Wednesday, August 5, 2009

புதுசாய் வரயிருக்கும் வலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்!சொம்பு: இதுதான் வலைப்பதிவு பேரு. பஞ்சாயத்து பண்ணி​வைக்கிறதுதான் மெயின் பிஸினஸ். (சைபர்-க்ரைம் டிபார்ட்மெண்ட் இதற்கு ஒரு தூண்டுதல் என்று வதந்தி) நிறுவப்போறவர் எட்டுபட்டிக்கும் நாட்டாமைன்னு பேசிக்கறாங்க. அடிச்சு ஓட்றா சம்முவம் என்று அடிக்கடி வண்டி மாடுகளை ரொம்ப சோதிக்கின்றதாகச் சொல்லி, இப்ப ப்ளூ க்ராஸ் அரெஸ்ட் பண்ணீட்டாங்களாம்! சொம்புநக்கிகளுக்கு ஏற்ற வலைப்பதிவு.

கண்ணாம்பா.காம்: ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு, இடுகை எழுதும்போதே கீ​போர்ட் கண்ணீரில் நனைத்துவிடுகிறாராம். பின்னூட்டம் பாத்து போடவும். இல்லையென்றால், உங்கள் கம்ப்யூட்டரே வெடித்து சிதறட்டும் என்று ​வைரஸ் சாபம் விட்டுவிடுவாராம்

மைனர் குஞ்சு:
அஜால்குஜால் இடுகை எழுதும் போதே எக்ஸ்யூஸ்மீ, தப்பா நெனச்சுக்க படாது, யார் மனசயும் புண்படுத்தவில்லை என்று ​சொல்லி ​சொல்லியே மேட்டரை முடித்துவிடுபவராம். ஏற்கனவே வெவ்வேறு பெயர்களில் உலாவுகிற மைனர்குஞ்சுகள் இந்த குழுவலைப்பதிவில் இருப்பார்களாம்.

பாண்டிமடம்:
இது ஒரு முக்கியமான வலைப்பதிவு. அனேகமா வலைப்பதிவர் என்று ஆகிவிட்ட யாரும் இங்கே ஒரு விஸிட் அடித்தே ஆக வேண்டும்; யாரும் எஸ்ஸாக முடியாது என்று சவால் விடுகின்றனர்! போய்தான் பாப்போமே?

ஆபுவே:
சீரியஸாகப் போய் கொண்டிருக்கும் அக்கப்போர் விவாதங்கள், கும்மியடி, குழாயடிச் சண்டைகளை முடித்து வைத்துத் தரப்படும் என்று சொல்லுகிறார்கள். நம் பதிவுலகத்து அவசியம் என்றே தோன்றுகிறது. ஆபுவே..? அதாங்க.. ஆணியே புடுங்க வேண்டாமாம்!


கவிப்பின்லாடன்:
கவியரசு, கவிப்பேரரசு, வெறும் பேரரசு வரிசையில் தானும் வருவேன் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். இவரது கவிதைகள் நெய்க்குண்டா, மாறிமாறிசொறி, மசநாய்கடி (ருவாண்டா நாட்டில் 7 மாதத்திற்கு ஒருமுறை பிரசுரம்) ​போன்ற இதழ்களில் வெளி வந்திருக்கிறதாம். சாம்பிளுக்கு ஒரு கவிதை.. வேணாம் பயந்துருவீங்க...


மூத்திரசந்து:
வெளிப்படையான ஆக்கங்களுக்கு இங்கே நம்பி விஸிட் அடிக்கலாம். அர்ஜென்ட்டா ஒரு மொக்கை வேணுங்கிறவங்க எப்ப வேண்டுமானாலும் இங்கே போயி ஆசுவாசப்பட்டுக் கொள்ளலாம். இந்த வலைப்பதிவுல பின்னூட்டம் மட்டறுக்கப்படுகிறதாம். ஒன்லி முன்னூட்டம்தானாம்.

இதுமட்டுமில்லாம,

தர்மக்குத்து, எங்கோமணம்
போன்ற திரட்டிகளும் புதுசாய் வெளிவரயிருப்பாதாய் நம்பத்தகுந்த முக்கோணங்கள் முனகுகின்றன.

தர்மக்குத்துவின்
சிறப்பம்சம், அவர்களே ஸ்பெஷல் ஸ்குவாடு வைத்து ஓட்டுக்களாய் ​குத்து குத்தென்று குத்தித் தள்ளி விடுவார்களாம். உங்கள் வலைப்பதிவில் ஒரு விளம்பரம், ஸ்பெஷல் ஸ்குவாட் டீ செலவுக்கு பணம் இவை மட்டும் போதுமாம்.

எங்கோமணம்,
சிறந்த வலைப்பதிவர்களை அடையாளம் காணும் முயற்சியாம். எப்படிப்பட்ட மொக்கைப் பதிவென்றாலும் தம்கட்டி படித்துவிடுவார்களாம் இதன் தேர்வுக்குழு உறுப்பினர்கள்.
சரி இதோட (இப்போதைக்கு) நிப்பாட்டிக்குவோம்..

பி.கு.:

1. காலடியின் தீவிர அதி தீவிர வாசகக்கண்மணிகளில் ஒருவரான சம்முவம் விரும்பிக் கேட்டதால இப்படியொரு வலைப்பதிவு. இது சம்முவத்துக்கே சமர்ப்பணம்!

2. இந்த இடுகையை காமடியாக எடுத்துக்​​கொள்ளப்பட வேண்டியது. அன்புடன், மைனர்குஞ்சு

38 comments: