Sunday, September 13, 2009

அசிங்கமான உண்​மை


படம் பார்க்கலாம் என்று Garuda Mall ஐ-நாக்ஸ் ​தி​யேட்டருக்கு ​சென்​றேன்.

படம்: The Ugly Truth

டிக்​கெட் எடுக்கும் ​போது எனக்கும் Counter Girl-க்கும் நடந்த சம்பாஷ​ணை:

Which movie sir?

The Truth

Do you mean The Ugly Truth?

I don't want to insist!!

அவனா நீயி? என்ற லுக்​கோடு ​​மேற்​கொண்டு ஏதும் ​பேசாமல் டிக்​கெட் கிழித்துக் ​கொடுத்தாள்.


எனக்கு வாய்த்தது D வரி​​சை 6-வது இருக்​கை.


C வரி​சை 2-லிருந்து 9-வ​ரை வா​லைக் குமரிகள்

E வரி​சை 5-லிருந்து 8-வ​ரை வா​லைக் குமரிகள் (இது கவி​தை இல்​லை!)


Let's come again to my row.


D 1 - ஆண்

D 2 - ​பெண்

D 3 - ​​வெற்றிடம்

D 4 - ​சூன்யம்

D 5 - ​இருள்​மை

D 7 - ​முடங்கிய இருக்​கை

D 8 - ​தனி​மை

D 9 - ​ஆண்

Slut, Cock, vibrator, babes, ass, brunette, anal, cunt இந்த மாதிரி ​வொக்கப்பலரி கல​வையாய், காமடியாய் இருந்தது The Ugly Truth. அறிமுக காட்சியி​லே​யே ​மைக் (Gerard Butler - 300-படத்தின் லீட்) Men from Mars Women from Venus ​போன்ற (!?) புத்தகங்க​ளை எரித்துவா​றே அறிமுகமானது என்​னை ஸீட்டின் நுனிக்குத் தள்ளியது.

மைக்கின் ஆளு​மை ப்ரத்​யேகமானது. ​பெண்கள் பற்றிய அவனின் Pig bang-தர கருத்துக்களும் அப்படி​யே. அபியின் (Katherine Heigl - இ​ளைத்துப் ​போனது மனசுக்குப் பாரமாய் இருக்கிறது; இருந்தாலும் மா.இ.​கொ.இ என்பது உண்​மை​யே..!!) காதலுக்கு டிப்ஸ் தருவது, அவளின் காதலுக்கு கன்ஸல்டன்டாக (இந்த இடத்தில் The Priceless பி​ரெஞ்ச் படம் நி​னைவுக்கு வருகிறது) இருப்பது................... இப்படி படத்​தை நான் விமர்சிக்க வரவில்​லை. நீங்க​ளே ​போய் பார்த்து சிரித்துக் ​கொள்ளுங்கள்.


நான் ​சொல்ல விரும்பியது இதுதான்: இந்த மாதிரி ப்​ளே பாய் ​ஜோக்குக​ளை, கடைசியா நீ எப்ப மாஸ்டர்​பேட் பண்ணுன அபி?, உன்​​னோட ச​டை உன் butt-டை விட ​கொஞ்சமாவது நீளமா இருக்கணும், என் ​வைப்​ரேட்டர் ரி​மோட் காணாம ​போச்சு, ஆண்கள் எப்பவும் incapable - எல்லா விஷயத்திலும், pussy பிடிக்கப்​ ​போய் மரத்தில் த​லைகீழாய் ​தொங்குவது... என்று எல்லா காமடிகளுக்கும் C மற்றும் E ​ரோ குலுங்கிற்று. C-ரோக்காரிகள் என் ஸீட்​டை ​நெம்பிக்​கொண்​டேயிருந்தது அவ்வளவு உறுத்தலாக இல்​லை. அந்த படத்தின் இண்டர்​வெல் (Made in India) ​போது E-5 எழுந்து, திரும்பி, குனிந்து தன் HideSign ​​ஹேண்ட்​பேகில் ஏ​தை​யோ துழாவியதும்.. அப்​போது கி​டைத்த clevageம் பிரமாதம்! D1 & D2 சுத்த ​​வேஸ்ட். டாகு​மெண்டரி மாதிரி படத்​தை அப்சர்வ் பண்ணிக் ​கொண்டிருந்தார்கள்.



இருந்தும் இந்தமாதிரி காமடி​க்கு வாய்விட்டுச் சிரித்து மகிழ ​பெண்களுக்கு ஒரு ஆங்கிலப்படம், ​​​​ஹை-​பை தி​யேட்டர், சின்ன இருட்டு, சுதந்திரம எல்லாம் இங்கு இருக்கிற​தே என நி​னைத்து திருப்தியா​​னேன். இந்த ப்​ளேபாய் ​ஜோக் சிரிப்பு சுதந்திரம் கூட ​இல்லாத ​பெண்க​ளை நி​னைத்து ​பெருமூச்சும் வந்தது! Goddam the ridiculous culture!

அபி ​​வைப்ப​ரேட்ட​ரின் ரி​மோட்​டை தவறவிட்டு பரிதவிக்கும் (அல்லது பரவசமாகும்..) ​​​ரெஸ்டரண்ட் சீனிலிருந்து வா​லை குமரிகளின் ​கொல் சிரிப்பு அடங்கிவிட்டாற் ​போன்று ​தோணியது. The Ugly Truth??


* * *


​வைப்ப​ரேட்டர்கள் (​பெண்களுக்கானது) ​பெங்களூரில் சாதாரணமாக கிடைக்கிறது. அம்மணிக்கு ​மேக்கப் கிட் வாங்க ​சென்ற​போது மல்​லேஸ்வரத்தில் Health & Glow க​டையில் டியூ​ரெக்ஸ் கம்​பெனியின் ரிங்-​டைப் ​வைப்ஸ் சில மாடல்கள் பார்த்திருக்கி​றேன்.


டிஸ்கி:


எனக்கு மண்​டைக் கனம் அதிகம். ஏ​னென்றால்.. நி​றைய குட்டு வாங்குகி​றேன் அம்மணியிடம்..

இ​தை இங்கு எழுதியதற்கு அல்ல..

இந்த விஷயத்​தை இன்​னொரு ​ப்​ரெண்டிடம் (​பெண்) ​மெயிலில் பிரஸ்தாபித்ததற்கு..

இது மாதிரி மண்​டைக் கனமுள்ள நண்பர்களுக்கு என் தாழ்​மையான அறிவுரைகள்:

1. ​பெண் நண்பர்களுக்கு தமிழில் ​மெயில் எழுதாதீர்கள்
2. ​மெயில் பாஸ்​வேர்ட்க​ளை உங்கள் அம்மணிகளிடம் பகிராதீர்கள்
3. முக்கியமாய் வீட்டு கணிணியில் Keep me singed in ஆப்ஷ​னை ​செலக்ட் ​செய்யாதீர்கள்


A Special டிஸ்கி :

​பெண் ​தோழிக்கு ​​வைப்ஸ் பத்தி​யெல்லாம் எழுதறா​னே.. இது என்ன மாதிரி..... என்​றெல்லாம் ​யோசிக்காதீங்க.. ​​நான் ​ரொம்ப நல்ல ​பையன் - அவளும் நல்ல ​பொண்ணு!


* * *


எல்லாரும் ஏ​தோ ஒரு அசிங்கத்​தை ம​றைக்க.. பில்ட்-அப் பண்ணிக்​கொண்டு வருகிற மாதிரி (இப்​போதுதான்....) ​தோண ஆரம்பித்திருக்கிறது (இது ஆரம்ப ஸ்​டேஜ்தான்.. சரி பண்ணிக்கலாம் ​ஜெகன்னு ​சொல்ல தீஅதீ ரசிகர்களுக்கு நன்றி!)


அய்​யோ நாறு​தே என்று மூக்​கைப் பிடிக்கும்​போ​து.. அந்த நாற்றத்தின் பிரதி நம் ப்ரக்​​ஞையில் இருந்து வந்திருக்கிறது என்று தா​னே அர்த்தம்? புரிய மாதிரி ​சொல்​றேன்... எங்க? எல்லாம் அவங்கவங்க ​​நெஞ்சு ​மேல (​நெ..ஞ்..சு..) ​கைய வச்சுக்​கோங்க.


அசிங்கம் ​வெளிய இல்​லே.. இங்கதான் இருக்கு! Correct? இந்த வியாக்யானத்​தை ​பொய்​யென்று ​சொல்பவர்கள்.. பின்னூவில் மல்லுக் கட்டலாம்! ​


எஸ்கி (எஸ்​கேப் டிஸ்கி):


I wanted to beat her, I always wanted to hurt her beacause she's fat.

"It would be a crime." She raised her arms, I saw her armpit, I always like her better when she has bare arms. The armpit. It was half-open, you might have thought it was a mouth..................................


- by Jean-Paul Sartre (Intimacy)


எப்படி??

42 comments:

நந்தாகுமாரன் said...

இந்த ப்​ளேபாய் ​ஜோக் சிரிப்பு சுதந்திரம் கிடைக்கப் பெற்ற ​பெண்க​ளை நி​னைத்து ​எனக்கும் சந்தோஷமாக இருக்கிறது ... நான் forum mall pvrஇல் தான் படம் பார்ப்பேன் ... அட ... பெங்களூரில் வைப்ரேட்டர்கள் கிடைக்கின்றனவா ... ருசிகரமான தகவல் (எனக்கல்ல) ... Jean Paul Sartre is one of my favorites ...

சென்ஷி said...

கைக்குலுக்கி அல்லது தோளைத் தட்டிக்கொள்ளுங்கள்.. பெண்களுக்கான சுதந்திரத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆண்களின் புத்தியைப் பற்றிய அச்சம்தான் எனக்கு அதிகம். ஏனென்றால் இவர்கள் அனைவரும் கவலைப்படுவது வெளியில் காண்கின்ற பெண்களுக்கான குரலாகத்தான் ஒலிக்கத் தொடங்குகிறது. வீட்டுக்குள்ளிருப்பவர்களுக்காக அல்ல.

குறிப்பிட்ட படம் இன்னும் காணவில்லை. டவுன்லோடு செய்துதான் பார்க்கணும்.

எனக்கென்னமோ நீங்கள் அதீத உணர்ச்சிவசப்பட்டு எழுதியது போலத்தான் தெரிகிறது. பெண்கள் தங்களுக்கான தேவைகளை நன்கு புரிந்து கொண்டே இருக்கின்றனர். நாம் நமது தேவைகளுக்காக அவர்களையும் சார்ந்து இருக்கின்றோம்.

//அசிங்கம் ​வெளிய இல்​லே.. இங்கதான் இருக்கு! ​//

இதுல மல்லு, ஆந்திரா, மும்பை கட்டெல்லாம் இல்லை. ஆனா எல்லாத்துக்கும் நம்ம பார்வை மேல குறைப்பட்டுக்கிட்டு இருக்க முடியாது. இதுக்காக தனியா காஸ்மோபாலிட்டன்ல போய் டிரெய்னிங் எடுத்துட்டு வர முடியாது. அவனவன் கல்சர் அவனவனுக்குன்னு சொல்லி போயிட்டு இருக்கணும். எல்லாருமே ஏதோ ஒரு அசிங்கப்புள்ளியைத் தொட்டுட்டுத்தான் இருக்கோம்ன்னு நினைக்கறேன்.

நீங்க குறிப்பிட்டு இருக்கற டிப்ஸ் எல்லோருக்கும் நிச்சயம் உதவும்ன்னு நினைக்கறேன். அதீத புத்திசாலித்தனத்தை எதிர்பாலினம் கிட்ட காட்டத்தான் அதிகம் எல்லோரும் முயற்சிக்கறாங்களோ!

எஸ்கேப் ஆகறதுக்காக ழான் பால் சார்த்தர் குறிப்பு உதவுதா... இது ஓவர் அலும்பால்ல இருக்குது :-)

சென்ஷி said...
This comment has been removed by the author.
ஷங்கி said...

நான் போன பதிவுல சொன்னதுதான். மத்த பிரபலம்ஸ் எல்லாம் உடனே, ரிமைண்ட் யூ கய்ஸ், உடனே, செண்ட்ரல் கவர்மெண்ட் குமாஸ்தா வேலைக்குப் போயிருங்க! இனிமேயும் நீங்க பிரபலம்னு சொல்லிக்கிட்டா, வாயைப் பொத்திக்கிட்டுச் சிரிக்கத்தான் முடியும். தம்பிதான் ஒரிஜினல் பிரபலம்!

அப்புறம் மெயில்,பாஸ்வேர்ட் மேட்டரப் பத்தி நான் தனியா எழுதலாமோ?! அப்பதான் தங்கமணியக் கலாய்ச்சு ஒரு எண்ணிக்கையக் கூட்டிரலாம்.

அசிங்கம் அப்படீன்னா என்ன தம்பீ?! அதுக்கு எதாவது டெஃபனிஷன் இருக்கா?!

யோவ் பெரியண்ணன்! போன பதிவுல ஒரு பொழிப்புரையை எதிர்பார்த்தேனே!

குடுகுடுப்பை said...

பெண், ஆண் என்ன எல்லாரும் சுதந்திரத்தையும் பறிக்கிறதுக்கு பேரு கலாச்சாரம். அததான் நானும் பின்பற்றுகிறேன். பல நேரங்களில் பாதிக்கப்படுகிறேன்.

உங்கள் துணிச்சலை பாராட்டுகிறேன். இதுக்கு ஆபாசவாதின்னு கட்டங்கட்டிருவாங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அதென்ன அசிங்கமான உண்மை புரியலியே

துபாய் ராஜா said...

உண்மையான உண்மை.

அழகான நடை.அருமையான விவரிப்பு.

காலடிபயணங்கள் தொடரட்டும் ஜெகன்.

(உங்களை ஒரு ஆங்கிள்ல பார்க்க அண்ணன் ஜே.கே.ரித்திஷ் எம்.பி போலவே இருக்கிறது....) :))

இரும்புத்திரை said...

அண்ணா சாருவோட தாக்கம் அதிகமா தெரியுது.ஏதாவது அவர் புக் படிச்சீங்களா..

தல அப்ப ஆங்கிலத்தில் மெயில் அனுப்பினா பிரச்சனை இல்லை அப்படின்னு சொல்றீங்க..

☀நான் ஆதவன்☀ said...

அருமையான நடை ஜெகன்

ஆம்பூர் எட்வின் / பிரபஞ்சப்ரியன் said...

சும்மா பறக்குது ஜெகன்! போற வேகத்த பார்தால் நம்ம குரு எஸ்.ரங்கராஜன் ஞாபகத்து வருகிறார்! Keep the pace!

தினேஷ் said...

பிரமாதம் உங்க truth ... ஆனால் ugly இல்ல..

தினேஷ் said...

/ by Jean-Paul Sartre (Intimacy)//

இதெல்லாம் ஏண்ணே வேலுஜி காதல கதை போதாதா?

நேசமித்ரன். said...

மிக நல்ல பகிர்வும் பதிவும்
அசிங்கம் மட்டும் இல்லை ஜெகன் தைரியமும் சுதந்திரமும் நமக்கு உள்ளதான் இருக்கு . வெளிநாடுகளில் வாழும் இந்தியப் பெண்மணிகளின் சுதந்திரங்களை நீங்கள் இணையம் மூலம் நண்பர்கள் மூலம் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்

அங்கே கணவர்கள் இல்லையா?
மாமியார்கள் மகன்கள் இல்லையா?
பொருளாதாரம் ஒரு வகையில் காரணமாக இருந்த போதும் மனநிலையைத் தாண்டிய கூறுகளும் உள்ளன

Photon said...

நீங்க மல்லேஸ்வரம் ஆ? நானும் பக்கத்துலதான்.. IISC கிட்ட

இரும்புத்திரை said...

உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு

இரும்புத்திரை said...


உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு

Beski said...

என்ன சொல்றதுன்னே தெரியல...

வால்பையன் said...

நீங்க அடிக்கடி வாலை குமரிகள்னு சொல்றதுக்கும், எனக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா!?

கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் ) said...

// எவனோ ஒருவன் said...
என்ன சொல்றதுன்னே தெரியல...\\

தம்பியைப்போல் எனக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை

Nathanjagk said...

​ரொம்ப நன்றி நந்தா!
ஒருநாள் நல்ல இடமா பாத்து மீட் பண்ணு​வோம்!!
​வைப்​ரேட்டர்கள் கிராமத்தில் கூட கிடைக்கின்றன.... என்ன ​மேனுவல் ஆப​ரேஷனா இருக்கும்!! ஹிஹி!!

Nathanjagk said...

சென்ஷி,
//பெண்களுக்கான சுதந்திரத்தைப் பற்றிக் கவலைப்படும் ஆண்களின் புத்தியைப் பற்றிய அச்சம்தான் எனக்கு அதிகம்//
எனக்கும்தான்!

//எனக்கென்னமோ நீங்கள் அதீத உணர்ச்சிவசப்பட்டு எழுதியது போலத்தான் தெரிகிறது. பெண்கள் தங்களுக்கான தேவைகளை நன்கு புரிந்து கொண்டே இருக்கின்றனர். நாம் நமது தேவைகளுக்காக அவர்களையும் சார்ந்து இருக்கின்றோம்.
//
எல்​லோரும் தங்களுக்கான ​தே​​வைக​ளை புரிந்து ​கொண்டுதான் இருக்கிறார் - விலங்குகள் கூட! அது தன்னிச்​சையானது. ஆனால் அதற்காக சூழலில் - மனித​னோ / விலங்​கோ - இயங்க ​வேண்டும். ஜு-வில் பனிக்கரடியைப் பார்த்து ரசிக்க முடியாதுதா​னே?

இந்த அபிப்பராயத்​தைதான் ​சொல்ல விரும்பி​னேன்.

மற்றபடி ​பெண் விடுத​லைக்கு குரல், உரல் ​போன்றவற்றில் எல்லாம் எந்த நம்பிக்​கையும் இல்​லை. விடுத​லை​யை யாரும் யாருக்கும் ​கொடுக்க முடியாது. அல்லவா?
* * *
அவ்வ்வ்... "மல்லு"க்கட்டுங்கிறதுக்கு இப்படி​யொரு அர்த்தமா?? ஆனா... நல்லாத்தான் இருக்கு! ஹிஹீ!!
//அவனவன் கல்சர் அவனவனுக்குன்னு சொல்லி போயிட்டு இருக்கணும். எல்லாருமே ஏதோ ஒரு அசிங்கப்புள்ளியைத் தொட்டுட்டுத்தான் இருக்கோம்ன்னு நினைக்கறேன்.
//
அ​தை ​வெளிப்படுத்தும் ​போதுதான் பிரச்சி​னை மு​ளைக்கிறது. எ​தை ​வேண்டுமானாலும் எப்படி ​வேண்டுமானாலும் எழுதுகிற சுதந்திரத்​தை யாசிக்கவில்​லை. திரித்து எழுதும் பாசாங்​கை உ​டைக்க மட்டும் விரும்புகி​றேன். இந்த உ​டைப்பு எனக்கு ஆசுவாசமளிக்கிறது. என் முதல் இடு​கை​​யை இப்படி ஒரு பாவத்தில்தான் எழுதி​னேன்.
//அதீத புத்திசாலித்தனத்தை எதிர்பாலினம் கிட்ட காட்டத்தான் அதிகம் எல்லோரும் முயற்சிக்கறாங்களோ!
//
புத்திசாலித்தனம் மட்டும் அல்ல எதுவா இருந்தாலும் எதிர் பாலினத்திடம் காட்டி ஒரு ​ஷொட்டு இல்ல ஒரு குட்டு வாங்கினாத்தான் ஒரு திருப்தி கி​டைக்கும்.
...
//எஸ்கேப் ஆகறதுக்காக ழான் பால் சார்த்தர் குறிப்பு உதவுதா... இது ஓவர் அலும்பால்ல இருக்குது :-)//
ழான் ​கோவிச்சுக்க மாட்டாருங்கிற ​தைரியத்திலதான்! :-)
​ரொம்ப நன்றிண்​ணே!

Nathanjagk said...

அண்ணா, சங்காண்ணா!
நல்லாத்தான் உசுப்​பேத்தி விடறீங்க! நானும் இங்க ​போ​னேன்.. அங்க ​போனேன்னு எல்லா உண்​மைக​ளையும் கச்சிதமா '​ரெக்கார்ட்' பண்ணிக்கிட்டு வர்​றேன். இதையெல்லாம் அம்மணி படிச்ச பின்னாடிதான் ​தெரியும்.. ஒரிஜினல் பிரபலமா இல்​லை ப்ராபளமான்னு??

​மெயில் பாஸ்​வேர்ட் சங்கதி உங்ககிட்டயுமா?? ப்ளீஸ் நீங்க​ளே எழுதுங்க! ஆவ்வ்வ​லோடு ​கர்நாடக மகாச​பை காத்துக்கிட்டு இருக்கு!

அசிங்கம்? ​டெஃபனிஷன்?? ஆங்ங்ங்???
ஒரு சிங்கக் குட்டி ஸ்கூல் ​போயிட்டு வந்து அம்மா சிங்கத்திட்ட ​கேட்டுச்சாம்..
"மம்மீ.. மம்மீ.. என் கூட படிக்கிற கரடி, புலி, யா​னைக்​கெல்லாம் ​பேரு இருக்கு, ​பேருக்கு முன்னால இன்ஷியல் இருக்கு.. எனக்கு இல்லியா?"
மம்மி சிங்கத்தக்கு எவ்வளவு ​​யோசிச்சும் க​ரெக்டான சிங்கம் யாருன்னு ​தெரிய​லே.
அப்ப (எப்பயும்) தூங்கிட்டிருந்த ஒரு ஆண் சிங்கம் புரண்டு படுத்து 'அஅஅஅவ்'ன்னு ​கொட்டாவி விட்டுச்சாம்.
உட​னே மம்மி சிங்கம்,
"கண்ணு உங்கப்பன் ​பேரு அஅஅஅவ்வ்.. அப்ப உனக்கு இன்ஷியல் அ-தா​னே?" என்று ​சொன்னுச்சாம்.
சிங்கக் குட்டி உட​னே...
"ஐ.... நான் அ.சிங்கம்.. அசிங்கம்.. அசிங்கம்" என்று கத்திக்கிட்​டே காட்டுக்குள்ள ஓடுச்சாம்!
* * *
இதுக்கு சிங்கத்து வாயில த​லை​யை விட்டிருக்கலாங்கிற தீவிர அதி தீவிர வாசக் கண்மணிகளுக்கு... ஐ யாம் ஸாரி.. பட் நீங்க யார் ​வேணாலும் அண்ணனின் இந்த சந்​தேகத்​தை நிவர்த்தி ​செய்யலாம்!
அசிங்கம் என்றால் என்ன??? இதுதான் ​கேள்வி!
ஜுட்!
* * *
//யோவ் பெரியண்ணன்!....//
​ரொம்ப எதிர்பார்த்திருப்பீங்க ​போல ​பெரியண்ணன் ​பொழிப்பு​ரை​யை.. ​​பொழிப்பு ​போட்ட ​கை​யோட என்​னையும் குட்டியும் வச்சிருக்காரு, பாத்தீங்களா?

Nathanjagk said...

அன்பு குடுகுடுப்​பை,
கலாச்சாரம் சில சமயங்களில் ​மொத்த சமூகத்​தையும் வறுத்​தெடுப்பது உண்​​மை​யே. ​அ​தை உ​டைக்கும் மாற்று வழிகளில் இலக்கியமும் ஒன்று. நம் மன​தை, சிந்த​னைக​ளை பதிவு ​செய்ய ​செய்ய, எண்ணங்கள்- எழுத்து - படிப்பு - ​செய்​கை - பழக்கம் - மரபு என நி​லை நிறுத்த முடியும்.
நாம்தான் இந்த காலத்தின் ​சைபர்-குரல்கள். அல்லவா?
//இதுக்கு ஆபாசவாதின்னு கட்டங்கட்டிருவாங்க.//
அந்த அளவுக்கு நான் ​​வொர்த் இல்​லை என்று நி​னைக்கி​றேன்!

Nathanjagk said...

அன்பு ஸ்டார்ஜன் மாம்ஸ்!
என்ன புரியலியா? The Ugly Truth படத்​தோட தமிழாக்கம்தான் அசிங்கமான உண்​மை! இன்னும் புரிய​லேன்னா ​சொல்லுங்க; உங்களுக்கு ​வேற ஒரு சிங்க க​தை ​சொல்​றேன்!!

Nathanjagk said...

அன்பு துபாய் ராஜா,

​ரொம்ப நன்றி! உங்களின் உற்சாகம், ஊக்குவிப்​பை ஒரு அங்கீகாரமா எடுத்துக் ​கொள்கி​​றேன். என் கூச்சத்​தை து​டைத்​​தெறிப​வை இது ​போன்ற வார்த்​தைகள்தான்!
//
(உங்களை ஒரு ஆங்கிள்ல பார்க்க அண்ணன் ஜே.கே.ரித்திஷ் எம்.பி போலவே இருக்கிறது....) :))
//
பார்​வைகள் பலவிதங்கிறது புரியுது.

Nathanjagk said...

அன்பு இரும்புத்திரை அரவிந்த்
//அண்ணா சாருவோட தாக்கம் அதிகமா தெரியுது.ஏதாவது அவர் புக் படிச்சீங்களா.. //
படிச்​சேன்.. பட் தாக்கமான்னு ​தெரிய​லே! ஏன்னா படிச்ச ​ரெண்டு புக்கும் (ஸீ​ரோ டிகிரி, ராஸலீலா) அவ்வளவா கவரவில்​லை.

//
தல அப்ப ஆங்கிலத்தில் மெயில் அனுப்பினா பிரச்சனை இல்லை அப்படின்னு சொல்றீங்க..
//
அனுப்பிப் பாத்துட்டு ​சொல்​றே​னே?

Nathanjagk said...

நான் ஆதவன்..
மிக்க நன்றி ஆதவன்!

Nathanjagk said...

M.S.E.R.K. said...
​ரொம்ப நன்றி பிரபஞ்சப்ரியன்..! எனக்கு உங்க அறிவியல் ​தொடர்க​ளை படிக்கும் ​போது இ​தே மாதிரி ​தோணியதுண்டு! இந்த மாதிரி ​தொழில்நுட்ப ரீதியான பதிவுகளுக்கு நிச்சயம் தனி இடம் உண்டு! பிறகாலத்தில் ​பெரிய பாராடடும் ​பெறும் என்பது என் நம்பிக்​கை! ​தொடர்ந்து ​செயலாற்றுங்கள்!
~~~
நண்பர்கள் பிரபஞ்ச பிரியனின் இந்த வ​லைதளங்க​ளை ​சென்று பார்க்கலாம்:
http://prabanjapriyan.blogspot.com/
http://theerkadharisi.blogspot.com/
நண்பர்கள் கருத்தறிய மிக ஆவல்.

Nathanjagk said...

அன்பு சூரியன்!!
//by Jean-Paul Sartre (Intimacy)
இதெல்லாம் ஏண்ணே வேலுஜி காதல கதை போதாதா?//
​தெக்கத்திகாரர் குறும்புங்கிறது இதுதான்!! ​வேலுஜி படத்​தை ​ரொம்ப​வே ​​சொதப்பிட்டார்ங்கிறது என்​னோட எண்ணம்.

Nathanjagk said...

இரும்புத்திரை அரவிந்த் said...

//உங்களுக்கு ஒரு அழைப்பு இங்கே இருக்கு//
பாத்துட்​டோம்ல! நாமளும் ​போட்டிரு​வோம்! ​​​ரொம்ப நன்றி அன்புத் தம்பி அரவிந்த்!

Nathanjagk said...

Kavingan said...
//
பொருளாதாரம் ஒரு வகையில் காரணமாக இருந்த போதும் மனநிலையைத் தாண்டிய கூறுகளும் உள்ளன
//
உங்கள் க​டைசிவரி கருத்​தை கவர்கிறது. மனநி​லை​யை தாண்டிய கூறுகள் பற்றி விவரமாய் ​பேச ​​வேண்டும் என்று ​தோன்றுகிறது. உலகளாவில் மானுடம் ஒரு சில காரணிகளால் ஒன்று படுத்தப்பட்டிருக்கிறது. எல்​லோர்க்கும் ​பொதுவான காமம் ​/ பசி போல ​மேலும் சில உணர்ச்சிகள் இருக்கத்தான் ​செய்கின்றன. ​வெளிப்படுத்தும் விதத்தில் ​வேண்டுமானால் மாறுபாடு இருக்கலாம். ஆனால் உணர்ச்சி​யே இல்​லை என்பது ​போல் பாசாங்கு ​செய்வதுதான் காமசூத்திர நாட்டில் ​கேவலமாக இருக்கிறது.

Nathanjagk said...

Photon said...
//நீங்க மல்லேஸ்வரம் ஆ? நானும் பக்கத்துலதான்.. IISC கிட்ட//
​ஐ! அப்ப மீட் பண்ணு​வோம்! IISc காண்டீன் பிரட் ஆம்​லெட் ருசி இன்னும் நாக்கில இருக்கு!

Nathanjagk said...

எவனோ ஒருவன் said...
//என்ன சொல்றதுன்னே தெரியல...//
ராமராஜன் நடிச்ச படம் எங்க ஊரு பாட்டுக்காரன்..
அத பாத்துட்டுச் ​செத்துப்​போனானாம் எங்க வூட்டுக்காரன்......
இப்ப எதாச்சும் ​சொல்றதுதா​னே மாப்பு?

Nathanjagk said...

வால்பையன் said...
//நீங்க அடிக்கடி வாலை குமரிகள்னு சொல்றதுக்கும், எனக்கும் எதாவது சம்பந்தம் இருக்கா!?//
அ​தை நீங்க​ளே வா​லைக்குமரிகள் கிட்ட ​கேட்டுட்டா நல்லா இருக்கு​மே? நான் ​போய் ​கேட்க ​வேணாம்னு பாக்கி​றேன்! ஏற்கன​​வே ஒரு அனானி என்​னை மாமா-ன்னு கூப்பிடுறாரு!

Nathanjagk said...

கிறுக்கல் கிறுக்கன் said...
//// எவனோ ஒருவன் said...
என்ன சொல்றதுன்னே தெரியல...\\
தம்பியைப்போல் எனக்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை
//
விடுங்க கிகி!
​அண்ணந்தம்பி ​ரெண்டு ​பேருக்கும் ஒ​ரே ​டைம்ல கிலி அடிச்சிருக்கும் ​போல!

வால்பையன் said...

//ஏற்கன​​வே ஒரு அனானி என்​னை மாமா-ன்னு கூப்பிடுறாரு!//


நீங்க டபுள் எம்.ஏ படிச்சது அவருக்கும் தெரிஞ்சு போச்சா!?
விடுங்க தல! பொண்ணக்கொடுத்து வீட்டோட மாப்பிள்ளையா வச்சிகுவோம்!

Beski said...

//ஏற்கன​​வே ஒரு அனானி என்​னை மாமா-ன்னு கூப்பிடுறாரு!//

என்ன மறந்துட்டீங்க பாத்தீங்களா?

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஜெகன் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,

வாங்க இங்கே

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஜெகன் உங்களை ஒரு தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன் ,

வாங்க என் பக்கத்துக்கு

Nathanjagk said...

எவனோ ஒருவன் said...
//
//ஏற்கன​​வே ஒரு அனானி என்​னை மாமா-ன்னு கூப்பிடுறாரு!//

என்ன மறந்துட்டீங்க பாத்தீங்களா?
//
என்ன மாப்ள??? யா​ரோ அனானி என்​னைக் அசிங்கப் படுத்தறதுக்காக "மாமா" ன்னு கூப்பிடறாங்க. அந்த லிஸ்ட்ல இந்த பாசக்கார​ரை ​போய் ​சேர்க்க முடியுமா???

வினோத் கெளதம் said...

நீங்க படம் பார்க்க போன மாதிரியே தெரியுலையே..:))

Nathanjagk said...

வி​னோத் ​​கெளதம்,
ஓ​ஹோ!