சரி.. சரி.. இதோட இவன் சவகாசமே வேணாம்னு எஸ்ஸாகக் கூடாது. கொஞ்சம் அட்டணங்கால் போட்டுக்கிட்டு சேர்ல சாய்ஞ்சுக்கிட்டுப் படிச்சுத்தான் பாருங்களேன்.
ஆங்..! சொல்ல மறந்துட்டேன் இது வந்து ஒரு தொடர்பதிவு..!
என்னா தொடர்ர்ர்ர்??
ஐஸ்வந்தி ஆரம்பிச்சு.. நெப்போலியன் பா. ராஜாராம் வரைக்கும் வந்து இப்படி நம்ம காலடியிலும் வந்து நனைச்சுப்போட்ட அலைதான் இது..
எது???
பீட்டரு.. லாக்கரு.. டக்கரு.. மேட்டரு............. அப்படின்னு சொன்னா பதிவை ஆரம்பிச்ச ஜெஸ்க்கே பிரியாது!!! ஸோ.. நோ வால்.. ஒன்லி பால்!!
தொடர்பதிவு தலைப்பு இதுதான்பா..
கடவுள், பணம், அழகு, காதல்
நல்லாத்தான் இருக்கில்லே?
நான் முதல்ல இந்த லைனை வச்சு ஒரு சிறுகதை ரெடி பண்ணலாம்னு இருந்தேன்.. தலைப்பை கொஞ்சம் வேகமா படிச்சுப் பாருங்க. இந்தியன், அந்நியன், சிவாஜி, கந்தசாமி காதறுந்த சாமி படமெல்லாம் ஞாபகத்துக்கு வரலே?? நானும் தமிளன்தான்கிறதால எனக்கும் அந்த கிறுகிறுப்பு வந்துச்சுதான். பட், கண்ட்ரோல் பண்ணிக்கிட்டேன். சிறுகதை தமாஷெல்லாம் இல்லாம ஒரு பதிவு போடலாம்னுட்டு இருக்கேன்.
வக்காளி.. அப்பிடி என்னதாண்டா கழட்ட போறேன்னு உங்களுக்கு இருக்கிற ஆர்வம் (!??) அப்ப்ப்பிடியே 'எனக்கும்' இருக்கு பாஸ்!! ஏன்னா 'எனக்கும்' இந்த லைன் வரைக்கும் என்ன எழுதப்போறம்னு எனக்கே தெரியாது. டோண்ட் லாஃப்! (பா.ராவுக்கு இப்பவே கெட்ட கோவம் வந்திருக்கும்.....)
ரைட்... ஞாபகம் வச்சுக்கோங்க.. நோ வால்.. ஒன்லி பால்!! ஓகே?
கடவுள்:
ஆஞ்சநேயாய நமஹ
மஹாவீராய நமஹ
ஹனுமனே நமஹ
மாருதாத்மஜாய நமஹ
தத்வத்ஞாயப்ரதாய நமஹ
என்று தினந்தோறும் கும்பிடுவன் நான். ஆனால் என் அப்பா சீரியஸ் பெரியார்வாதி (என்று நினைக்கிறேன்!) இதுவரைக்கும் 14 முறை சபரிமலை போய் வந்திருக்கிறார் (குருசாமீ??) . என்னா காமடி.. ஏங்ங்?? இப்படி ஒரு வித்யாசமான அட்மாஸ்பியரில் வளர்க்கப் பட்டதால் (வளர்ந்ததால்..) கடவுள் ஒரு காமடியாகி போய்விட்டார் எனக்கு! ஆனால் தினமும் ரசிக்க வைக்கும் காமடி.
சமீப காலங்களில் யாராவது "Do u believe in God?" என்று கேட்டால், "Yes! Just like smoking!" என்று சொல்லி வருகிறேன்.
ஆஞ்சநேயாய நமஹ....
பணம்:
நான் வுடற பீட்டரு, பல்லாங்குழியெல்லாம் பாத்துட்டு நீங்க என்னென்னவோ நெனச்சிருப்பீங்.. பட் ஏக்சுலா என்கிட்ட நயா பைசா கெடையாது... அப்படின்னும் சொல்ல முடியாது... வாரிக்கொடுக்கிற அளவுக்கு வாய்ச்சிருக்கின்னும் சொல்ல முடியாது. நான் ஒரு உல்லாசி! பணத்தை அதன் இடம் பார்த்துதான் புரிந்து கொள்வேன். என்னடா டோன் திடீர்னு மாறுதேன்னு யோசிக்கறீங்களா?? ஹேஹே!! சொல்றேன்; அதாவது, உங்கிட்ட 1000 ரூபா இருக்குன்னு வச்சுக்குங்க.. நீங்க சின்னசிலுக்குவார்பட்டிக்குப் போயி தெரியாத நாலு பேர கூப்பிட்டுக் கூட, தெம்பா டாஸ்மாக் பார்ட்டி வெக்கலாம். ஆனா 10000 ரூபா (சைபரை நல்லா எண்ணுங்கப்பா) இருந்தாலும் இந்த பெங்களூருல நல்லா தெரிஞ்ச 4 கொலீக்ஸைக் கூப்பிட்டுக் கடலை மிட்டாய் கூட வாங்கித்தர முடியாது. அதுதான் இடம், பணம், ஏவல்!!
ஸோ பணத்தை நான் அது கிடைக்கிற இடம்பாத்துதான் மதிக்கிறது மற்றும் மிதிக்கிறது!!!
அழகு:
ஒம் மூஞ்சிலே ஆஸ்ஸ்ஸிட் அடிக்கிறேன்னு, நெறைய பேரு (ஐ மீன் நீங்க எல்லாரும்...!!!) முடிவு பண்ணியிருக்கிறதா தகவல்.. ஸோ.. அடுத்த பாயிண்ட்..
காதல்:
இதுதாம்பா நம்ம பாயிண்ட்... அதாவது விஷயம்னு சொல்ல வந்தேன்.
இரண்டாங்கிளாஸ் படிக்கும் போது யாருக்காவது லவ் வந்திருக்குமா?? எனக்கு வந்துச்சு.. ஷர்மிளாங்கிற புதுசா ஜாயின் பண்ணுன பொண்ணு மேல (எனக்கு மட்டும் இல்ல..) இப்ப வரைக்கும் இந்த முகம் மறையாம மனசுல இருக்கு. ஒரு பென்சில் பேப்பர் (+கொஞ்சம் சரக்கு) கொடுத்தா அந்த முகத்தை வரைஞ்சுடுவேன்னு தோணுது. அந்த அழகான தேவதைக்கு அவங்க அம்மா கால் முழுக்க போட்ட சூட்டுக் காயங்கள் இன்னும் கண்ணுலயே நிக்குது. அப்புறம் 5th, 6th. 8th படிக்கும் போது ப்ரெண்ட்களா சேத்து கதை கட்டி எனக்கு நாலஞ்சு காதலிகளை உருவாக்கிட்டானுங்க (என்னக் கொடுமைங்க ராஜா??)
டிப்ளமோ, அப்புறம் பிஈ எல்லாம் படிச்சிருக்கேன்.. அதனால இந்த இடம் என்னோட காதல் பற்றிய ஞானத்தைச் சொல்ல பத்தவே பத்தாது (என்னதான் பெட்ரோலை ஊத்திக் கொளுத்தினாலும்..)
இருந்தாலும் (தீஅதீ ரசிகர்களுக்காக..) ஒரு பஞ்ச் டயலாக்:
காதல்கிறது... பின்னூட்டம் மாதிரி! என்னதான் நீங்க நிறைய சரக்கு வச்சு, இறக்கி வச்சு பதிவு போட்டாலும் கிளிக் ஆகற ஏதாவது ஒரு மொக்கைக்குதான் கன்னா பின்னான்னு பின்னூஸ் வந்து குமியும்!!! எலக்கியம் முக்கியமில்ல தலைவா.. யதார்த்தம்தான் மேட்டரு!!!
அதாவது Don't be serious!! but be sincere!!!
ரைட்டா?
இதை தொடர்பதிவா நினைக்கிற நம்ம தீஅதீ ரசிகர்கள் அவங்களா செல்ப்-ஸ்டார்ட் போட்டு 120 கிமீ வேகத்தில் சென்று காதல், காதல், காதல், காதல்.. ச்சீசீசீ... ஏதோ மாத்திச் சொல்றேன்லே.. ஆங்... கடவுள், பணம், அழகு, காதல் பற்றி பிழிஞ்சு தள்ளவும்.
முடியலேன்னாலும் பரவாயில்லே.