிமா இயக்குநர் வசீலி ஷுக்சீனின் வாழ விருப்பம் சிறுகதைகள் தொகுப்பு இருக்கும். அது என்னோட பேவரிட். குறைஞ்சது 100 தடவை படிச்சிருப்பேன். இந்த மாதிரியான வாசிப்புகள் கொடுத்த சுவையில் லயிச்சு, இந்தியா டுடேவில் (அப்பா கொஞ்ச காலம் அதுக்கும் சந்தாதாராகியிருந்தார்) வந்த சிறுகதைகள், ஓவியங்களை ரசிக்க ஆரம்பித்தேன். அது புது மாதிரியான அனுபவமாக இருந்தது.

அதற்கப்புறம் ரசனையே வேறு மாதிரி ஆகிவிட்டதாக உணர்ந்தேன்.

கன்னிவாடியில் இருந்த போது அறிமுகமான க.சீ.சிவக்குமார் அண்ணன். அவர் அறிமுகப்படுத்திய இலக்கியங்கள், இலக்கியவாதிகள் (என். ஸ்ரீராம், யூமா. வாசுகி, சுப்ரபாரதிமணியன், பாஸ்கர் சக்தி, குன்னாங்குர் செல்வம், ரமேஷ் வைத்யா, இன்னும் குடியில் பழகி பெயர் தொலைந்த நண்பர்கள்..) என ஒரு உற்சாக துணையாயிருந்தார்.

இப்ப இந்த மாதிரி பதிவு எழுதுவது ஒரு இளைப்பாறுதலாக உணர்கிறேன்.

ஆனால் எதிலும் அபரிமிதமாக உள்ளிறங்கி, பின் மூச்சுத்திணறி வெளியே வருவதாக இருக்கிறது என் பிழைப்பு. இதே போல் இங்கும், பதிவுலகத்தில் அபரிமிதமாய் இறங்கி விடுவோனோ என்று பயமாயிருக்கிறது. ஏனென்றால், இதன் வசீகரம் அப்படி!

எந்த வடிவத்தில் வேண்டுமானாலும் பதிவு எழுத முடிகிறது. தீவிரமான பதிவுகளில் பின்னூஸ் வாயிலாக பங்கேற்க முடிகிறது. அதி முக்கியமாக வாய்விட்டு சிரிக்க முடிகிறது!

Al though the ceiling strikes my forehead, I could fly between floor to ceiling!

பதிவுலகத்தில் நான் அறிந்த வலைபதிவுகள் மிகவும் சொற்பம். அதில் என்னைக் கவர்ந்த சிலதை பட்டியலிடுவது என் நுனிபுல் அறிவை மட்டும் காட்டும். இருந்தும் என் நன்றியை அவர்களுக்கு வேறெப்படி உணர்த்துவேன்.
கவிதை, சிறுகதை, மற்றும் ப்ரியத்தால் என்னை வசீகரிக்கும் பா.ராஜாராம், தீவிரமான சிந்தனைகளைக் காட்டும் சந்ரு, இரும்புத்திரை அரவிந்தன், மதுரை டக்ளஸ், தல SUREஷ், டெக்னாலஜி புலி டவுசர் பாண்டி, சிந்தனி - தங்கமணி பிரபு, சமரன், குடுகுடுப்பை, நான் ஆதவன், வினோத்கெளதம், முரளிகுமார் பத்மநாபன், RAMYA, எம்.பி.உதயசூரியன், வண்ணத்துபூச்சியார், கடைக்குட்டி, கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும், ப்ரபஞ்சப்ரியன், ப்ரியமுடன் வசந்த், சிக்கன இடுகை கவி டோமி, ஜவஹர், .. இன்னும் நிறைய பேர்!
அனைவருக்கும் நன்றிகள்!

Never I forget you - it could be merely the names sometimes!

42 comments: