அ) நீங்கள் இந்த உலகத்திலேயே மிகவும் வெறுக்கும் நபர்
1. மானேஜர்
2. மனைவி
3. மாமியார்
4. மாமியார் மட்டும்
ஆ) மனைவி கையில் காபி சாப்பிடுவது..
1. சயனைட்2. வாய் கொப்பளிக்கலாம்
3. மனைவிக்கே கொடுக்கலாம்
4. மாமியாருக்கு கொடுக்கலாம்
இ) டிவி என்பது யாதெனில்
1. சீரியல் காட்டும் செவ்வகம்
2. சொன்ன பேச்சைக் கேட்கும் ஒரே ஜந்து
3. இடத்தை அடைத்துக் கொள்ளும் பிசாசு
4. கீபோர்ட் இல்லாத கம்ப்யூட்டர்! ஈ) நீங்கள் மேக்கப்புக்கு எடுத்துக் கொள்ளும் நேரம் 1. 0.005 மில்லி செகண்ட்ஸ்
2. பான்ட்ஸ் பவுடர்
3. சுற்றும் முற்றும் பார்த்து விட்டு பேர் & லவ்லி
4. வழுக்கைக்கு(ம் சேர்த்தி) பான்ட்ஸ் பவுடர் உ) நீங்கள் யார்? 1. மனைவியின் புருஷன்
2. மாடு
3. மாடு மாதிரி
4. மாடேதான் ஊ) தண்ணியடிக்கும் பழக்கம்..? 1. உண்டு
2. 24 X 7
3. எப்போதாவது வாரத்துக்கு 7 நாள் (அல்லது) பாயிண்ட் நிர். 2
4. மனைவி அனுமதிக்காதபோது மட்டும் (அல்லது) பாயிண்ட் நிர். 3 எ) நல்லவன் என்பவன்? 1. சத்தியமா நானில்லை
2. நான் அவனில்லை
3. பப்ளிக் டாய்லட்டில் ப்ளஷ் செய்பவன்
4. கல்யாணம் ஆகி(யும்) பிட்டு படம் பார்க்காதவன் ஏ) கெட்டவன் என்பவன்? 1. மாமியார் சொல் பேச்சு கேட்பவன்
2. மாமியார் சொன்னதை மட்டும் கேட்பவன்
3. மாமியார் சொல்லாததையும் கேட்பவன்
4. மாமியாருக்கு மிஸ்டு கால் கொடுப்பவன் ஐ) நான் என்பது? 1. நான் மட்டும்
2. நான் + மனைவி
3. மனைவி + மனைவி
4. கண்ட இடுகையையும் கண் சிமிட்டாம படிப்பவன் ஒ) சுதந்திரம் என்பது என்னவென்றால்...?
1. வாய மூடு
2. ப்ளாக் எழுதுவது
3. பிளாக் எழுதியதை படிங்க என்று மற்றவரை துன்புறுத்துவது
4. இந்த இடுகைக்கு கூட பின்னூஸ் போடுவது ஓ) இந்திய அரசியலில் பிடிக்காத விஷயம் 1. இந்திய அரசியல்
2. வாக்கு கொடுத்த மாதிரி ரூ1000 / ஓட்டு பட்டுவாடா செய்யாதது
3. டூமீல்களுக்கு மத்தியிலும் தைரியமாக சபை கூட்டுவது
4. ஓட்டு கேட்க வரும் நடிகைகள் குத்தாட்டம் போடாதது ஒள) நீங்க சொன்ன பயங்கர பொய்(கள்)? 1. எனக்கு இந்த பொண்ண (ரொம்ப) பிடிச்சிருக்கு
2. சத்தியமா இதுக்கு முன்னாடி யாரையும் லவ் பண்ணுனதே இல்லை
3. உங்க அம்மா தங்கமானவங்க
4. காபி நல்லாயிருக்கு (தினசரி) ஃ) விதி என்பது உங்களைப் பொறுத்தவரையில்.. 1. இந்த இடுகையை படிப்பது
2. உனக்கு கூட பின்னூஸ் போடுற நிலையில் இருப்பது
3. இதைப் படிச்சிட்டு விரக்தியா சிரிக்கிறது
4. இவன் அடுத்த இடுகை எப்ப போடுவான்னு ஏங்கறது(!!?) இந்த பன்னிரெண்டு கேள்விக்கும் உங்க பதில்களை அதன் எண்களுடன் கூட்டி எனக்கு அனுப்பவும். அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் உங்கள் வாய்க்கொழுப்பின் அளவு கண்டுபிடித்துத் தரப்படும். இது ஒரு இலவச சேவை! பணம் எதுவும் பெற்றுக்கொள்ளப்பட மாட்டாது!
24 comments:
ஃபாலோவர் விட்ஜட் வந்துடுச்சு போல
மற்ற படி இந்த இடுகையில் கேட்க்கப்பட்டிருக்கும் கேள்விகள் திருமணமானவர்களுக்கு மிகவும் பொருந்துவதால் நான் எஸ்கேப்பு.......
//4. இவன் அடுத்த இடுகை எப்ப போடுவான்னு ஏங்கறது(!!?)//
//பிரியமுடன்.........வசந்த் said...
ஃபாலோவர் விட்ஜட் வந்துடுச்சு போல
மற்ற படி இந்த இடுகையில் கேட்க்கப்பட்டிருக்கும் கேள்விகள் திருமணமானவர்களுக்கு மிகவும் பொருந்துவதால் நான் எஸ்கேப்பு.......//
நானும் தானுங்கோவ்...
மாமியார் மேல பயங்கர பாசம் போல :)
லேசான கேள்விகளுக்கெல்லாம் பயங்கரமான பதில சொல்லமாட்டேன்
நன்றி பிரியமுடன்.. வசந்த்.. இந்த கேள்விகளிடமிருந்து நீங்கள் எஸ்கேப்பு ஆகலாம்.. ஆனா கல்யாணத்திலிருந்து எஸ்ஸாக முடியாது!
சந்ரு உங்களுக்கும்தான்! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
அன்பு பீர்.. கொஞ்சம் ஓவரா போயிடுச்சு!! ஹிஹி.. கண்டுக்காதீங்க!
அன்பு ☀நான் ஆதவன்☀,
பெண்ணின் எல்லா வடிவங்களையும் வணங்குகிறேன்.. மகள், மனைவி, தாய், மாமியார் தவிர - என்று சுஜாதா சொன்னதாக நினைவு!
வாங்க ஸ்டார்ஜன் மாம்ஸ்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! கேட்கவேண்டியவங்க கேட்டா தானா பதில் சொல்வீங்கதானே??
கட்சீ கேள்விக்கி , மொதலு ஆன்சறு தாம்பா சூப்பர் !!! சோக்கா , கீது வாஜாரே !! கேள்வி பதிலு, ம்ம்ம்......
அத்த விட சூப்பர் பா !!
அ-யாருமில்லை
ஆ-காபி தம்லர்லேதான் சாப்பிடுவேன்
இ-பெரிசுகளை எங்கேஜ் செய்யும் உபாயம்
ஈ-ஓவர் எழிலா இருக்கிறதாலே குளிக்கும் போதே முகத்தில் என்னை போட்டு குறைத்து விடுவேன்
உ-முதல் ஆப்ஷன் நல்லா இருக்கு. யார் மனைவியின் புருஷன்னு போடவே இல்லியே?
ஊ-நாலாவது ஆப்ஷன் நல்லா இருக்கு(பாராட்டுக்கள்)
எ-நாலாவதிலே ஒரு சின்ன அமெண்ட்மென்ட்-கல்யாணம் ஆகியும் பிட் படம் பாத்துகிட்டே காலம் தல்றவன்
ஏ-இது நிச்சயமா நாலுதான்!
ஐ-இதுவும் நாலுதான்(உங்க வாசகர்களை இப்படி ரேக்குவது சரியா?)
ஒ-பிளாக் எழுதிட்டு யாரையும் தொல்லை பண்ணாம இருக்குறது
ஓ-ஜெயப்பிரதா (தேர்தல்)சிடி தமிழ்நாட்டிலே கிடைககாதது
ஒள-எல்லாமே.. இதுக்கு மேலயும்
கடைசீ-நாலாவது ஆப்ஷனை யாராவது பண்ணா அதுதான் விதி!
http://kgjawarlal.wordpress.com
நான் புள்ளபூச்சிங்கோவ்!
நம்ம ஆப்ஷன் ஒண்ணும் இல்லையே?! சாய்ஸ்ல விட்டுட வேண்டியதுதான். ஹெல்த் எப்படின்னு தெரியலையே!
மாமியா மாமியா
மகளைக் குடுத்த மாமியா
தேவையா தேவையா
கல்யாணந்தான் தேவையா
//நீங்கள் இந்த உலகத்திலேயே மிகவும் வெறுக்கும் நபர்//
. மானேஜர் கூட சொல்லுவாங்களா தல..,'
கடைசியில் ஒரு புள்ளிவரம் போடுங்களேன்
//உ) நீங்கள் யார்?//
சுதந்திர பறவை, அடிமை, அடிமைகளில் ஒருவன், இப்படி ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்
//ஓ) இந்திய அரசியலில் பிடிக்காத விஷயம்//
மனைவி/ கணவனுக்கும் ஓட்டு இருப்பது..,
இப்படி ஒரு வாய்ப்பு கொடுப்பீங்களா தல..,
டவுசர் அண்ணாத்தே.. ரொம்ப நாள் விட்டு வந்திருக்கீங்க..! டாங்க்ஸ்பா! நம்ம 'வைரஸ் ப்ரோக்ராம்' மறந்துடாதேபா!!
ப்ரிய ஜவஹர்..
நான் தருமி! நீங்கள் ஈசா!! பதில்களை ரசித்தேன் - ரொம்ப! நன்றி!!
அன்பு புள்ளப்பூச்சி!! உங்களுக்கு சிறப்பு கேள்வித்தாள் தான் ரெடி பண்ணனும்! கிருஷ்ணமூர்த்தியை (சிறந்த சரவெடிப் பதிவர் விருது!) ஆட்டத்துக்கு சேத்துக்கலாமான்னு யோசிக்கிறேன்!!
சங்காண்ணா, உங்களால ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்ல முடியலேன்னா நெனச்சா... நெஞ்சு வலிக்குது! தனி மனிதனுக்கு சுதந்திரம் இல்லையேல், ஜெகனை அடித்திடுவோம்னு பொங்கி எழுகிறேன்!
தல SUREஷ், புள்ளிவிபரம் போட ஆசைதான், ஆனா வந்தவங்க எல்லாம் பதில் சொல்லாம S ஆயிட்டாங்க! விடுங்க; இந்த சந்துல தப்பிச்சா, இன்னொரு பொந்துல நம்மகிட்ட மாட்டியேதானே ஆகணும்?? நாங்கெல்லாம் அந்த காலத்திலேயேயேயே.......
Super questions.
பாயிண்ட் வெச்சு பதில் வரும், ஆனா என் மெயிலை என் மனைவி படிங்கிறாங்களே?
என்று நான் அத்தைக்கு தம்பியானேனோ அன்று தொலைந்து எல்லாம்.(நன்றி,சரசு அத்தை,கருவேலநிழல்)மாமியா மெஸ்?..வரட்டுமா ஜெகா...
Post a Comment