Tuesday, August 18, 2009

மனதில் அலறும் பாடல்

தலைப்பைப் பாத்துட்டு நீங்க அலறாதீங்க. முக்கியமா - இது கவி-இடுகை இல்லை. சொன்னதும் சிரிப்பைப் பாரு - சின்னப் புள்ளயாட்டம்! அப்புறம் என்னடா மனசு, அலறல், பாட்டுன்னு பிட்டு போடறேன்னு கேக்கறீங்களா??
சொல்றேன். அதுக்கு, ஒரு மூணு 'அதாவது' போட அனுமதி கொடுங்க..
அதாவது, திடீரென்று ஒரு பாட்டின் ஏதாவது வரி நினைவில் வந்து முதல் வரி என்னடான்னு மனசு கட்டான பல்லி வால் கணக்கா துள்ளுமில்ல..
அதாவது, ஒரு பாட்டோட மியூஜிக்கி மட்டும் ஞாபகத்து வந்து பாட்டு வரி நினைப்பில்லாம, நைட்டு பூரா தூங்காம தலையணையை கடிச்சுக்கிட்டு இருப்போம்ல...
அதாவது, இனி தாங்க முடியாதுடா சாமி, எவனுக்கு எஸ்எம்எஸ் போடலாம், யாருக்கு 'மிஸ்டு-கால்' போடலாம்னு மனசு கம்பத்தைத் தேடற நாய் கணக்கா திரியும்ல....
அதாவது.. ஓ! ஸாரி.. கோட்டா முடிஞ்சி போச்சில்ல? (இதுதான் நம்மகிட்ட இருக்கிற ப்ராப்ளம்-ங்ணா!) சரி, மேட்டருக்கு வாடா குவாட்டர் மண்டையான்னு கேக்காதவங்க கூட நான் டூ..!
சஸ்பென்ஸ் போதும்.. சொல்லிறேன் (ரெகுலரா.. திருமதி செல்வம் சீரியல் பாக்கிறதோட எபெக்ட்!)
பெங்களூரு-டு-ஈரோடு, பஸ்ல போகும்​போது கிருஷ்ணகிரிக்கு இத்துணூண்டு முந்துனாப்ல ஒரு ஸ்டாப் போட்டுட்டு.. டிரைவர் மாமா இடுப்பை ஆட்டி ஆட்டி பேண்டை மேல இழுத்து உட்டுகிட்டு இறங்கி போயிடுவாரு. அது ஒரு ஓட்டல், இளநி கடை, பீடிக்கடை, டீக்கடை, சாக்கடை, போண்டா கடை எல்லாம் அடங்கிய மைதானம்.
நாமளும் இறங்கி மோப்பம் பிடிச்சிக்கிட்டே போனோம்னா ஒண்ணுக்கு அடிக்கிற இடம் வந்துரும் (ஒண்ணுக்கும் வந்துரும்ல!) ஓப்பன்ல சர்ன்னு அடிச்சிட்டு, சிர்ன்னு சிப்பைப் போட்டுட்டு (இல்ல தளதளன்னு வேட்டிய ஆட்டிக்கிட்டு) வந்துடலாம். லேடீஸ்க்கு கட்டண கழிப்பிட வசதி. வண்டி பத்து நிமிஷம் நிக்கும்.. டீ, காபி, டிபன் சாப்பிடவறங்க எல்லாரும் (மரியாதையா) இறங்குங்கன்னு ஒருத்தர் மப்புல இருக்கிற போலீஸ் மாதிரி ஒவ்வொரு வண்டியா தட்டி அலறிட்டிருப்பாரு..
நிறைய வண்டிகள் அந்த இடத்தில பார்க்கலாம். நல்ல ப்பிசினெஸ்ஸு!
அம்மா சொன்னதால நான் வெளிய டீ, காப்பித்தண்ணி குடிக்கிறதில்லைன்னு உங்களுக்கே (!?) நல்லாத் தெரியும். அதனால, கம்முனு ஒரு கிங்ஸ் வாங்கி பத்த வச்சுக்கிட்டு, நாம இறங்கி வந்த பஸ்ஸை​ஒரு கண்ணுலயும், வண்டியிலிருந்து இறங்கி வர்ற பசுகளை இன்னொரு கண்ணுலயும் (பராக்கு) பாத்துக்கிட்டு நிப்பேன்.
அப்போ மியுசிக்கி கடை புண்ணியத்துல காதுல விழுந்ததுதான்.. ஏக்சுவலா ​பொடனியில விழுந்ததுதான்.. இந்த பாட்டு...
"ஓல்ட் மங்கை குடிச்சிட்டான் பொண்டாட்டிய அடிச்சிட்டான், ராத்திரிக்கு ஆயிப்போச்சு சண்டை..."
அப்படியே சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா மெட்டுல வாய்விட்டு பாடிப்பாருங்க தீஅதீ ரசிகர்களே!! சூப்பரா இல்லை? இந்த பாட்டு வரியோட ஒவ்வொரு வரியையும் உன்னிப்பா கவனிங்க. ஏகப்பட்ட விஷயம் சிக்கும்..
எக்குத்தப்பா சிந்திச்சு, நீங்க பின்நவீனத்துவத்தில போயி முட்டி நிக்கவோ, இல்லை டாஸ்மாக்ல ஓல்ட் மங்க் கேட்டு நிக்கவோ கூட நேரலாம்!! (அவ்வ்..)
இந்த ரேஞ்சுக்கு பாட்டு எழுதுன அந்தப் புலவன் யாரு? அவன்(ர்)(ள்) எந்தளவுக்கு சமுதாயத்தை உத்து, உத்து கவனிச்சிருக்கான்(ர்)(ள்)? அதுவும் அந்த ஆண்குரல் நல்ல நாட்டுப்புறக் குரல். நல்ல ஏழு கட்டை, எட்டு கட்டையில அலறலா பாடியிருப்பாரு! சுருக்கமா, சொல்லணும்னா செம நாட்டுக்கட்டைக் குரல்!
அந்த​பொட்டல்ல இறங்கிய, இறங்காத ஒவ்வொரு பயணியும் இந்த 'ஓல்ட் மங்கை குடிச்சிட்டான் பொண்டாட்டிய அடிச்சிட்டானுக்கு' காதை திருப்பியே ஆகணும்! சிலர் கேசட் கூட வாங்கியிருக்கலாம். அப்படியிருந்தா, அந்த பாட்டோட முழு வரிகளையும் தயவுசெஞ்சு டைப்பித் தாங்களேன்! தமிழ் இசையின், நாட்டுப்பாடல் மரபின், ஒரு நிலத்தின் இசையை, ஒரு முக்கியமான பதிவை நான் இழக்க விரும்பலே!
ப்ளீஸ், தெரிஞ்சா சொல்லுங்க.
பி.ந.கு:
முக்கியமா, நம்ம 'காலடி'யின் 25 பதிவைக் கொண்டாடி சிறப்பிக்கும் விழாவுக்கு வரவேற்பு பாடலாக இந்த 'ஓல்ட் மங்க் குடி - பொண்டாட்டிய அடி' ஒலிப்பரப்பலாம்னு காலடியின் காரிய கமிட்டி, கரகாட்டக் குழுவுடன் டிஸ்கிஸ் பண்ணி வருகிறது.

17 comments: