20% பெண்களுக்கு - ஆண்கள் கூடிப் பேசினால், அது நம்மைப் பற்றித்தான் வேறென்ன??? என்ற (தவறான) எண்ணமுண்டு
30% பெண்களுக்கு - தங்கள் 'ஒரிசினல்' குலதெய்வம் பேரை நண்பிகளிடம் சொல்ல கூச்சமுண்டு (பின்னே.. வேட்டிமடி வீராச்சாமி, பட்டையடி படைச்சாமி அல்லது குறளிமலை ஆத்தா என்றெல்லாம் சொல்ல முடியுமா என்ன???)
40% பெண்களுக்கு - தாங்கள் மட்டும்தான் அல்லது தான் மட்டும்தான் அழகு என்ற எண்ணமுண்டு. யார் கொடுத்த காதல் கடிதமென்றாலும் அதில் தங்கள் அழகு வர்ணனை இருக்கிறதா என்று முதலில் தேடிப் பார்த்துவிடுவது வழக்கம் (அதற்கப்புறம்தான்.. ரேஸ்கல்... இடியட்.. அக்கா, தங்கச்சியெல்லாம்)
50% பெண்களுக்கு - பாடி ஸ்ப்ரே என்பது வேஸ்ட் - என்னதான் பீச்சிக்கொண்டாலும் நம்மேல் 'பாடி' ஸ்மெல் வருகிறது என்று ஸ்ப்ரே கம்பெனிகள் மேல் ஒரு சந்தேகம் உண்டு
60% பெண்களுக்கு - பாய் ப்ரெண்ட்ஸ் (மட்டும்) நன்றாக செலவழிக்க வேண்டும்.. ஆனால் கணவன்மார்கள் ச்ச்சிக்கனமாய் இருக்க வேண்டும் என்ற கொள்கை (!?) உண்டு
70% பெண்களுக்கு - பூனை புஸ்ஸி, நாய் டாமி அல்லது ஜிம்மிக்கு அடுத்த படியாக கணவர்கள் மேல் அன்பு இருக்கத்தான் செய்கிறது
80% பெண்களுக்கு - தாங்கள் கட்டிக்கொண்டவன் மட்டுமே ஆண்களிலேயே அடிமுட்டாள் என்ற மதிப்பீடு உண்டு
90% பெண்களுக்கு - மேலே இருக்கும் 80 சதவீதத்தில் பாதியாவது உண்மை என்று மனதளவில் (மட்டும்) ஒத்துக்கொள்ள வரும். ஆனால் வெளியில் வராது
100% பெண்களுக்கு - இந்த இடுகையை போட்டவனை புரட்டி எடுத்துவிடுவது (மண்ணில்தான்..) என்ற கொலவெறி வருவதும்.. ஆனால்.. நாயி.. இந்த பாயிண்டையும் எழுதிட்டானே என்ற 'அவ்வ்வ்வ்வ்' வருவதும் நிரூபிக்கப் படாத உண்மை!
ஐ'யம் ஸாரி லேடீஸ்.. எனக்கு ரொம்ம்ம்ப பிடிச்ச உங்களை (படிக்கிற உங்களை மட்டும்தான் சொல்றேன்), நான் உரிமை எடுத்து இப்படி எழுதாம வேற யாராவது எழுதுனா நல்லாயிருக்குமா? (இதையே ஒரு நியூயார்க்காரனோ, மெக்ஸிகோகாரனோ, கஸாகிஸ்தான்காரனோ (இங்கிலீஷ்ல) எழுதி உங்க இன்பாக்ஸ்ல வந்திருந்தா.. கும்முனு சிரிச்சிக்கிட்டே.. 'பாருடி நம்மள எப்படியெல்லாம் கலாய்க்கிறாய்ய்ய்ங்க'ன்னு ஸ்பீடா மெயிலை பார்வேர்ட் பண்ணுவீங்கதானே.. ஹே... ஹே...!!)
எதுவா இருந்தாலும் பின்னூஸ்ல மட்டும் காட்டுங்க மேடம்..! பார்ஸல் அனுப்பற வேலையெல்லாம் வேணாம் ப்ளீஸ்!!!
48 comments:
தமிழ் ஒருங்குறி பிரச்சனை, இந்த இடுகையை வாசிக்கவில்லை. :(
:)
suuuupppperrrrrrrr
:-))))
suppppppppppperrr.....
:-)))))))))))))
suppppppppppperrr.....
//:)
suuuupppperrrrrrrr//
ஆஹா..... எல்லாருமா சேந்து ஒரு முடிவு பண்ணிட்டாங்க போல!!!
suuuupppperrrrrrrr இல்ல நால்லா இருக்கு
அழைப்பிதல்
நிகழ்ச்சி : மூன்றாம்பிறை
நாள் : உங்கள் நாள்
நேரம்: உங்களின் நேரம்
வரவேற்பு : கவிதைகள்
அன்புடன்,
சந்தான சங்கர்.
(மொய் எழுதவேண்டாம்
மெய் எழுதிவிட்டு செல்லுங்கள்.)
:-))))))))))))))))))))))))))))))))))
suuuuuuuuuuuuuuuuppppppppppperrr....
பீர் | Peer said...
//தமிழ் ஒருங்குறி பிரச்சனை, இந்த இடுகையை வாசிக்கவில்லை. :(
//
பிரச்சினை என் பதிவிலா? ஆனால் மற்றவர்கள் பின்னூ போட்டிருக்கிறார்களே? (எல்லோருமே சொல்லி வச்ச மாதிரி... suuuuupppperrrr -ன்னு..)
தயவுசெய்து பிரச்சினையை விளக்குங்க.. I will correct it immediately. நன்றி பீர்!
அண்ணன் ஜெகா ஒரு ஆணியவாதி
சூப்பர்ங்க.
:))
//இரும்புத்திரை அரவிந்த் said...
அண்ணன் ஜெகா ஒரு ஆணியவாதி
//
ஓகே.. இனி ஆணியே புடுங்க மாட்டேன்! போதுமா?
ரொம்ப நன்றி சந்ரு! உங்களோட பின்னூதான் கொஞ்சம் வித்தியாசமா வந்திருக்கு!!
நன்றி கைப்புள்ள!!
நிஜமாத்தான் சொல்றிங்களா?
ஆகா.... தல இதுக்கு ஒரு பொண்ணு பின்னூட்டம் கூட வரலைன்னா நீங்க சொன்னதை உண்மைன்னு ஒத்துக்கிறேன் :)
// பீர் | Peer said...
தமிழ் ஒருங்குறி பிரச்சனை, இந்த இடுகையை வாசிக்கவில்லை. :(//
எஸ்கேப் ஆகலாம்னு பாக்குறாரு....விடாதீங்க ஜெகன். எப்படியாவது படிக்க வச்சிருங்க :)
ஏன் ஜெகன் இப்பிடி ஒரு கொலை வெறி உங்களுக்கு அளவு கணக்கோட.பாருங்க இதுவரைக்கும் சூப்பர் சொன்னவங்க யாராச்சும் பொண்ணுங்களா !
யாரும் பொண்ணுங்க கவனிக்கலைன்னு நினைக்கிறேன்.
அன்பு வால்பையன்.. எதுவுமே தெரியாத மாதிரி கேக்கறீங்களே?
ஆமாங்க ஆதவன்.. எனக்கும் டவுட்டாதான் இருக்கு.. பீர்.. பேக் ஃபுட் போடறாரோன்னு..
அப்புறம் பெண்கள் கருத்து சொல்லவில்லை என்பதை நான் மென்மையாக கண்டிக்கிறேன்! நிறைய பேரு படிச்சிட்டு கம்முனு சிரிச்சிட்டுப் போயிட்டாங்களாம்!
அன்பு ஹேமா.. இது கொலவெறி இல்லே.. கொள்ள வெறி! டிஸ்கியில் விளக்கவுரையெல்லாம் கொடுத்து அமர்க்களப்படுத்தியிருப்பேனே??? இப்பக்கூட 1ம் மோசம் போகலே... ஆண்கள் 100% என்று எழுதிட்டாப் போச்சு!!! நீங்க கூட செய்யலாம்.. (தொடர்பதிவு!!?)
இப்படி ஸ்டார்ட் பண்ணலாம்...
10% ஆண்கள் - குறட்டை விட்டே பேனை ஆப் செய்து விடுபவர்கள்
20% ஆண்களுக்கு - டீக்கடையில்தான் பொழுது விடிகிறது
20% ஆண்களுக்கு - அம்மா அளவிற்கு பொண்டாட்டி சமைப்பதில்லை என்ற குறை உண்டு.........
இப்படி...!
30% - பெண்கள் பற்றிய உண்மையை மனம் திறந்து சொல்லி விடுவது.
___% - அதை படித்தும் கருத்து சொல்லாமல் எஸ்ஸ்ஸ்...
உங்களுக்காக http://shanthru.blogspot.com/2009/09/blog-post_07.html இங்கே என் அன்புப் பரிசு இருக்கின்றது வந்து ஏற்றுக் கொள்ளுங்கள்
அன்பு சந்ரு! மிக்க நன்றி!! நம் காலடியின் தீவிர அதி தீவிர ரசிகர் மன்றம் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்! இந்த விருதினை கொடுத்த உங்களை கவுரவிக்கும் வண்ணமாக அடுத்த இடுகையில் அண்ணன் சங்கா உங்களைப் பற்றி வெண்பா எழுதுவார்.. மாப்ளே ஏனாஓனா பால்காவடி எடுப்பார் என்று நம்பப்படுகிறது!!!
//(இதையே ஒரு நியூயார்க்காரனோ, மெக்ஸிகோகாரனோ, கஸாகிஸ்தான்காரனோ (இங்கிலீஷ்ல) எழுதி உங்க இன்பாக்ஸ்ல வந்திருந்தா.. கும்முனு சிரிச்சிக்கிட்டே.. 'பாருடி நம்மள எப்படியெல்லாம் கலாய்க்கிறாய்ய்ய்ங்க'ன்னு ஸ்பீடா மெயிலை பார்வேர்ட் பண்ணுவீங்கதானே.. ஹே... ஹே...!!)//
அருமை.அட்டகாசம்.தூள்.
//10% ஆண்கள் - குறட்டை விட்டே பேனை ஆப் செய்து விடுபவர்கள்
20% ஆண்களுக்கு - டீக்கடையில்தான் பொழுது விடிகிறது
20% ஆண்களுக்கு - அம்மா அளவிற்கு பொண்டாட்டி சமைப்பதில்லை என்ற குறை உண்டு.........
இப்படி...!//
இதுவும் suuuuuuuuuuuuuuppppppppppppppper!!!
//இந்த விருதினை கொடுத்த உங்களை கவுரவிக்கும் வண்ணமாக அடுத்த இடுகையில் அண்ணன் சங்கா உங்களைப் பற்றி வெண்பா எழுதுவார்.. //
போட்டுட்டாப் போச்சு! ஆனா கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணனும் சந்ருவைப் பத்தி!
" பார்ஸல் அனுப்பற வேலையெல்லாம் வேணாம் ப்ளீஸ்!!! "
என்ன நண்பா? 'பெங்களூர் புகழ், சிகப்புக் கலர் பார்சல்கள்' பற்றித்தானே நினைத்தீர்கள்? அந்த அளவிற்க்கெல்லாம் போகமாட்டார்கள். தைரியமாக இருங்கள்.
அடடா..உண்மையை கண்டுபிடிக்க ரொம்ப பாடுபட்டு இருப்பீங்க போல இருக்கு.
//சங்கா said...
//இந்த விருதினை கொடுத்த உங்களை கவுரவிக்கும் வண்ணமாக அடுத்த இடுகையில் அண்ணன் சங்கா உங்களைப் பற்றி வெண்பா எழுதுவார்.. //
போட்டுட்டாப் போச்சு! ஆனா கொஞ்சம் ஆராய்ச்சி பண்ணனும் சந்ருவைப் பத்தி!//
அடப்பாவிகளா என்னைப்பற்றி ஆராச்சி பண்ணப்போரிங்களா
100% கமேடி ..
மாம்ஸ்,
கலக்கல்.
20% - நீங்க பேச மாட்டீங்களா?
30% - நம்ப முடியலயே, இதுவரை யாரும் த்ங்களோட குல தெய்வத்தோட பேர சொன்னதில்ல என்னிடம். இதை 100%னு வச்சிக்கலாமா?
40% - இதையும் கொஞ்சம் கூட்டலாம்.
50% - இதப் பத்தி நமக்கு ஏதும் தெரியாதுப்பா.
60% - இதுல பாதி உண்மை, மீதி இனிதான் தெரியும்.
70% - ஆவ்! இது 70% ஆ?
80% - அதான பாத்தேன், 70 க்கு அடி இங்க இருக்கா?
90% - இது ரொம்ப சரி மாம்ஸ், ஒன்னே ஒன்னுதான் வெளிய வந்துருக்கு.
100% - 90 உண்மைனா இதுவும் உண்மையாத்தான் இருக்கும்.
நன்றி துபாய்ராஜா! யாரும் சொல்லாத பாயிண்டை புடிச்சிட்டீங்க! சபாஷ்!! உங்களுக்கும் பேட்ஜ் உண்டு!!
அண்ணன்.. ரொம்ப குஷியா இருக்காரு போல! அப்ப வெண்பா ரெடின்னு நெனக்கிறேன்!!
அன்பு ப்ரபஞ்ச ப்ரியன் (M.S.E.R.K.)
சில பெண்ணியக்கங்கள் சிலருக்கு அனுப்பீய பார்ஸல்களை நினைத்துக் கொண்டு எழுதினேன்! நமக்கு அந்த ரேஞ்சுக்கெல்லாம் போகமாட்டாங்க! ஹிஹி!!
sindhusubash..
ரொம்ப கஷ்டம்னு சொல்ல முடியாது...
கொஞ்சம் லவ் லெட்டர்ஸ், நிறைய ஐ லவ் யூ, இஷ்டத்துக்கு பொய்கள், எப்ப வேணாலும் நாய் சேவகம், அப்பஅப்ப மனசு உருகும் காதல் என்று 29 வருஷ 'சின்ன' அனுபவம்தான்!
நன்றி நந்தா!
வா மாப்ளே ஏனாண்டி ஓணாண்டி!!
நல்லா பிட்டு பிட்டு ரசிச்சிருக்கீக!! ரொம்ப டாங்க்ஸ்! கவலை வேணாம். கூடிய சீக்கிரம் பொண்ணு பாத்திடலாம் உங்களுக்கு!
:-)))
ஜெகன், பிரமாதம்!
எல்லாரையும் இழுக்கிறதுக்கு இதுமாதிரியெல்லாம் டைட்டில் வைக்கிறது கொஞ்சம் ஓவர்.
http://kgjawarlal.wordpress.com
நிறைய நிஜம் பா....
நன்றி ராதாகிருஷ்ணன்! சின்னப் புன்னகைதான் என்றாலும் அதை ஊக்கப் படுத்துவாய் எடுத்துக் கொள்கிறேன்!
அன்பு ஜவஹர்... ரொம்ப நன்றிபா! வேறு எப்படி தலைப்பு வக்கிறதுன்னு புரியலே! அதுதான் இப்படி அசடு வழிஞ்சிருக்கேன்! ஹிஹி!
அன்பு அமுதா கிருஷ்ணன்..! ரொம்பநெகிழ்வா இருக்கு உங்க பின்னூ! நன்றி!!
80% பெண்களில் ஒரு பெண் "மனுஷி"!
இதை, எங்கேயோ கேட்டதுபோல் இருக்கே
என யோசிக்கவே இல்லை."அட,லதாவை பத்தி!"என எடுத்துகொண்டேன்.
பேச்சு,காதோடு இருக்கட்டும் ஜெகா.அப்புறம் "ஆன்புள்ள அத்தேன் அவர்காலுக்கு"
என்று வருகிற கடிதமும் வாரது.அடச்சே..வராது!
அன்பு ராஜா,
ரொம்ப குசும்புதான் உங்களுக்கு! உண்மையில், அவர்கள் உங்களை கேட்டரிங் இண்டர்வியூவுக்கு 'தயார்' பண்ணிய துரிதத்தை கண்டு மிகவும் வியக்கிறேன். செம துணிச்சல்தான் அவருக்கு!
//பாருடி நம்மள எப்படியெல்லாம் கலாய்க்கிறாய்ய்ய்ங்க'ன்னு //-enga eppadi !!!!,
ellatha vidavum intha point superbbb
ரோஹினி,
தங்கள் வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி!!
Post a Comment