பாஸ்கிக்கு கல்யாணம். கிருஷ்ணகிரியில். வழக்கம் போல ரூம்.. மாப்பிள்ளையின் தம்பியின் கவனிப்பு, பாட்டில்கள், நொறுக்குத் தீனிகள்.. இரவு முழுவதும் பேச்சு.. என்று சுகமாய் கழிந்தது. அப்புறம் ஒவ்வொருத்தனும்.. கன ஜோராக ஏத்தல், இழுத்தல், பினாத்தல், பேத்தல், அனத்தல் என்று போதையின் ஒவ்வொரு படிநிலையிலும் நின்று கதவைத் தட்ட ஆரம்பித்தோம்.
நான் ஹாப் பாட்டில் ஸிக்னேச்சர் + மிக்சர் + பரோட்டா என்று என் சிற்றுரையை முடித்துக் கொண்டேன். அமைதியாக தூங்கி எழுந்து காலையில் கல்யாணத்துக்கு கூட(!?) போனோம். பேசிக்கொண்டிருக்கும் போது பிரகாஷிடம்,
"ஆமா! ஆனா நீதான் சாப்பிடும்போது, பரோட்டா பதிலா.. பக்கத்தில் இருந்த ஆஷ்ட்ரேயில் கைவைச்சிட்ட; விட்டிருந்தா வாயில போட்டிருப்பே!" பார்ட்டி-2: கர்த்தரின் தீர்ப்பு
காலையில் சர்ச்சில் தம்பதியினர் ஆஜர். சொந்தங்கள், பந்தங்கள், நண்பர்கள், பந்துக்கள் அனைவரும் திரண்டிருக்க.. சர்ச் பாதிரியார்.. சம்பிரதாயங்களை செய்து கொண்டிருக்கிறார். சர்ச்சின் கடைசி வரிசையில் ஸ்டாலினின் தோழர்கள். எல்லோரும் விழி பிதுங்கும் அளவுக்கு டைட். அதில் ஒருவன்.. உட்கார முடியாமல் கண்கள் சொருக சரிய ஆரம்பித்திருக்கிறான். மப்பு வாசனை வேறு கர்த்தர் வரைக்கும் போயிருக்கிறது. பொறுமையிழந்த பாதிரியார்.. மைக்கில் சொன்னது:
"அந்த சிறுவர்களைத் திருச்சபையிலிருந்து வெளியேற்றுங்கள்"
வாய்விட்டே கேட்டுட்டேன் செந்தில்ராஜிடம்,
"டே கோழி! ஏதோ டிவி கொடுக்கப் போறதா பசங்க சொன்னாங்க?"
அதுக்கு கூலா அவன் சொன்னது.. இப்ப கூட எந்த கிப்டைப் பாத்தாலும் ஞாபகத்து வந்து நிக்குது!!
"மச்சி, தங்கியிருந்த லாட்ஜ்ல கூட ஒரு டிவி பாத்தோம்.. நல்லாதான் இருந்தது! பசங்க இதையே எடுத்திட்டுப் போயி ஜெகனுக்கு கொடுத்திடலாம்னு சொன்னாங்க.. பட், அந்த லாட்ஜ்ல ஒத்துக்க மாட்டேங்கிறாங்க. சரி வரட்டுமா?"
இப்படி என் கல்யாணத்து சிறப்பா மங்களம் பாடுனது இந்த நண்பர்கள்தான்!
பார்ட்டி-5 - நம்ம ஊர்ல பார்ட்டி!!
சந்தோஷ் அப்ப எனக்கு சின்சியரான சிஷ்யன்.. அவன் ஊர் தர்மபுரி பக்கம் இருந்த பெரியாம்பட்டி! ஒருநாள் கிளாஸ் ரூமிலேயே வயிற்று வலியால் சுருண்டான். ஊர் திருவிழா என்று கொஞ்சம் ஓவராக சாப்பிட்டுவிட்டானாம்.
ரொம்ப நாள் கழித்து பேசிக்கொண்டிருக்கும் போது, நண்பன் கைலாஷ், சந்தோஷ் ஊர் திருவிழா எப்படி கொண்டாடுகிறார்கள் என்று விளக்கியது இப்படி:
"மச்சி,சந்தோஷ் ஊர்ல பெரிய்ய்ய திருவிழாவும்.. மொத்த ஊரும் திரண்டு வந்து, ஒரு ஃபுல்லு, ஒரு ஹாப்பு, ஒரு குவாட்டரு அப்புறம் ஒரு கட்டிங்ன்னு வாங்கி அவங்க ஊர் கிணற்றில் ஊத்திட்டாங்களாம்.. ஊர்ல இருக்கிற ஒவ்வொருத்தரும்.. மொண்டு மொண்டு குடிக்கிறாங்களாம்.. எல்லார்த்துக்கும் செம மப்பாம்... சந்தோஷ் மட்டும் பாட்டில்ல மிச்சம் இருக்கிற ஒரே ஒரு சொட்டு சரக்கை அப்படியே ராவா ஊத்திட்டானாம்... அதுதான் பயங்கர மப்பாகி.. வயிறே வலிக்க ஆரம்பிச்சிருச்சாம்..!" * * *