Tuesday, June 23, 2009

ஒரு ஸ்கூல் இன்ஸ்பெக் ஷன்

பள்ளியில் அன்று இன்ஸ்பெக் ஷன்.
காக்கிக்கு கள்ளச்சாராயம் காய்ச்சுபவன் காட்டும் பயத்துக்கு சற்றும் குறைந்ததல்ல, ஸ்கூல் இன்ஸ்பெக் ஷனுக்கு ஆசிரியர்கள் காட்டும் பயம்.
ரெண்டாம் வகுப்பு டீச்சர் (இங்கு டீச்சர் என்றால் அது பெண்பால்தான்) மிகுந்த சிரமெடுத்து எல்லாப் பசங்களையும் புள்ளங்களையும் கன ஜோரா தயார் ​செய்திருந்தார்.
பள்ளி மிக நல்ல பெயரை சம்பாதித்து வைத்திருப்பதால் இன்ஸ்பெக் ஷன் ​அங்கு லேசு பாசாகத்தான் இருக்கும். இருந்தாலும் டீச்சர் விடவில்லை.
உயிரெழுத்துக்கள் யாவை மற்றும் அவை எத்தனை?​
மெய்யெழுத்துக்கள் யாவை / எத்தனை என எண்ணும் எழுத்தும் ஒன்றோ என கற்பிதங் கொள்ளும் வகையில் இருந்தது டீச்சரின் தயாரிப்பு.
இன்ஸ்பெக்டர் ஒண்ணாப்பு இன்ஸ்பெக் ஷன் முடித்துவிட்டு இன்னும் சில நிமிடங்களில் ரெண்டாப்பு வந்துவிடுவார் என தகவல் வந்துவிட்டது.
டீச்சரை விட பசங்க தெளிந்த முகத்துடன் இருப்பதாகப்பட்டது.
டீச்சர் திரும்ப ஒருமுறை எண் எழுத்து ஒத்திகை பார்த்துக் கொண்டார்.
அனேகமா ஒத்திகை உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கையை விடவும் அதிகமாய் இருந்திருக்க வாய்ப்புண்டு.
இருந்தாலும் டீச்சருக்கு மனமில்லை. ஏதோ குறைவது போலவே பட்டது.
சட்டென்று ஒரு யோசனை டீச்சர் மனதில்.
ஒரு சாக்பீஸை எடுத்தார்.. பரபரவென்று மேஜையில் தேய்க்கலானார்..
பின் பசங்களைப் பார்த்து போர்க்கால அவசரக் குரலில்,
"எல்லாரும் ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா வாங்க" என்றார்.
ஒவ்வொரு மாணவனாய் போய் நிற்க நிற்க, ஒவ்வொருவர் நெற்றியிலும் பூசிவிட்டார் உரசிய சாக்பீஸ் தூளை திருநீறு போல.​
சிறிதே நேரத்தில் மொத்த வகுப்பும் ஒரே அளவில் ஒரே கலரில் மெய்யெழுத்து நெற்றிகளாய் மினுங்கியது.
Appearance is equally imporatant to brilliance என்பதை ஒரே நெற்றியடியாக ​சொல்லிவிட்டார் ரெண்டாம்பு டீச்சர்.
சாக்பீ
ஸை விபூதியாக்கும் வித்தை தெரிந்த டீச்சர் பேர் எஸ்தர் -
ஒரு கிறித்துவர்.

5 comments:

Unknown said...

//சாக்பீஸை விபூதியாக்கும் வித்தை தெரிந்த டீச்சர் பேர் எஸ்தர் -
ஒரு கிறித்துவர். //

சமயோசிதம் சகலத்திலும் கைகுடுக்கும்னு புரியுது.. :)

Unknown said...
This comment has been removed by a blog administrator.
Nathanjagk said...

ஆம் எழில்! இன்று வரை டீச்சரின் திடீர் பூசாரி அவாதரம் எனக்குள் ஒரு பிரமிப்பு தான்!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே

Nathanjagk said...

//ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே//
நெசமாவே ரொம்ப நல்லவங்கதான். என்ன பதில் ​சொல்லாம நிக்கையில,​தொப்புளப் பிடிச்சு கிள்ளும்போது மட்டும் ​கொஞ்சம் கருத்த மாத்திக்க வேண்டியதா இருக்கும்.. :-)