"உடம்பக் குறைக்கணுங்க ஜெகன் ஒரு வழியச் சொல்லுங்க?"
"அதென்னங்க, டயட் கண்ட்ரோலா இருந்தா முடிஞ்சுது"
"நானுந்தான் இப்ப ச்சாப்பாட்ட எல்லாம் கம்மி பண்ணிட்டேங்க"
"பாத்தா அப்படி தெரிலீயே? காலைல என்ன சாப்டீங்க?"
"பொங்கல், மத்தியானம் லிமிட் மீல்ஸ், சாயந்திரம் கொஞ்சம் பொரி.."
"பொறி? மசாலாபொரியா..?"
"அட ரத்தப்பொரீங்க!"
இதுதான் நம்மவரின் டயட். மதுரைக்காரர். பாசக்காரர்.பெங்களூரில் எங்கெங்கு என்னென்ன உணவுகள் பிரபலம் என்பதை நாவின் நுனியில்
வைத்திருப்பார். அதற்கு தகுந்தாற்போல் மார்க்கெட்டிங் ஜாப். அடிக்கடி மங்களூர் ,சிக்மகளூர், ஹுப்ளி என்றெல்லாம் சுற்றிவருவார்.
வைத்திருப்பார். அதற்கு தகுந்தாற்போல் மார்க்கெட்டிங் ஜாப். அடிக்கடி மங்களூர் ,சிக்மகளூர், ஹுப்ளி என்றெல்லாம் சுற்றிவருவார்.
சாப்பாட்டு மேட்டரில் நானும் ஒன்றும் சும்மாயில்லை. சரக்குப் போட்டால் போதும், நீங்க கள்ள ஆட்டம் ஆடறிங்க எல்லாக் கோட்டையும் அழிங்க திரும்ப பர்ஸ்ட்ல இருந்து ஸ்டார்ட் பண்ணலாம்ங்கிற பரோட்டா போஸ்ட் பாக்ஸ் கணக்கா விளாசித் தள்ளிவிடுவதுண்டு.
இந்தாளுக்கு நாம கொஞ்சம் பரவால்லே என்று பரஸ்பரம் எண்ணிக் கொண்டு இப்படியே வீங்கிக் கொண்டிருந்தோம்.
ஒரு வெள்ளிக்கிழமை சாயந்திரம் அறைக்கு வந்தார் பிரபு. ஆச்சுடா இன்னிக்கு ஒரு ஆப் மேன்சன் ஹவுஸ் என்று ஆசுவாசப்பட்டு முடிவதற்குள்,
"ஜெகன், வாங்க வெளில போலாம்" என்றார்.
"ஏன் பிரபு சரக்கை ரூமுக்கே வாங்கி வந்து நிதானமா ஸ்டார்ட் பண்ணிக்கலாமே?"
"நீங்க வேற, வாங்க ஜிம்முக்கு போயிட்டு வரலாம்"
"என்ன திடீர்னு?"
"ஜிம்ல ஜாய்ன் பண்ணிரலாம் வாங்க"
"அய்யயே எதுக்கு பிரபு, நல்லாத்தானே இருக்கோம்?"
"அட வாங்க சும்மா"
"வேணாங்க பிரபு, நான் ரூம்லயே யோகா பண்ணிக்கிரேன்"
"அட என்னய்ங்க நீங்க யோகா, சோகான்னுட்டு.."
மறுபதில் எதையும் எதிர்பார்க்காமல் என்னை இழுத்து வண்டியில் சொருகிக் கொண்டு கிளம்பினார் - ஜிம்முக்கு. வண்டியில் போற வழியில் தான் தெரிந்தது.. இந்தமுறை ஜிம்மில் சேர்வது உறுதியான முடிவு என்று.
அது என்னவோ தெரியவில்லை, வண்டி ஓட்டிச் செல்பவர்கள் பில்லியன் சென்மங்களிடம் பேசுவது இனி உன்னோட இந்த நாள் எங்கையிலடா மவனே என்ற தொனியில்தான்.
நாம் எப்படா இந்த ஜிம் ஆட்டத்தில் சேர்ந்தோம் என்று யோசித்து முடிப்பதற்குள் வந்துவிட்டது - பவர் ஹவுஸ் ஜிம்.
முதல் மாடியில் ஜிம். இது ஏறிப்போறதே ஒரு எக்சைஸ்தான் என்று பிரபு உற்சாகப்பட்டதிலேயே தெரிந்தது -விஷயம் கைமீறி போய்விட்டது!
பிரபு, மாஸ்டரிடம் 'திட்டத்தை' விளக்கினார். அதாவது பைஸெப்ஸ், டிரைஸ், தைஸ் போன்றவற்றில் எல்லாம் நாட்டமில்லை வயிற்றைக் குறைப்பது ஒன்றே குறிக்கோள் என்று - இருவருக்கும். மாஸ்டரும் ஓகே என்றுவிட்டு, அட்மிஷன் (மாசம் 300ரூ) போட்டுவிட்டு அழைத்தார்,
"வெயிட் பாக்கலாம் வந்து நில்லுங்க"
முதலில் நான் சென்றேன். இன்று டிஜிட்டலில் குட்டு உடையும் தருணம்.
எடை 75கி.
"கொஞ்சம் ஓவர்தான் கரெக்ட் பண்ணிக்கலாம்" என்று அட்டையில் எடையைக் குறித்துக் கொண்டு,
"பிரபு நீங்க நில்லுங்க" என்றார் மாஸ்டர்.
என்னை ஒரு மாதிரி புளிமூட்டைக் கணக்காக கேவலமாகப் பார்த்துக் கொண்டே, பர்ஸ், மொபைல், கைக்கடிகாரம், பெல்ட், செருப்பு இவை எல்லாவற்றையும் கழட்டி விட்டு எடை மிஷின் பக்கம் சென்றார். இது கூட பரவாயில்லை. ஆனால் மூக்குக்கண்ணாடியை கழற்றிச் சென்றதுதான் கொஞ்சம் ஓவராக பட்டது. எப்படியும் என்னை விட சில கிராம்கள் கம்மியாக காட்டிக் கொள்ளும் முனைப்பு தெரிந்தது.
நமக்குத்தான் இந்த மாதிரி விவரத்தனம் எல்லாம் வந்து சேர மாட்டீங்குது என்று நொந்தவாறே, நோட்டமிட்டேன் பிரபுவின் புவியீர்ப்பு விசையை.. அடங்கொக்கமக்கா, தலைவரு 82கிலோ. எதிர்பார்த்ததுதான். இது கொஞ்சம் அபஸ்வரமாக பிரபுவுக்கு பட்டிருக்கும் போல,
"மாஸ்டர் பொறுங்க, எதுக்கும் ஒருக்கா ஒண்ணுக்கு போயிட்டு வந்துர்றேன்" என்று ஜிம்மில் உள்ள டாய்லட்டுக்குச் சென்றார்.
என்னதான் ஒண்ணுக்கு அடித்தாலும் எச்சில் துப்பினாலும் 7 கிலோ குறையுமளவுக்கு இருக்காது என்றுநினைத்தவாறே மாஸ்டரிடம் திரும்பினேன்.
"மாஸ்டர், என்ன மாதிரியான எக்ஸைஸெல்லாம் மாஸ்டர் இருக்கு எங்களுக்கு?"
"இன்னைக்கு தானே முத நாளு. சிம்பிளா, ப்ரீ எக்ஸர்ஸைஸ், சைக்கிளிங், க்ரஞ்சஸ், அப்புறம் லெக் ரைஸ்.."
முடிப்பதற்குள் பிரபு டாய்லட்டிலிருந்து வந்துவிட்டிருந்தார். ஜிப்பைப் போட்டபடியே வந்தவர் கேட்டார்:
"மாஸ்டர் அது என்னலெக்-ரைஸ்ஸு? புதுசாயிருக்கே? எக்-ரைஸ் மாரி கோழிக்கால்ல செய்யறதா?? இங்கனகுள்ள கிடைக்குதா?"
(இன்னும்)
6 comments:
:-)
Nalla (comedy) padhivu !! I'm also from Dharapuram.
”லெக்ரைஸ்”னா அப்ப மாஸ்டர் விஜயகாந்தோ? ஹி ஹி!!
இங்க சில பசங்க அப்பப்ப இத மாதிரி பொரளியக் கிளப்புவானுங்க. ஆனா ஜிம்முக்கெல்லாம் போக மாட்டானுங்க! இப்ப கொஞ்ச நாளா GM dietனு ஓட்டிட்டு இருக்கானுங்க!
"மாஸ்டர் அது என்னலெக்-ரைஸ்ஸு? புதுசாயிருக்கே? எக்-ரைஸ் மாரி கோழிக்கால்ல செய்யறதா?? இங்கனகுள்ள கிடைக்குதா?"
///
கேட்டாலும் கேள்வி... சூப்பர் கேள்விங்க!!!
//அது என்னவோ தெரியவில்லை, வண்டி ஓட்டிச் செல்பவர்கள் பில்லியன் சென்மங்களிடம் பேசுவது இனி உன்னோட இந்த நாள் எங்கையிலடா மவனே என்ற தொனியில்தான்.//
அடடடடடா..வழியெல்லாம் நம்ம அடிவயித்துல புளியை கரைச்சுகிட்டே ஓட்டுவாய்ங்க பாருங்க! அதை இதைவிட ‘அபாயமா’ சொல்லமுடியாது ஜெகன்! ‘கலக்கிட்டீங்க!’
"மாஸ்டர் அது என்னலெக்-ரைஸ்ஸு? புதுசாயிருக்கே? எக்-ரைஸ் மாரி கோழிக்கால்ல செய்யறதா?? இங்கனகுள்ள கிடைக்குதா?"
அடகோன்னியா..
ஜிம் மாஸ்டர்அ பரோட்ட மாஸ்டர் ஆகிட்டாரு..
பிரபு.. உங்க அறிவுப் பசிய நினச்ச புல் அரிக்குது...
யப்பா...
முடிலட சாமி...
என்ன விடுங்க டா... என்கிட்ட காசு இல்ல டா..
நன்றிகள்!
பெயரில்லா,
அண்ணன் சங்கா,
கவிஞர் தேவன்,
குங்குமம் உதயா,
நெல்லை மேத்ஸ்
அனைவரின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் (சில கதறல்களுக்கும்)நன்றிகள்!
Post a Comment