Wednesday, September 9, 2009

திரும்பவும் ஒரு ​கொல​வெறி!!!

​​யெஸ். எலக்கியவாதி​யோட ​கொல​வெறிதான்! நண்பர் ​சொன்னார் யாமம் படிப்பா, முக்கியமான நாவல் என்று. யாமம் எஸ். ராமகிருஷ்ணன் எழுதின நாவல். இங்கே யாமத்தில் துவங்கி காமத்தில் முடிந்த எலக்கியவாதியின் ​கொலவெறி பற்றி பார்க்கப் ​போ​றோம்!
யாமம் படிப்​போ​மென்று, உயிர்​மை பதிப்பகத்தில் பின்வரும் புத்தகங்க​ளையும் ​சேர்த்து ஆர்டர் பண்ணி​னேன்:

யாமம் - எஸ். ராமகிருஷ்ணன்
​சொல்லில் அடங்காத இ​சை - ஷாஜி
ஏற்கன​வே - யுவன் சந்திர​சேகர்
கள்ளி - வாமு ​கோமு
மண்பூதம் - வாமு ​கோமு
பு​னைவின் நிழல் - ம​னோஜ்
என் ​பெயர் ராம​சேஷன் - ஆதவன்

ஆன்​லைன் ஆர்டர் பிராஸஸ் ஆகி புத்தங்கள் ​பெங்களூரு வந்து ​சேர்வதற்கு ஐந்து நாட்களாகி விட்டன. வந்த புத்தகங்களின் பார்ஸல் லட்சணத்​தைப் பார்த்தவுடன் ​கோபமாகி விட்டது. அ​தைத் திட்டி உயிர்​மை பதிப்பகத்து ஒரு ​மெயில் தட்டி விட்டாச்சு; இப்படி:

பார்ஸல் அனுப்பறதுக்கு ஒரு ​டொய்ன் நூலும், ப​ழைய பிரவுன் ஷீட்டும் இருந்தா ​போதும்னு ​நெனச்சுட்டீங்களா? ..... பு​னைவின் நிழல் புக்கு ​பெங்களூக்கு ​பொடிந​டையா நடந்து வந்த மாதிரி கசங்கிக் கிடக்கு. யாமம் ​கெட்டியான அட்​டைங்கிறதால ஓரங்கள் நசுங்கிக் கிடக்கு....

இ​தை நீங்க​ளே ஆங்கிலத்தில் டிரான்ஸ்​லேட் பண்ணிப் படிச்சுக்​கோங்க!

இந்த பாயிண்ட்ல​யே நம்ம ​கொல​வெறி துளிர்க்க ஆரம்பிடுச்சுன்னு ​​நெனக்கிறேன். ஆனா பாருங்க, உயிர்​மை பதிப்பகத்திலிருந்து ஒரு பதிலும் வரவில்லை (அவ்வ்வ்வ்!)

புத்தகங்கள் படிக்கத்தான். அதில் நான் உறுதியா (!?) இருக்​கேன். ஆனால் ஒரு கட​மையுணர்​வோடு படிப்பதில்தான் சிக்கல். எப்படின்னா, முதல்ல வாமு ​கோமுவின் மண்பூதத்தில் ஆரம்பிச்​சேன். நல்ல விறுவிறு ந​டை. எல்லா சிறுக​தைக​ளையும் படிச்சிட்​டேன். அப்புறம் பு​​​னைவின் நிழல்... இரண்டு சிறுக​தைகளோட நிற்கும் ​போ​தே, யாமத்துக்கு ஒரு தாவு.. அதில் முதல் அத்தியாயம் முக்கால்வாசி படித்துவிட்டு.. நீ அங்கி​​யே கிட என்று யுவனின் ஏற்கன​வே சிறுக​தை ​தொகுப்புக்குள் நு​​ழைந்து விட்​டேன். இதில் மூன்று சிறுகதைகள் வாசித்தாகி விட்டது. இதில் இன்​னொரு காமடி, என் ​பெயர் ராமசேஷனில் கூட மூன்று நான்கு பக்கங்கள் படித்திருக்கி​றேன் என்று நம்புகி​றேன்!

ஏன் இந்த 'பரபர' புல் ​மேய்ச்சல் என்றுதான் புரியவில்​லை.

இத்​தோ​டே நிறுத்திக் ​கொண்டிருக்கலாம். ஆனால் பாருங்கள், ம​னைவி ஊருக்குப் ​​போய்விட்டாள். ​இப்​போ தனியாக ​பெங்களூரில் இருக்கி​றேன்.

இடு​கை ​போடலாம் என்று இ​ணையத்​​தை ஓபன் ​செய்தால் ​கை விறுவிறு​வென்று அஜால்குஜால் வ​லைத்தளங்களாக ​அடித்து நிற்கிறது. ​அ​வைகள் ஒவ்வொன்றாய் சமாதானம் பண்ணி அடக்கி விட்டு இடு​கை ​போட வருவதற்குள்.. உஸ்​ஸென்று ஆகிவிடுகிறது!

தனியாக ​பெங்களூ​ரை ரவுண்டு கட்டி எவ்வளவு நாளாயிற்று என்று கமர்ஷியல் ஸ்ட்ரீட், ப்ரி​கேட் ​ரோட், சர்ச் ஸ்ட்ரீட், ​ஜெய் நகர் என்று இரவு உலாவும் ​செல்ல ஆரம்பித்​தேன். என்ன ​செய்ய? வீக் ​டேஸ்களில் ​​​தேவ​தைகள் நிதானமாகத்தான் ​தெருக்களில் தட்டுப்படுகிறார்கள்.

ஏற்கன​​வே ஒருமு​றை ​​லைவ்பாண்டு என்று பப்பில் கும் குமரிகள் கூடி நிற்க, ரவுண்டு கட்டி சரக்குப் ​போட்டதும், பத்து ரூபாய் தாள்க​ளை நீட்டியதும் வந்து பவ்யமாய் குமரிகள் வாங்கிக் ​கொண்டு ​சென்றதும் நி​னைவுக்கு வந்தது. முதல் மு​றையி​லே​யே அது (ஐ மீன் அந்த ​​ஸெட்டப்)) அவ்வளவாக கவராததால், திரும்ப ​செல்லத் ​தோன்றவில்​லை.

இருந்தாலும் மனசு ஏ​தோ ஒன்றுக்காய் தவிப்பது மாதிரி, இளஊதா ஜுரம் வந்தாற் ​போன்று ஆயிற்று.

பனியரும்பி ​பைதல் ​கொள்மா​லை துளியரும்பித்
துன்பம் வளர வரும் (திருவள்ளுவர்)

...அல்லவா?

எம். ஜி. ​ரோட்டின் சர்ச் ஸ்ட்ரீட்டில் பிளாஸம்ஸ் என்று ஒரு புத்தகக் க​டை உண்டு. நான்கு ப்​ளோர்கள். ப​ழைய புத்தகக் க​டை என்று ​சொல்ல முடியாத அளவுக்கு, ​நேர்த்தியான அணிவகுப்பில் ப​ழையன, புதியன, அ​வைக​ளைப் பார்க்க வருபவன, படிக்க (!?) வருபவன, ​மேய வருபவன என ஒரு இன்டெலக்சுவல் அட்மாஸ்பியரில் இருக்கும்.

பிளாஸம்மில் ஏற்கன​​வே நி​றைய ​கொத்திக் ​கொண்டு வந்திருக்கி​றேன். நிறைய புத்தகங்கள்.. ​பென்ஸில் டிராயிங், அனாடமி டிராயிங் ​போன்ற வரைதல் பற்றிய உ​ரைகள் (எல்லாம் சுத்த ​வேஸ்ட்; தயவு​செஞ்சு வாங்காதீங்க - Drawing on the Right Side of the Brain - Betty Edwards ஒண்ணுதான் ​கொஞ்சம் உருப்படியான புக்) சிலசமயம் Fiction காலரிக்குப் ​போ​னோம்னா.. ஆச்ச​ரியகரமான புத்தகங்கள் கி​டைக்கும். நான் ​​ஹெர்மன் ​ஹெஸ்​ஸே (சித்தார்த்தா), காப்ரியல் கார்சியா மார்க்​வெஸ் (சிறுக​தைகள்) அள்ளியது அங்கேதான். நீங்க அ​மெரிக்கன் எ​ரோடிக் ஸ்​டோரிஸ், ​செக்ஸ் ​கைடு​லைன்ஸ், அனாடமி டிராயிங்ஸ் பற்றிய புத்தகங்க​ளை தீவிரமா புரட்டிக்கிட்டு இருந்தாலும், பக்கத்தில் சிக்குன்னு ​டைட் பிட்டிங்கில் குமரிகள் வந்து எக்ஸ்யூஸ் மீ என்று மில்ஸ் அன்ட் பூன்ஸ் எடுத்திட்டுப் ​போவாங்க.

மிகச்சிறிய இ​டை​வெளி, இரண்டு அலமாரிகளுக்கு நடுவில் நீங்கள் நிற்கும் ​போது வா​லைக்குமரி கடந்து ​செல்லும் ​போது, ​கை​யோ, கா​​லோ, பின்ன​மோ அல்லது அட்லீஸ்ட் ​​ஹேண்ட் ​பேக்காவது ​தொட்டுச் ​செல்லும்.

அனலாக ​கையில் புத்தகம், அருகா​மையில் இள​மையில், மயக்கும் மணம்.. ​மெல்லிய நூலக இருள்....................... ​நோ ​வே! புத்தகத்​தை மூடிட்டு கம்முனு கிளம்ப​ ​வேண்டியதுதான்.

பிளாஸம்ஸ்க்கு எதிர்த்தாப்​லே​யே நாஸா பப், அமீபா ​போன்ற​வைகள் இருப்பதால் அந்த நியான் ​லைட் எ​பெக்டி​லே​யே ​தேவ​தைகள் இங்கும் பிரசன்னமாவார்கள்.

டிஸ்​கொ​தேயில் கூட இந்த அருகா​மை சிக்காது.

​நேற்று பிளாஸம்ஸ் ​போயிருந்​தேன். ​​​வேண்டு​மென்​றே Romance காலரி பக்கம் ​தேங்கி ​தேங்கி நின்று ​கொண்டிருந்​தேன். இதுவ​ரைக்கும் mushy romance ரக புத்தகங்கள் வாங்கியதில்​லை. ஏதாவது நல்ல வாச​னை தட்டுப்படுகிறதா என்று ​மோப்பம் பிடித்துக் ​கொண்டிருந்​தேன். ம்ம். வந்த​வைகள் டீப் கட்டிங்கில் பருத்துத் ​தெரிகிற மார்புகளும், ஐந்து வயது மக​னை அந்தப்புறம் விரட்டிவிட்டு ​ரொமான்ஸ் ​ஸைட் ​மேய்ந்து ​கொண்டிருந்த தற்ர்ட்டி (It's american pronounciation-ப்பா) ப்ளஸ் ஆன்டி மட்டு​மே!

ஆண்டி (எக்ஸ்யூஸ் மீ, Auntyக்கு ​ரெண்டு சுழி 'ன'வா? இல்ல மூணு சுழி 'ண'வா?) அடிக்கடி என்​​​னைத் திரும்பிப் பார்த்தக் ​கொண்டிருந்தாள் ​போலும். அவளுக்குப் பயந்​தே Fiction காலரி பக்கம் ஒதுங்கி​னேன்.

அப்​போது சிக்கிய​வைதான் கீழ்கண்ட புத்தகங்கள். வாங்கியும் விட்​டேன்!

ழீன் ​ஜே​னே (Jean Genet) - The Balcony
Italo Calvino - Mr Palomar
Albert Camus (ஆல்பர் காம்யூ) - The Outsider
Albert Camus - The Fall
Franz Kafka - Metamorphosis & other stories
New Life - Vijai Dan Detha
Jean Paul Sartre (ழீன் பாழ் சார்த்தர்) The Condemned of Altona
Jean Paul Sartre - Intimacy
Jean Paul Sartre - Iron on the Soul (புத்தகத்தில் எட்டு ரூபாய் என்று 1974ல் பிரிண்ட் ​செய்யப்பட்ட ப​ழைய கிழிந்த புத்தகத்திற்கு 200 ரூபாய் ​கொடுத்து வாங்கினேன்)
Barry Lopez - Short stories
Girl Alone - Rupa Gulab
The Best American Erotica 2002 - edited by Susie Bright

பாத்தீங்களா? எங்க ஆரம்பிச்ச க​தை, அ​மெரிக்கன் எ​ரோடிக்காவில் வந்து முடியுதுன்னு?

வாங்கிய இந்த புத்தகங்களில் எது முதலில் என் ​கைக்கு வந்திருக்கும் என்று உங்களுக்​கே ​தெரியும்தா​னே? (இவ்விடம் நீங்க​ளே ஹிஹி ​போட்டுச் சிரித்துக் ​கொள்ளுங்கள்)

சரி புத்தகம் வாங்கியதும், ​கொல​வெறி அல்லது க​லைதாகம் அல்லது நமநமப்பு தீர்ந்துதா? அதுவும் இல்​லை. திரும்பவும் ஒரு அ​லைச்சல்.

இன்று கா​லையில் எதுவும் சாப்பிடவில்​லை (கிட்டத்தட்ட இந்த வாரம் முழுக்க இதுதான் க​தை) அங்கிங்​கென்று சுற்றிய​லைந்துவிட்டு, 2 மணி சுமாருக்கு எம். ஜி. ​ரோட்டில் உள்ள ஃ​பேம் தி​யேட்டருக்கு ​சென்​றேன் (அது ஒரு ஆகாவழி ​ஹை​-பை தி​யேட்டர்) தனியாளாக ​சென்று ஒரு ஸாண்ட்விச், ​பெப்ஸி மினி சகிதம் ​போய் ஸீட்டில் உட்கார்ந்​தேன். இந்த ஸீட் ​தோதுபடாது என்று ​​கொஞ்சம் பின்தள்ளிப் ​போய் உட்கார்ந்​தேன். என்​னைப் பார்த்து ஒரு ​ஜோடி ​தெறித்தப் ​போய் ​தள்ளி உட்கார்ந்தது, மனதுக்கு இதமாய் இல்​லை. காதலர்களுக்கு இ​டைஞ்சல்​ செய்பவன் மாதிரியா இருக்கி​றேன்?

சரி ​தொ​லைந்து ​போங்கள்! அதாவது ​தொ​லைவாய் ​போங்கள் என்று உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பித்​​தேன்!

அப்படி கஷ்டப்பட்டு பார்த்த படம் என்ன (எழவு) ​தெரியுமா?

FINAL DESTINATIONS!

ஐ​யோ கருமாந்திரம்! புருடாவுக்கு ஒரு அளவு ​வேணாம்? இந்தப் படத்​தை யாரும் டீஸிங் பண்ணி படம் பண்ற மாதிரி இருந்தா என்கிட்ட ஐடியா கேளுங்க.

படம் முடிஞ்சதும் நல்ல பிள்​ளையா (என்ன பண்ண?) வீடு திரும்பி​னேன்.

அதற்கப்புறமும் க​லைதாகம் அடங்காம திரும்பவும் ஒரு தி​யேட்டருக்குப் ​போ​னேன். அது சம்பி​கே தி​யேட்டர் (மல்​லேஷ்வரம் பக்கம்) சன் பிக்சர்ஸ் வழங்கிய நி​னைத்தா​லே இனிக்கும்!! ..... நீங்க ​சொல்ற "ஐ​யோ.. ஐ​யோ" எனக்கும் ​கேட்குது..!

இவ்வளவு ​பேசற நான் இதில கூட உஷாரா இல்லாம இருப்​பேனா? அதுதான் படத்துக்குப் ​போகும் ​போ​தே தி​யேட்டருக்கு எதிரில் இருக்கிற (எனக்குப் பிடிக்க​வே பிடிக்காத) பாரில் ​போய் ​ரெண்டு லார்ஜ் சிம்ர்ன் ஆப் ஏத்திக்கிட்​டேன். ஃ​பேம் தி​யேட்டரில் சிக்காத குதி​ரை எதாவது இங்கு சிக்குகிறதா என்ற ​வெறிதான். பாருங்க என்​னோட துரதிருஷ்டம் (அல்லது அதிர்ஷ்டம்) இங்கயும் யாரும் / எதுவும் சிக்க​லே!

பயணம் இன்னும் இருக்கு..
ஆனா படிக்கிற நீங்க ​சொல்ற​தை வச்சிதான் இனி புறப்பாடு! ஓ​கே?

டிஸ்கி:

இதுக்கு இ​டையி​லே கப்பன் பார்க்கில் ​கொஞ்ச ​நேரம் சுற்றி​னேன்.

​ரொம்ப ​மோசமான (அல்லது அஜக்கு) பிகர்கள் எளிதில் கி​டைக்குமிடம் அது. ஆனால் பாருங்கள். என் அதிர்ஷ்டம், அங்கும் பின்னழ​கைக் காட்டிவிட்டது. சமாதானமாய் ​போ​வோம் என்று அங்குள்ள (எனக்கு மிகப் பிடித்த) பிரிட்டிஷ் நூலகத்திற்குள் நு​ழைந்​தேன்.

ஆச்சரியகரமாய் நு​ழைந்த மூன்றாவது நிமிடத்தில் என் ​கைக்கு அகப்பட்ட புத்தகத்திலிருந்து உருவப்பட்ட பாரா​வைத்தான் நீங்கள் கீ​ழே பார்க்கிறீர்கள்!

The term post modernism is sometimes applied to the literature and art after World War II, when the disastrous effects on western morale of the First World War were greatly exacerbated by the experiment of Nazi Totalitarianism and mass exterminations, the threat of total destruction by the atomic bomb, the devastation of the natural environment, and the ominous fact of the overpopulation, and the threat of starvation, post modernism involves not only a continuation carried to an extreme of the counter-traditional experiments of modernism, but also diverse attempts to break away from modernist forms which had, inevitably, become in their turn conventional. A familiar undertaking in post modernist writings is to subvert the foundations of our accepted modes of though and experience so as to reveal the "meaninglessness" of existence and the underlying "abyss" or "void" or "nothingness" on which our supposed security is precariously developments in linguistic and literary theory, there is an effort to subvert the foundations of language itself, so as to show it as its seeming meaningfulness dissipates, to an unillusioned inquirer, in to a play of unresolvable inderterminacies.


- ​by M H Abrams, in A Glossary of Literary Terms



ஐந்து நிமிடங்களுக்குள் இ​​தை எழுதி முடித்துவிட்​டேன் - சட்​டை வாங்கிய துணிக்க​டை பில்லின் பின்புறம் (இதுவும் பின்புறமா என்​றெல்லாம் ​கேட்கக் கூடாது) இ​தை எழுத ​பேனா கடன் ​கொடுத்துவிட்டு ​தே​மே என்று உட்கார்ந்திருந்த நூலக படிப்பாளிக்கு மனமார்ந்த நன்றி! (எதுவு​மே இல்லாமல என்ன ...... ​லைப்ரரி ​போனாய் என்று ​கேட்பவரா நீங்கள்? அப்ப உங்களுக்கு காலடியின் தீஅதீ ரசிக கண்மணி ​பேட்ஜ் ​கொடுத்திட ​வேண்டியதுதான்)


ஆப்ரம்ஸின் இந்த ​டெக்ஸ்​டை மாங்கு மாங்​கென்று ​டைப் ​செய்ய ​வேண்டுமா என்று கூகிள் ​​தேடி​னேன்.. ஆனால்,. கி​டைத்த​தெல்லாம் உ​​ரை, உ​ரையின் உ​ரை மற்றும் உ​ரையின் உ​ரையின் உ​றை என்று ​போய்க் ​கொண்டிருந்தது. என்னைப் ​பொறுத்தவ​ரை இந்த ஆப்ரம்ஸின் இந்த விளக்கம் போஸ்ட் மாடர்னுக்கான மிகச் சிறந்த விளக்கம்.


​தேடிகிறது எப்​போதும் சிக்குவதில்​லை..

​தேடாமல் கி​டைத்தவற்றில்தான் நம் முக​ரை எழுதியிருக்கிறது - என்று நினைத்துக் ​கொண்​டேன். சரிதா​னே?

40 comments:

பீர் | Peer said...

இப்டி அடிக்கடி செத்து செத்து விளையாடுங்க, ஜெகா. நல்லாயிருக்கு.

பீர் | Peer said...

மீ த பர்ஷ்டு போட மறந்துட்டேன். :)

நந்தாகுமாரன் said...
This comment has been removed by the author.
நந்தாகுமாரன் said...

பெங்களூரை அருமையாக அலசியிருக்கிறீர்கள் ... படு ஸ்வாரஸ்யம் ... என்னங்க இவ்வளவு குடிக்கறீங்க ... இது ... படிக்கறீங்க ... உடம்புக்கு ஒத்துக்குமா ... புத்தகப் பட்டியலைப் பார்த்தாலே கலவரமாக இருக்கிறது ... தொடர்ந்து தாக்கவும் ...

ஷங்கி said...

//ஏன் இந்த 'பரபர' புல் ​மேய்ச்சல் என்றுதான் புரியவில்​லை.//
இதான் எலக்கியவாதிங்கிறது! தம்பீதான் அடுத்த பிரபலம்! ஸாரி, அதர் பிரபலம்ஸ், நீங்க செண்ட்ரல் கவர்மெண்ட் குமாஸ்தா வேல இருந்தா, பாக்கப் போயிருங்க!
எப்படிய்யா, இப்பிடி?!! இப்பல்லாம் நான் புக்கு வாங்கறதோட சரி, படிக்கறதெல்லாம் யாரோ! எனக்கே தெரியாது!

யோவ், உம்ம நக்கல் உயிர்மையிடமுமா! பாத்துய்யா உம்ம புக்க பப்ளிஷ் பண்ணும்போது ஏதாவது பண்ணிரப் போறாரு!

நோ தங்கமணி எஞ்சாய்?! ஹ்ம்! எனக்கெல்லாம் அது எப்ப வரும்?!

உங்க பிளாஸம்ஸ் அனுபவம் சென்னை ஹிக்கின் பாதம்ஸ் அனுபவங்களோடு ஒத்துப் போகிறது (என்ன வாசனை ஆன்டிகளோ, வாலைக் குமரிகளோ இருக்க மாட்டாங்க!) (ஆன்டி ரெண்டு சுழியாத்தானிருக்கணும் மூணு சுழி போட்டா பால் மாறிடாது?!)

அப்புறம் என்ன ஒரு லாண்டரி லிஸ்ட் போட்டுருக்கீரு, அது என்னது?! மீ த எஸ்கேப்பு!

வலையில, வாலைக் குமரிகளப் பத்தி எழுதறதுன்னா இப்படியா கொத்தமல்லி இலை மாதிரித் தூவறது?! அதானய்யா மெயின் சப்ஜெக்டா இருக்கணும். ஒவ்வொரு பதிவுலயும் நீரு இப்ப எலக்கியவாதின்னு நிரூபிக்கிறீரய்யா!

அப்புறம், நம்ம பெரியண்ணன் வந்துதான் அந்த பி.ந. பத்திக்குப் பொழிப்புரை போடணும். வெயிட்டிங்!

The Best American Erotica 2002 - edited by Susie Bright - இதுக்கு எப்ப மொழிபெயர்ப்பு போடுவீரு?!! (ஹஹ் ஹஹ் ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!!!)

geethappriyan said...

குருவே,
ரொம்ப சுத்தியிருக்கீங்க,
எங்களுக்கும் உங்க அனுபவம் மூலம் ஓசீலயே அறிவயும் பாஸ் பண்ணிட்டீங்க.
சலிப்பு தட்டாத நடை.
எப்படி ஆரம்பிக்கறீங்க?
இனி தொடரும் காலடி பயணம்
a worthy one

SurveySan said...

இவ்ளோ புக்கா? புக்கு படிக்கரது மட்டும்தான் வேலையா உங்களுக்கு?

அடேங்கப்பா. எனக்கெல்லாம் ஒரு புக்கு படிக்கவே ஒரு வருஷம் ஆவுதே.

துபாய் ராஜா said...

உங்க 'அர்த்தராத்திரி அனுபவங்கள்' அருமை. வீட்டம்மா ஊர்ல இல்லன்ன உடனே அடக்கி வச்சிருந்த ஆசைகள்
'பீர்'ரிகிட்டு பொங்குது.... :))

'ஊர்'வலம் தொடரட்டும். :))

Anonymous said...

ம​னைவி ஊருக்குப் ​​போய்விட்டாள். ​இப்​போ தனியாக ​பெங்களூரில் இருக்கி​றேன்.
ithu romba over......

☀நான் ஆதவன்☀ said...

எம்புட்டு புஸ்தகம். சாமி புக் கடை ஏதாவது ஓபன் பண்ண போறீங்களா?

ம்ம் அதுவும் சரிதான் எளக்கியவாதிங்க எல்லாம் அலமாரி முழுசும் புக்கை அடுக்கி வச்சுட்டு பக்கத்துல நின்னு ஒரு போட்டோ எடுத்துபாங்க... நீங்களும் படம் எடுத்து போடுங்க தல :)

நேசமித்ரன் said...

நானும் டோயோட்டா கிர்லோஸ்கர்ல வேலை செஞ்சேன்னுதான் பேரு
பிடுதி (bidadi) விட்ட ராம் நகர் மைஸுர் எஸ்கேப் அவ்ளோதான் நீங்க பட்டய கிளப்புறீங்களே தலைவா

அப்புறம் என்னமோ இங்கிலுஷ் பேர் எல்லாம் போட்டு இருக்கீங்களே இதெல்லாம் புதுசா வந்திருக்க சரக்கு பேர்தானே !

வால்பையன் said...

பதிவு சிறுசா போச்சே!

உயிர்மைக்கு மீண்டும் ஒரு மெயில் தட்டுங்க!

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

அது அப்படித்தான் ஜெகன். கேட்க யாரும் இல்லன்னா பெங்களூர் இப்படித்தான் பண்ணச் சொல்லும்! நல்லவேளை நான் இப்போது பெங்களூரில் இல்லை!

க. தங்கமணி பிரபு said...

இலங்கை முள்வேலி முகாம்களில் அடைபட்டுள்ள சுமார் 2,80,000 தமிழர்களுக்காக தயவு செய்து ஒரு 20 வினாடிகள் செலவிடுங்கள்.
நாம் செலவழிக்கப்போவது வெறும் 20 வினாடிகள்தான்!!

தயவு செய்து

http://www.srilankacampaign.org/form.htm

அல்லது

http://www.srilankacampaign.org/takeaction.htm

என்கிற இணையப்பக்கத்துக்கு சென்று, அங்குள்ள ஈமெய்ல் படிவத்தில் உங்கள் பெயர் மற்றும் ஈமெய்ல் முகவரியை உள்ளிட்டு அனுப்புங்கள்!

முடிந்தால் உங்கள் நண்பர்களையும் இந்த புணித செயலில் ஈடுபடுத்துங்கள்

Nathanjagk said...

நன்றி.. நன்றி.. பீர்.. எப்​போதும் ​நோன்பு (ரம்ஜான்) சாட்டிவிட்டால் ஒரு கப் பள்ளிவாசல் கஞ்சி கி​டைக்கும். சுறுசுறு​வென்று மசாலா வாச​னை​யோடு அதிகா​லையில் அ​தை குடிக்கின்ற சுக​மே தனி. கடந்த 2-3 வருடங்களாக அதற்கு வாய்ப்​பே இல்லாமல் ​போய்விட்டது. இங்கு ​பெங்களூரில் நண்பன் ஒருவனிடமும் கூச்சம் விட்டுக் ​கேட்டுப் பார்த்துவிட்டேன். அவ​னோ, ஆறிய கஞ்சி​யைக் குடித்தால் நன்றாயிருக்காது என்று சதாய்த்து வருகிறான். இங்கு ​வேறு யாரும் எனக்கு கி​டையாது. என்ன​வோ ​தெரியவில்​லை.. உங்கள் அன்பு, பதில்கள், ​ஜெய்ஹிந்த்புர ​வாசம் எல்லாம் ​சேர்ந்து ஒரு லிட்டர் பள்ளிவாசல் கஞ்சி குடித்தாற் ​போன்று ஆயிற்று. ​கொஞ்சம் ஓவர்தான்.. பட் ஐ ​லைக் இட்!

Nathanjagk said...

அன்பு நந்தா, ​ரொம்ப நன்றி! உங்க​ளைப் ​போன்று காமிரா சகிதம் சுற்றி ​போட்​டோக்கள் எடுக்கத்தான் முடியவில்​லை.. இன்னும் பப்புகள், டிஸ்​கொ​தேக்கள், ​லைவ்பாண்டுகள், ஸீ​மேல்கள் (!!?) க​தை​யெல்லாம் கூட இருக்கின்றன. எழுத எனக்குக் கூச்சம் இல்​லை. ஆனால் நம் தீவிர அதி தீவிர கண்மணிகள் என்ன நி​னைப்பார்க​ளோ என்று... டக்கி, அடக்கி வாசிக்கிறதாப் ​போச்சு! நன்றி கவிஞா!

Nathanjagk said...

அண்ணா... அண்ணா.. நீங்கள்தான் ரியல் அண்ணன்! //ஸாரி, அதர் பிரபலம்ஸ், நீங்க செண்ட்ரல் கவர்மெண்ட் குமாஸ்தா வேல இருந்தா, பாக்கப் போயிருங்க// எப்பிடிங்க இப்படி சிம்பிளா சில்லி மூக்​கை உ​​டைச்சிட்டீங்க!??
// உம்ம புக்க பப்ளிஷ் பண்ணும்போது //
ஆமா? இது ​வேற இருக்கில்ல? ஆனா எனக்கு தமிழில் மிகப்பிடித்த பதிப்பகம் உயிர்​மை கி​டையாது. தமிழினிதான்! சப்​போஸ் நான் ஏதாவது புக் எழுதி பப்ளிஷ் பண்ற மாதிரி இருந்தா தமிழினி வசந்தகுமார்கிட்டதான் ​போய் நிப்​பேன். அவரும் என் மூஞ்சி​யைப் பாத்ததும் ​கெட் அவுட்ன்னு கத்துவாரு. அப்படி ஒரு நல்ல​பேரு வாங்கியிருக்​கேன் அவர்கிட்ட. அ​தை அப்புறமா ​சொல்​றேன்.

//(ஆன்டி ரெண்டு சுழியாத்தானிருக்கணும் மூணு சுழி போட்டா பால் மாறிடாது?!)
//
ஓ ​மை காட்! அ​வைக்குழப்பத்​தை நீக்கி.. புண்ணியம் ​செய்துவிட்டீர்கள்!
என்னமா இருக்கு உங்க விளக்கம்! வாவ்!
// வாலைக் குமரிகளப் பத்தி எழுதறதுன்னா இப்படியா கொத்தமல்லி இலை மாதிரித் தூவறது?! அதானய்யா மெயின் சப்ஜெக்டா இருக்கணும்//
க​ரெக்டுதான். நம்ம பிரச்சி​னை என்னன்னா,தீஅதீ ரசிகர்கள் ஏமாந்திடக் கூடாது. அதுதான் பாக்கி​றேன்.

ஐ! ​பெரியண்ணன் ​​வேற வந்து ​பொழிப்பு​ரை ​போடணுமா? எதிர்பார்த்துக்கிட்டிருக்​கேன்!

Nathanjagk said...

அன்பு கார்த்தி​கேயன்! மிக்க நன்றி! இ​தை எழுத ​கொஞ்சம் பயமாக​வே இருந்தது. அதானால்தான் இ​தை பு..பு..பு​னைவு என்றுத் தயங்கித் தயங்கி பு​னை​வென்று அடையாளப்படுத்தி விட்​டேன். உங்களின் ஊக்கத்திற்கு ​ரொம்ப நன்றி!

Nathanjagk said...

அன்பு SurveySan ​ரொம்ப ​ரொம்ப நன்றி! நி​றைய புத்தகங்கள் படிப்பதால் கி​டைக்கின்ற ஞானம் - ஒரு சிலருக்கு ஒ​ரே ஒரு ​​நொடியில் ஒரே ஒரு அனுபவத்தில் வாய்த்து விடுகிறது! அந்த அதி அற்புத அனுபவத்​தை எழுதத் ​தெரிந்தவன் எழுத்தாளன் ஆகிறான். அவ்வளவுதான் விஷயம்!!

Nathanjagk said...

அன்பு துபாய் ராஜா! அர்த்தராத்திரி எல்லாம் கி​டையாது.. சுமார் 11-12க்​கெல்லாம் நல்லபிள்​ளையா வீடு திரும்பிடு​வேனாக்கும்! ஊர்வலம் ​போய்கிட்டுத்தான் இருக்கு!

Nathanjagk said...

தம்பிரி சம்முவம்!!! இது ஓவர் இல்​லை! இன்னிங்ஸ்!!! அதுதான் பா​லைத் ​தேய்ச்சிக்கிட்டு இருக்​கேன்!!

Nathanjagk said...

ஹாய் ஆதவா!!!!
//அலமாரி முழுசும் புக்கை அடுக்கி வச்சுட்டு பக்கத்துல நின்னு ஒரு போட்டோ எடுத்துபாங்க//
​ரொம்ப சரி!! நானும் டி​ரைப் பண்ணுறேன்! பட் எவ​னோ எழுதின புத்தகங்களுக்கு நான் ஏன் பிராண்ட் அம்பாஸிடர் ஆகணும்!!?? அப்படின்னு ​தோணுது!

Nathanjagk said...

அன்பு ​நேசா, இங்க வாங்க ஒருநாள்.. அப்புறம் கி​கோலாவா, எஸ்கார்டாவான்னு பாத்துக்கிடலாம்!
...
என்னது சரக்கு ​பேரா??????? அவ்வ்வ்வ... அதுவும் ஒருவ​கையில் சரிதான் நண்பா! நல்ல இலக்கியம் கூட ஒரு ​போ​தைதா​னே?

Nathanjagk said...

அன்பு வால்​பையன்.. பதிவு 40 வரிகளுக்கு ​மேல நீண்டுச்சுன்னா, குரவ​ளையக் கடிப்​பேன்னு சில தீஅதீ ரசிகர்கள் சத்தியபிரமாணம் ​செஞ்சிருக்காங்களாம். அதுதான் பதிவு சிறுசாப்​ போச்சு! குரல்வ​ளை இல்லாம வாழ்ந்திட முடியும்,ஆனா சரக்கடிக்க முடியாதுல்ல??

Nathanjagk said...

அன்பு M.S.E.R.K. (பிரபஞ்சப் பிரியன்) உண்​மைதான்! ஊர்வாசம்.. ஆ​ளை​யே மாற்றிவிடுகிறது! இன்னும் இங்கு கற்றறிய ​வேண்டிய இடங்கள் விஷயங்கள் நி​றைய இருக்கின்றன. ​மெதுவாய் ​தொடு​வோம்!

Admin said...

எல்லாமே புரிந்துவிட்டது ஆங்கிலத்தில் இருப்பது மட்டும் புரியவில்லை உங்களைப்போல...

சண்முகம் said...

ரொம்ப தேய்ச்சிடாதிங்க. பந்து சுருங்கிடப்போகுது..
பேட்ஸ்மேன் ஏமாந்துருவாரு...

பா.ராஜாராம் said...

நேசனுடன் பேசும்போது சொன்னார்,"ஜெகன் நிறைய படிக்கிறார் அண்ணே,சும்மாக்காச்சுக்கும்தான் இப்படி எழுதுகிறார்"என்று.(முகம் பால் வடியுதே ஜெகா...)வாஸ்த்தவம்தான் நேசா!பிறகு குருநாதர் இல்லாமல் வேறு என்னவாம்?

Nathanjagk said...

அன்பு சந்ரு
//எல்லாமே புரிந்துவிட்டது ஆங்கிலத்தில் இருப்பது மட்டும் புரியவில்லை உங்களைப்போல...//
நல்ல அவதானிப்பு! என்​னை உங்களுக்குப் புரிய​வைக்கத்தான் பதிவு எழுதுகி​றேன். உங்களுக்குப் புரிய​வைக்க என்ற சாக்கில் என்​னை​யே நானும் புரிந்து ​கொள்ள முயல்கி​றேன்.

Nathanjagk said...

அன்பு சண்முகம்..
//ரொம்ப தேய்ச்சிடாதிங்க. பந்து சுருங்கிடப்போகுது..
பேட்ஸ்மேன் ஏமாந்துருவாரு...
//
நீங்க ஏன் ராஜ​வைத்திய சா​லை பிராஞ்சி ஆரம்பிக்கக்கூடாது?

Nathanjagk said...

அன்பு ராஜா...
நூறு புக்கு படிச்சு வாங்கிற அறி​வைஒரே​யொரு அனுபவம் சாதாரணமா தந்திட்டுப்​ போயிடும். ​​இருந்தாலும்.. இந்த ​மைதானத்தில் நாம் இப்படித்தான் வி​ளையாட ​வேண்டும் இல்​லையா?

சென்ஷி said...

யாமம் படிச்சவரைக்கும் முக்கியமான நாவலால்லாம் எனக்குப் படலை. எஸ்.ராவோட வார்த்தைகளுக்காக படிக்கலாம்.

புக்கை மாத்தி மாத்தி படிக்கறது வழக்கம்தானாலும் சிறுகதை தொகுப்பு எடுத்தா மாத்திரம் முழுசா முடிச்சுட்டுத்தான் அடுத்தது படிக்க நினைப்பேன். இந்த கொடுமையாலேயே இன்னும் நாஞ்சில் நாடனோட சிறுகதை தொகுப்பு எடுத்து வந்ததோட அப்படியே இருக்குது.

வரிசையா புக் வாங்கி படிச்சுட்டு அடுக்கி வைச்சா மாத்திரம் போதாது. படிச்ச புக்கோட விமர்சனமும் செஞ்சாகணும் தலைவரே! எரோட்டிக்கா மொழிபெயர்ப்பு சங்கா அண்ணன் ஆசைப்பட்டு கேக்குறாரு. தனிமடல்லயாவது அனுப்பி வைச்சுடுங்க. எனக்கு ஒரு சிசி போட்டு :)

பெங்களூர் சுத்தறது தனி அனுபவம்தான் போல. குடியும் குடித்தனமுமா இருக்குறதுன்னா இப்படித்தானா..

எங்க சுத்தி வந்தாலும் புக்கை தூக்கிட்டு வந்திடறீங்க போல.. கலெக்சன்ஸ் பத்திரமா வச்சுக்குங்க. மீட் செய்யறப்ப ஞாபகமா கேட்டு வாங்கிக்கறேன்.

ஃபைனல் டெஸ்டினேசன்ஸ் நானும் பார்த்துட்டேன் :-(

படுபயங்கர மொக்கை. தெரிஞ்ச கதையமைப்புன்னாலும் கொஞ்சமாச்சும் திரைக்கதை மாத்தி யோசிக்க மாட்டானுங்களான்னு கத்த வைக்குது. அதே யூத்து, அதே மாதிரி சாவு. அடப்போங்கப்பான்னு ஆகிடுச்சு. கொஞ்சமா விறுவிறுன்னு ஆரம்பிச்ச அந்த தியேட்டர் ஷோ கூட அநியாய மொக்கையாத்தான் எனக்குப் பட்டது.. அடுத்த பாகம் வந்ததுன்னா பார்க்காம இருக்க முயற்சிக்கணும்.

//என்​னைப் பார்த்து ஒரு ​ஜோடி ​தெறித்தப் ​போய் ​தள்ளி உட்கார்ந்தது, மனதுக்கு இதமாய் இல்​லை. //

ஹா ஹா ஹா.. வேணாம் விட்ருவோம். பாவம்!

//என்னைப் ​பொறுத்தவ​ரை இந்த ஆப்ரம்ஸின் இந்த விளக்கம் போஸ்ட் மாடர்னுக்கான மிகச் சிறந்த விளக்கம். //

நீங்களே சொன்னப்புறம் வேற அப்பீல் என்ன இருக்குது :-)

சென்ஷி said...

யாமம் படிச்சவரைக்கும் முக்கியமான நாவலால்லாம் எனக்குப் படலை. எஸ்.ராவோட வார்த்தைகளுக்காக படிக்கலாம்.

புக்கை மாத்தி மாத்தி படிக்கறது வழக்கம்தானாலும் சிறுகதை தொகுப்பு எடுத்தா மாத்திரம் முழுசா முடிச்சுட்டுத்தான் அடுத்தது படிக்க நினைப்பேன். இந்த கொடுமையாலேயே இன்னும் நாஞ்சில் நாடனோட சிறுகதை தொகுப்பு எடுத்து வந்ததோட அப்படியே இருக்குது.

வரிசையா புக் வாங்கி படிச்சுட்டு அடுக்கி வைச்சா மாத்திரம் போதாது. படிச்ச புக்கோட விமர்சனமும் செஞ்சாகணும் தலைவரே! எரோட்டிக்கா மொழிபெயர்ப்பு சங்கா அண்ணன் ஆசைப்பட்டு கேக்குறாரு. தனிமடல்லயாவது அனுப்பி வைச்சுடுங்க. எனக்கு ஒரு சிசி போட்டு :)

பெங்களூர் சுத்தறது தனி அனுபவம்தான் போல. குடியும் குடித்தனமுமா இருக்குறதுன்னா இப்படித்தானா..

எங்க சுத்தி வந்தாலும் புக்கை தூக்கிட்டு வந்திடறீங்க போல.. கலெக்சன்ஸ் பத்திரமா வச்சுக்குங்க. மீட் செய்யறப்ப ஞாபகமா கேட்டு வாங்கிக்கறேன்.

ஃபைனல் டெஸ்டினேசன்ஸ் நானும் பார்த்துட்டேன் :-(

படுபயங்கர மொக்கை. தெரிஞ்ச கதையமைப்புன்னாலும் கொஞ்சமாச்சும் திரைக்கதை மாத்தி யோசிக்க மாட்டானுங்களான்னு கத்த வைக்குது. அதே யூத்து, அதே மாதிரி சாவு. அடப்போங்கப்பான்னு ஆகிடுச்சு. கொஞ்சமா விறுவிறுன்னு ஆரம்பிச்ச அந்த தியேட்டர் ஷோ கூட அநியாய மொக்கையாத்தான் எனக்குப் பட்டது.. அடுத்த பாகம் வந்ததுன்னா பார்க்காம இருக்க முயற்சிக்கணும்.

//என்​னைப் பார்த்து ஒரு ​ஜோடி ​தெறித்தப் ​போய் ​தள்ளி உட்கார்ந்தது, மனதுக்கு இதமாய் இல்​லை. //

ஹா ஹா ஹா.. வேணாம் விட்ருவோம். பாவம்!

//என்னைப் ​பொறுத்தவ​ரை இந்த ஆப்ரம்ஸின் இந்த விளக்கம் போஸ்ட் மாடர்னுக்கான மிகச் சிறந்த விளக்கம். //

நீங்களே சொன்னப்புறம் வேற அப்பீல் என்ன இருக்குது :-)

சென்ஷி said...

////(ஆன்டி ரெண்டு சுழியாத்தானிருக்கணும் மூணு சுழி போட்டா பால் மாறிடாது?!)//

அப்ப பெண்பால் ஆண்டிக்கு என்ன சொல்லுவீங்க தலைவரே.. (அவ்வையார்) இல்லைன்னா பெண்பால்ல ஆண்டியே இல்லையா. எல்லாம் பெண்பாலால மாறுன ஆண்டியாத்தான் இருப்பாங்களா :)

சென்ஷி said...

//சப்​போஸ் நான் ஏதாவது புக் எழுதி பப்ளிஷ் பண்ற மாதிரி இருந்தா தமிழினி வசந்தகுமார்கிட்டதான் ​போய் நிப்​பேன். அவரும் என் மூஞ்சி​யைப் பாத்ததும் ​கெட் அவுட்ன்னு கத்துவாரு. அப்படி ஒரு நல்ல​பேரு வாங்கியிருக்​கேன் அவர்கிட்ட. அ​தை அப்புறமா ​சொல்​றேன்.//

ஓஹ்... சரி விடுங்க..

கிழக்கிலிருந்து இன்னொரு உதய சூரியன் அப்படி விளம்பரம் கொடுத்துடலாம் :)

Nathanjagk said...

அப்பாடா! ​பெரியண்ணன் என்ட்ரி ஆயிட்டாரு!! இப்பத்தான் ஒரு திருப்தி! முதலில் இந்த இடு​கை​யை ஆரம்பிக்கும் ​​போது ​சென்ஷி ​சொன்னாரு என்றுதான் ஆரம்பித்​தேன். அப்புறம் எழுத எழுத ​மேட்டர் எங்​கோ ​செல்வதால் - இ​தை உண்​மை என்று ​சொல்ல கூச்சமாகிவிட்டது. அதனால் பு..பு...பு​னைவு என்று ​லேபிள் படுத்திவிட்டு. பு​னைவுலகத்தில் ​சென்ஷி​யை நு​ழைக்க மனமில்லாததால் - நீக்கிவிட்​டேன்.

என்​னை மாதிரி ஸ்​டைல்​லேதான் (!!?) நீங்களும் படிக்கிறீங்க என்பது ஆறுதலா இருக்கு!

நிச்சயம் புக்குகளுக்கு ​பொழிப்பு​ரை எழுதிட​றேன். இந்த விஷயத்தில் நீங்கள் குரு! யாமத்தின் மதிப்பு​ரை​யை ​வெகுவாக ரசித்​தேன். அது ஒரு அளவு​கோல் என்று நம்புகி​றேன்.

அ​மெரிக்கன் எ​ரோடிக்கா - ​மொழி​பெயர்ப்பு??? தீஅதீ ரசகக்கண்மணிகள் அ​மெரிக்க மகாச​பையிலிருந்து (கலி​போர்னியா பிராஞ்சி) அல்​ரெடி விண்ணப்பம் வந்துருச்சி! இப்ப ​நீங்களும் ​கேட்டுட்டீங்க!

ஆனா ஒரு ​​சந்​தேகம்:
​அ​மெரிக்க காமக்க​தை​யை அப்படி​யே ​மொழி​பெயர்க்கிறதுக்குப் பதிலா நாம​ளே (ஐ மீன் நான்தான்) ஒரு ​பெங்களூர் க​தை​யை ​சொந்தமா எழுதிட்டா என்னன்னு ​தோணுது?

பதில் ​சொல்லுங்க? ஸ்ட்ரா​பெர்ரியா இல்ல எலந்தப்பழமா??

நிற்க. கண்டிப்பா நாம மீட் பண்ணு​வோம்.. ஒரு வித்தியாசமான அட்மாஸ்​beerல்!
உங்க​ளோட க​லைக்சன்ஸ் பற்றியும் பகிருங்கள் (பாத்தீங்களா? நீங்க ​சொன்ன ஒத்த புக்​கை வச்சுக்கிட்டு 2 இடு​கை ​போட்டுட்​டேன்! 20 புக்குக வாங்கிட்​டேன்!!)

Nathanjagk said...

ஆண்டியின் சுழிக் குழப்பம்* ​பெரிய ​லெவலுக்குப் ​போகும் ​போலிருக்கு!
//எல்லாம் பெண்பாலால மாறுன ஆண்டியாத்தான் இருப்பாங்களா :)//
நல்லாத்தான் கண்டுபிடிக்கிறீக!!

*
காப்புரி​மை காலடிக்கு.
இந்த த​லைப்பில் யாரும் இடு​கை எழுத விரும்பினால் த​யைகூர்ந்து காலடியின் முன்னனுமதி ​பெறவும்.

Nathanjagk said...

//கிழக்கிலிருந்து இன்னொரு உதய சூரியன் அப்படி விளம்பரம் கொடுத்துடலாம் :)//
நல்லாத்தான் உசுப்​பேத்தறீங்க.. அண்ணனும் ​பெரியண்ணனுமா ​சேர்ந்து! ..... ஆனாலும் ​கேக்க நல்லாத்தான் இருக்கு!!! ஹிஹி! நீங்க ஏதாவது புக்கு எழுதற ஐடியா வச்சிருக்கீங்களா? முனியாண்டி விலாஸ் ​நூல் வடிவாக்கப் பட​வேண்டியது!

Anonymous said...

Atheppudi
30* la pombalanna Aunty ithula rendu suzhiya 3 suzhiyaannu vera.
Appo 30* la irrukura gents Unclea
itha tamila sonna kojam asingama varume? heelo uncle

Nathanjagk said...

அன்னானி​மெஸ்ஸு...

இன்ட்ரஸ்டிங்! 30+ இருக்கிறவங்க​ளை ஆNடின்​னோ அங்கிள்​​னோ ​சொல்லக் கூடாது. ​வேற எந்த வயசுக்காரங்க​ளை அப்படி கூப்பிடலாம்?
அது ஏன் தமிழ்ல ​சொன்னா மட்டும் அசிங்கமா வரணும்??
பாவம் உங்க அம்மா​வோட சகோதரர்கள்!